Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் IMAGE வடக்கு முதமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. வன்னி மக்கள் என்ற அடிக்குறிப்புடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேவேளை, வர்த்தகர்கள் தமது கடைகளை அடைத்து வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/6953.html

    • 1 reply
    • 195 views
  2. பிரிகேடியர் குணவர்த்தன குற்றவாளி ஆயினும் அவரைப் பதவியிறக்க இராணுவத் தளபதி மறுப்பு கம்­பகா – ரத்­து­பஸ்­வெல துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் பிரி­கே­டி­யர் தேசப்­பி­ரிய குண­வர்த்­த­ன­வைப் பத­வி­யி­றக்­கம் செய்­யு­மாறு இரா­ணுவ நீதி­மன்­றம் அளித்த பரிந்­து­ரையை இரா­ணு­வத் தள­பதி நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. 2013 ஓகஸ்ட் முதலாம் திகதி ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிதண்ணீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இதில் 3 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாள்களில், இராணுவத் தளபதி ஆறு பேர் கொண்ட இராணுவ …

  3. “யாருக்குமே இனி அஞ்சமாட்டேன்” “நான் இனி யாருக்­கும் அஞ்­சத் தேவை­யில்லை. என்­னு­டைய பலம் மக்­க­ளின் அன்­பு ­தான். அர­சி­யல் ரீதி­யான பலம் எத­னை­யும் நான் சேர்த்­தி­ருக்­க­வில்லை.பொது மக்­க­ளுக்­குச் செய்­யும் எனது சேவையே எனக்குப் பல மாக இருக்கும். ஆகவே நடப்பதை இருந்து பார்ப்போம்” இவ்வாறு கண்ணீர் மல்கத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்துக்கு முன்னால் அவருக்கு ஆதாரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இன்று எனக்கு முன்னால் கூடியுள்ள உங்கள் அன்பு என்னை வியக்க வைக்கின்றது. நான் என்னால் முடிந்தளவில் மக்களுக்ககன சேவையை மேற்கொண்டு …

    • 2 replies
    • 316 views
  4. வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஒன்று கூடிய பொதுஅமைப்புக்கள் வவுனியா விருந்தினர் விடுதியில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. முதலமைச்சரை மாகாணசபையிலிருந்து வெளியேற்றுவதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். தமிழரசுக் கட்சி மத்திய அரசாங்க…

    • 2 replies
    • 343 views
  5. யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை? யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தின் சில அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோரியுள்ளதாக அரசியல் சாசன திருத்தங்கள் குறித்த மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குறித்த பரிந்துரைகள் கோரப்பட்ட போது ஜாதிய அடிப்படையிலான விடயங்கள் பகிரங்கமாக பேசப்பட்ட ஒரே மாகாணம் வடக்கு மாகாணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 517 views
  6. வடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டும்:- வடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டுமென சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டு…

  7. சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்? முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து ஏற்பட்டிருந்த கடும் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தைமூலம் சமரசத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவ ருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியதையடுத்து இந்த முறுகல்நிலைக்கு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்…

  8. வடமாகாணத்தில் ஊழல் வாதிகளை பாதுகாக்கவே முயற்சி ; சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானது ஊழல் வாதிகளை பாதுகாக்கின்ற செயற்பாடாகவே அமையும் என ஈ பி.ஆர். எல். எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சி ஊழல் அற்ற ஓர் ஆட்சியை கொண்டு வருவதனை எதிர்த்து ஊழல் வாதிகளை பாதுகாத்து முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானத…

  9. வடமாகாண சபை முன்பாக போராட்டத்திற்கு அழைப்பு வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. கைதடியில் உள்ள பேரவைக்கட்டடம் முன்பாக இன்று மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை முகநூலில் முதலமைச்சருக்கு ஆதரவான செயலி அறிமுகமாகியுள்ளது. அதனைப்பயடுத்தி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் தமது முகநூல் முகப்பு படங்களை மாற்றம் செய்து வருவதனை அவதானிக்க முடிகிறது. http://globaltamilnews.net/archives/29793

    • 5 replies
    • 818 views
  10. எதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்? வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிலையில் புதன்கிழமை இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர். …

    • 14 replies
    • 1k views
  11. வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்ள இணக்கம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாத அமைச்சர்களை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/6879.html

  12. கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது..! கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிசின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. குறித்த இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அந்த விடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில், இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு பலமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. Tags http://www.virakesari.lk/article/20907

