ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
எச்சரிக்கை : பொல்கொட அணை உடையும் அபாயத்தில்.. பொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனால்பொல்கொட அணையை அண்மித்துள்ள தெற்கு பாணந்துறை, பாணந்துறை வடக்கு, பன்னபிடிய, பண்டாரகம, மொரோந்துடுவா, குருவந்தோட மற்றும் வாட்டுவா பிரதேசங்களை சேர்ந்த மக்கள், உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 102 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை உள்ளிட்ட 8 …
-
- 0 replies
- 352 views
-
-
வெளிநாட்டுச் செலாவணி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் அதிகளவுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளே இலங்கையிலும் பார்க்க நிலைகுலைந்திருப்பதாக கூட்டு எதிரணியின் எம்.பி. பந்துல குணவர்த்தன எச்சரிக்கின்றார். "சிலோன் ருடே' பத்திரிகைக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு; கேள்வி: கூட்டு எதிரணி, பரிவர்த்தனை கட்டுப்பாட்டு திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கின்றது? பதில்: கூட்டு எதிரணி மட்டுமன்றி, மத்திய வங்கியிலுள்ள உயர் அதிகாரிகளும் அதாவது பரிவர்த்தனைக் கட்டுப்பாடு தொடர்பாக நுட்பரீதியான அறிவைக் கொண்ட உயர் அதிகாரிகளும் வெளிநாட்டுச் செலாவணி பரிவர்த்தனை மற்றும் மோசடி தொடர்பான திருட்டுகளை எதிர்க்கும் பலரும் இந்த சட்டமூலத்திற்கு எதிரானவர்களாகும். எவ்வாறாயினும் பாராளுமன்றத்…
-
- 0 replies
- 352 views
-
-
வட- கிழக்கிலே வாழ்கின்ற எங்கள் பிள்ளைகள் தற்போதைய காலகட்டத்திலும் பல்வேறுபட்ட நெருக்கீடுகளுக்கு மத்தியில்தான் தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி பளை கல்வி நிலையம் ஒன்றின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்றைய தினம் காலை 11.00 மணிக்கு கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது பிரதம விருந்தினர் உரையின் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் தனது உரையில் மேலும் கூறுகையில், தமிழர்களாகிய நாங்கள் கல்வியிலே மிகவும…
-
- 0 replies
- 434 views
-
-
மத்திய மலைநாட்டில் கடும் காற்றுடன் பனிப்பொழிவு மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வுப் பிரதேசங்களில், இன்று காலை முதல், கடும் காற்று வீசி வருகின்றது. இதனால், பிரதான வீதிகளில், மரங்கள் முறிந்துவிழும் அபாய நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடும் காற்று காரணமாக, பல பிரதேசங்களில், அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்பட்டும் வருகின்றது. சில பிரதேசங்களில் மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மத்திய மலைநாட்டில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. …
-
- 0 replies
- 320 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிவாரண உதவி கோரும் பொலிஸார் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தென்பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை யாழ் மாவட்டத்தில் பொலிஸார் கோரிவருகின்றனர். தென்பகுதியில் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அம் மக்களுக்கு தந்து உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிணங்க பாதிக்கப்பட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை யாழ் பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்திலோ ஒப்படைக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். http://uthayandaily.co…
-
- 1 reply
- 486 views
-
-
சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் பேரின மதவாதம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இலங்கைத் தீவில் மாபெரும் இரத்தக்களறி ஏற்பட்டது என்றதால் அதற்கு இங்கு நிலவும் பேரின மதவாதமே காரணம் ஆகும். ஈழத் தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் கொன்றழிக்கப்பட்டார்கள் என்றார் அதற்கு பேரின மதவாதமே காரணம். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு என்ற கடும் வாதம் ஏற்பட்டதன் காரணமாகவே ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய அனுபவங்களின் பின்னரும் இலங்கையில் பேரினவாத மதவாதம் இன்னும் உயிர்ப்புடன் இருந்து சிறுபான்மை இனங்களை எச்சரிக்கின்றது என்பதே அதிர்ச்சிகரமானது. தமிழ் பேசு…
-
- 0 replies
- 280 views
-
-
வடக்கு மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் புலம்பெயர் சமூகங்கள் வட மாகாணத்தில் பின் தாங்கி வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த, அதிகளவான புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் தற்போது முன்வந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தற்போது இவ்வாறான செயற் திட்டங்களுக்கு முழு பங்களிப்பினையும் அரசாங்கம் வழங்கியுள்ளதை தாம் வரவேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=91860
-
- 1 reply
- 213 views
-
-
சர்வதேசம் உதவி மோசமான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ, ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்தால் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமையவே, மேற்படி நாடுகளும் அமைப்புகளும், உதவ முன்வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவுத் திட்டம், ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசெப்) மற்றும் ஐ.நா சர்வதேச நிதியம் ஆகியன, இலங்கைக்கான நிவாரணங்களை வழங்கவும் தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உணவுகளை…
-
- 0 replies
- 493 views
-
-
அனர்த்த அவலம் தொடரும்? “வங்காள விரிகுடா கடற் பகுதியில் நிலவும் தாழமுக்கம், பங்களாதேஷ் நோக்கிப் பயணிக்கும் நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றம் ஏற்பட்டால், இன்றும் நாளையும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் வடமேல் மாகாணத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி, அங்கு பதிவாகக்கூடிய சாத்தியம் உள்ளது என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது. “மேலும், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதால், களுத்துறை மாவட்ட மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், கடற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழ்வோர், அவத…
-
- 0 replies
- 278 views
-
-
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வ…
-
- 0 replies
- 409 views
-
-
யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்! அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவுக்குமிடையில் சூடான விவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளி…
