ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 3 மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாணசபை உறுப்பினர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர் யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனா…
-
- 1 reply
- 332 views
-
-
தவறான பாதையில் பயணிக்கும் அரசு நாடு ஒரு புறத்திலும், அரச அதிகாரத்தையும் அரச வளங் களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அரசு மற்றொரு புறத்திலும் செயற்பட நேர்ந்துள்ளது. நாட்டை முன்னேற்ற உழைப்போமெனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ள தரப்பினர், முற்றுமுழுதாக அதற்கு மாறான வித்திலேயே செயற்பட்டு வருகின்றனர். நாடு அத்தகைய போக்குக்கு எதிராக கிளர்ந்தெழுகிறது. அப்போது அரச வளங்களூடாக அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசு, நாட்டு மக்களுடன் மோதிக்கொள்ள நேர்கிறது. எம்மை ஏசுவதால் பயனில்லை. நாம் அதிகாரத்தைக் கைப்பற்றியது, எமது வசதி வாய்ப்புக்களை அனுபவிக்கவே என்ற மனோநிலை…
-
- 0 replies
- 310 views
-
-
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணிகள் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று (31) கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யுத்த காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 1 reply
- 450 views
-
-
202 பயணிகளுடன் கட்டுநாயக்க வந்த விமானத்தில் வெடிப்பு இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள…
-
- 0 replies
- 323 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம் சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார். அகில இலங்கை இந்துமா மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தல…
-
- 14 replies
- 916 views
-
-
பொலிஸ் சேவையிலிருந்து சிறிகஜன் நீக்கம்! – பொலிஸ் மா அதிபர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ் மா அதிபர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முப்படைகளையும் பயன்படுத்துமாறு அரச தலைவர் பணித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனத்தை இடைமறித்து நடத்தப்பட்ட து…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இந்த இறப்புக்கள் இடம்பெற்று தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், உறவினர்களிடம் இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை; இதன் காரணமாக உறவினர்கள…
-
- 0 replies
- 361 views
-
-
தொண்டமனாற்றிலிருந்து இராணுவத்துக்கு மணல்- பிரதேச மக்கள் விசனம் ‘தொண்டமனாற்றிலிருந்து இராணுவத்தினர் மணல் ஏற்றிச் செல்கின்றனர். அவர்கள் டிப்பர் வாகனங்களில் பல தடவைகள் மணல் ஏற்றிச் சென்றனர்’ என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ‘தொண்டமனாறு ஆற்றின் கரையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் அணை அமைக்கப்படுகின்றது. தொண்டமனாறு ஆற்றின் கரையில் இருந்து வல்லை நோக்கி அந்த அணை அமைக்கப்படுகின்றது. நன்னீரைச் சேமிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படு கின்றது. ஆற்றின் மணல் அகழப்பட்டு அது அணைக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த ஆற்றிலிருந்து அகழப்பட்ட மணல் க…
-
- 3 replies
- 450 views
-
-
எமது அரசாங்கத்தில் அம்பாந்தோட்டை உடன்படிக்கை இரத்துச் செய்யப்படும் கூட்டு எதிரணி அறிவிப்பு (ரொபட் அன்டனி) எமது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தற்போது சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை இரத்துச் செய்யப்படும். இதனை மிகவும் வலுவாக கூறிக்கொள்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீனாவுடனான உடன்படிக்கை சட்டவிரோதமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அம்பாந்த…
-
- 0 replies
- 265 views
-
-
‘அரசமைப்பின் வரைவு ஆவணியில் வரும்’ -கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ், வா. கிருஸ்ணா புதிய அரசமைப்பின் வரைவு, எதிர்வரும் ஆவணி (ஓகஸ்ட்) மாதத்தில் வெளிவருமென எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரின் நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பு வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட …
-
- 1 reply
- 274 views
-
-
ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு உதவிகளை வழங்க நீதிபதி மா. இளஞ்செழியனின் நண்பர்கள் முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியனின் நண்பர்கள் இணைந்து சரத் ஹேமசந்திரவின் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளனர். நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்ற நிலையில், அவரது பாடசாலை நண்பர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள தனவந்தர்களின் உதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளை …
-
- 0 replies
- 517 views
-
-
’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’ வடபகுதியிலுள்ள அனைத்துத் தர மக்களிடமும் கடன் தொல்லை காணப்படுவதாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், நிதி நிறுவனங்கள் மீதும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழா இன்று (30) காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம், இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஓர் …
