ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
வடமாகாண சபை அமர்வில் இன்று ஆசன ஒழுங்கு மாறும் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் ஆசன ஒழுங்குகள் தற்காலிகமாக மாற்றப்படும் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள் இருவர் பதவி விலகியமையால் அவர்கள், முன்வரிசை ஆசனங்களிலிருந்து இடமாற்றப்படுவார்கள் என்று தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையில் முன்வரிசையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதலாவதாகவும், கல்வி முன்னாள் அமைச்சர் த.குருகுலராசா இரண்டாவதாகவும், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மூன்றாவதாகவும், விவசாய முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நான்காவதாகவும்…
-
- 0 replies
- 536 views
-
-
இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் புதிய துறைகளில் உறவுகளை கட்டியெழுப்புதல் என்பன ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்திக் நோக்கமாக அமைந்துள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதியான திகதி அறிவிக்கப்பட வில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தியோகப்பூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தா…
-
- 0 replies
- 269 views
-
-
ஐ.நா. தீர்மானத்துக்கு அரசு செயல் வடிவம் பரிந்துரைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவைக் குழு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட் டுள்ள தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளரான கயந்த கருணாதிலக்க மேற்படி தகவலை வெளியிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐ.நா. மனித…
-
- 0 replies
- 145 views
-
-
காணாமல்போனோர் அலுவலகம் ஏன் நிறுவப்பட்டது ; நாமல் கேள்வி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவுவதின் ஊடாக எவரும் தண்டிக்கப்படமாட்டார்கள் என பிரதமர் கூறுவதாயின் ஏன் இப்படி ஒரு அலுவலகம் நிறுவப்பட்டது. சிறைச்சாலைக்குள் நுழைந்து தேடும் அளவிற்கு அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியாயின் ஏன் இவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதல் திர…
-
- 0 replies
- 253 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்றுமொரு கடற்படை வீரர் சி.ஐ.டி.யால் கைது கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு கடற்படை வீரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 கடற் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மற்றொரு கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலையில் உள்ள ருஹுனு கடற்படை முகாமில் சேவையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகா…
-
- 1 reply
- 459 views
-
-
வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர் வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்தார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள் ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருட போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மக…
-
- 2 replies
- 511 views
-
-
சிவாஜிலிங்கம், ரிஷாட், ஞானசாரருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு கலங்கம் ஏற்படும் வகையில் பேசப்பட்ட கருத்துகள் தொடர்பில், இதுவரையில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். இக்குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கே.சிவாஜிலிங்கம், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்ப…
-
- 0 replies
- 287 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பிபாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.tamilwin.com/special/01/149757?ref=home…
-
- 7 replies
- 678 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (21/06/2017)
-
- 0 replies
- 253 views
-
-
கொழும்பு நகருக்குள் படகு போக்குவரத்து தொடங்க திட்டம் கொழும்பு நகருக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நகருக்குள் பயணிகள் போக்குவரத்து படகு சேவையொன்றை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொழும்பு நகருக்குள் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பிரவேசிப்பதன் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அந்த அமைச்சு, இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தது. கொழும்பு நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கான படகு சேவையொன்றை …
-
- 0 replies
- 350 views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் எச்சரிக்கை – வள்ளுவா் சிலைதாங்கியின் மாதிரி உலகத்தில் ஈழம் அழிப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரின் எச்சரிக்கையை அடுத்து அழிக்கப்பட்டு்ளளது. இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த சனிக்கிழமை(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவா் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. திருவள்ளுவரின் திருக்குறல் உலக பொது மறை என்பதனால் திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் ம…
-
- 1 reply
- 616 views
-
-
இலங்கை : போருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம் இலங்கையில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு , மீள் குடியேற்றம் மற்றம் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Image captionகண்ணி வெடி அபாயமற்ற மாவட்டம் என்ற பிரகடனத்தை மாவட்ட செயலாளார் சார்லஸ் பெற்றுக் கொண்டார் போருக்கு பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் …
-
- 0 replies
- 264 views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் இளையோருக்கான தூதுவராகப் பதவி வகிக்கும், ஜோர்தானைச் சேர்ந்த அகமட் அல்ஹெந்டாவிக்குப் பதிலாக, ஜெயத்ம விக்கிரமநாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். இளையோர் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் தேசிய அளவில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய ஜெயத்ம விக்கிரமநாயக்க, தற்போது சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கிறார். 1990ஆம் ஆண்டு பிறந்த இவர், நாடாளுமன்றச் செயலாளரின் செயலராகப் பணியாற்றி வரும் நிலையில், ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராக ந…
-
- 0 replies
- 527 views
-
-
அவைத் தலைவர் விடயத்தை சர்ச்சைக்குள்ளாக்க முடியாது ரெலோ, புளொட் கூட்டாக அறிவிப்பு நடந்து முடிந்ததில் இனிப் பிழை கண்டுபிடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவைத் தலைவர் விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க முடியாது. அவைத் தலைவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பனவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளித்ததன் ஊடாகப் பக்கம் சார்ந்து செயற்பட்டுள…
