Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திரா காந்தியும், எம்.ஜீ.ஆரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் –கே.பி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தியும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜீ.ராமசந்திரனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான றோவிற்கு இந்திரா காந்தி பணித்திருந்தார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜீ.ஆர் நிதி உதவிகளை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை…

    • 3 replies
    • 591 views
  2. புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த…

  3. கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபசார நிலையமொன்று பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த விபசார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவ…

    • 14 replies
    • 1.3k views
  4. சிறுபான்மையை மிரட்டும் சுவரொட்டிகள் பதுளையில் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்­தும் வகை­யி­லான சுவ­ரொட்­டி­கள் நேற்­றுக் காலை பதுளை மாந­கர் பகு­தி­யில் ஒட்­டப்­பட்­டுள்­ளன. சிங்­க­ள­வர்­க­ளின் பொறு­மை­யைச் சோதிக்­காதே (சிங்­க­ள­யாகே இவ­சீம பரீக்சா நொக­ரனு) என்ற வாக்­கி­யங்­கள் எழு­தப்­பட்ட இரு சுவ­ரொட்டி ­களே இவ்­வாறு ஒட்­டப்­பட்­டி­ருந்­தன. பதுளை முத்தி ­யங்­கனை ரஜ­மஹா விகா­ரை­யின் பின்­னால் செல்­லும் பிர­தான பாதை மதி­லி­லேயே இந்­தச் சுவ­ரொட்­டி­ க­ள் ஒட்­டப்­பட்­டுள்­ளன. இந்­தச் செயற்­பாடு அங்­குள்ள சிறு­பான்மை மக்­களை அச்­சத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. http://uthayandaily.com/story/3961.html

  5. வெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு இனவாதம் பேசுவதாக ஞானசார தேரருக்கு எதிராக மாத்திரம் சட்டநடவடிக்கை எடுக்காமல் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக சட்டநவடடிக்கை எடுக்க கோரியும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது என எச்சரிக்கை விடுத்து பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடக்கு மற்றும…

  6. சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளுக்கு முதன்மை எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், தமிழ் முற்­போக் குக் கூட்­டணி ஆகி­யன நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கடும் கண்­ட­னம் வெளி­யிட்­டன. அத்­து­டன் இன­வா­தத்­தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின. சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக…

  7. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உச்சம் தமிழ், முஸ்லிம் கடைகள் இரத்தினபுரியில் தீக்கிரை சிறு­பான்­மை­யி­னர் மீதான அச்­சு­றுத்­தல்­கள், அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வணக்­கத் தலங்­கள் மற்­றும் வர்த்­தக நிறு­வ­னங்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தும் சம்­ப­வங்­கள் தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தின் கஹ­வத்­தைப் பிர­தே­சத்­தில் தமிழ் மற்­றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் நேற்று அதிகாலை தீயில் எரிந்து சாம்பராகி யுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான 11 தாக்குதல் சம்பவங்கள் கடந்த 10 தினங்களுக்குள் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் …

  8. தீர்வைப் பெற முடியாத த.தே.கூ; சுமந்திரனின் செயலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் யாழ். வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், …

    • 0 replies
    • 859 views
  9. பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்த சிறப்புத் திட்டம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் பொறுப்புக் கூறும் வகையில் நட­வ­டிக்கை அமைச்­ச­ர­வையில் மனோ கணேசன், ரிஷாத், ரவூப் ஹக்­கீமும் கடும் அதி­ருப்தி (எம்.எப்.எம்.பஸீர்) முஸ்­லிம்­களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்­க­ளது வர்த்­தக நிலை­யங்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களும் தீ வைப்புச் சம்­ப­வங்­களும் இடம்­பெற்று வரும் நிலையில் அவ்­வா­றான சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியும் தங்­களின் ப…

  10. இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரணில் வேண்டுகோள்: பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களின் எதிரொலி? இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைய தினங்களில் நாட்டின் சில பகுதிகளில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் விக்ரமசிங்க சிலர் மீண்டும் நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்க முடியாதென்…

  11. பிரபாகரனை விடவும் ரணில் ஆபத்தானவர் – ஞானசார தேரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஓர் வஞ்சகமான நரி என பிரபாகரன் கூறியிருந்தார் எனவும் அதன் அர்த்தம் தற்போது புரிகின்றது எனவும் அதனை விடவும் ரணில் மோசமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 70, 71, 88 மற்றும் 89ம் ஆண்டு பாரிய மனித கூட்டுப் படுகொலைகளுடன் ரணிலுக்கு தொடர்பு உண்டு என அவர் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையே, ரணிலின் இலங்கை மக்கள் மீ…

