ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் தீ வைப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் நல்லூர் – கோயில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதிகாவலரை சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்த்ததாக தையலகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். “2009 டிசெம்பர் மாதத்திலிருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தன…
-
- 0 replies
- 516 views
-
-
சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? சம்பந்தன், சுமந்திரனா ரணில், மைத்திரியா யார் கூறுவது உண்மை? புதிய அரசமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் சுமந்திரன், சம்பந்தன் கூறிவருவது பொய்யா? அல்லது இலங்கை அரசின் ரணில், மைத்திரி கூறி வருவது பொய்யா? என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் ஈ.பி.ஆர்.எல். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிக்கை வெளியீடு நே…
-
- 1 reply
- 280 views
-
-
பிரதமரைக் காப்பாற்றிய ஜனாதிபதியின் கத்தி : விஜித ஹேரத் ஜனாதிபதியின் கத்தி பிரதமர் ரணிலைக் காப்பாற்றியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எனது கத்தியில் யார் வெட்டுப்படுகிறார்கள் எனத் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெட்டுப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை சொல்கிறது. அதில் 11 கோடி ரூபா சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்க…
-
- 0 replies
- 405 views
-
-
தமிழரசுக் கட்சி சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கின்றார் மாவை தமிழரசுக் கட்சி சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கின்றார் மாவை ஜனநாயகத் தமிழரசுக் கட்சி தலைவர் சாடல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சவப்பெட்டியின் கடைசி ஆணியை மாவை. சேனாதிராசாதான் அடிப்பார் என்று ஆரம்பத்தில் மங்கையர்கரசி கூறிய கூற்றுக்கு ஏற்றாற்போல் தற்போது அவர் செயற்படுகின்றார். தமிழரசின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இவ்வாறு ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தல…
-
- 0 replies
- 378 views
-
-
கொழும்பு யாசகர்களுக்கு 1,500 ரூபா நாள் சம்பளத்தில் தொழில் வாய்ப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மாநகரில் யாசகம் எடுப்பவர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பில் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக வாகங்களில் யாசகம் கேட்போரைக் கைது செய்து புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் நிற்கும் வாகனங்களை நெருங்கி யாசகம் கேட்பவர்கள், வேறு இடங்களில் வாகங்களில் வருவோரிடம் யாசகம் எடுப்பவர்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்ப்ட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் அதிகளாவ…
-
- 0 replies
- 233 views
-
-
கூட்டணி இருந்திருந்தால் பிரபாவும் இருந்திருப்பார் கூட்டணி இருந்திருந்தால் பிரபாவும் இருந்திருப்பார் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சிலர் தமது சுயநலனுக்காக உடைத்திருக்காவிடில் பிரபாகரன் இலட்சியப் போராளியாக இன்றும் இருந்திருப்பார். 2004ஆம் ஆண்டே போர் நிறைவடைந்திருக்கும். பல லட்சம் மக்கள், பல ஆயிரம் போராளிகள் உயிருடன் இருந்திருப்பர். மூன்று சுயநலவாதிகளே இத்தனை அழிவுகளுக்கும் சூத்திரதாரிகள். …
-
- 0 replies
- 397 views
-
-
மகிந்த செய்ததைக்கூட மைத்திரி செய்யவில்லை மகிந்த செய்ததைக்கூட மைத்திரி செய்யவில்லை முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை கூட கூட்டாட்சி அரசு தமிழ் மக்களுக்கு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டினார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 217 views
-
-
புலியுடன் வாழ்த்து கூறியவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி, பேஸ்புக்கின் ஊடாக, 2018ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், இரத்தினபுரி, எலபான மில்லவிட்டவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாகவே, குறித்த இளைஞனை, சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், இலட்சினையைப் பயன்படுத்தி, புத்தாண்டு வா…
-
- 0 replies
- 321 views
-
-
இன்று வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதே போன்று பிரதம…
-
- 0 replies
- 222 views
-
-
வவுனியா புதிய பஸ் நிலையம் ஊடான சேவை பெப்ரவரியில் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு என்கிறார் சி.வி. (ரி.விரூஷன்) இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை…
-
- 0 replies
- 162 views
-
-
2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள் (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்…
-
- 0 replies
- 156 views
-
-
வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அரசியலமைப்பே உருவாக்கப்படவேண்டும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து (எம்.நியூட்டன்) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாண மாக உருவாக்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் ஒரு சமஷ்டி அரசி யல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புக்களும் எமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தேர்தலுக்குப் பின்னர் கொள்கையில் ஒன்றுபட்ட அமைப்புக்களை இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 178 views
-
-
ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் [Saturday 2017-12-30 19:00] தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய …
-
- 6 replies
- 598 views
-
-
