ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது அமைச்சர் ரிசாத்த பதியுதீனின் அடியாட்கள் என்று அழைக்கப்படுகின்ற வன்னியை சேர்ந்த அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் சிலர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், அவரது புதல்வர் நாமல் ராஜபக்சவையும் இரகசியமாக சந்தித்த விவகாரம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துகொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு முகவராக செயல்ப்பட்டு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மகிந்தராஜபக்சவின் ஆட்சியை கொண்டுவருவதற்காக திரைமறைவில் பல சூழ்ச்சிகளில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார் என்ற விடயம் அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. மகிந்தராஜபக்ஸ ஆட்சியில் முஸ்லிம…
-
- 0 replies
- 321 views
-
-
OMP சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் (OMP) சட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கைச்சாத்திட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டத்தின், இன்று நான் கைச்சாத்திட்டேன். நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்துக்கான இலங்கையின் பாதையில், இது இன்னொரு படியைக் குறிப்பிடுகிறது" என்று தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/OMP-சட்டத்தில்-ஜனாதிபதி-கைச்சாத்து/150-201056
-
- 1 reply
- 430 views
-
-
அனைத்து தரப்பினரும் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல் அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதே முரண்பாடுகளுக்கு காரணம் – ஜூலி பிஷொப்பிடம் சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் இன்றையதினம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். 45 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையில் இதுவரையான காலமும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்களில் சகல இன மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவில்லை எனவும் இதுவே இலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முரண்பாட்டு நிலையினை தீர்ப்பதற்கு அனைத…
-
- 2 replies
- 290 views
-
-
ஐ.நா.அரசியல் செயலரிடம் முறையிட்டது அரசாங்கம் காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பென் எமர்சன் உண்மைக்கு புறம்பான மற்றும் பொருத்தமற்ற சில விடயங்களை தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார். நாம் அதுதொடர்பில் ஐ.நா.வின் உயர்மட்டத்திடம் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிசெயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் ஐ.நா.வின் உ…
-
- 0 replies
- 304 views
-
-
முல்லை காடழிப்பும் வறட்சிக்குக் காரணம் முதலமைச்சர் சுட்டிக்காட்டு On 10 mins ago முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழா முறிப்புப் போன்ற இடங்களில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்குக் காணிகள் வழங்குவதற்காக காடுகள் அழிக் கப்படுகின்றன. நாம் வறட்சியை எதிர்கொள்வதற்கு இது வும் காரணம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாம் வறட்சியை எதிர்கொள்வதற்குக் காடுகளை அளவு கணக்கில்லாமல் அழித்தமைதான் காரணம் என்று சுற்றுச் சூழலியலாளர்களும் இயற்கை அறிஞர்களும் கூறுகின்றார…
-
- 0 replies
- 174 views
-
-
கூழாமுறிப்புக் காட்டுப் பகுதி திட்டமிட்டு எரிக்கப்பட்டதா? உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை குடியேற்றத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த கூழாமுறிப்புக் காட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்பராகிய சம்பவம் தொடர் பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும். இந்தத் தீ இயற்கையாக உருவானதாகத் தெரியவில்லை. திட்டமிட்ட ரீதியில் இதனை எரித்ததாகவே வலுவாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்த…
-
- 0 replies
- 402 views
-
-
ரணிலைச் சந்தித்து பேசினார் ஐ.நாவின் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்த்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடனிருந்தனர். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து அரசமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார் என்று தெரிவ…
-
- 1 reply
- 412 views
-
-
கட்டாரில் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை.! எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க ராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளது. எனவே அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை யகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் இளைஞர் அணி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டார் நாடு எந்த அளவிலான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு ம…
-
- 0 replies
- 200 views
-
-
அன்று செய்த தவறை மீண்டும் ஐ.தே.க. இன்று செய்கின்றது.! ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதமும் பழிவாங்கல் செயற்பாடுமே கறுப்பு ஜூலை க்கு காரணமாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மீண்டும் நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அக்கட்சி தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிஷ இளைஞர் அமைப்பு நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எரங்க குணசேகர தெரிவிக்கையில், இலங்கையில் கறைபடிந்த சம்பவமே 1983 ஆ…
-
- 0 replies
- 208 views
-
-
புதிய அரசியலமைப்புத் தேவை என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை புதிய அரசியல் அமைப்பில் அதிகார பகிர்வு தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஐக்கியம், பெளத்த மதத்திற்கான முன்னுரிமை என்ற விடயத்தில் எந்தவித விவாதத்திற்கும் இடமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பே தீர்வாகும் எக்காரணம் கொண்டும் புதிய அரசியல் அமைப்பை தடுக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் மேலும் 91 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானங்கள் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளிலும் தற்போதைய நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஜப்பான் ஒத்துழைப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார். இலங்கையில் செயற்படும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான கண்ணிவெடி ஆலோசணை குழுவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவ…
-
- 0 replies
- 208 views
-
-
மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி -ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன் 27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்…
-
- 6 replies
- 324 views
-
-
நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் எனவும், அவ்வாறு மறுக்கப்பட்டால் அவர்களை மூன்றாம் நாடொன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுமெனவும், அதுவும் சாத்தியப்படாது விட்டால் அவர்கள் பப்புவா நியூகினியா தீவுகளிலேயே குடியேற்றப்படுவார்கள் என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி படகுகள் மூலம் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளில் ஒரு தொகுதியினர் நௌரு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்…
