ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் நான்காம் தர பிரஜைகளா ? காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகள் என அரசாங்கம் காட்டியுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, குறித்த திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்த இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அன்றி நான்காம் தர…
-
- 0 replies
- 340 views
-
-
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில்…
-
- 10 replies
- 984 views
-
-
பெண் பிரதிநிதித்துவம், எல்லை நிர்ணயம் போன்ற கதைகளைக் கூறி தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசு (ஆர்.யசி) நல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்க தேர்தல்களை பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்கை முயற்சித்து வருகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்…
-
- 0 replies
- 185 views
-
-
மட்டுவில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திண்மக்கழிவு அகற்றப்பட்டது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்று காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பார்வைக்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த திருப்பெருந்துறை மக்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் நீதிமன்றக் கட்டளையை மக்களிடம் காண்பித்த போது கட்டளையில் உள்ளது போன்று கழிவுகளை அகற்றக் கோரினர…
-
- 0 replies
- 275 views
-
-
மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ். கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு ஆலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் பேரணியாக யாழிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன…
-
- 3 replies
- 415 views
-
-
அநாதரவாக விடப்பட்ட முச்சக்கர வண்டியின் உரிமையாளர் யார்? வவுனியா, ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட பச்சை நிற முச்சக்கரவண்டியை பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். என்.பி - ஏ.ஏ.ஜே - 9101 என்ற இலக்கிமிடப்பட்டுள்ள குறித்த பச்சை நிற முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக தரிப்பிடத்தில் அநாதரவாக விடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் கொண்ட குறித்த முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் ஒன்றினைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கரவண்டியின் பின் பக்கம் தேசியகொடியுடன் மறத் தமிழன்(ஜெஸ்டின்) என…
-
- 0 replies
- 321 views
-
-
கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187
-
- 23 replies
- 1.8k views
-
-
“13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோச்சி பெறாத மாணவர்களுக்கு “13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி” வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக பொதுப்பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் எனும் இரு பிரிவுகளின் கீழ் இக் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. உயர்தர கல்வி ஆண்டு இரண்டு வருடங்களில் முதல் ஆறு மாதங்கள் பொதுப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 9 பாட விதானங்களை கற்று தேர்ச்சி பெறுவது…
-
- 0 replies
- 336 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்ட வரைவை நிறைவேற்ற எதிர்ப்பு! நாடாளுமன்ற வளாகத்தில் கொடும்பாவி எரித்து அரசுக்கு அழுத்தம் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் பன்னாட்டுப் பிரகடனச் சட்ட வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. “பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் பன்னாட்டுப் பிரகடனச் சட்ட வரைவு இறந்த காலத்தைப் பாதிக்காது, மாறாக எதிர்காலத்துக்கே தாக்கம் செலுத்தும் என்று அரசு…
-
- 0 replies
- 222 views
-
-
20 குறித்த விளக்கத்துக்கு உயர் நீதிமன்றத்திடம் விவரம் கோரவேண்டும் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து “20ஆவது திருத்தச் சட்டவரைவின் சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தில் உரிய காரணங்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்காமையால் அது தொடர்பில் உயர் நீதிமன்றிடம் நாடாளுமன்றம் சார்பில் விவரம் கோரப்பட வேண்டும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் திருத…
-
- 0 replies
- 225 views
-
-
தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார். அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி…
-
- 5 replies
- 557 views
-
-
50-50 முறையில் மாகாணத் தேர்தல் தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும், விகிதாரசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாகக் கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், வேட்புமனுத் தாக்கலின் போது 25 சதவீதம் பெண் களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் நேற்றுத் திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்பட்டது. 60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையிலுமாக அமைந்த கலப்பு முறையில் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்த ஏற்கனவே இணக்கம் காணப்பட்டிருந்தது. இத…
-
- 0 replies
- 261 views
-
-
உல்லாசக் கடற்கரை விவகாரம் மக்களைச் சந்தித்தார் அமைச்சர் அனந்தி தொண்டைமானாறு அக்கரை உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் சந்தித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பின்போது இவ் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வினைத் தான் பெற்றுத் தருவதாக அமைச்சர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்தித்த அமைச்சர் உல்லாசக் கடற்கரை விவகாரம் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடி இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வினை மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். http://newuthayan.com/sto…
-
- 0 replies
- 436 views
-
-
முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்: ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள்…
-
- 2 replies
- 502 views
-
-
