ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். 20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். http://tamilleader.org/?p=4422
-
- 1 reply
- 472 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி 09.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 245 views
-
-
மீட்கப்பட்ட செல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன Share அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட பகுதியில் மரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த நான்கு செல்கள் பொலிஸாரினால் செயலிழக்கச் செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு அருகில் திண்மக்கழிவு சேகரிக்கும் இடத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, அங்கு இருந்த மரத்தின் கீழ் துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் நான்கு மோட்டார் குண்டுகள் காணப்பட்டுள்ளன. இது தொடர்பாக சாவகச்சேரி நகரசபையினர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் இது தொடர்பாக…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ்.,வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமது வழக்கை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும். இராஜதுரை திருவருள் மதியழகன் சுலக்ஷன் கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களை பொது மற்றும்…
-
- 4 replies
- 780 views
-
-
நாளை விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இன்றே முகம் கொடுக்கும் நாமல் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவரை நாளை ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் நாமல் நாளை விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தான் இன்றே வாக்கு மூலம் வழங்க போவதாக தெரிவித்தே இன்று ஹம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார். http://www.virakesari.lk/article/25499
-
- 1 reply
- 480 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்பு ஏற்கமுடியாத நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன் எம்.பி. (ஆர்.ராம்) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளவும் வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக் ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு…
-
- 1 reply
- 691 views
-
-
உண்ணாவிரதமிருக்கும் அர சியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட் டியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன் றத்திற்கு மாற்றக் கூடாது மற்றும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பல நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்து…
-
- 3 replies
- 422 views
-
-
தனிநாட்டுக் கோரிக்கைக்கு பூட்டுப் போடுகிறதா புதிய அரசியல் அமைப்பு? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரே தேசம் ஒரே மதம் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் முன்வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் அடைந்துள்ளார். ஒன்றுபட்ட தேசத்திற்குள் வாழவும் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் தமிழ் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர் என்பதே பிரதமரின் கருத்தாகும். தமிழ்க் கட்சி்கள் தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்திருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினை காரணமாகவே போர் மூண்டது என்றும் தமிழ் தலைவர்கள் சமஷ்டியை கோரினர் என்றும் போருக்குப் பிறகும் அந்த நிலமை காணப்பட்டது என்றும் தற்ப…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதில் கடுமையான சிக்கல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் மைத்திரிபால நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிடின் புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதில் அர்த்தமில்லை. தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாது என கூறி வருகிறது. இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜத்த ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி தனது நிலைப்பாட்…
-
- 0 replies
- 338 views
-
-
அணு ஆயுதங்களின் பரம்புதலுக்கு தடை விதிப்பு அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல்களுக்கு,இலங்கை அரசாங்கம் தடைவித்துள்ளது. இது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தல், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் 2017ஆம் ஆண்டின் ஐ.நா சபை (அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள்) பற்றிய ஒழுங்கு விதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை, உற்பத்தி செய்திகின்ற, உடமையில் வைத்திருக்…
-
- 0 replies
- 251 views
-
-
யாழ். முஸ்லிம்களுக்காக பல அமைப்புக்கள் இயங்குகின்றன- அஸ்மின் Share யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் பல்வேறு சமூக அமைப்புகள் இயங்குகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் இத்தகைய அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. இதனை நாம் வரவேற்க வேண்டும். புலம்பெயர் யாழ்ப்பாண முஸ்லிம்கள். யாழ் முஸ்லிம்களின் குரலாக இருக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியக் கல்லூரியில் நேற்று நடை…
-
- 0 replies
- 236 views
-
-
திருமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி – இந்தியாவுடன் பேச்சு Share திருகோணமலை எண்ணெய்க் குதங்களைக் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய–இலங்கைக் கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது. வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுகம், மின் திட்டங்கள் தொடர்பாக கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூட்டுப் பணிக்குழுவின் ஊடாக, இரண்டு நாட்டு அரசுகளும் பேச்சுக்களை நடத்தி வருவதாக, இந்தியன் ஓயில் நிறுவன முகாமைத்து…
-
- 0 replies
- 221 views
-
-
முறிகண்டிக்குளத்தை விடுவிக்குமா இராணுவம்? Share முல்லைத்தீவு – முறிகண்டிக் குளத்துக்கு அருகில் நிலைகொண்டிருக்கும் இரா ணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள இராணுவம், முகாமுக்கு அண்மையில் இருக்கும் குளத்தில் நீர்தேக்கி வைப்பதற்கு அனுமதி மறுக்கிறது. இதனால் சுமார் 80 ஏக்கர் காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதொடர்பில் அப்பகுதி விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 151 views
