ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. சிறிலங்காவின் நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமாவும், நிதியமைச்சின் செயலரும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உதவியின் கீழ் பொத்துவிலிலும், புத்தளத்திலும் இரண்டு ராடர் நிலையங்கள் அமைக்கப்படும். இங்கு டொப்ளர் ராடர்கள் பொருத்தப்பட்டு துல்லியமான காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ராடர் நிலையங்களுக்கும், வ…
-
- 0 replies
- 242 views
-
-
அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சீன நிறுவனங்களுடன், கட்டமைப்பு உடன்பாட்டுக்கு செல்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்த…
-
- 0 replies
- 271 views
-
-
சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பதவியை விட்டு விலகினார். இதையடுத்தே, சிறிலங்கா அதிபரின் செயலராக, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்றும் ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். அடுத்த மூன்று நாட்களுக்குள் தாம் சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளதாக ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஒஸ்ரின் பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றி…
-
- 0 replies
- 275 views
-
-
இராணுவத் தளபதியாகும் வாய்ப்பை இழக்கும் நிலையில் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இன்னமும் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவில்லை என்று, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். ராவய வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தளபதி பதவியில் இருந்து, ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விலகிக் கொள்ளாததால், அவர் வரும் ஓகஸ்ட் 21ஆம் நாள் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்றும், ராவய தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 21ஆம் நாள் வரை, ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இராணுவத் தளபதி பதவியில் நீடிப்பாரேயானால், தற்போது, இராணுவ…
-
- 0 replies
- 421 views
-
-
வடக்கு அமைச்சு செயலாளர்களின் பொறுப்புகளிலும் மாற்றங்கள் வடக்கு மாகாண சபைக்குப் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து அமைச்சுச் செயலாளர்களின் பொறுப்புக்களும் மாற்றப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் கல்வி, விவசாய அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்த இரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் முதலமைச்சரால் புதிதாக சர்வேஸ்வரன், அனந்தி ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதன்போது அனந்தியின் அமைச்சில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அமைச்சர் அனந்தியின் அமைச்சுச் செயலாளராக நிய…
-
- 0 replies
- 242 views
-
-
புதிய அரசியலமைப்பு சந்தேகமே? (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை. இந்த ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது என தேசிய சமாதான பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். நல்லிணக்கத்தை உருவாக்கும் பயணத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளை பரப்பும் சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலான நகர்வுகள் குறித்து வினவியபோதே அவர் …
-
- 0 replies
- 238 views
-
-
அரசமைப்பு உருவாக்கத்தை தமிழ்க் கட்சிகளே தடுத்தன அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கிளிநொச்சியில் உரை புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளே இணக்கப்பாடின்றிச் செயற்பட்டன. தற்போது அனைத்து கட்சிகளும் இணைந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்தார் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. கிளிநொச்சி – அறிவியல் நகரில் உள்ள யாழ்.பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதியும், பொ…
-
- 0 replies
- 440 views
-
-
கூட்டணிக்கு தலைமை தாங்க விக்கியே பொருத்தம் விக்கியைச் சந்தித்த பின்னர் சங்கரி தெரிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கும் இடையில் முதலமைச்சர் இல்லத்தில் நேற்றிரவு திடீர் சந்திப்பு நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சந்திப்பு நட்புரீதியானது. நீங்கள் நினைப்பதுபோன்று அரசியல் பூச்சு இதற்குப் பூசவேண்டாம்’ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பத்திரிகைய…
-
- 0 replies
- 135 views
-
-