இடைக்கால அறிக்கை இன்று புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்பு சபை இன்று காலை கூடவுள்ளது. இதன்படி அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகாததனை அடுத்து ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன்படி தற்போது வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பூர்த்தியாகியுள்ளது. இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அரசியலமைப்பு ச…
-
- 1 reply
- 347 views
-
-
கைதுசெய்யப்பட்ட 4 தமிழகத்தவர்களும் விடுதலை விசா மற்றும் கடவுச்சீட்டுக்களின்றி கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அவர்களை பண்டாரவளைப் பொலிசார் நேற்று மாலை விடுதலை செய்தனர். பண்டாரவளைப் பகுதி ஆலயமொன்றில், சிற்ப நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நால்வரும் பொலிசாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, கைது செய்யப்பட்ட நால்வரின் விசா மற்றும் கடவுச்சீட்டுக்களை, பொலிசாரிடம் காண்பித்ததும், அவர்கள் அதனை பரிசீலனை செய்தபின்னர், கைது செய்யப்ப…
-
- 0 replies
- 243 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (20) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வின் நிமித்தம், கடந்த 11 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஆற்றிய ஆரம்ப உரை, இலங்கையின் உள் விவகாரத்தில் நேரடியான தலையீடாக அமைந்திருந்தது” என்றும் சுட்டிக்காட்டினார். “சர்வதேச மட்டத்தில், இலங்கை அனைத்து பிரச்சினைகளில்…
-
- 0 replies
- 457 views
-
-
மைத்திரி, மகிந்தவை இணைத்தேதேர்தலில் களமிறங்கவேண்டும் பதவி பறிக்கப்பட்ட அருந்திக்க தெரிவிப்பு அடுத்த அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட விரும்பினால் மகிந்தவையும் இணைத்துக்கொண்டே களத்தில் இறங்க வேண்டும். மீண்டும் அன்னச் சின்னத்தில் பொது வேட்பாளராக அவர் போட்டியிடத் திட்டமிட்டால் மைத்திரியை நிராகரித்துவிட்டு தகுதியான ஒருவரை சுதந்திரக் கட்சி சார்பில் நிறுத்து வோம். இவ்வாறு பிரதி அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்ட அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் அரசில் இருந்து விலகப்போவதாகக் கூறிக்கொண…
-
- 0 replies
- 189 views
-
-
டச்சு நாட்டு ஆவணப் படம் ஒன்றில், 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை ‘குழந்தைகள் பண்ணை‘யாக விளங்கியமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியினர் இலங்கைத் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளை ‘வாங்கி’ச் சென்றுள்ளதாக அந்த ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாவுக்கு, புதிதாய்ப் பிறந்த தனது குழந்தையை விற்ற இலங்கைத் தாயொருவர், அந்தக் குழந்தையை ஒரேயொரு முறை தன் கண்ணாரக் காண வேண்டும் என்றும், அதைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்றும் அந்தப் படத்தில் கண்ணீருடன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறித்த காலப் பகுதியில் மட்டும் சுமார் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்…
-
- 0 replies
- 291 views
-
-
‘3 வாரங்களில் பதில்’ “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனிடையே எழுந்த, தினேஷ் குணவர்தன எம்.பி, “இது நாட்டுக்கு அச்சுறுத்தல் மிக்க விவகாரம் என்பதால், விரைந்து பதிலளிக்கப்பட வேண்டும். இதற்கு பதிலளிப்பதற்கு, 3 வார காலம் எடுத்து…
-
- 0 replies
- 360 views
-
-
முஸ்லிம்களின் மீள்குடியமர்வில் தமிழ்க் கூட்டமைப்பு பாரபட்சம் யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியமர்வு விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 3417 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன என யாழ். மாவட்டச் செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டுக…
-
- 0 replies
- 228 views
-
-
புறக்கோட்டையில் தீ விபத்து; பதினாறு கடைகள் சேதம் புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. அதிகாலை வேளை என்பதால், ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான பதினாறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.virakesari.lk/article/24722
-
- 0 replies
- 187 views
-
-
நேற்றைய தினம்(19-09-2017) இரவு மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணித்த பொதுமக்களின் 26சைக்கில்கள் மாங்குளம் பொலீஸாரினால் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இவ் வீதியால் பயணித்த அனைத்து சைக்கில்களும் பறிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் பொலீ்ஸாரிடம் காரணத்தினை கேட்ட போது இரவில் டைனமோ இல்லாமல் பயணித்தமையாலே தாம் பறிமுதல் செய்ததாகவும் மறுநாள் டைனமோவினை தம்மிடம் காட்டி சைக்கில்களை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளனர். இன்றையதினம் காலை பாடசாலை மாணவன் ஒருவர் தன்னுடைய சைக்கிலை மீட்பதற்க்காக பொலீஸ் நிலையத்திற்கு சென்று தான் சைக்கிலை கேட்ட போதும் பொலீஸார் தர மறுத்ததாக தெரிவித்ததுடன் நேற்றையதினம் பறிக்கப்பட்ட ச…
-
- 1 reply
- 574 views
-
-
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கிவைப்பதில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு ஆளாகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு அண்மை நாட்களாக பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட இயக்கம் என்னும் அமைப்பினரால் ஒரு விஷேட கவனயீர்ப்பு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வெளியீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்னும் நோக்கில் இங்கும் தரப்படுகின்றது. குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு. அன்புமிக்க யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நாம் யாழ்ப்பாண முஸ்லிம்கள், 1990களிலே பலவந்தமாக வெளியே…
-
- 2 replies
- 505 views
-
-
‘வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம்’ “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். இந்த விடயத்தில், நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்” என்று, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். “கிழக்கு, ஓர் இனத்துக்குச் சொந்தமானது அல்ல. அதேபோன்று வடக்கும் ஓர் இனத்துக்கு சொந்தமானது அல்ல இந்த விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவருடைய கட்சி சார்ந்த தலைவரும் முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் இணைத்து இந்த மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்கள…
-
- 5 replies
- 727 views
-