ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார். “கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெர…
-
- 4 replies
- 596 views
-
-
மிழ் மக்களின் விடுதலைக்காக ஊடகச் சமராடிய உத்தமர் கோபுவை தமிழர்கள் இழந்து நிற்கின்றோம்: - விந்தன் கனகரட்ணம் இரங்கல் [Thursday 2017-11-16 19:00] தமிழ் மக்களின் அவலங்களையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் துணிவுடனும் தளராதும் வெளிக்கொண்டு வந்த சிரேஷ;ட பத்திரிகை ஆசிரியர் எஸ்.எம்.ஜி. கோபலரட்ணம் அவர்களை (கோபு ஐயா) எமது மக்கள் இழந்துள்ளனர். அவரது வாழ்க்கைப் பயணம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பிரதானமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். சிரேஷ;ட பத்திரிகையாளர் எஸ்.எம்.ஜி. கோபாலரட்ணம் அவர்களது மறைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வெளியிட்…
-
- 0 replies
- 327 views
-
-
ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துங்கள் அமெரிக்கா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரே ரணையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பாதுகாப்பு படைகள் மற்றும் அரச அதிகாரிகள் பொறுப்புக்கூறும் நிலையை உருவாக்கவேண்டும் என்று அமெரிக்கா ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் தற்போது பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்படுவதாக அறிக்கையிடப்பட்டுவருகின்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்…
-
- 1 reply
- 260 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் புதிய கட்சிக்கு மாடி வீடு சின்னம் பரிந்துரை! தமிழ் மக்கள் பேரவையினால் ஆரம்பிக்கப்படவுள்ள முண்ணனியினால் தேர்வு செய்யப்பட்ட மகரயாழ் சின்னம் தொடர்பில் அதிருப்தி அதிகரித்தமையினால் மாடிவீட்டுச் சின்னம் பரிந்துரைக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கத் திட்டமிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் அணிகளிற்கு பேரவையின் ஆதரவோடு புதிய முண்ணனி உருவாக்கம் தொடர்பான செயல்பாடு மும்முரமாக இடம்பெறும் நிலையில் குறித்த முண்ணனிக்காக ஆரம்பத்தில் மகரயாழ் தேர்வு செய்யப்பட்டது. குறித்த யாழ் ஆனது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இருமாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்துவதனால் ஏனைய மாவட்டத்தி…
-
- 0 replies
- 430 views
-
-
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத சாரதி- தெய்வாதீனமாக தப்பித்த சம்பவம்! கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் சமிக்ஞை போடப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடை நடுவில் மாட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் நேற்றையதினம்(16) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செலயகம் முன்பாக உள்ள புகையிரத கடவையில் நேற்று(16) பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிக்கும் புகையிரதம் வருகை தரும் நேரம் புகையிரத கடவை சமிஞ்சை போடப்பட்டது. இந்நிலையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவசரத்தில் கடக்க முற்பட்டு இடைநடுவில் மாட்டிக்கொண்டார். …
-
- 0 replies
- 399 views
-
-
யாழில் வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ்ப்பாண காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கோவில் வீதியை சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது 21) எனும் இ…
-
- 0 replies
- 290 views
-
-
-
ரணிலின் உறுதிமொழியால் ஆதரவளித்தது கூட்டமைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப் பது என்ற முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை அடு த்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எடுத்துள்ளது. முன்னதாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு கடந்த 9ஆம் திகதி கூடியிருந்தபோதும் அதில் உறுப்பினர்களிள் பலரின் எதிர்ப்புக்களை அடுத்து ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இறுதி முடிவொன்றை எடுக…
-
- 0 replies
- 191 views
-
-
பிணைமுறி விவகாரம் திங்களன்று பிரதமரை ஆஜராகுமாறு அழைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை புதுக்கடையில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக நேற்று இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது. கடந்த 2015 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியர…
-
- 0 replies
- 244 views
-
-
கோப் குழுவின் ஐந்து உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்பு விசாரணை நடைபெறும் போது நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் கண்டுபிடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பிணைமுறி விநியோக நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்றின் கோப் குழு வின் 28 உறுப்பினர்களில் ஐந்து பேர் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அப்போதைய முன்னாள் பணிப்பாளர் அர் ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி தொடர்புகளைக் கொண் டிருந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையுடன், இந்த விடயமானது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளினால் ஆணைக் க…
-
- 0 replies
- 152 views
-
-
’உணர்ச்சிவசப்படுகிறார் சம்பந்தர்’ -நிர்ஷன் இராமானுஜம் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நேற்று (16) ஆற்றிய உரை, "உணர்வுபூர்வமாக இருந்தது" என, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதம் நேற்று (16) நடைபெற்றபோது, இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எதிர்க்கட்சித் தலைவர், உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அவரது உரையை புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது" என்று கூறினார். …
-
- 0 replies
- 201 views
-
-
தமிழ் இளைஞர்கள் சித்தரவதை மறுப்புக்கு யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்! இலங்கைப் படையினர் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டமைக்கு உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச அமைப்பின் ( International Truth and Justice Project) தலைவர் யஸ்மின் சூக்கா கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அசோசியேட் பிறஸ் (Associated Press) என்ற செய்தி நிறுவனத்திற்கு கனடா வன்கூர் மாநிலத்தில் வைத்து வழங்கிய சிறப்பு நேர்காணலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ன மறுப்பு வெளியிட்டுள்ளார். …
-
- 2 replies
- 368 views
-
-
