ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு 116 மில்லியன் ரூபா நிதியுதவி ஆஸி.– இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து (பா.ருத்ரகுமார்) டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 116 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய மொனாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் 58 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் குறித்த நிதியுதவி…
-
- 0 replies
- 322 views
-
-
ஐ.நாவுடன் அரசாங்கத்துக்கு அகங்கார மோதல் கிடையாது ஆர்.நிர்ஷன் ஐ.நாவுடன் முரண்படும் நோக்கம் கிடையாது என்றும், ஐ.நாவுடனான செயற்பாடுகள் இராஜதந்திர முறையிலேயே முன்னெடுக்கப்படுமெனவும் நல்லாட்சி அரசாங்கம், நேற்று (19) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐ.நாவுடன், பிரச்சினைகளை ஏற்படுத்தினால், என்ன நடக்குமென, கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் கண்டுகொண்டோம் என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், எமது நிலை தொடர்பில் சுயமதிப்பீடு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி…
-
- 2 replies
- 315 views
-
-
தஸநாயக்க கடத்தப்பட்ட இருவரின் உறவினரை அழைத்து பேசமுற்பட்டார் பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு; அனைவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் தஸநாயக்க, கடத்தப்பட்ட 11 பேரில் உள்ளடங்கும் தந்தை, மகன் உறவையுடைய அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகியோரின் உறவினரை கொழும்புக்கு அழை த்து பேசுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதுதொடர்பில் அமலன் லியோ னின் மனைவி,கடத்தப்பட்டோருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் வெளிநாட்டவர் ஒருவரை திருமலையில் இருந்து கொழும்புக்கு அழைத்து வர நீர்கொழும்பை சேர்ந்த எண்டன் பெர்னாண்டோ எனும் நபர் ஊடாக முயற்சிகள் மு…
-
- 0 replies
- 323 views
-
-
எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்திக்கிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிஷப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத…
-
- 0 replies
- 249 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கெதிராக கிளிநொச்சி இன்று 19-07-2017 ஆர்ப்பாட்டம் ஒன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூநகரி, பளை,கண்டாவளை கரைச்சி பிரதேசங்களை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரதேசவாத செயற்பாடுகளுக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்த…
-
- 2 replies
- 465 views
-
-
கேப்பாபுலவு காணிகளை விடுவிக்கவில்லை கேப்பாபுலவில் காணிகள், இன்று (19) விடுவிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையிலும், காணிகள் விடுவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 179 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிகழ்வுக்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகைதந்திருந்தார். “இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் இதற்குள் அடங்கவில்லை என மக்கள் தெரிவித்த காரணத்தால், இந்நிகழ்வை அ…
-
- 1 reply
- 333 views
-
-
‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை, கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றுவதே, தன்னுடைய நோக்கமாகுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி டேவிட் பெல்ட்மென்ட், கிழக்கு மாகாணத்துக்கு வருகைதந்திருந்தார். அவர், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநருடன் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ரோஹித போகல்லாகம கருத்து தெரிவிக்கையில், இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் நல்லிண…
-
- 0 replies
- 224 views
-
-
உறுப்பினர்களை சேர்க்கின்றார் பசில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு (இலங்கை மக்கள் முன்னணி) புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, தொகுவாரியாக கருத்தரங்குகள் பல நடத்தப்படவுள்ளன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில், இக்கருத்தரங்குகள் எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் நடத்துவதற்கு அந்த முன்னணி தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். கிளைக்குழுக்கள் மற்றும் தொகுதி குழுக்களை நியமிப்பதற்குமான யோசனைக்கு முன்னணியின் கூட்டத்தி…
-
- 0 replies
- 335 views
-
-
‘நான் நன்கறிவேன்’ அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார். கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 400 views
-
-
பென் எம்மர்சனுக்கு விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிட யார் அனுமதி வழங்கியது – ஜனாதிபதி கேள்வி தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை, ஐ.நா அதிகாரி பார்வையிட யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சிறையில் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/33311
-
- 3 replies
- 503 views
-
-
-
- 1 reply
- 361 views
-
-
வடக்கு மாகாண காணி அதிகாரங்கள் என்னிடமுள்ளபோது அண்மையில் மயிலிட்டித் துறைமுகம் விடுவித்தமை மற்றும் வடமாகாணத்தில் முஸ்லிம் மக்களின் குடியேற்றம் தொடர்பான கூட்டம் போன்றவற்றுக்கு எனக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என விளக்கம் கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இந்நிகழ்வு இராணுவத்தினரால் நடாத்தப்பட்டதெனவும், இதற்கு அரசியல்வாதிகள் எவருக்கும் இராணுவத்தினரோ, மாவட்டச் செயலகத்தினரோ அழைப்பு விடுக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திற்கும் முதலமைச்சருக்கு அழைப்புவி…
-
- 2 replies
- 468 views
-
-