    • 3 replies
    • 899 views
  12. கடந்த சில நாட்களாக இலங்கையில் மதத்தின் பேரால் காடையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு விடியல்களிலும் எந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது எத்தனை கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்கிற கவலைகளோடு விடிகின்றன . நாடு தீப்பற்றி எரிகிற போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நாட்டின் தலைவர்கள் ரோம் எரிகின்ற பொது பீடில் வாசித்த நீரோக்களை ஞாபகம் ஊட்டுகிறார்கள் . இலங்கையின் சட்டம் ஒழுங்கு ஆகியன கேள்விக்குறிகளாக்கப்பட்டுள்ளன . சில பௌத்த துறவிகள் மடங்களை விட்டு மடை திறந்த வெள்ளங்களாக சமூகத்துக்குள் ஊடுருவி சமூக ஒற்றுமையை சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிற நிலையில் பொலிஸாரின் கையால் ஆகாத தனம் கவலை அளிக்கிறது . 21 முஸ்லீம் அரசியல் வாதிகள் நாட்டின் பல்வேறு பட்ட தரப்பினரை தொட…

    • 1 reply
    • 640 views
  13. கன்பராவில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவினர், இன்று காலை, கன்பரா விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். இதன்போது ஜனாதிபதிக்கு, விசேட வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கன்பராவில்-ஜனாதிபதிக்கு-வரவேற்பு/46-197225

  14. வல்வெட்டித்துறையில் 51 கிலோ 725 கிராம் கஞ்சா மீட்பு வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தேவடி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் சுமார் 51 கிலோ 725 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸாரைக் கண்ட சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/

  15. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவலகள் தெரிவிக்கின்றன. நாட்டில் பயங்கரவாதம் கிடையாது என்ற காரணத்தினால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை என கூட…

  16. சம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது, அந்த அமர்வில் அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டி…

  17. எமில் காந்தனுக்கு எதிரான வழக்கு: ‘நகலை வழங்கத் தயார்’ Thipaan / 2017 மே 24 புதன்கிழமை, மு.ப. 05:53 Comments - 0 Views - 28 ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பால் கோரப்பட்ட ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளரூடாக வழங்கத் தயார் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடகொட, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (23) அறிவித்தார். 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதிவரை, ராடா (புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவரகம்) நிறுவனத்தில் அரச பணமான, 124 மில்லியன் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. …

  18. இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..! உங்களுடைய இரட்டை அர்த்தப் புகழ்ச்சி யானது எனக்கு அச்சமளிப்பதாக உள்ளது என மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப் பெருமவை பார்த்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது நிதி அமைச்சரிடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட கூட்டு எதிரணி ஆதரவு பாராளு மன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வினாவொன்றைத் தொடுத்திருந்தார். இச்சமயத்தில் நிதி மற்றும் ஊடக அமைச்சராக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர தனது ஆசனத்திலிருந்து எழுந்து, நான் நிதி அமைச்சைப்…

  19. ஞாசாரவின் விவகாரம் : அமைச்சரவையில் தெரிவித்த மனோ : தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு இன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இவ்விடயங்களை கொண்டு வந்த அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சுக்குள் அல்ல…

    • 2 replies
    • 311 views
  20. யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்கள் மூவருக்குத் தடை யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மோத­லில் ஈடு­பட்ட கலைப்­பீட மாண­வர்­கள் 3 பேருக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தி னுள் நுழை­வ­தற்கு தடை­வி­திக்­கப்பட்­டுள்­ள­தாக யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கலைப்­பீட மாண­வர்­க­ளுக்கு இடை­யில் நேற்றுச் சிறு மோதல் ஏற்­பட்­டது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக முத­லாம் வருட மாண வர்­களைப் பல்­க­லைக்­கழகத்­துக்­குள் வேட்­டி­யுட­னேயே வர­வேண்­டும் என மூத்த மாண­வர்­கள் அறிவு றுத்தியுள்ளனர். அதன்படி முதலாம் வருட மாண வர்களும் வேட்டியுடன் பல்கலைக் கழகத்துக்குள் வரு…

  21. சக்தி டிவி செய்திகள் 23th May 2017, 8PM

  22. நாவற்குழியில் விகாரை அமைப்பதற்குத் தடை! நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அதில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டடங்கள் கட்டுவதை உடன் நிறுத்துமாறு பிரதேசசபை குறிப்பிட்டுள்ளது. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் அண்மையில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. விகாரை அமைக்கப்பட்ட இடமானது சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசமாகையால், பிரதேச சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமல், சட்டவிரோதமாக கட்டிடம் அமைக்க முற்பட்டமையினால், உடனடியாக இப்பணியை இடைநிறுத்து…

    • 1 reply
    • 520 views
  23. மண்மேடு சரிந்துவிழுந்ததில் பலரை காணவில்லை மாவனெல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிலர் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும், இவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/top-story/மண்மேடு-சரிந்துவிழுந்ததில்-பலரை-காணவில்லை/150-197162

  24. மூதாட்டியை அச்சுறுத்தி 15 பவுண் நகை கொள்ளை உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஓடு பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 5 பேர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாம் கொண்டு சென்ற ர…

  25. பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இலங்கை எவருக்கும் பாதிப்பில்லையென வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலுக்கு இலங்கை தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலடைய பிரார்த்தனை செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிசினி கொலன்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மென்செஸ்டர் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளடன், 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. http://w…

    • 0 replies
    • 276 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.