-
-
ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு எந்தப் பிரச்சினைகளும் வராது Share “இடைக்கால அறிக்கையின் சிங்களப் பிரதியில் ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்ற அனைத்துமே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே எந்தப் பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை. இதனைத் தமிழர் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது” அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் பௌத்த மக்களின் உயர் பீடங்களான அஸ்கி…
-
- 0 replies
- 263 views
-
-
ராஜபக்சக்கள் எவரையும் தலைமை அமைச்சராக நியமிக்கமாட்டேன் Share ராஜபக்ச குடும்பத்திலுள்ள எவரையும் எனது ஆட்சியின்கீழ் தலைமை அமைச்சராக்குவதற்கு இடமளிக்கமாட்டேன். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார் எனத் தெரியவருகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், மகிந்த மற்றும் மைத்திரி தரப்பை இணைத்து கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்குரிய முயற்சியில் சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இருதரப்பினரையும…
-
- 0 replies
- 242 views
-
-
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை : 2264 வீடுகள் மண்சரிவில் புதையும் அபாயம்.! நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2264 வீடுகள் மண்சரிவில் பாதிக்கப்படும் நிலைமை உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்த இரு நாட்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி காணப்படுமாயின் நிலைமை பாரதூரமாகும் என கட்டட ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இரு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அதிக மழை காரணமாக மலையகம் உள்ளடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனர்த்த பாதிப்…
-
- 0 replies
- 165 views
-
-
அ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – டில்வின் அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கக்கூடியதொரு புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம் என ஜே.வி.பி பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயத்தில் தமது கட்சி தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் மக்களின் உரிமைகளை சிறிதளவேனும் வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை சிதரடிக்கும் நோக்கில் வடக்கிலும், தெற்கிலும் சில இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 269 views
-
-
வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நண்பகல் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்…
-
- 8 replies
- 946 views
-
-
உணவு ஒறுப்பை கைவிட அரசியல் கைதிகள் மறுப்பு Share ShareTweet அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுத்து போராட்டம் நடத்திவரும் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆறு பேர் நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று போராட் டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட்டனர். கைதிகளின் கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண சபை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் உறுப்பினர்கள்…
-
- 3 replies
- 754 views
-
-
புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துவிட்டோம்; இனி ஓரங்குலம்கூட விட்டுக்கொடுக்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்து கீழிறங்கி வந்துள்ளோம். இன்னும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் மூன்றுவிடயங்கள் உள்ளன. அவை தொடர்பில் சாதகமான நிலை எட்டப்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைபை ஏற்றுக்கொள்ளும். வடக்குக…
-
- 7 replies
- 797 views
-
-
தமிழ் மக்களை நோக்கி சீனா! http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-9
-
- 4 replies
- 662 views
-
-
அரசமைப்பை தோற்கடிக்க இராணுவத்தை நாடும் மகிந்த அணி Share புதிய அரசமைப்புக்கான முயற்சியை அடியோடு தோற்கடிக்க இராணுவத்திடம் உதவிகோர மகிந்த அணி தயாராகி வருகின்றது. இராணுவத்தினருடன் பேச்சுகளை நடத்த சிறப்புக் குழுவை அமைக்கவும் முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்துவது குறித்து மகிந்த அணியின் பிரதான அரசியல் செயற்பாட்டாளர்களின் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் மகிந்த அணியின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர். புதிய அரசமைப்புத் தொடர்பில் பொ…
-
- 3 replies
- 387 views
-
-
சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும் பன்மொழி வித்தகரான சுவாமி விபுலானநந்த அடிகளார் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் இறுதி நாளான நேற்றைய தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ…
-
- 4 replies
- 946 views
-
-
வீடுகள், அலுவலகங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகம் உட்பட இரண்டு வீடுகள் மீது, மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில், அலுவலகம் மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பிணக்கு ஒன்று தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில், சனிக்கிழமை நள்ளிரவு கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது, சம்மேளன அலுவலக கட்டடத்துக்கு, வெளியே ஒன்று திரண்ட இளைஞர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலத்தின் மீது கற்களை வீசியுள்ளனர். …
-
- 0 replies
- 359 views
-
-
‘மனோபாவம் மாற வேண்டும்’ “தேர்தல் காலங்களில் வீராப்புப் பேசும் தலைமைகளை மக்கள் ஆதரித்து, அவ்வாறானவர்களுக்கு, வாக்களிக்கும் நிலைமை மாறவேண்டும்” என்று கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எமது முஸ்லிம் சமூகம், கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக, எமது சமூகம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் தொண்டு நிறுவனத்தின் உதவியின் ஊடாக, பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்துக்கான, அங்குரார்ப்பண நிக…
-
- 0 replies
- 284 views
-