விடுவிக்கும் காணிகளில் எமது காணிகள் எதுவும் இல்லை : அமைச்சரை வழி மறித்து போராட்டம் கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி இன்றுடன் 141 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களின் 180 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனால் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இன்றையதினம் காணிகள் பகுதியளவிலாவது விடுவிக்கப்படுமென்ற ஆவலுடன் காத்திருந்த மக்கள் இன்று விடுவிக்கப்படவிருக்கும் காணிகளில் தமது எந்த விதமான காணிகளும் அடங்கவில்லை மாறாக வேறு இடங்களை சேர்ந்த 6 ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழருக்கு சொந்தமான காடுகளை அழிக்கிறார்கள் என சில தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க முஸ்லிம் கட்சித்தலைவர்களும், குற்றம் சாட்டும் தமிழ் தரப்பும் கலந்து கொள்ளும் பகிரங்க மேடையை அமைக்க தமிழ் தரப்புக்களால் முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, முப்பது வருடம் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டு அவற்றை அழித்து வாழ்ந்த சிலருக்கு இப்போது காடுகளின் மீது காதல் வந்துள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் காடுகளை அழிக்கிறார்கள் என சில சிங்கள இனவாதிகள் இ…
-
- 4 replies
- 487 views
-
-
கொக்குத்தொடுவாயில் விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் தமது பூர்வீக விவசாயக் காணிகள் அளவீடு செய்யப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயக் காணிகளை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அளவீட்டுப் பணிகள் நேற்றும் (18) நேற்று முன்தினமும் (17) முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர். கொக்குத்தொடுவாய் கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து, மணல் இறக்கம் என்ற பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு, எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், காணி உரிமையாளர்களினால் வடமாகாண சபை உறுப்பினர் து.ர…
-
- 0 replies
- 258 views
-
-
சக்தி டிவி செய்திகள் 19th July 2017, 8PM
-
- 0 replies
- 271 views
-
-
முடிவுக்கு வந்தது வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் அரச வேலை கோரி வடமாகண வேலையற்ற பட்டதாரிகளினால் 143 நாட்களாக நடாத்தப்பட்ட தொடர் கவனவீர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கொழும்பு அரசு தீர்மானம் எடுத்ததையடுத்து தாம் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வருவதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். இரண்டு மாத காலத்துக்குள் எமக்குரிய தீர்வு கிடைக்காதவிடத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். http://uthayandaily.com/story/12433.html
-
- 2 replies
- 265 views
-
-
கூட்டு அரசின் பயணம் தொடரவேண்டும் தற்போதைய கூட்டு அரசின் எதிர்காலம் குறித்து அச்சம் தரக்கூடிய சமிக்ஞைகளும் எதிர்வுகூறல்களும், ஊகங்களும் ஊடகங்களை ஆக்கிரமித்து வருவதைக் காணமுடிகின்றது. அரசின் இரு பிரதான கட்சிகள் மத்தியிலான முரண்பாடு கள் தீர்க்கமடைந்துள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளியேறி எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் கசிகின்றன. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அப்படியான ஒரு வாய்ப்பு உருவாகாது என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணி…
-
- 0 replies
- 200 views
-
-
தேசிய பாதுகாப்பு விடயத்தில் கைதானோருக்கு ’இலங்கையில் இன்றும் சித்திரவதை’ தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் கூறித் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக, இலங்கையால் இன்னமும் சித்திரவதை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் நோக்கில், இலங்கைக்கு விஜயம் கொண்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி பென் எமர்ஸனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் நே…
-
- 1 reply
- 324 views
-
-
இது பற்றி பேச முடியாவிடின் அமைச்சர் பதவியிலிருந்து வேலையில்லை ; தயாசிறி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் கிரிக்கட் தலைவர் அர்ஜுண ரணதுங்க எழுத்து மூலம் என்னிடம் கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். தவறிழைப்பவர் யாரையும் தான் காப்பாற்ற தயார் இல்லை எனவும், 2009 ஆம் ஆண்டு லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு அமைச்சராக இருந்து கொண்டு இதை பற்றி கேள்வி கேட்ட முடியாவிடின் விளையாட்டு…
-
- 0 replies
- 273 views
-
-
சிறை அதிகாரியை தாக்கி தப்பிச்சென்ற இரு கைதிகள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்காக மகர நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றுள்ளனர். கை விலங்கிடப்பட்டிருந்த குறித்த சிறை கைதிகள் இருவரும் சிறை அதிகாரியின் காற்சட்டை பைக்குள் இருந்த சாவியை எடுத்து கை விலங்கை திறந்து கை விலங்கினாலேயே சிறை அதிகாரியை தாக்கியுள்ளனர். அதன்பின்னர், சிறை அதிகாரிக்கு கை விலங்கிட்டு வாயினுள் துணிகளை அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். http://www.virakesari.lk/article/22074
-
- 0 replies
- 183 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 19-07-2017
-
- 0 replies
- 138 views
-
-
“நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும் வடக்கில் நடக்கும் சட்ட…
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பின் வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது. இவரின் வருகை இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும் என இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலம் மேலும் தெரிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு, விஞ்ஞா…
-
- 0 replies
- 311 views
-
-
வலுச் சமநிலையில் கவனம்வேண்டும் மைத்திரியிடம் எடுத்துரைத்தார் சிங்கப்பூர் அயலுறவு அமைச்சர் பலம்பொருந்திய அயல்நாடுகளுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளி உறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும். இவ்வாறு சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது அவர் மேற்…
-
- 0 replies
- 320 views
-