ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
ஆதாரம் வந்துவிட்டது எப்போது விசாரணை? குட்டை குழம்பினால் மீன்பிடிப்பது இலகுவானதுதான் என்பது இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இடையிலான கருத்து மோதல்களைப் பார்க்கும்போது தெளிவாகவே தெரிகின்றது. பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் இல்லாத போர் என்று வெளி உலகுக்குப் பறைசாற்றப்பட்டு நடத்தப்பட்ட போரில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்கிற உண்மை சற்றே கசிந்திருக்கிறது. இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மீது போர்க்குற்ற வழக்கு பிரேசில் நாட்டி…
-
- 0 replies
- 419 views
-
-
கூட்டு அரசுக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம் Share 2020ஆம் ஆண்டு வரை அரசின் ஆயுளை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கைச்சாத்திடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. மகிந்தவால் வலு இழந்த சுதந்திரக்கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதைவிடக் குறைந்த ஆசனங்களைப் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, மகிந்த அணியென இரண்டாகப் பிளவுபட்டது. மைத்திரி அணி ஐக்கிய தேசியக் …
-
- 0 replies
- 424 views
-
-
ரயில் கடவை சமிக்ஞையால் பதற்றம் வவுனியா ,தண்டிக்குளம் ரயில் கடவையில் உள்ள அபாய மணி ஒலி கடந்த 2 மணித்தியாலயத்திற்கும் மேலாக ஒலித்த நிலையில் காணப்படுவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதுடன் பலர் பயம் காரணமாக கடவையை கடக்க முயலாமல் காத்து நிற்பதால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் கடவையானது பாதுகாப்பற்றது கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இக்கடவையில் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார். மேலும் குறித்த ரயில் கடவையில் இதற்கு முன்னரும் அபாய ஒலி பலமணிநேரம் ஒலித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் உ…
-
- 0 replies
- 329 views
-
-
முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் பலி, இருவர் படுகாயம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் நெடுங்கேணி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/23957
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு. இலங்கையின் அரசியலில் ஆகஸ்ட் மாதம் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. முக்கியமாக ரவியின் பதவி விலகல். இந்த அமளிகளிடையே இலங்கை உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு அரசியல் தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது. இதனை கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டன. பெடரலிசம் என்பது பிரிவினை ஆகாது என தீர்ப்பு வழங்கி அறிவித்து உள்ளது. இது முக்கியமான தீர்ப்பாக கருதப் படுகின்றது. http://www.dailymirror.lk/article/Federalism-is-not-Separatism-Rules-Supreme-Court-135005.html
-
- 6 replies
- 949 views
-
-
20 ஆவது அரசியலமைப்பு விவகாரம் : தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு லியோ நிரோஷ தர்ஷன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்அனைத்து மாகாண சபைகளிலும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனடிப்படையில் தோல்வியடைந்த அனைத்து மாகாணங்களிலும் மீள் வாக்கெடுப்பு நடத்தி உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான விதிகள் உள்ளடக்கிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்தை அங்கீகரிக்காத மாகாண சபைகளில் மீள் வாக்…
-
- 0 replies
- 315 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பெரும் வீழ்ச்சி கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அத்திக்காரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். கடல் தள மீன்பிடி வலை இழுவை முறையைத் தடை செய்யும் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட முறைமையின் கீழ் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். http://newuthayan.com/story/25417.ht…
-
- 0 replies
- 235 views
-
-
இரகசியத்தை கசியவிட்ட பொண்சேகா! லியோ நிரோஷ தர்ஷன் நிலைமையை சீர்செய்வதற்கு ரணில் - மைத்திரி முயற்சி போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளமை அரசாங்கத்துக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரே சில் மற்றும் கொலம்பியாவில் தாக் கல் செய்யப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டு வழக்கு விவகாரம் சர்வதேச நெருக்கடிக்குள் மீண்டும் இலங்கையை தள்ளிவிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தில் கலந்து…
-
- 0 replies
- 358 views
-
-
உறவுகளுக்கு நீதி கோரி நாளை மாபெரும் அமைதிப்பேரணி காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காத்திருக்கும் உறவுகளிற்கு நீதி கோரும் மாபெரும் அமைதிப்பேரணி நாளையதினம் காலை 10.00மணியளவில் வவுனியா காமினி விளையாட்டரங்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமூக அமைப்பினரையும் அழைக்கின்றோம் என ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இவ் அமைதிப்பேரணியானது வவுனியா கிராமிய பெண்கள் அமைப்பு, வவுனியா கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம், வவுனியா மாவ…
-
- 0 replies
- 185 views
-
-
ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கம் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சர்வதேச மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று விளக்கமளித்தார். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/09/ஜெனரல்-ஜகத்-ஜயசூரியவிற்க/
-
- 9 replies
- 683 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அடுத்த மாதம் சீனாவிடம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை ஒக்டோபர் முதலாம் திகதி சைனா மேர்சன்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80 சதவீதப் பங்குகள் சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கும் 20 சதவீதப் பங்குகள் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் உரித்தாகும் வகையில் 99 வருட குத்தகைக்கு சைனா மேர்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அரசுக்கு 1.2 பில்லியன் ரூபா …
-
- 0 replies
- 337 views
-
-
லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதிகாலை முதல் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரி தெரிவித்தார். வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து களனி கங்கையின் அருகாமையிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/23941
