Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு – ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார். தமிழரசு கட்சியின் தலைவராக தற்போது ரணிலே உள்ளார். பதி்ல் தலைவரே சம்பந்தன் அவர்கள். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடிவந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே பேரினவாத அரசே இன்று தமிழரசு கட்சியை பாதுகாத்து வருகின்றது. யாழில் தீர்க்க வேண்டி…

  2. வடக்கில் மதஸ்தலங்கள் மீது தொடரும் தாக்குதல்கள் யாழ்.கோட்டை பகுதியில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் அந்தோனியார் திருசொரூபம் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டி இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உள்ளது. யாழ்.கோட்டை பகுதியில் அமைந்துள்ள குறித்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மிக அருகில் யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் என்பன அமைந்துள்ளன. அந்நிலையிலை குறித்த தேவாலயத்தின் மீது கற்களால் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அண்மைக்காலமாக வடக்கில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , இந்துக்கோயில்களை இலக்கு வைத்து இனம் தெரியாதோர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/54438

  3. பணிப்புறக்கணிப்பை புறக்கணித்து யாழ் நோக்கி வந்த தொடருந்து பணிப்புறக்கணிப்பை புறக்கணித்து யாழ் நோக்கி வந்த தொடருந்து தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று கொழும்பிலிருந்து யாழ் நோக்கி தொடருந்து ஒன்று வந்துள்ளது. உயர் அதிகாரியின் ஏற்பாட்டிலே தொடருந்து யாழ் நோக்கி வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/54473.html

  4. சம்பந்தனின் வீடு முற்றுகை எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/திருகோணமலை/சம்பந்தனின்-வீடு-முற்றுகை/75-208702

  5. சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல் வீரசேகரவுடனான நேர்காணலில் அவரால் வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பான தனது கருத்துக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் மின்னஞ்சலின் ஊடாக வழங்கியுள்ளார். முதலமைச்சர்: வடக்கு கிழக்கு அல்லது நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும் வாழும் மக்கள் தமது …

    • 5 replies
    • 742 views
  6. ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவனம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோடடை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் உத்தியோகபூர்வமாக இலங்கையினால் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த துறைமுகம் வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த துறைமுகம் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்நோக்கி வந்த காரணத்தினால், அரசாங்கம் துறைமுகத்தை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கத் தீர்மானித்திருந்…

  7. தெல்லிப்பளையில் ஆயுதங்களுடன் மூவர் கைது தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்…

  8. காணாமல் போன இலங்கை மீனவர்கள் ஈரானில் உள்ளனர் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன ஐந்து இலங்கை மீனவர்கள், தற்போது ஈரான் அரசின் பாதுகாப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 29ம் திகதி பிற்பகல் முதல் சில நாட்கள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஐவர் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கையொன்றை வௌியிட்டது. இந்தநிலையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட ஐவர் ஈரான் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளதாக, இலங்கைக்கு தெரியப்படு…

  9. யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, கடந்தவாரம் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இதில், சட்டபீடத்தில் கற்கையை முடித்த 60 பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறினார். இவர்களில் 24 பேர் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களாவர். யாழ். பல்கலைக்கழக சட்ட பீடம் ஆரம்பிக்கப்பட்டு முதல் ஐந்து பிரிவுகளிலும் தென்பகுதி சிங்கள மாணவர்கள் இணைந்து கொள்ளவில்லை. எனினும், அண்மைய ஆண்டுகளில் திடீரென சட்ட பீடத்துக்குள் அதிகளவு சிங்கள மாணவர்கள் உள்ளீர்க்க…

  10. மைத்திரியுடன் இணைந்தார் சிறியாணி விஜேவிக்கிரம- வலுவிழக்கிறது கூட்டு எதிரணி கூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, ஐதேகவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்ததை அடுத்து. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். கூட்டு எதிரணியின் மீது அதிருப்தி அடைந்துள்ள அவர் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். …

  11. ஜனாதிபதி மைத்திரி என்னைத் தொடர்புகொண்டார் – பசில் ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொடர்பு கொண்டதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைபேசி மூலம் தம்மை தொடர்பு கொண்டு பேசியதாகயவும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். என்ன என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை எனினும் மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தலையீட்டின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நான்கு அல்லது ஐந்து ஆண்…

  12. மக்­கள் விருப்­பப்­ப­டும்­போது மாகா­ணங்­கள் இணை­ய­லாம் இரு மாகா­ணங்­க­ளில் வாழும் மக்­கள் விரும்­பும்­போது மாகா­ணங்­கள் இணை­ய­லாம். அது மக்­க­ளின் விருப்­பப்­ப­டியே நடக்­க­லாம் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன். மனித உரி­மை­கள் மற்­றும் புதிய அர­சி­யல் அமைப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று வவு­னி­யா­வில் நடை­பெற்­றது. அதில் வடக்கு– கிழக்கு மற்­றும் மலை­ய­கத்தை சேர்ந்த மூவின இளை­ஞர்­க­ளும் கலந்துகொண்­ட­னர். இளை­ஞர்­க­ளால் கேட்­கப்­பட்ட கேள்­வி­ க­ளுக்­கான பதில்­க­ளை­யும் அது தொடர்­பான விளக்­கங்­க­ளை­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வழங்­கி­னார். “தற்­போது உரு­வா…