    • 1 reply
    • 264 views
  13. வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து பொ.ஐங்கரநேசன் இராஜினாமா வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பொ.ஐங்கரநேசன் இன்று வட மாகாண முதலமைச்சரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் இன்று வட மாகாண முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளனர். காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/06/வட-மாகாண-அமைச்சுப்-பதவிய/

  14. சக்தி டிவி செய்திகள் 8PM (15/06/2017)

  15. ’ஆயுதப்போர், சமஷ்டிக் கோரிக்கை, படுகொலைகள் அனைத்தும் தெற்கிலேயே ஆரம்பமாகின’ இலங்கையில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆயுதப் போராட்டம், கடந்த 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், தென்னிலங்கையிலேயே இடம்பெற்றது. அத்துடன், அரசியல் தலைவர்களைக் கொலை செய்யும் அரசியல் படுகொலைக் கலாசாரமும், தென்னிலங்கையிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆகவே, இன்றைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்த்துவரும் அனைத்தும், தெற்கிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அதை மறந்துவிட்டு, இன்று எல்லாவற்றுக்கும் தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் சாடாதீர்கள் என, அமைச்சர் மனோ கணேசன் கூறினார். கொழும்பிலுள்ள பிரபல தொலைக்காட்சிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி வாத, விவாத நிகழ்வொன்றில் கல…

  16. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுமென்பதே யதார்த்தம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றமொன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிவதால், அதனைக் கவனத்திற்கு எடுத்து அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே பதவிகளை தியாகம் செய்யுமாறு கோருவதுடன், மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்கள் இருவரும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும்…

    • 1 reply
    • 512 views
  17. 'அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது' -எஸ்.ஜெகநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பில், மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “வட மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பின் பிரகாரம் நான் அவரை சந்தித்திருந்தேன். முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அவர் அழைத்திருந்தார். “அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். …

  18. வடக்குக்கு விரைகின்றார் இரா.சம்பந்தன்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்குக்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கெதிராக தமிழரசுக் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. http://uthayandaily…

  19. பெரும்பான்மையை நிருபிக்கவும் : சி.வியிடம் கோரிக்கை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எழுத்து மூலமாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பெரும்பான்மையை-நிருபிக்கவும்-சி-வியிடம்-கோரிக்கை/175-198681

  20. அரசியல்வாதியல்ல இரத்தம் சிந்திய பூமியின் காவலர்கள் என்று நினைத்து செயற்படவும்– சன் குகவரதன் அவசர வேண்டுகோள் தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் அரசியல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை வடமாகாண சபை உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மேல்மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள். ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் எனவும் சன் குகவரதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் குழப்ப நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. …

  21. பொது பல சேனாவின் இருவர் கைது : மேலும் நால்வரைத் தேடி வலை வீச்சு குருநாகல் மல்லவபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் பொது பல சேனாவின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20910

  22. சில தினங்களாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்திற்கு முதல்வர் விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். விசாரணை அறிக்கையில் பெயர் குறிபிடப்பட்டுள்ள விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனும், கல்வி அமைச்சரான குருகுலராஜாவும் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். அதேவேளை ஏனைய இரண்டு அமைச்சர்களான சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீதும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் இருவரும், அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில், தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு நிலையில் இருக்க வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் கட்டளையிட்டிருக்கின்றார். இதனை மீறினால் …

    • 0 replies
    • 440 views
  23. ’சி.விக்கு எதிரான நடவடிக்கை தமிழர்களுக்கு செய்யும் துரோகம்’ “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி மறுதலிக்க முடியாது” என, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகாந், நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பதவியைப் பறிக்க முற்பட…

  24. இடைக்கால முதல்வர் விவகாரம் : எனக்கு எதுவும் தெரியாதென்கிறார் சிவாஜி இடைக்கால முதல்வர் தொடர்பில் என்னுடன் எவரும் கலந்துரையாடவில்லையென்பதுடன் அது குறித்து எனக்கு எவ்வித எண்ணமுமில்லையென ரெலோவின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிமையையடுத்து இடைக்கால முதல்வாராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் இலங்கை தமிழரசுக் கட்சியின் நேற்றைய நள்ளிரவு கூட்டத்தின் நிறைவில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து வெளியான தகவல் தொடர்பில் கருத்தத் தெரிவிக்கையிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இடைக்கால முதலவர்; தொடர்…

  25. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் திருகோணமலையில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடலில் இறங்கி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் ஆக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.