-
- 0 replies
- 150 views
-
-
இலங்கைக்குத் தேவையான உதவிகளை செய்ய கனடா தயார் இலங்கையில் சமாதானமும் நல்லிணக்கம் தொடர தேவையான உதவிகளை செய்ய கனடா தயாராக உள்ளதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடியத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கனேடியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் சமகால அரசின் செயற்பாடுகளையும் கனேடிய பிரதமர் பாராட்டியுள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றினை சரியான அடையாளம் காணவும் சமகால அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். 30 வருடங்களாக நீடித்த போர் நிறைவுக்கு கொண்…
-
- 5 replies
- 446 views
-
-
தமிழர்களின் ஆயுத போராட்டம் தோல்வியடைய யார் காரணம்? இராஜ தந்திர ரீதியில் செயற்பட தவறியமையே தமிழர்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோல்வியடைய காரணம் என வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். உலகிலே சிறந்த ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என உலக நாடுகளினால் பெருமையைக போசப்பட்ட தமிழர்கள் இந்த போராட்டங்களினால் எதனை பெற்றுக்கொண்டார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 317 views
-
-
காணி சுவீகரிப்பு இன்றி பலாலியை பிராந்திய விமான நிலையமாக்கலாம் மேலதிகமாகக் காணிகளைப் பெறாமலேயே பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்த முடியும் என்று இந்திய ஆய்வுக் குழு கொழும்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில் பலாலிக்கு வந்து நேரில் ஆய்வுகளை நடத்திய இந்தியக் குழுவினரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. பலாலி விமான நிலையம் தற்போது உள்ளூர் மற்றும் படைத்துறை விமான நிலையமாக வுள்ளது. அதனைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான ந…
-
- 2 replies
- 290 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 03.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 314 views
-
-
மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!! கோப்புப் படம் Share இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்தர்கள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து மீண்டும் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்ப…
-
- 1 reply
- 520 views
-
-
கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா? முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு அதிகாரத்துடன் கூடிய சமஸ்டி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்திருந்தது. தேர்தல் மேடைகளிலும் வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் தீர்வு, காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 334 views
-
-
சு.க.வின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் இன்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் பின்னர் கட்சி முக்கிய தீர்மானங்கள் பலவற்றை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டிற்கு கட்சியின் போசகராக செயற்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளி ட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களுக்கும் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அழைப்பினை உதாசீனம் செய்து கலந்து கொள்ளாதவர்களுக்கு இனிவரும் இதுபோன்ற முக்கிய …
-
- 1 reply
- 140 views
-
-
420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.! உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவிருந்த 420 பேர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்தின்படி சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதியில் அரச சேவையிலுள்ளவர்கள் இனிமேல் இத் தேர்தலில் போட்டியிட முடியாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இத்தேர்தல் தொகுதிகளில் அரச சேவையிலிருந்த விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் போட்டியிட்டனர். இது போன்ற அதிகாரிகள் 420 பே…
-
- 0 replies
- 127 views
-
-
பொன்சேகாவுக்கே தெரியாதவைகளா அமைச்சர்களுக்குத் தெரியப்போகிறது? போரின்போது நடந்தவை தொடர்பிலும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சரத் பொன்சேகாவுக்குத் தெரியாத விடயங்களா அமைச்சர்கள் சஜித் மற்றும் மகிந்த சமரசிங்கவுக்குத் தெரிந்துவிடப் போகின்றது ? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மனிதப் படுகொலை விடயத்தில் குற்றம் இழைத்தார் என்று போரை நடத்திய இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விசாரணைகள் நடந்தால் ஆதாரங்களைத் தான் முன்வைப்பார் என்றும் …
-
- 0 replies
- 145 views
-
-
கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா? சாடுகிறார் சரவணபவன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன் தலைமைகளை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு விமர்சிக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா? தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக விரும்புகின்றனர். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவற்றுக்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். மறைந்த தமிழ்த் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வி.தர்மலிங்கம் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 32 ஆவது நினைவு தினம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத…
-
- 0 replies
- 146 views
-
-
''சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல பயத்தை தோற்றுவிப்பது அரசியல்வாதிகளே" சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல. ஆனால். சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்று தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. ஆகவே, மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில் தங்களது அன்றாட விடயங்களில் தாமே முட…
-
- 4 replies
- 318 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் இன்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவு கூரப்பட்டது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் வடமாகாண சபை எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன் முன்னாள் ந…
-
- 1 reply
- 488 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (02-09-2017)
-
- 0 replies
- 284 views
-