-
- 5 replies
- 531 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை இலகுபடுத்த கோருவது பாரதூரமான அழிவை ஏற்படுத்தும் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) ஆபத்தான பயங்கரவாத அமைப்பை கட்டுப்படுத்து வதற்காக இலங்கையில் காணப்படும் பயங்கரவாத சட்டங்களை விடவும் பாரதூரமான சட்டங்கள் உருவாகும் போக்கே தற்போது உலக நாடுகளில் காணப்படுகின்றது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் காணப்படும் சட்டத்தை இலகுபடுத்துமாறு முன்வைக்கப்படும் கோரிக்கையானது மானிட பரம்பலின் அழிவொன்றை நோக்கி இட்டுச் செல்வதாக அமையும் என்ற நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை இ…
-
- 1 reply
- 228 views
-
-
போராட்டம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை? - சுப்பிரமணியம் பாஸ்கரன் “வடமாகாண சபை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, முதலமைச்சருக்கு ஆதரவாகக் கிளிநொச்சி பகுதியில் கடமை நேரங்களில் போராட்டம் நடத்திய அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு ம…
-
- 0 replies
- 352 views
-
-
நந்திக்கடல் பிரதேசத்தில் போராளியின் அடையாளத் தகடு மீட்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று, நந்திக்கடல் வெளிப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தகட்டில், அகவீரன் என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், தகட்டில் “ஐ:1680” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தகடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. அத்துடன், குறித்த விடுதலைப் போராளி, தனது பெயரை, தகட்டு இலக்கத்தின் பின்னே பதிவு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 247 views
-
-
யாழ்.பேரூந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் : கண்டும்காணாதது போல் செயற்படும் மாநகர சபை யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்குள் உள்ள கழிவு வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளானது யாழ்.மாநகர சபையால் முறையாக அகற்றப்படுவதில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன் இது தொடர்பில் தமது விசனத்தையும் தெரிவித்துள்ளனர். குறிப்ப்பாக நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் அதிகாரிகள் பொது இடத்தில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் இக் குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசட்டையீனமாக செயற்படுவது குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 227 views
-
-
பதில் விவசாய அமைச்சராக பதவியேற்கும் முதலமைச்சர்! வடமாகாண பதில் விவசாய அமைச்சராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு உள்ளூர் நேரப்படி இன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்கு மாகாண சபையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே வடமாகாண அமைச்சர்களாக பதவி வகித்த விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அண்மையில் பதவி விலகினார். அதையடுத்து முதலமைச்சர் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். http://uthayandaily.com/story/7511.html
-
- 3 replies
- 340 views
-
-
அரசியலில் ஈடுபடுவோருக்கு வயதெல்லை அவசியம் – பெப்ரல் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இத்தனை வயது வரையே இருக்க முடியும் என்ற வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ்வாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறினார். “வயதான அரசியல்வாதிகள் பலர் அவர்களுக்குப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்துத் தொழில்களுக்கும் ஓர் வயதெல்லை இருக்கின்றது. ஆயினும் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட வயதெல்லை இல்லாதது கவலைக்குரிய விடயம்.”- என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/7475.html
-
- 0 replies
- 182 views
-
-
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு 15. 06.2017 அன்று இங்கிலாந்தில் காலமானார். எல்லா மரணங்கள் என்று இல்லாதுவிட்டாலும் சில மரணங்கள் நம் பிடரி பிடித்து உலுக்கி, இதயத்தை சுற்றி ஈர சாக்கு ஒன்றினால் போர்த்தியதுபோல இருக்கும்.ராமுவின் மரணம் கேள்விப்பட்டவுடன் அந்த உறைந்த நிலையே மனது இருக்கிறது.. 1979ம்ஆண்டின் நடுப்பகுதியில்தான் ராமுவை சந்தித்தேன்.யாழ் ரிம்மர் ஹோலில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வரலாறு மற்றும் போட்டோ கண்காட்சி ஒன்று நடந்தது. அதனை பார்ப்பதற்காக தலைவர் என்னையும் கிட்டுவையும் கூட்டி சென்றிருந்தார். நாம் யாழ் ரிம்மர்மண…
-
- 5 replies
- 440 views
-
-
மீளப் பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை! வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையிலுள்ள தமிழரசுக் கட்சியினரால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று இலங்கை தமிழரசுக் கட்சியால் மீள பெறப்பட்டது. சில மணி நேரத்துக்கு முன்பு ஆளுநரிடமிருந்து தமிழரசு கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் பிரேரணை மீளப் பெற்றுக்கொண்டார். http://uthayandaily.com/story/7601.html
-
- 0 replies
- 157 views
-
-
விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் வவுனியாவில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்தில் கூடிய சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வவுனியா கிடாச்சோறி பொது நோக்கு மண்டத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மக்கள் சந்திப்பிற்கு இந்த மண்டபத்தை வழங்க முடியாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையடுத்து கிடாச்சோறி கிராமத்தில் உள்ள அவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. http://newsfirst.lk/tamil/2017/06/வி…
-
- 11 replies
- 777 views
-
-
“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம்” “வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, “மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்கு மாகாண சபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரண…
-
- 3 replies
- 480 views
-
-
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு கட்டமாகவே, இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது. இந்தியக் கடற்படையின் டோனியர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு விமானம், சிறிலங்கா கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இந்திய கடற்படை விமானம் ஒன்று சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக, கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். http://www.puthinappalakai.net/2017/06/20/news/24046
-
- 5 replies
- 458 views
-