ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரபல நபர் யார்.? (எம்.ஆர்.எம்.வஸீம்) வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/24116
-
- 0 replies
- 360 views
-
-
200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உறவினா்களின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. 200 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் எந்தவித உறுதிப்பாடுகளும் இல்லாது 200 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். http://www.virakesari.lk/article/24112
-
- 0 replies
- 293 views
-
-
விமானப்படை பயிற்சி முகாமில் வெடிப்பு (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று (07) வெடிபொருளொன்று வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/விமானப்படை-பயிற்சி-முகாமில்-வெடிப்பு/175-203403
-
- 0 replies
- 278 views
-
-
‘‘நானும் காணாமல் ஆக்கப்பட்டவன்தான்’’ அன்று நடந்ததை இன்று சொல்கிறார் மைத்திரி “நானும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தேன். காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரியும்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு – கிழக்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும், அரச தலைவர் செயலகத்தால் அழைக்கப்பட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களையே சந்திக்க வேண்டும் என்று அரச தலைவர் வ…
-
- 4 replies
- 333 views
-
-
தமிழர் வாக்குகளாலேயே அரச தலைவனானவன் நான் நன்றி பாராட்டிய சிறிசேன “தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். உங்களுக்கு நியாயமா கவே நான் செயற்படுவேன்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் நேரில் தெரிவித்தார். அரச தலைவர் செயலகத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மதியம் 12.30மணிக்கு ஆரம்பமானது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அரச தலைவரின் ச…
-
- 2 replies
- 508 views
-
-
வடக்கு அரசுக்குமுழுச் சுதந்திரம் கூட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது மங்கள சமரவீர தெரிவிப்பு “வடக்கு மாகாண சபையை கடந்த அரசு எதிரியாக நடத்தி வந்தாலும் கூட்டு அரசின் கீழ் அது மாற்றியமைக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன”. இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளையும், முத்திரை தீர்வை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளையையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையா…
-
- 1 reply
- 257 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 07.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 157 views
-
-
இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில…
-
- 3 replies
- 586 views
-
-
‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’ பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார். திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்…
-
- 2 replies
- 863 views
-
-
’ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். “மாகாண சபையின் முதலமைச்சர், ச…
-
- 0 replies
- 174 views
-
-
20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது. வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/26378.html
-
- 0 replies
- 319 views
-
-
ஜெனரல் ஜெகத்துக்கு எதிராக உடன் போர்க்குற்ற விசாரணை நாடாளுமன்றில் கூட்டமைப்பு வலியுறுத்து போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு பன்னாட்டுச் சமூகத்…
-
- 1 reply
- 261 views
-
-
ஜகத் ஜயசூரிய விவகாரம் சபையில் கடும் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ்) ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்க தரப்பில் இருந்து பதிலளிப்பதற்கு இரு வார கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் சபையில் எழுந்து நின்று கோஷமிட்டு உடன் பதிலளிக்குமாறு கோரினர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே…
-
- 0 replies
- 487 views
-
-
"20" நிறைவேறியதும் ஒரு வருடத்தில் தேர்தல் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார் சட்டமா அதிபர் (எம்.எப்.எம்.பஸீர்) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்குள் அனைத்து மாகாண சபைகளிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 விஷேட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜராகி அரசின் நிலைப்பாட்டை மன்றிற்கு அறிவித்து சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ஏதாவது ஒரு மாகாணசபை …
-
- 0 replies
- 310 views
-
-
தென் ஆபிரிக்க விடுதலை போராட்டத்தின் செயற்பாட்டாளர் இலங்கை விஜயம் தென் ஆபிரிக்க விடுதலைப் போராட்டத் தின் செயற்பாட்டாளர், வணபிதா, மைக் கல் லெப்ஸ்லி இலங்கையில் மலையக மக்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக அட்டன் பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுதின--ம் சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை 88/2 டன்பார் வீதி, அட்டனில் அமைந்துள்ள CWF மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. மைக்கல் லெப்ஸ்லி நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். தனது இறைபணியின் மேலதிக கற்கைக்காக தென்னாபிரிக்கா நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அக் காலத்தில் தென்னாபிரிக்காவில் நிறபேத கொடூரத்…
