ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அம்பாறை வீரமுனையில் 400 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வினை, முன்னால் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னம்பலம் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இதன்போது, பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட…
-
- 7 replies
- 668 views
-
-
ரகசியமான முறையில்.. பூநகரியில் சீன நிறுவத்தின் ஆய்வின் கீழ் சீனாவின் முதலீட்டில்.. விமான நிலையம் ஒன்றும்.. அரியாலை கிழக்கில் நன்னீர் நண்டு வளர்ப்பு என்ற பெயரிலும்.. சூரிய சக்தி - மின் காற்றாலைகள்.. நிர்மானிப்பு என்ற பெயரிலும்.. சீன நிறுவனங்கள் வடக்கு நோக்கி ஆக்கிரமிப்பை மேற்கொள்ள ரணில் - மைத்திரி- சந்திரிக்கா.. சம் சும் கும்பல் கூட்டு நாசமறுப்பு அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு தெரியாமல் நகர்வுகளை மேற்கொண்டுள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏலவே தமிழினப் படுகொலையாளன் மகிந்த காலத்தில் கச்சதீவையும் சீனா ஆக்கிரமித்து நின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பூநகரியில்.. ஜப்பான் நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கும் முன்னாய்வில் உள்ளது ஏலவே செய்தியாக …
-
- 2 replies
- 648 views
-
-
நிதி திரும்புமாயின் முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்க வேண்டும் கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத் திட்டத்திற்கு பயன்பட…
-
- 2 replies
- 233 views
-
-
எனது விடயத்தில் காட்டிய விரைவை ஏனையவற்றிலும் காண்பிக்க வேண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ரவி அறிவுரை (க.கமலநாதன்) எனது விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் காட்டிய விரைவினை ஏனைய விடயங்களிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறான செயற்பாடுகளை செய்ய அழுத்தம் கொடுப்பவர்கள் மறுதாக்கத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி அஸ்கிரிய பீடாதிபதிபதியை நேற்று சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 397 views
-
-
வடக்கின் பாதுகாப்|பு நிலமைகள் தொடர்பாக ஆராய வருகிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்! வடக்கின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு பயணம்செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 29ஆம் நாள்வரை வடக்கிற்கு பயணம் செய்யவுள்ள அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். லெப் ஜெனரல் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவையாக அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை வடக்…
-
- 2 replies
- 339 views
-
-
கேப்பாப்புலவிலுள்ள 2ரூட்/73.11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதை தாமதிக்க வேண்டாம் முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில், 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவுக்கு ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்பு அமைச்சர் டி.…
-
- 1 reply
- 150 views
-
-
தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் 20 குறித்து த.தே.கூ.வின் முடிவு விரைவில் என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) மக்களின் ஜனநாயக உரிமை மதிக்கப்படவேண்டும். உரிய திகதியிலிருந்து தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவது ஜனநாயகத்தினை பலவீனப்படுத்தும் செயல் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து தமது தரப்பின் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அம்மாகா…
-
- 0 replies
- 398 views
-
-
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்க சிறப்பு நடவடிக்கை Share ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சிறப்பு நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு, 24 மணிநேரமும் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அல்லது குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக 0112-580518, 0112-058552 அல்லது 0112-081040 என்ற தொலைபேசி இலக்கத்…
-
- 0 replies
- 242 views
-
-
மகிந்தவுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும…
-
- 0 replies
- 154 views
-
-
எமது நிலைப்பாட்டில் அமைச்சர் விஜயதாஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார் (எம்.ஆர்.எம்.வஸீம்) அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ அம்பாந் தோட்டை துறைமுக விவகாரத்தில் எமது நிலைப்பாட்டில் உள்ளார். இதனால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரே ரணை கொண்டுவர முயற்சிக்கப்படு கின்றது. அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு எதிராக அரசாங்கமே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது உலகில் இதுவே முதல் தடவையாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாட்டின் வளங்களை விற்பதுதான் ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கையாகும். ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினர் கட்சியி…