  13. தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி தமிழ் அர­சுக் கட்­சிக்­குள் பங்­கீடு குறித்து அதி­ருப்தி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் பெரும் அதி­ருப்தி நில­வு­கின்­றது. ஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை, கூட்­ட­மைப்­பின் தலைமை மற்­றும் தமிழ் அர­சுக் க…

  14. ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பு கிழக்கில் மயில் சின்­னத்தில் போட்டி கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஹஸ­னலி நிய­மனம்; உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பு (எம்.சி.நஜி­முதீன்) முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இராஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹச­னலி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த லில் கிழக்கு மாகா­ணத்தில் போட்­டி­யி­ட­ வுள்­ளது. அக்­கூட்­ட­மைப்பு மயில் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்­க­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன் னாள் செய­லாளர் எம்.ரி.ஹச­னலி மற்றும் அதன் முன்னாள் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் ஆகியோர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டு…

  15. மஹிந்­த­வுக்கு அஞ்­ச­வில்லை ஐ.தே.க. வெற்­றி­ந­டை­போடும்; சுதந்­திரக் கட்­சியினருக்கே அச்சம் என்­கிறார் ரணில் (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­சப்­ப­டலாம். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இந்த இரண்டு கட்­சிகள் தொடர்­பிலும் எவ்­வி­த­மான அச்­சமும் கிடை­யாது. ஆகவே மக்­க­ளிடம் சென்று தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உண்­மை­யான பங்­க­ளிப்பை கூறுங்கள். மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். உத்­தேச உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் கட்­சியை எவ்­வாறு ஒழுங்­க­மை…

  16. மூன்றில் இரண்டு பெரும்­பான்மை சபை­களை ஐ.தே.க. கைப்­பற்றும் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வரவு, செலவுத்திட்டம் வெற்றி பெற்­றது போல ஐக்­கிய தேசிய கட்சி உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபை­க­ளையும் கைப்­பற்­று­வது நிச்­சயம். அதற்கு முக்­கிய கார­ண­மாக மீண்டும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட உள்­ள­தையும் குறிப்­பி­டலாம் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வ­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார். இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்­ணனின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் இருந்து…

  17. புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை ; இறுதிநாள் விவாதம் இன்று புதிய அரசமைப்பு தொடர்பான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இறுதிநாள் விவாதம், அரசமைப்புச் சபையில் இன்று (11) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், ஏற்கெனவே நான்கு நாட்கள் இடம்பெற்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 29, 30, 31 மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் இவ்விவாதம் நடைபெற்ற நிலையில், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப…

  18. ‘7 தாய்மார் உயிரிழப்பு’ “வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில், 300 நாட்களையும் தாண்டிய நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு, அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர்களில் 7 தாய்மார் இறந்துள்ளனர். அவர்கள் இறக்கும்போது கூட, எனது கணவர், பிள்ளைகள் எப்போது வருவார்கள் எனும் கேள்வியுடனேயே இறந்துள்ளனர்” என, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மு.செல்வராணி கேட்டுக்கொண்டார். “சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஏற்புடைய நடவடிக்கையை எடுங்கள்” என்றும் அவர் குற…

  19. மத்திய மாகாண கல்வியமைச்சர் கைது மு.இராமச்சந்திரன் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராமேஷ்வரன், அம்பேகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வௌ்ளையன் தினேஷ் உட்பட, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்த நால்வரையும், ஹட்டன் நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/மத்திய-மாகாண-கல்வியமைச்சர்-கைது/175-208685

  20. த.தே.கூ அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பு – அமைச்சர் மனோ கணேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். மஸ்கெலியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கொழும்பில் கடந்த வாரத்தில் கதை அடிபட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. வெளியிலிருந்து ஆதரவளிக்கக்கூடிய வாய்ப்புள்ளது அதேவேளையில் அரசாங்கத்தி…

  21. வீழ்த்த முனைந்தவர்களும் வீழ்ந்து போனவர்களும் http://www.virakesari.lk/

  22. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். வட மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், "சர்வதேசமே எங்கள் பிரச்சினையை கையாள முன்வாருங்கள்" என்ற, கருப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, அங்கியிருந்து யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா சபை இணைப்பு அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு, கண்ணீருடன் இந்த பேரணியில் பங்கேற்றனர். காணாமல் போனவர்…

  23. யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் நீதிபதி இளஞ்செழியன் விடைபெறுகிறாரா? யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்.அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று(10) நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழாவிலும் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்.... நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள…

    • 2 replies
    • 694 views
  24. வவுனியாவில் வாளுடன் வந்தவர்கள் போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோட்டம் வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது. இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிசார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர். இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர…

  25. கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு -க. அகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஒருவர், நேற்று (10) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (10) காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அவர் இணைந்து கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரே, இவ்வாறு இணைந்துகொண்டார். அத்துடன், அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.