-
- 0 replies
- 413 views
-
-
பறிக்கப்பட்ட வீடு மீண்டும் வழங்கப்பட்டது -எம்.றொசாந்த் காரைநகரில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீடு, நேற்று (06) மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன், குறித்த வயோதிபப் பெண், நேற்று (06) மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் - வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற குறித்த வயோதிபப் பெண், தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் உறுதி எழுதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்…
-
- 0 replies
- 293 views
-
-
எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி…
-
- 0 replies
- 240 views
-
-
பொன்சேகாவின் அறிவிப்பு தனிப்பட்டதே எந்தவொரு படையினரையும் அரசு சிறைக்குள் தள்ளாது; சபை முதல்வர் திட்டவட்டம் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல. எந்தவொரு படைத் தளபதியையும் கூட்டு அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடாளுமன்றில் தெரிவித்தார். “முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தூதுவராகப் பணியாற்றியவருமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கு தாக்கல…
-
- 0 replies
- 392 views
-
-
கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரென பற்றி எரிகிறது மீதேன் வாயுப் பெருக்கமே காரணம்: அச்சத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தின் கழிவுகளைக் கொட்டும் இடமான கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரெனத் தீப்பற்றி எரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வால் அந்தப் பகுதி மக்களும் அதன் வழியே பயணம் செய்பவர்களும் அச்சமடைந்துள்ளனர். இரவில் பயணிப்போர் மேலும் கலங்கிப் போகின்றனர். குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் அளவுக்கதிகமான மீதேன் வாயுவே தீ எரிவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ‘‘அதிகரித்த வெப்பம் காரணமாக குப்பைகளிலிருந்து வெளியேறும் உயிர…
-
- 0 replies
- 589 views
-
-
இழுபறிக்குள் இருந்த இடைக்கால அறிக்கை நேற்று முழுமையானது செப். 21 சபைக்கு முன்வைப்பு; ஒக்டோபரில் விவாதம் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 21ஆம் திகதி காலை, நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இடைக் கால அறிக்கையை அன்றைய தினம் முன்வைப்பார். இந்த அறிக்கை மீதான விவாதம் ஒக்ரோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவின் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 157 views
-
-
மாத்தளன் மீனவர்களுடைய படகு நேற்றுக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது முல்லைத்தீவு மாத்தளன் மீனவர்களுடைய படகு மாத்தளன் கடற்பரப்பில் சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்து. தென்னிலங்கை மீனவர்களே படகை மோதி மூழ்கச் செய்தனர் என மாத்தளன் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. சம்பவத்தை வடக்கு மாணசபை உறுப்பினர் து.ரவிகரன் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர். இதனால் படகு கடுமையாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளத…
-
- 0 replies
- 141 views
-
-
வடமாகாணத்தில் இன்று பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு, சோளாவத்தை, மண்கும்பான் தேசிய நீர்வழங்கல் வடிகால்சபை, மண்கும்பான் கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் அக்கராயன் குளம், கோவில்குடியிருப்பு, அமைதிபுரம், முறிகண்டி கொமாண்டோ இராணுவ முகாம், அம்பலப்பெருமாள், கோட்டைகட்டி, ஆ…
-
- 0 replies
- 135 views
-
-
குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் …
-
- 0 replies
- 222 views
-
-
20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வழிசெய்யும் 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில இணையத்தளமான டெய்லி எப்.டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின், போது குழுநிலை விவாதத்தின் போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மேலும் பல திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் இணங்க…
-
- 4 replies
- 563 views
-
-
புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை மகிந்த தெரிவிப்பு Share புதிய அரசமைப்பைத் தற்போது உருவாக்க வேண்டிய தேவை இல்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமை தமக்கு வேண்டும் என்று சுதந்திர கட்சி கேட்டுள்ளது. அரச தலைவரும் இந்த முறைமையைக் கைவிடப் போவதில்லை என்று கூறி வருகிறார். எவ்வாறாயினும், தேர்தல் கால…
-
- 0 replies
- 458 views
-