ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
அரசு வசமானது நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம், http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 315 views
-
-
அவுஸ்திரேலிய தேசிய இரசாயன நிறுவனததால் கொழும்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரசாயன போட்டிப் பரீட்சை ஒன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் இன்று நடத்தப்பட்டுள்ள நிலையில் . இந்த பரீட்சையை நடாத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் முஸ்லிம் மாணவிகளை பர்தாவுடன் பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு வெளியிட்டுள்ளதாகவும் அதனை அடுத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதன்போது பாடசாலைக்கு வெளியே பர்தாவை கழற்ற எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் முஸ்லிம் மாணவிகள் பர்தாவு…
-
- 11 replies
- 1.1k views
-
-
கலப்பு முறையில் நவம்பரில் தேர்தல் : பிரதமர் ரணில் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் (ஆர்.ராம்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையையும் 40சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் கொண்ட கலப்புமுறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே இணக் கம் ஏற்பட்டுள்ளது. கலப்பு முறைமையில் நடத்தப்படும் இத்தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஏகமனதான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 349 views
-
-
லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறையில் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க அனுராதபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கமைய நேற்று மாலையளவில் அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஹால் தனசிங்க குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம்சுமத்தப்பட்ட லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, நேற்றையதினம் அதிகாலை ஊர்காவற்துறை மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த, லலித்…
-
- 0 replies
- 567 views
-
-
சு.க.வின் 18 எம்.பி.க்கள் விலகினாலும் அரசாங்கத்தை அசைக்க முடியாது.! சுதந்திரக் கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகினால் கூட நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க நினை த்தால் அது கனவாகத்தான் அமையும். நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியுமாயின் தொடர்ந்து பயணிக்கலாம். இல்லையேல் விலகிச் செல்லலாம் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க் கும் சதித்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேரடியாக தலையிட்டுள்ளார். ஆகவே …
-
- 0 replies
- 319 views
-
-
சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை.! இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கையின் பாதுகாப்பு கருதி, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்ளக அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்திருந்தார். இதன்படி …
-
- 0 replies
- 241 views
-
-
“இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை“ இந்திய மீனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அரசு, தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டாவறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது எதிர்ப்புக்கள் போராட்டங்கள் மூலமாகவே தென்னிலங்கை மீனவரின் அட்டூழியங்களை நிறுத்த முடியும். போர் முடிவுக்கு வந்த பின்னர் எமது பிரதேசங்களை ப…
-
- 0 replies
- 206 views
-
-
டிசெம்பர் வரை பொறுமையாக இருங்கள் கூட்டு அரசிலிருந்து வெளியேறுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, கட்சிக்குள் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், டிசெம்பர் மாதம் வரையில் பொறுமையாக இருக்குமாறும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பயணத்துக்கு முன்னதாக, அவசர அவசரமாக நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சரான ஜோன் செனவிரத்தின, எதிர்…
-
- 3 replies
- 354 views
-
-
‘போரின் அழிவுகள், அவலங்களைப் பொருட்படுத்தாமல் கல்வியிலும் விளையாட்டிலும் முன்னிலை அடையவும்’ – வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு (யாழ்ப்பாணத்திலிருந்து நெவில் அன்தனி) போரின் அழிவுகளையும் அவலங்களையும் பொருட்படுத்தாமல் எதிர்காலத்தில் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் உள்ள மாகாணமாக வடக்கு மாகாணம் திகழவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறினார். கல்வி அமைச்சு, அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன நெஸ்ட்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அம்சமான நெஸ்டமோல்ட் அரை மரதன் ஓட்டப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு …
-
- 0 replies
- 253 views
-
-
சந்திரிகாவும் களத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்தச் சந்திப்பின்போது, அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு தயாராகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கத்துக்குள்ளே வைத்துகொள்ளும் முயற்சியில், ஈடுபடுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 196 views
-
-
புதிய கூட்டாட்சிக்கு முயற்சி இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் -படுத்துக்கின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களே, மேற்கண்ட முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. புதிய கூட்டாட்சிக்காக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ம…
-
- 0 replies
- 277 views
-
-
‘காணாமற்போன சட்டமூலத்தை திருத்தத்துடன் சமர்ப்பிக்க முஸ்தீபு’ பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சகலரையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும், நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலத்தை, திருத்தத்துடன் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கடந்த …