-
- 0 replies
- 207 views
-
-
நெடுந்தீவு அருகே 4 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எத்தகைய விதிமுறைகள் மற்றும் சட்ட நடவடிக்கைககள் எடுக்கப்பட்ட போது அதனை மீறும் வகையிலோ அல்லது வழிதவறி வரும் பல மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடலுயிரினங்களின் இனப் பெருக்க காலம் நிறைவடைந்து மீண்டும் மீன்பிடிக்கான கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே இந்த நிலை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பகுதி அருகே எல்லை தாண்டி மீன்ப…
-
- 0 replies
- 205 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Brugg ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 41 வயதான நபர் மற்றும் இலங்கையை சேர்ந்த 34 வயதான நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது, 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இருவர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இருவருக்கும் மண்டை உடைத்துள்ளது. இத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர…
-
- 0 replies
- 300 views
-
-
திருகோணமலையில் எங்களுக்கு அடி விழுகிறது எனத் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் யாழில் மனம் குமுறியுள்ள சம்பவம் பலரையும் சோகத்தில்ஆழ்த்தியுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்.நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மிக உருக்கமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாங்கள் இன முரண்பாடுகளுக்குக்கிடையில், வலிகள், வேதனைகளுக்கு மத்தியில் தான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறோம். எமது மண்ணில் எமது இருப்ப…
-
- 3 replies
- 431 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு வருகை கனடா தம்பதியினர் சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது அம்பலமாகியுள்ளது. 89 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7 ம் திகதி இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த…
-
- 3 replies
- 540 views
-
-
முதலமைச்சர் விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் அமைச்சு செயலர்களிடம் விளக்கம் கேட்கிறார் தலைமைச் செயலாளர் வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு அமைச்சுச் செயலாளர்கள் தொடர்பில் அறிக்கையிட்டிருந்த விடயங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் உடன் விளக்கம் அளிக்குமாறு மாகாணத் தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் சம்பந்தப்பட்ட செயலாளர்களிடம் கேட்டுள்ளார். வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பில் விசாரணை மேற்கொள…
-
- 1 reply
- 222 views
-
-
திலக் மாரப்பன இன்று வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்கின்றார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விசேட திட்டங்கள் அமைச்சர் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக இன்றைய தினம் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். மத்திய வங்கி பிணை முறிமோசடி குறித்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக கடந்த வியாழக்கிழமை, ரவி கருணாநாயக்க பதவி விலகியிருந்தார். இந்தநிலையில் இந்தப் பதவி வெற்றிடத்திற்கு திலக் மாரப்பனவை நியமிக்க பிரதமரும், ஜனாதிபதியும் இணங்கியிருந்தனர். இதன்படி, இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் திலக் மாரப்பன பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். இன்றைய தினம் முற்பகல் திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்…
-
- 1 reply
- 277 views
-
-
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு அமைச்சரவைப்பத்திரம் நாளை கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக்கர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சிறைச்சாலை மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவருகின்றது. முன்னதாக ஜூலை 19ஆம் திகதி 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாகவும் அதற்காக 5மில்லியன் ரூபா நிதியை இராணுவத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. …
-
- 0 replies
- 200 views
-
-
