ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
திருவையாறு சிறுவா் இல்லத்தை விட்டு ஓடிய சிறுவா்களால் பரப்பரப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள சிறுவா் இல்லம் ஒன்றில் இருந்து நேற்றிரவு ஜந்து சிறுவா்கள் இல்லதை விட்டு வெளியேறியமையினால் பிரதேசத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு(15) குறித்த சிறுவா் இல்லத்திலிருந்து வெளியேறி அயலில் உள்ள காணிகளில் ஒழிந்திருந்த நிலையில் கிராமத்து இளைஞர்கள் குறித்த சிறுவா்களை மீட்டு விசாரித்துள்ளனர். இதன் போது இல்லத்தில் உள்ள தங்களுக்கு பொறுப்பானவா்கள் தாக்கியதனால் தாங்கள் சிறுவா் இல்லத்திலிருந்து ஒடி வந்து விட்டதாகவும், இரவு ஒன்று கூடலுக்கு தாமதமாகியும் செல்லாத காரணத்தினால் தங்களுக்கு கடுமையாக அடி விழுந்ததாகவும் ச…
-
- 0 replies
- 537 views
-
-
புலம்பெயர் நாடுகளுக்கு சென்று தனிநாடு கோருக; தமிழருக்கு அறிவுரை வழங்கும் தேரர்! தமிழ் மக்களுக்கென தனிநாடான்று இல்லாததே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்று ஸ்ரீலங்கா பாளி மொழி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டை கோரும்படியும் அவர் தெரிவித்தார். எதிர்பார்ப்புக்களை ஏற்றிவைக்கும் ஒளி என்ற தலைப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஏற்பாடு செய்த…
-
- 32 replies
- 2.1k views
-
-
40000 பொது மக்கள் கொல்லப்பட்டார்களா? : அமைச்சரும் ஊடகவியலாளரும் கடும் வாதப்பிரதிவாதம் (ரொபட் அன்டனி) இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் பிரிட்டனின் பிரபுக்கள் சபை உறுப்பினர் லோர்ட் நெஸ்பி தெரிவித்த கரு த்து தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி யாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளருக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்குமிடை யில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என பிரிட்டனின் பிர புக்கள் சபை உறுப்பினர் லோட் நெஸ்பி தெரிவித்துள்ள நிலைமை தொடர்பி…
-
- 1 reply
- 449 views
-
-
பேரவையின் கொள்கைகளை முன்னெடுத்தால் யாருக்கும் ஆதரவு சுரேஷ், கஜேந்திரகுமாருடனான சந்திப்பில் சி.வி. கருத்து மக்கள் இயக்கமாகவே பேரவை செயற்படும் என்றும் தெரிவிப்பு (நமது நிருபர்) பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலில் பங்கேற்பது அவர்களது உரிமையாகும்.பேரவையின் கொள்கைகள், செயற்றிட்டங்களை இந்தக் கட்சிகள் அல்லது தனி நபர்கள் முன்னெடுப்பார்களாயின் அதற்கு ஆதரவு வழங்கவேண்டிய கடமை உள்ளது என்று வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர…
-
- 2 replies
- 238 views
-
-
TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளனர்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே அவர்கள் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று காலை இடம்பெற்றுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 208 views
-
-
முஸ்லிம் தலைவர்கள் பொதுபலவுடன் “டீல்” “பொதுபல சேனா, சமூகத்துக்கு எதிராக மேற்கொண்ட அனைத்துவிதமான எதிர் நடவடிக்கைகளையும் நாம் மன்னிக்கின்றோம், அதற்கு பிரதியுபகாரமாக, எங்களுக்கு எதிராக, போட்டிருக்கின்ற வழக்குகளை நீங்கள் வாபஸ்பெற வேண்டுமென்று, பொதுபல சேனாவுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேரம் (டீல்) பேசுவதாக செய்திகள் வந்திருக்கின்றன” என்று, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். ஆண்டியாப் புளியங்குளம் மக்கள் சந்திப்பொன்று வாழவைத்தகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கை முஸ்லிம் அரசியலை, வியாபாரமாகவே எமது முஸ்லிம் அரசியல் தலைவர்…
-
- 1 reply
- 329 views
-
-
டீ.கே.பி. தஸநாயக்கவை உடன் சிறைச்சாலைக்கு மாற்றவும் தெஹிவளை பகுதியில் வைத்து கடந்த 2008.09.17 அன்று கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ், கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தஸநாயக்கவை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார். சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பிறப்பித்த குறித்த உத்தரவில், டீ.கே.பி. தஸநாயக்கவை உடன…
-
- 0 replies
- 300 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் வாள்வெட்டை ஆவா குழுதான் செய்கிறது –பொலிஸ் தனு ரொக்ஸ் குழுவைச் சேர்ந்தோரையும் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளவர்களையும் இலக்கு வைத்தே அண்மைக்காலமாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடும் பொலிஸார், அவற்றை ஆவா குவே மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகத் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், வீடுகளுக்குள் புகுந்து இடம்பெறும் அடாவடிகளை ஆவா என்று தம்மை அடையாளப்படுத்தும் குழுவினரே முன்னெடுக்கின்றனர். அந்தக் குழுவிலிருந்து பிரிந்து சென்று செயற்படும் தனு என்ற இளைஞனும் அவரது சகாக்களும் இணைந்து தம்மை தனு ரொக்ஸ் என அடையாளப்படுத்திச் செயற்படுகின்றனர். மானிப்பாயை மையமாக வைத்து இயங…