-
- 0 replies
- 149 views
-
-
காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று மாபெரும் பேரணி ! முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக்காடழித்து குடியமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில் மாபெரும் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் குறித்த பேரணி காடழிப்பு நிகழ்த்தபடவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நி…
-
- 17 replies
- 606 views
-
-
‘கூட்டாட்சியை நீடிப்பதற்கு பரஸ்பர முயற்சி’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கூட்டாட்சியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு பல்முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகி, தனியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு, அரசாங்கத்திலிருக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, இந்தப் பரஸ்பர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்திலிருந்து வெளியேறு…
-
- 0 replies
- 241 views
-
-
நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறுவது உறுதி எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என, இன்று (16) மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதின், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, எம். ஏ. சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதன்போது, உள்ளூராட்சி தேர்தல் சட்டம…
-
- 0 replies
- 208 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (16-07-2017)
-
- 0 replies
- 299 views
-
-
பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க காணாமற்போயுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, பதவிக்காலத்தின் பின்னர் காணாமற்போயுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, ஏப்ரல் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவிருந்தார். பதவிக்காலம் நிறைவு பெற்றதன் பின்னர், பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க ஒரு மாத வெளிநாட்டு விடுமுறை பெற்றிருந்ததுடன், அவர் மீண்டும் மே …
-
- 1 reply
- 445 views
-
-
வட மாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வரும் சட்டவிரோத மணல் அகழ்வு சட்டவிரோத மணல் அகழ்வு, தற்போது வடமாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வருகின்றது. வடமாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக குறைந்த விலையில் மணலை பெற்ற மக்கள், தற்போது பல மடங்கு விலைக்கு மணலை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 17,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு டிப்பர் மணலை தற்போது 38,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மன்ன…
-
- 0 replies
- 314 views
-
-
டெனீஸ்வரனையும் பதவி விலக்குகிறார் முதலமைச்சர் விக்கி வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கைக்கு அமையப் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோரைப் பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்கு முன்னரே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீகாந்தாவால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் ஒன்று அனுப்ப…
-
- 1 reply
- 520 views
-
-
பணத்திற்காக ஆட்களை கடத்திய இரண்டு குழுக்களை இயக்கினார் கடற்படை கப்டன் தசநாயக்க – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பேச்சாளார் ருவான் குணசேகர, வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள், கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவமானது பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளார் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில வைக்கப்ப…
-
- 0 replies
- 243 views
-
-
மக்களின் கேள்வி! புதிய அரசமைப்பு ஒன்றின் உருவாக்கம் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நீண்ட காலத்தின் பின்னர் வாய் திறந்திருக்கிறார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வருகை தந்திருந்தார் அவர். அங்கு தனது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இடையே பேசினார். அங்கேயே புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்தும் விளக்கமளித்தார். புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கிறது, தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக அரசோடு சேர்ந்து சோரம் போகிறது என்ற கடும் விமர்சனங்களைக் கூட்டமைப்பு எதிர்கொண்டு வரும்…
-
- 0 replies
- 426 views
-
-
ஒற்றையாட்சி, சமஸ்டி சொற்கள் இல்லாமல் அதிக கூடிய உறுதியான அதிகார பகிர்வு – கிளிநொச்சியில் சம்மந்தன்:- ஒற்றையாட்சி எனும் சொல்லோ அல்லது சமஸ்டி எனும் சொல்லோ இல்லாமல் அதி கூடிய உறுதியான மத்திய அரசினால் மீளப்பெறப்பட முடியாத அதிகார பகிர்வு புதிய அரசியல் சாசனத்தின் மூலம் கொண்டுவரப்படுமானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் திகதி கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் முழுமையான உரை வருமாறு இன்றைய நிலைமை ஒரு மிகவும் சிக்கலான நிலைமை இந்த நிலையி…
-
- 11 replies
- 619 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 365 views
-
-
வட மாகாணத்திலிருந்து பயங்கரவாத புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள குடியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சில இனவாத தமிழ் அரசியல்வாதிகளும் இனவாத தமிழ் அமைப்புக்களும் எதிர்ப்பதை உலமா கட்சி கண்டிப்பதுடன் இத்தகைய இனவாத எதிர்ப்புகளுக்கெதிராக முஸ்லிம் இளைஞர் அமைப்புக்களும் அமைதிப்பேரணிகளை நடத்த வேண்டும் எனவும் உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது. விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடித்த பின்னர் பலாத்காரமாக வெளியேற்றியிருந்தனர். அம்மக்களின் காணி உறுதி பத்திரங்களைக்கூட பறிமுதல் செய்திருந்தனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரார்த்த…
-
- 1 reply
- 523 views
-