ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142772 topics in this forum
-
சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 236 views
-
-
கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்! கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்…
-
- 0 replies
- 151 views
-
-
யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைபயணம் 02 Feb, 2025 | 01:22 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் நீரிழிவுக் கழகமும் இணைந்து நடத்திய நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இந்த நடைபயணம் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வைத்தியசாலை வீதி வழியாக சென்று கோவில் வீதியை அடைந்து அதன் வழியாக நல்லூரை அடைந்து பருத்தித் துறை வீதி வழியாக மீண்டும் வைத்தியசாலை வீதியை வந்தடைந்தது. https://www.virakesari.lk/article/205587
-
- 0 replies
- 172 views
-
-
வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு! இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற தலைப்பிலான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி பொது பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிற மோட்டார் அல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்குகிறது. மோட்டார் கார்கள் உள…
-
- 2 replies
- 178 views
-
-
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு! இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததுடன், அவர் தாக்கல் செய்த 08ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இதில் இந்திய வௌியுறவு அமைச்சுக்காக 20,516 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிநாடுகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக 5,483 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்டை நாடுகளில் நீர் மி…
-
- 1 reply
- 142 views
-
-
02 FEB, 2025 | 10:19 AM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாமலிருக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்திருப்பதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்துக் கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது என்பதை ஜனாதிபதி ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துக் கொள்ளவுள்ளார். அத்துடன் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பொது மக்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துக் கொள்ளவுள்ளார். …
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
02 FEB, 2025 | 09:56 AM (எம்.மனோசித்ரா) பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு கடற்படை கப்பல்கள் 3 அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமாக இக்கப்பல்கள் வருகை தந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தான் கடற்படையின் பி.என்.எஸ். அஸ்லட் என்ற போர் கப்பல் நேற்று சனிக்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பல் 123 மீற்றர் நீளமுடையதாகும். 243 பணியாட்களைக் கொண்ட இதன் கப்டனாக மொஹமட் அசார் அக்ரம் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகின்றார். இக்கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டி…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு Saturday, February 01, 2025 செய்திகள் புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற…
-
-
- 4 replies
- 875 views
-
-
ஆனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித்த 01 FEB, 2025 | 08:30 PM (நமது நிருபர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வாரன யோஷித்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைத்துள்ளார். பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த அறிவித்தலையடுத்து அவரிடமிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்பத்தில் ஒப்படைத்திருந்தார். இதன் பின்னர் மீண்டும் பாதுகாப்புச் செயலாளரால் ஏனைய துப்பாக்கிகளையு…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
Published By: Vishnu 28 Jan, 2025 | 06:40 PM இந்த நாட்டில் ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக்கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்துவருகின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட…
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களுக்கு சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென நீரியல்வளத்துறை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சட்டவிரோத தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக சட்டவிரோத தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை சட்டவிரோதமாக பிடித்துவருவதுடன், பாவனைக்கு உதவாதென கூறி பெரும் தொகையான சிறிய மீன்களை கடலில் வீசி விட்டு வருவதாக அறியமுடிகிறது. கடந்த வருடமும் வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தலை தூக்கிய போதும் சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. இந்த புதிய அரசாங்கத்தில் வடமராட்சி கிழக்கில் மீண்டும் சட்டவிரோத சுருக்குவலை தொழில் தலை தூக்கியுள்ளதால் மீன்பிடி அமைச்சர் விரைந்து இவர…
-
- 0 replies
- 121 views
-
-
01 FEB, 2025 | 07:33 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (01) காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருக…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன் Vhg ஜனவரி 31, 2025 மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளார். சாணக்கியன் நேபாளத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதனாலேயே அவரால் மாவையின் மரணவீட்டில் கலந்துகொள்ளமுடியாமல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது. இருந்தபோதிலும், மாவையின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், சாணக்கியன் நினைத்திருந்தால் உடனடியாகவே இ…
-
- 2 replies
- 437 views
-
-
நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே? நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில், கனேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இலுக்வத்த கிராமத்தில் இன்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். “கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன் ந…
-
- 0 replies
- 110 views
-
-
தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், சிறப்ப…
-
- 0 replies
- 122 views
-
-
01 FEB, 2025 | 04:15 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடையமாக மாற்றியுள்ளனர். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத ந…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து February 1, 2025 01:35 pm முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்…
-
- 1 reply
- 245 views
-
-
01 FEB, 2025 | 02:40 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
01 FEB, 2025 | 01:17 PM (செ.சுபதர்ஷனி) இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை போஷாக்கு சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வறிக்கை வெயிட்டு அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டின் போசாக்கு நிலையை உயர்த்துவ…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
01 FEB, 2025 | 11:38 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும்தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளன, எனினும் எமது ம…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நா.க. தமிழீழ அரசாங்கம் அறைகூவல் சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவ…
-
- 0 replies
- 130 views
-
-
நாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளை கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்துக்கு ஒப்பாக்கிய ஜனாதிபதி 01 Feb, 2025 | 01:15 PM (எம்.வை.எம்.சியாம்) நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்.வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நடிகர…
-
- 0 replies
- 120 views
-
-
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு 01 Feb, 2025 | 01:15 PM கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி நீ…
-
- 0 replies
- 68 views
-
-
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உய…
-
- 0 replies
- 144 views
-
-
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு. நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களை…
-
- 0 replies
- 108 views
-