-
- 0 replies
- 334 views
-
-
வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வாள்வெட்டுச் சந்தேகிகள் மூவர் யாழில் கைது! வாள்களுடன் நடமாடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இன்று மாலை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள மூவரும் 22 தொடக்கம் 24 வயதுகளை உடையவர்கள் என்றும், அவர்கள் கொக்குவில், கோப்பாய் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் உள்ளதாகவும், இவர்கள் ஏற்கனவே யாழில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தநிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார்…
-
- 2 replies
- 355 views
-
-
தொண்டமான் பெயர் விவகாரம்; இந்தியா கவனம் செலுத்தும் - சுஷ்மா ஸ்வராஜ் தொண்டமானின் பெயரை நீக்கிய விவகாரம் குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்து தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது குறித்து சுஷ்மாவுக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நன்மதிப்புக்காகவும் உழைத்த முதுபெரும் தலைவர் தொண்டமானின் பெயரை அரச நிறுவன…
-
- 0 replies
- 270 views
-
-
இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவகச்சேரி நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டி வெலானவால் கைது செய்து சென்றநபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்காளனது சட்டத்தரணி குருபரன் மற்…
-
- 1 reply
- 338 views
-
-
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த கோரி : இலங்கைக்கு கடும் அழுத்தம் மனித உரிமை பேரவையில் இலங்கையிடம் சரமாரி கேள்விகள் (ரொபட் அன்டனி) இலங்கை காணாமல்போனோர் விவகாரத்துக்கு தீர்வுகாணவேண்டும் என்பதுடன் காணிகளை விடுவிப்பது அவசியமாகும். அத் துடன் விரைந்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும் என்று கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் வலியுறுத்தின. அத்துடன் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் கருத்து வெ ளியிட்ட சர்வதேச நாடுகள் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் எனவும் முன்னேற்றங்கள் ஏ…
-
- 0 replies
- 149 views
-
-
'மஹிந்த தரப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால இணையத் தயார்' சின்னசாமி ஷிவானி “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகவே இருக்கின்றது” என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றார…
-
- 0 replies
- 109 views
-
-
சர்ச்சைகளுடன் இன்று கூடுகிறது த.தே.கூ. 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்காக பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அதன் தலைவரும் எதிர்க் கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று காலை கூடவுள்ளது. முன்னதாக கடந்த ஒன்பதம் திகதி கூடியிருந்த பாராளுமன்றக் குழுவில் வரவு செலவுத் திட்ட விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டபோதும் அது குறித்து எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதே நேரம் வரவு –…
-
- 0 replies
- 171 views
-
-
தமிழக மீனவர்கள் பத்து பேர் கைது தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து படகு எண் 885இல் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் பத்துப் பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயணித்த விசைப்படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி மீனவர்கள் நெடுந்தீவுக்கு வடகிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போதே கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் மீனவர்கள் மீது கடற்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.vir…
-
- 0 replies
- 207 views
-
-
உடைகிறது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள…
-
- 1 reply
- 524 views
-
-
ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார் கே.எல்.ரி.யுதாஜித் “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ…
-
- 5 replies
- 1.4k views
-
-
குடாநாட்டை அதிரவைக்கும் வாள் வெட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாள்களாக மீண்டும் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டை அடுத்து பொலிஸார் வாள் வெட்டுக் குழுக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தனர். இதனை அடுத்து அடங்கியிருந்த வாள்வெட்டுக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. கடந்த 4 நாள்களில் மட்டும் 7 இடங்களில் நடந்த 8 வாள்வெட்டுச் சம்பவங்களில் 12 பேர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மட்டும் மூன்று இடங்களில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் புரிந்தனர். வெவ்வேறு சம்பவங்களில…