-
- 3 replies
- 504 views
-
-
பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் வருகை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் இருவர் மீது நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். http://uthayandaily.com/story/15161.html
-
- 1 reply
- 317 views
-
-
அதிரடிப் படை சிறப்புப் பிரிவு யாழ்ப்பாணத்துக்கு விரைவு பொலிஸார் மீதான தாக்குதல் – வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள நிலையில், அதிரடிப் படையின் அதி சிறப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். மறுநாள் 22ஆம் திகதி நல்லூரில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. அதில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரி…
-
- 0 replies
- 584 views
-
-
தனு ரொக் மீதும் வாள்வெட்டு மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் மீது, மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல் நேற்று மதியம் வாளால் வெட்டினர். வாள்வெட்டில் தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனு என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “தனு ரொக் குழுவைச் சேர்ந்த தனுவை நேற்று முற்பகல் 11 மணிக்கு மோட்டார் சைக்கிள் வாள்வெட்டுக் கும்பல் சென்று தேடியுள்ளது. இதன் பின்பு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் வாள்வெட்டுக் கும்பல் மீண்டும் மானிப்பாய்க்கு வந்துள்ளது. தனு ரொக் தனது வீட்டிலிர…
-
- 1 reply
- 638 views
-
-
கடற்படையினர் மீது தாக்குதல் ; 5 பேர் கைது யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22543
-
- 0 replies
- 262 views
-
-
மஹிந்தவுக்கு ‘நோ’ சொன்ன மங்கள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்துக்கு உதவி வழங்குவதற்குத் தயாரெனத் தெரிவித்த போதிலும், அவ்வாறான உதவியேதும் தேவைப்படவில்லை என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்ப…
-
- 0 replies
- 331 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையே சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கும் இடையே தற்போது சந்திப்பு நடைபெற்று வருகின்றது. வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/15014.html
-
- 1 reply
- 434 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு மனைவி கொடுத்த பார்சலில் ‘ரெஸ்ரர்’ நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் முதன்மைச் சந்தேக நபர் என்று பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட சிவராசா ஜெயந்தனுக்குக் கொடுப்பதற்காக அவரது மனைவி கொண்டு வந்த பார்சலில் இருந்து மின்சாரக் கடத்தலைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ’ரெஸ்ரர்’, சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெயந்தனின் மனைவி சிறைச்சாலை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார். நல்லூர் கோயில் பின் வீதியில் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
பன்னாட்டுச் சமூகத்தின் தலையீட்டின் சாதகம்! தமிழர்களின் பிரச்சினைக்கு கொழும்பு அரசு இழுத்தடிக்காமல் தீர்வை வழங்க வேண்டும். அதற்குப் பன்னாட்டு அழுத்தமே மிக அவசியம். இவ்வாறு வலியுறுத்தியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கனடா நாட்டின் கொழும்புக்கான தூதர் ஷெல்லி வைற்றிங் நேற்றுமுன்தினம் அவரை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இப்போது மட்டும் என்றில்லை போருக்குப் பின்னரான எல்லாக் காலத்திலும் பன்னாட்டு அழுத்தம் ஒன்றே தீர்வைத் தரும், பன்னாட்டுச் சமூகத்தையே நம்பியிருக்கின்றோம் என்று சம்பந்…
-
- 1 reply
- 496 views
-
-
‘பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்மானங்கள் அவசியம்’ மாகாண சபைகள், தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமென, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசப…
-
- 0 replies
- 227 views
-
-
குடாநாட்டில் பரவலாக மழை குடாநாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. கடும் வெப்பமான காலநிலை இதுவரை காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. வடக்கின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவியதால் மக்களும், விவசாயிகளும் கடும் இடர்களை எதிர்கொண்டிருந்தனர். தற்போது சிறியளவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. http://uthayandaily.com/story/15153.html
-
- 0 replies
- 274 views
-
-
1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு …
-
- 11 replies
- 653 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30th July 2017, 8PM
-
- 0 replies
- 635 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு:- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை, பயணிகள் பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை, தாக்குதல்கள் நடத்தியமை, அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையி…
-
- 0 replies
- 527 views
-