-
- 6 replies
- 651 views
-
-
Views - 13 இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும். இந்த நாட்டிலுள்ள தம…
-
- 11 replies
- 1.5k views
-
-
மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலி நெலுவ பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். http:…
-
- 5 replies
- 503 views
-
-
‘கலவரத்தை ஏற்படுத்துவேன்’ நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (28) தெரிவித்தார். மேலும், “இம்முறை சிறைக்குச் செல்லும்போது, விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே செல்வேன்” எனவும் தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்…
-
- 1 reply
- 454 views
-
-
சக்தி டிவி செய்திகள் 28th May 2017, 8PM
-
- 0 replies
- 234 views
-
-
குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளின் வலையில் சிக்கினார் கோட்டா வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேரடியாக ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான ஆதாரங்களை, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவம், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது, கோட்டாபய ராஜபக்ஷ, தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர்களின் தகவல்கள் மற்றும் குறித்த அழைப்புகள் தொடர்பில், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடி…
-
- 0 replies
- 392 views
-
-
இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 109 ஆயிரத்து 773 குடுமபங்களை சேர்ந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 68 பேர்வரையில் பாதிப்புற்றுள்ளதாகவும், 49 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் சீற்றத்தினால் இதுவரை 14 மாவட்டங்களில் மண்சரிவு ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவரான இந்திரஜித் குமாரIndrajith Kumaraவினால் மே 18 நினைவுநாளை ஒட்டி எழுதப்பட்ட சிங்கள பதிவு ஒன்றின் தமிழாக்கம் “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது, தமிழ் இன அழிப்பு நாள் மே 18″ இவ்வாறே தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் மலர் ஒன்று இருக்கிறதே, அதுதான் ஈழ இராச்சியத்தின் தேசிய மலர், அந்த சிகப்பு, மஞ்சள் நிறமே அவர்களி்ன் கொடியின் வர்ணம். இதைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வருகிறதா? மீண்டும் யுத்தம் புரிய தோன்றுகிறதா? ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை. பெரிய ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்களை நினைத்து அல்ல, எம்மவர்களை (சிங்களவர்களை) நினைத்து. நாங்கள…
-
- 1 reply
- 725 views
-
-
ஈழ அகதிகளின் முகாம்களைக் கண்காணிக்க உத்தரவு! தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளின் முகாம்களில் ஆயுததாரிகள் தங்கியிருந்து நாசகார செயல்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில், அங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது 1 இலட்சத்து 50ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்களில் இதுவரை 30ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு, ஈழ அகதிகள் முகாம்களை கண்காணிப்பதற்கு இரகசிய உத்தரவு விடுத்துள்ளது. அனைத்து மாவட்ட பொலிஸ் அலுவலகத்திலும் இதற்கென ஒரு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் முகாம்களிலுள்ள ஈழ அகதிகள் குறித்த விவரங்கள…
-
- 0 replies
- 441 views
-
-
‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’ -எஸ்.நிதர்ஷன் நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்த…
-
- 2 replies
- 592 views
-
-
நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்க இந்தியா முன் வந்துள்ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதை உடனடியாக இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் படி நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தி…
-
- 7 replies
- 445 views
-
-
இரகசியமாக நகர்த்தப்படும் மஹிந்தவின் இந்திய விஜயம் லியோ நிரோஷ தர்ஷன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவின் இந்திய விஜயம் மிகவும் இரகசியமான முறையில் நகர்த்தப்படுகின்றது. விரிவான கலந்துரையா டல்களை நடத்துவதற்கு புதுடில்லிக்கு வருமாறு மஹிந்த ராஜபக் ஷ வுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது அழைப்பு விடுத்ததாக தெரியவருகிறது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். மூடிய அறைக்குள் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து கலந்துரையாடப்படவில்லை. இது மிகவும் சிநேகபூர்வமானதும் சுமுகமான…
-
- 2 replies
- 338 views
-
-
கிளிநொச்சியில் செவ்வாயன்று அனைத்து மதவழிபாடுகள் அனைவரையும் பங்கேற்குமாறு காணாமற்போனோரின் உறவுகள் அழைப்பு “வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான நாளைமறுதினம் கிளிநொச்சி கந்தசுாவமி ஆலய முன்றலில் அனைத்துமத வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழிபாடுகளில் அனைத்து மாவட்டங்களின் உறவுகளும் கலந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்…
-
- 0 replies
- 150 views
-
-
மட்டக்களப்பில் 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிப்பு -ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தற்போது வீசி வரும் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ், இன்று தெரிவித்தார். கடற்றொழிலில் ஈடுபடும் 14,000 மீனவக் குடும்பங்களும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் 11,000 மீனவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். கடும் காற்றும் மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக இம்மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 247 views
-
-
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர பஞ்சாயத்து நடத்தக் கூடாது “உண்மைகளை மறைத்துத் தவறான செய்திகளை வழங்குவதன் மூலம் தாம் நினைத்தவற்றை சாதித்துவிடலாம் எனச் சிலர் எண்ணியுள்ளார்கள். அவர்களுக்கு சகாயம் வழங்க பத்திரிகைகளும் இணையத்தளங்களும் முன்னிற்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தவறானவை. அவை ஒருவித பலாத்காரமே. கருத்துக்களுக்குக் கருத்துக்களே முன்வைக்கப்பட வேண்டுமே தவிர, கட்டைப் பஞ்சாயத்து முறைகள் அல்ல” இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இயக்கங்கள் இயங்கிய போது பலாத்காரமே கருவியாகப் பாவிக்கப்பட்டது. இராணுவம…
-
- 1 reply
- 341 views
-