-
- 3 replies
- 604 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கை 5 சதவீதம் கூட நிறைவேறவில்லை கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் தலைமை அமைச்சர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு -– செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த வரவு – செலவுத் திட்டத்தில் முன்னேற்றமான விடயங்கள் உள்ளன. வடக்கு – – கிழக்கைப்…
-
- 0 replies
- 336 views
-
-
“ஒரே நாளில் முடிந்துவிடாது”: ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேக வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் சற்று முன் பேசிய இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்று காலாந்தர மதிப்பாய்வை முன்வைத்துப் பேசியபோதே இலங்கைக் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர். தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு மேற்படி அமர்வில் கலந்துகொண்டுள்ளது. இதில் பேசி…
-
- 0 replies
- 443 views
-
-
சவால்கள் நிறைந்த பாதையில் பயணிக்கப்போகும் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடு வது அநேகமாக நிச்சயமாகிவிட்டது. முன்னர் எதிர்பார்த்தபடி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகித் தனிவழியில் செல்வதற்குத் தீர்மானித்து விட்டது. இனிமேல் வேறு எவருடனாவது கூட்டணி அமைப்பதற்கான பேச்சில் அந்தக் கட்சி ஈடுபடப் போகின்றது. ஆனால் சில்லறை விடயங்களுக்காக கூட்டமைப்பு பிளவுபட முடியாதென வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தாம் பேசவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் தெரித்துள்ளார். எந்த நம்பிக்கை…
-
- 0 replies
- 419 views
-
-
முகமாலை, இந்திராபுரம் கிராமங்களில் மீள்குடியேற அனுமதி பச்சிலைப்பள்ளி முகமாலை மற்றும் இந்திராபுரத்தின் 200 மீற்றர் பிரதேசம் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிதிவெடி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக முகமாலைப் பிரதேசம் காணப்படுகின்றது. இருப்பினும் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தொடர்ச்சியாக துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அதனை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் முகமாலை மற்றும் இந்திராபுரத்தி…
-
- 0 replies
- 179 views
-
-
ஒரு மில்லியன் டொலர் போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது ஒரு மில்லியன் டொலர் முகப் பெறுமதி கொண்ட போலி டொலர் நாணயத் தாள்களுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். வவுனியா மற்றும் திருகோணமலை முகாம்களைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று (14) கிண்ணியா, மாஞ்சோலைச்சீமை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்த டொலர் நாணயத் தாளுக்கான செப்பு அச்சுப் படிவத்தையும் நாணயத் தாள் அச்சிடப் பயன்படும் சில உபகரணங்களையும் விசேட அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் தற்போது கிண்ணியா பொலிஸில் கையளிக்கப்பட…
-
- 0 replies
- 275 views
-
-
சுனாமி வதந்தியால் இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் (படங்கள்) நாட்டின் கரையோரப் பகுதிகளில் சுனாமி ஏற்படப்போவதாக பரப்பப்பட்ட வதந்தி காரணமாக மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவிலும் மக்கள் தமது இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்படப் போவதாக இன்று காலை திடீரென வதந்தியொன்று நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர். தற்போது கிடைத்த செய்திகளின்படி, மட்டக்களப்பில் மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வதந்தியால் இடம்பெயர்ந்ததாகத் தெரியவருகிறத…
-
- 0 replies
- 236 views
-
-
வட்டுவாகல் பாலத்தில் திடீர் வெடிப்பு; பயணிகள் அசௌகரியம் முல்லைத்தீவு - பரந்தன் A34 பிரதான வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கனரக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நடைபயணிகளும் அவதானமாகச் செல்லாதவிடத்து கடும் காயங்களுக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக சேதமடைந்திருந்த இப்பாலம் ஒருவழிப் பாதையாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாலத்தின் நடுப்பகுதியில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டது. இதையடுத்து, கனரக வாகனங்கள் எவையும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைதீவிலிருந்து செல்லும் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள…
-
- 0 replies
- 169 views
-