கொங்கிறீட் பொருத்து வீடு இந்திய நிறுவனம் ஆராய்வு பொருத்து வீட்டை வடக்கு மக்கள் நிராகரித்துள் நிலையில், கொங்கிறீட்டிலான பொருத்து வீட்டை யாழ்ப்பாணத்தில் அமைப்பது தொடர்பில் இந்திய நிறுவனம் ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. சீன முறைமையிலான தகரப் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கு தமிழ் மக்கள், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. கல் வீடே தேவை என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் இந்திய நிறுவனம், கொங்கிறீட்ட…
-
- 2 replies
- 563 views
-
-
முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியில் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையினை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முச்சக்கரவண்டி சாரதிகள் அந்நாட்டு பெண் பயணிகளிடம் தகாதவாறு நடந்து கொள்ள முயற்சித்தமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதன் பின்னே குறித்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,தனிமையில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பிற்காக நிறுவனங்களின் மூலம் இயங்கும் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 11 replies
- 580 views
-
-
சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்! சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்த வானிற்குள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் ஊடகவியலாளர் கூறினார். இவ்வாறான சித்திரவதைகளின் போது இவரது இரண்டு கால்களின் எலும்புகள் உடைக்கப்பட்டன. இவரது விரல்கள் நொருக்கப்பட்டுள்ளன. இவருக்கு சூடு வைக்கப்பட்டது. இவரது தாடி மற்றும் தலைமுடி போன்றன வெட்டப்பட்டன. இவரது வாய்க்குள் பொருட்கள் திணிக்கப்பட்டன. இவ்வளவு சித…
-
- 0 replies
- 538 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 30-06-2017
-
- 0 replies
- 160 views
-
-
-
- 0 replies
- 310 views
-
-
தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்து வரும் வீ.ஆனந்தசங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக செயற்பட்டிருந்தால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களை ஏமாற்றும் ஒரு குழுவாகும். தேர்தல்காலத்தில் சர்வதேசத் தரப்பை முன்வைத்து தமிழ் மக்களிடம் தங்களுக்கு ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு கூட்டமைப்பினால் கோரப்படும். தேர்தல் நிறைவடைந்தப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்…
-
- 0 replies
- 455 views
-
-
இடியப்பச் சிக்கலாகும் நிலையில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்கவேண்டியதொகு நிலை உருவாகி வருகின்றது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக எழுந்த குழப்பநிலை தணிந்துள்ள நிலையில், புதிய குழப்பங்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துக் காணப் படுகின்றன. புதிய விசாரணைக்குழுவின் முன்னால் உள்ள சவால்கள் அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோரை விசா ரிப்பதற்குப் புதிய விசாரணைக்குழு வொன்றை நியமிப்பதற்கான முதலமைச்சரின் நடவடிக்கையும், புதிய அமைச்சர…
-
- 0 replies
- 400 views
-
-
100 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து : 17 பேர் படுகாயம் பதுளை ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே வேனொன்று வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளையைச் சேர்ந்த ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் பள்ளாகெட்டுவ என்ற இடத்திலிருந்து பதுளை வழியாக அநுராதபுரம் சென்ற வேனே வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வேனில் பயணித்த 17 பேர் கடும் காயமடைந்த நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் சாரதி உட்பட மூவரின் நிலை கவலைக்க…
-
- 0 replies
- 185 views
-
-
அரசியலமைப்பு மாற்றம் வராது : ஐ.தே.க. Published by RasmilaD on 2017-06-30 09:45:29 தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யமாட்டோம். திருத்தங்களின்றி புத்தம் புதிய அரசியலமைப்பையே கொண்டு வரவுள்ளோம். இந்த விடயத் தில் சுதந்திரக் கட்சியை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவோம். சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பினை நிறைவேற்றுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னரே மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலின் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் அக்கட்சி சுட்டிக…
-
- 1 reply
- 419 views
-
-
கிளி. விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு புதிய கட்டடங்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரால் இக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. http://uthayandaily.com/story/8654.html
-
- 2 replies
- 269 views
-
-