விக்னேஸ்வரன் கற்றுக்கொண்ட பாடம் தற்போது ஆட்சியில் உள்ள அரசைப் பதவிக்குக் கொண்டு வந்ததில் தமிழர்களின் பங்களிப்பு மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, போர்க்குற்றங்களுக்கான நீதி, பரிகாரம் என்பவற்றின் அடிப்படையில், அரசிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளுடன் தமிழர்கள் தற்போதைய கூட்டு அரசுடன் கைகோர்த்தார்கள். இந்த மக்கள் ஆணையின் அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றது. எதிர்க் கட்சியாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் த…
-
- 2 replies
- 523 views
-
-
குடாநாட்டிலுள்ள பொலிஸார் அனைவரதும் விடுப்புக்கள் திடீர் நிறுத்தம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டூழியங்களையடுத்து அனைத்துப் பொலிஸாரினதும் விடுப்புக்கள் நேற்று இடைநிறுத்தப்பட்டன. இதற்கான அறிவுறுத்தலை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் நேற்றுக் காலை வழங்கினார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக வாள்வெட்டுச் சம்பவங்களும், அடாவடித்தனங்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த நிலையிலேயே பொலிஸாரின் விட…
-
- 3 replies
- 553 views
-
-
யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப். Weiterempfehlen (எம்.எப்.எம்.பஸீர்) யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் த…
-
- 1 reply
- 461 views
-
-
மக்கள் ஆணை! விலகலும் எதிர்பார்ப்பும் தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறவில்லை என்று அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார் அந்தக் கட்சியின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். “தமிழ் மக்களின் கருத்தை அறியும் தேர்தலாக உள்ளூராட்சித் தேர்தல் அமையலாம். பௌத்தத்திற்கு முதலிடம், கூட்டாட்சி தேவையில்லை, ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற கொள்கையை உடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்பார்களானால், சிங்கள மக்களுக்கு அதை எடுத்துக் காட்டிப் புதிய அரசமைப்பைத் …
-
- 0 replies
- 548 views
-
-
தமிழ் உறுப்பினர்களை தமது கட்சியில் சேர்க்க பிரதான சிங்களக் கட்சிகள் முயற்சி! நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியும் போட்டியிடுவதற்கான கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், பலவீனங்கள் ஆகியவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி, தமது கட்சிகளில் தமிழ் உறுப்பினர்கள் பலரை வேட்பாளர்களாக நியமித்து வடக்கு கிழக்கில் கூடுதல் உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்…
-
- 0 replies
- 189 views
-
-
புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை அளுஸ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு சிங்கள பத்திரிகையான லங்காதீப கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஈழ தேசமொன்றின் கனவினை தோளில் சுமந்து கொண்டு இருந்த புலித் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளும் புலிகள் அமைப்பின் முதலாவது உறுப்பினர் சாவடைந்த நாளையும் நினைவுகூறப்படும் புலிகளின் மாவீரர் வாரம் நவம்பர் மாதம் 21ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரை யுத்த சமயத்தில் புலிகளின் தலைவரின் தலைமையில் அந்த அமைப்பு கடந்தபல வருடங்கள் நினைவுகூரியது. யுத்தத்திற்கு பின்பு புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிர…
-
- 0 replies
- 342 views
-
-
பட்ஜட்டுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டிய கடப்பாடு என்கிறார் மாவை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இன நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட 20 விடயங்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று (நேற்று முன்தினம்) நிதி அமைச்சரை சந்தித்து மேலதிக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்தோம். அவற்றை நிறைவேற்றுவதாகவும் நிதி அமைச்சர் எமக்கு உறுதியளித்தார். ஆகவே நல்லிணக்கத்திற்கான வரவு – செலவுத்திட்டமொன்றை கொண்டு வந்தமையினால் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடப்பாட்டில் நாம் உள் ளோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலை வர…
-
- 4 replies
- 388 views
-
-
வரவு - செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Weiterempfehle (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 191 வாக்குகள் ஆதரவாகவும் 58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன ஆதரவாகவும், மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன. கடந்த 9 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக நிதி…
-
- 0 replies
- 280 views
-
-
வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.! ரி.விஷரூஷன் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. யாழ்.மேல் நீதிமன்ற…
-
- 0 replies
- 474 views
-
-
நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை நாட்டை பிரிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக கூட்டுஎதிரணி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான ஒன்றென எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரிவினைவாதம் இல்லாத நாடாக இலங்கை மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாட்டை-பிரிக்கும்-முயற்சியில்-ஈடுபடவில்லை/175-207310
-
- 0 replies
- 298 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம் : வவுனியாவில் இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு 100 வீட்டுத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கள்ளிக்குளம், சிதமப்பரம் கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது உரையில், "கிராம சக்தி வேலைத்திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் சிந்தனையில் இந்த நாட்டிலிருந்து வறுமையை முற்று முழுதாக ஒழிக்கவேண்டும் எனத் தெரிவித…
-
- 0 replies
- 208 views
-
-
சிங்களவரின் சம்பந்தி விக்கி இனவாதத்தைத் தூண்டக்கூடாது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிங்கள இனத்துடன் குடும்ப உறவுகளை வைத்துக்கொண்டு வடக்கில் இனவாதத்தை தூண்டுவது ஏற்படையதல்ல என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. இந்த அமைதியைச் சீர்குலைக்க சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். முஸ்லிம், தமிழ் மாணவர்கள் இன்று மும்மொழிகளிலும் தேர்ச்சியடைந்துள்ளனர். சரளமாக சிங்கள மொழி…
-
- 0 replies
- 462 views
-
-
அரியாலை துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் அடையாள அணிவகுப்பு அரியாலையில் இளைஞன் ஒருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை. கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் சிசிரிவி கமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் கொலையாளி பயணித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில் இரு சிறப…
-
- 1 reply
- 351 views
-