பிணைமுறை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிக்கை பிணைமுறி குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து சன்றுமுன்னர் கருத்து வெளியிட்டார். முதலில், பிணைமுறி விசாரணையில் பங்கேற்ற குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அவ்வறிக்கையை நீதிபதி வசம் தாம் கையளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேற்படி அறிக்கையில் பிணைமுறி விவகாரத்தில், அர்ஜுன் அலோசியஸ் தலைமையிலான ‘பெர்ப்பெச்சுவர் ட்ரெஷரீஸ்’ 688 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர் தனது அறிக்கையை மேலும் வாசிக்கையில், உங்கள் அனைவருக்கும் மு…
-
- 2 replies
- 948 views
-
-
அரசியல் தீர்வுக்கான முயற்சியும் பொது எதிரணியின் நிலைப்பாடும் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கான தமது ஆணையினை கடந்த வடமாகாணசபை தேர்தலின்போதும் அதன் பின் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். வடமாகாணசபை தேர்தலின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள் மற்றும் அடிப்படை பிரச்சினை என்பவற்றுக்கு எவ்வாறு தீர்வினை பெறவேண்டும் என்பது குறித்து தமது நிலைப்பாட்டினை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் வெளியிட்டிருந்தது. யுத்தத…
-
- 0 replies
- 347 views
-
-
அரசின் தாளத்துக்கு அசையும் கூட்டமைப்பு எவ்வாறு தீர்வை பெறும்?ரிஷாட் தமிழ் மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற புதிய தேர்தல் திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவை அளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுக்கும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கு, கிழக்கில் பரந்துபட்டு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டிற்கு வந்தால் மட்டுமே சிறந்த தீர்வொன…
-
- 1 reply
- 340 views
-
-
லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்! 2018லும் வெறும் வயிறுடன் கல்வி… – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஆண்டு ஒன்று பிறந்தால் புதிய எதிர்பார்ப்புக்கள் ஏற்படுவது இயல்பானது. தமிழர்களின் வாழ்வில் எல்லாம் ஏமாற்றமாய் தொடர 2018ஆம் ஆண்டு பிறந்தால் வெறும் வயிறுடன் எங்கள் சிறுவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (02.01.2018) பாடசாலை திறந்தபோது வருகை தந்த எத்தனை மாணவர்கள் வெறும் வயிற்றுடன் வந்திருப்பார்கள்? இலங்கையில் உலக உணவுத் திட்டம் நிறுவனம், முன்னெடுத்திருந்த பாடசாலை இலவச உணவுத் திட்டத்தை சில மாகாணதங்களில் நிறுத்திக்கொண்ட போதும் வடக்கு மாகாணத்தில் இந்த திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டது. அதற்கான காரணம்…
-
- 1 reply
- 939 views
-
-
பாடசாலைகளில் இராணுவத்தினர் களியாட்டம்!! பாடசாலைகளில் இராணுவத்தினர் களியாட்டம்!! பாடசாலைகளில் இராணுவ பிரசன்னங்கள் இருக்கக்கூடாது என மாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரின் புதுவருடக் களியாட்ட நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வடக்கு மாகாணத்தில் உள்ள மாகாண தேசிய பாடசாலைகளில் இலங்கை இராணுவத்தின் நிகழ்வுகள்…
-
- 0 replies
- 486 views
-
-
கொடுத்த பணத்தை நாம் செலவழிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் பேர்வழிகளுக்காக பத்திரிகைகளுக்கு சென்ற ஆண்டுகளில் எமது வடமாகாணசபையின் முன்னேற்றம் சம்பந்தமாக நாங்கள் எந்தவித விபரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதனால் இல்லாததையும் பொல்லாததையும் அவன் இவன் என்று எவனெவனோ சொல்லி வைக்க அவற்றைப் பத்திரிகைகள் எம்மிடம் கேட்டு உண்மை அறியாது பிரசுரித்ததால் பாரிய இடர்களை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தது. கௌரவ டிலான் பெரெராவின் அண்மைய கூற்றும் இவ்வாறான தவறான தகவல்களை முன்வைத்தே வெளிவந்தது. இந்த வருடத்தில் நாம் அவ்வாறான முன்னைய சம்பவங்களை மனதில் எடுத்து எமது 2017ம் ஆண்டுக்கான மூலதன முன்னேற்றத்தை வருடத் தொடக்கத்திலேயே சுருக்கமாகக் கூறிவைக்கின…
-
- 0 replies
- 311 views
-
-
திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் ! திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் ! க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் கடந்துள்ளன. நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஆவல் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின…
-
- 3 replies
- 573 views
-
-
ராஜபக்ஸக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் ராஜபக்ஸக்கள் டுபாய் வங்கிகளில் வைத்துள்ள கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே …
-
- 0 replies
- 178 views
-
-
மூவின மக்களையும் சந்தேகம் கொள்ள வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கையைப் பார்க்கும் போது, சில விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் சிங்களவர்களை ஏமாற்றுவதாகவும் தமிழ் மொழியில் தமிழர்களை ஏமாற்றுவதாகவும் இரண்டு மொழிகளிலும் முஸ்லிம்களை ஏமாற்றுவதாகவும் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடு…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈரோஸ் அமைப்பின் அரசியல் பிரிவாக இயங்கிய ஈழவர் ஜனநாயக முன்னணி உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. தற்கால உத்தியோக பூர்வமான புரிந்துண…
-
- 2 replies
- 360 views
-
-
கஞ்சா வியாபாரிக்கு துணைபுரியும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸாா்! வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக கஞ்சா விற்பனை செய்யும் நபரொருவருக்கு எதிராக கிராம மக்கள் அரச அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர். குறித்த கஞ்சா வியாபாரி தொடர்பாக விதவைப்பெண்ணொருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்து கடந்த 27-12-2017 அன்று கஞ்சா வியாபாரியால் கோடாலி தாக்குதலுக்குள்ளான செல்வரட்ணம் ஆனந்தராணி கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிராம மக்களால் கடந்த 28-12-2017 அரச அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சிதம்பரபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரால் எழுதப்பட்ட…
-
- 1 reply
- 259 views
-
-
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது
-
- 0 replies
- 402 views
-