றுவண்டா இனப்படுகொலை விவகாரத்தில் பிரான்ஸ் BNP வங்கி மாட்டியதா? றுவண்டா இனப்படுகொலை விவகாரத்தில் பிரான்சின் பிரபல வங்கிகளில் ஒன்றான BNP, குற்றச்சாட்டு ஒன்றினை எதிர்கொண்டுள்ளது. 1994ம் ஆண்டு இடம்பெற்றிருந்த றுவண்டா இனப்படுகொலையில், பாவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களின் கொள்வனவுக்கான பணப்பரிமாற்றத்திலேயே இக்குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது. இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மூன்று அரசு சாரா அமைப்புக்களே BNP வங்கி மீது இந்த வழக்கினைத் தொடுத்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில், உலகை உலுக்கிய மிகப்பெரும் இனப்படுகொலையாக 10 மில்லியன் மக்களை றுவண்டா இனப்படுகொலை பலிய…
-
- 1 reply
- 354 views
-
-
வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், தையிட்டிப் பகுதியில் 20 பரப்புக் காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக வலி. வடக்கு பிரதேசசபை ஆவணங்களின் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாகவே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த விகாரையை விட்டு 1983ஆம் ஆண்டுக்கு முன்னர், பிக்குகள் வெளியேறிய நிலையில், சில குடும்பங்கள், விகாரைக் காணிகளில் குடியமர்ந்திருந்தனர். அவர்களும், 1990ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்தனர். அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து தையிட்டிப் பகுதி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் காணிகளில் க…
-
- 1 reply
- 507 views
-
-
தலைதூக்குகிறது புலிகள் இயக்கம் மைத்திரியின் ஆட்சி அதற்கு சிறந்த வாய்ப்பு என்கிறார் விமல் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்குச் சாதகமான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்திரி ஆட்சி. இப்போது அந்த யுகம் தோன்றிவிட்டது. புலிகள் மெல்ல மெல்ல தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். புதிய அரசமைப்பின் ஊடாக கூட்டாட்சி கொடுக்கப்படுவதற்கு முன் இந்த அரசு கவிழ்க்கப்படவேண்டும்.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது நாட்டில் உள்ள தொழிலார்கள்,வர்த்தகர்கள்,சிறுபான்மை இன மக்கள் மற்றும் ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிக்கு வாக்களித்தோர் என …
-
- 1 reply
- 286 views
-
-
புதிய அரசியல் அமைப்பில் உலக தமிழர் பேரவையின் ஆதிக்கம் புதிய அரசியல் அமைப்பில் உலக தமிழர் பேரவையின் முழுமையான ஆதிக்கமே உள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் தேவைக்குமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக உலக இலங்கையர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. உலக தமிழர் பேரவையுடன் மோதுவது கடினமானதாகும் அவர்கள் மிகவும் பலமான அமைப்பு எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியது. உலக இலங்கையர் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். http://www.virakesari.lk/article/21349
-
- 1 reply
- 302 views
-
-
’எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிப்போம்’ -எஸ்.நிதர்ஷன் 'மக்கள் எதிர்பார்க்கின்ற பெரிய அளவிலான திட்டங்களை, முழுமையாக செயற்படுத்துவதற்கு உரிய அளவு நிதி, பெண்கள் விவகார அமைச்சில் இல்லை. எனினும், மக்களுடைய எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்' என்று, வடமாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரனும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய கல்வி அமைச்சின் பொறுப்புகள் சர்வேஸ்வரனுக்கும் பெண்கள் விவ…
-
- 0 replies
- 435 views
-
-
தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியமானது – இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார். முதல் தடவையாக அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகள், பொருளாதார மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற மிகவும் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறnனினும் தாம் நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யப…
-
- 2 replies
- 313 views
-
-
அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார் உமா ஓயா, சைட்டம் மருத்துவக் கல்லூரி, மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் உள்ளிட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்த ராஜபக் ஷவே தோற்றுவித்தார். டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தருணத் தில் வேலைநிறுத்தப் போராட்டங்களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்கறை காட்டுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேராவும் பாராளு…
-
- 0 replies
- 288 views
-