வடமாகாண சபை செய்யாத பலதை வணிகர் கழகம் செய்தது என கடும் விமர்சனங்களை முதலாவது உ ரையில் ஜெயசேகரம் முன்வைப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் அணிதிரண்டு தங்களது பலத்தைக் காட்டி இந்த மாகாணசபையை தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் பல எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்த சபை தவறியுள்ளது. என வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்க பெற்ற இரண்டு தேசிய பட்டியல் ஆசனத்தில் ஒன்று அயூப் அஸ்மீனுக்கு வழங்கப்பட்டது. மற்றைய ஆசனம் சுழற்சி முறையில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்…
-
- 2 replies
- 617 views
-
-
வடக்கில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்த வேண்டாம் – படையினர் முகாம்களுக்கு முடக்கப்பட மாட்டார்கள் – இராணுவத் தளபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் இடம்பெற்று வரும் அனைத்து விடயங்களுக்கும் புலி முத்திரை குத்துவது பொருத்தமற்றது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச் செயல்கள் அனைத்தையும் புலிகளின் மீது சுமத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் எல்லா சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள…
-
- 3 replies
- 396 views
-
-
மாகாண சபை தேர்தல் விவகாரம் நாளை அமைச்சரவையில் ஐக்கிய தேசியக் கட்சியானது சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலத்தினை நீடித்து அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதெனவும் அதற்காக தற்போதுள்ள அரசியலமைப்பில் 20ஆவது திருத்தமொன்றினை முன்வைப்பதெனவும் தீர்மானித்துள்ளது. எனினும் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் அவற்றுக்கான தேர்தலை பிற்போடாது உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்தினை ஆதரிக்கப்போவதில்லை எனவ…
-
- 0 replies
- 221 views
-
-
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒக்டோபர் முதல் விநியோகம் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் விநியோகிப்படவுள்ளது. இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணாதிலக்க தெரிவிக்கையில், உத்தேச புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில் உயிரியியல் தொடர்பான தரவுகள், விரல் அடையாளம் உட்பட சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திலிருந்து புதிதாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். …
-
- 0 replies
- 248 views
-
-
எமது கொள்கையே மோதலுக்கு காரணம் Published by RasmilaD on 2017-08-14 08:44:44 சாதாரண விடயங்கள் என கருதி கைவிட்ட அரசியல் விடயங்களே இறுதியில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. வடக்கு, கிழக்கு ஆயுத மோதலுக்கும் இளைஞர் புரட்சிக்கும் எமது அரசியல் கொள்கையே காரணமாக அமைந்தது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். இவற்றை மாற்றியமைக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனவாதம் என்பதை விடுத்து இன ஐக்கியத்தில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் முன்செல்ல வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலான கற்கைக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று இலங்கை …
-
- 0 replies
- 118 views
-
-
தமிழர்கள் ஏன் தனிநாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள் Published by RasmilaD on 2017-08-14 08:47:43 புதிய அரசியலமைப்பில் மறைமுகமாக அதிகாரப் பரவலை முன்னெடுக்க ஒரு போதும் நாம் முயற்சிக்கவில்லை. சுயநல அரசியல் கருத்துக்களை இனியும் முன்வைக்க வேண்டாம். சமஷ்டியே வேண்டாம் என்று போராடிய தமிழர்கள் ஏன் தனி நாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் என்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பிரிவினை வாதத்தையும், ஆயுத கலாசாரத் தையும், அரசியல் கொலைகளையும் தெற் கில் ஆரம்பித்துவிட்டு, வடக்கின் மேல் பழிசுமத் தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்…
-
- 0 replies
- 284 views
-
-
‘கட்டுப்பாட்டுக்குள் சட்டவிரோத மண் அகழ்வு’ யாழ். வடமராட்சி கிழக்கினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மண் கடத்தல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பீ.ஆர் சமன் ஜெதிலக தெரிவித்தார். “மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை இணைத்து, வடமராட்சி பகுதிகளில் இரவு, பகல் நேர ரோந்துக் கடமையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்புத் தேவைக்காக, விசேட அதிரடிப் படையினரும் தயார் நிலையில் வை…
-
- 1 reply
- 201 views
-
-
மன்னாரில் இஸ்ரேல் பிரஜை அன்னாசி பயிர்செய்கை: வன ஜீவராசிகள் திணைக்களம் வழக்குத்தாக்கல் மன்னார் – பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்செய்கை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவர் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 160 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்பெ…
-
- 2 replies
- 552 views
-