-
- 2 replies
- 288 views
-
-
புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு Published by Gnanaprabu on 2017-07-20 16:57:2 முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட…
-
- 6 replies
- 516 views
-
-
முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்கட்டும் – விமல் வீரவன்ச சவால் முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசிலய் சாசனத்தை அரசாங்கம் உருவாக்கட்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப் பேரவையிலிருந்து தாம் உள்ளிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி; கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்தினால் அரசியல் சாசனப் பேரவையை உருவாக்கி அதன் ஊடாக சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்க இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/33547
-
- 0 replies
- 404 views
-
-
பிரதேசவாதத்தின்மூலம் ரெலோ அமைப்புக்குள் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கு தமிழரசுக் கட்சி முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ரெலோ அமைப்பின் சார்பில் வடமாகாண போக்குவரத்து அமைச்சராக இருந்த டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை நியமிப்பது தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. விந்தன் கனகரட்ணம் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர். இவரை நியமித்தால், யாழ் மாவட்டத்தில் 3 அமைச்சர்கள் அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்படுவர். இந்நிலையில், இதனைக் காரணம் காட்டி தமிழரசுக்கட்சியின் ஊடகத்தின் வாயிலாக பிரதேச வாதம் தொடர்பான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வடமாகாண மு…
-
- 2 replies
- 455 views
-
-
-
- 0 replies
- 229 views
-
-
அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் மைத்திரியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் இந்த நாட்டில் ஆட்சி புரிந்த அத்தனை அரச தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக எமது தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன திகழ்கின்றார். தனது அதிகாரத்தையே குறைக்க வேண்டும் என விரும்புகிறவர் அவர். அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடப் பொருத்தமானவர் அவரே’’ என்கிறார் ஐ.ம.சு. முன்னணி யின் பொதுச் செயலாளர் – அமைச்சர் மகிந்த அமரவீர. எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது ஒக்டோபர் மாதமளவில் மைத்திரி அணியில் இருந்து மகிந்த அணிக்கு 18பேர் செல்லவுள்ளனர் என்று கூறப்படுவது உண்மையா? பதில…
-
- 0 replies
- 165 views
-
-
உண்மையைச் சொன்னால் சுடுகிறது இலங்கைக்குக் கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை மிகக் கடுமையாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. இலங்கையின் நீதித்துறை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவை தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படையாக எமர்சன் அறிவித்ததன் எதிரொலியாகவே விஜயதாச அவர் மீது கடும் கோபமுற்றிருந்தார். இலங்கையில் மனித உரிமைகளின் நிலமையை மேம்படுத்துவதாகக் கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்குறுதியளித்திருக்கிறது. மனித உரிமைகளின் …
-
- 0 replies
- 730 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் முழு அளவில் வழிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் ; குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்க…
-
- 0 replies
- 421 views
-
-
தேசிய அரசு இருந்தால்தான் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். இதோ! தீர்வு வருகிறது என்று மார்தட்டிய சம்பந்தர் ஐயா இப்போது தேசிய அரசு இருந்தால்தான் அரசியலமைப்பை நிறைவேற்றலாம் என்கிறார். தேசிய அரசு எதுவரை இருந்தால் அரசியலமைப்பு நிறைவேறும் என்பதை அவர் நிறு திட்டமாகக் கூறியிருந்தால், ஓரளவுக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். அரசியல் அமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்குவதில் காலதாமதம் செய்யப்படுவது பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி அப்பாவித் தனமாக, தேசிய அரசு இருக்க வேண்டும். அது இருந்தால்தான் அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருடன்…
-
- 0 replies
- 385 views
-
-
பாடசாலைக் காணி அபகரிப்பை மூடி மறைக்கமுற்பட்டால் மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் : சுமணரத்ன தேரர் நீங்கள் நியாயம் வழங்கும் போது உங்களை வெளியேற்றுவார்கள் என பயப்படவேண்டாம். உங்கள் சேவையை செய்யுங்கள் அதேவேளை அரசாங்க அதிபரை வெளியேற்றி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முற்படுவடுவர்களாயின் அன்று இந்த மாவட்டச் செயலகம் தீக்கிரையாக்கப்படும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரிடம் சுட்டிக் காட்டினார். மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் காணி மற்றம் மக்களின் குடியிருப்பு காணிகளை சகோதர இனத்தவர்களால் அத்துமீறி அபகரித்த விடயம் தொடர்பாக அதற்…
-
- 4 replies
- 368 views
-
-
ஜனாதிபதியுடன் சந்திப்பு இரண்டு நாட்கள் உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் வைத்து இன்று (20) சந்தித்து கலந்துரையாடினார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதியுடன்-சந்திப்பு/46-201011 சந்திப்பு இலங்கைக்கு இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜூலிபிஷோப், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் இன்று (20) சந்தித்தார். (படம்; பிரதமர் காரியாலயம்) …
-
- 0 replies
- 160 views
-
-
சீனி கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட கொக்கெய்னின் பெறுமதி தெரியுமா ? 7 பேர் கைது இரத்மலானை பிரதேசத்தில் நேற்று கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகுமென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இரத்மலானை பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 218 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. http://www.virakesari.lk/article/22104
-
- 0 replies
- 222 views
-
-
ஜுனைட் நளீமி- மட்டக்களப்பு மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கான காணிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மங்கலராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பாடசாலைக்காணியை அத்துமீறி பிடித்துள்ளதாகவும், மாவட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகள் இனரீதியாக செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த காணி தொடர்பில் எவ்வித பின்னணியும் இன்றி முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி தமிழ் சகோதர இனத்துடன் முறுகல் நிலையை தோற்றுவிப்பதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது. குறித்த காணியில் 1950களிலேயே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது பதுரியா என அழைக்கப்படும் இப்பிரதேசம் கொண்டயன்கேணி தோட்டம் என அப்போது அழைக்கப்பட்டது. தற்போ…
-
- 0 replies
- 577 views
-