ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! 27 Nov, 2025 | 05:45 PM இலங்கைக்கு வரும் விமானங்கள் அவசர வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முடியாவிட்டால் அவை இந்தியாவின் திருவனந்தபுரம் (Trivandrum) அல்லது கொச்சி (Cochin) விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அநுரா கருணாதிலக தெரிவித்தார். இலங்கைக்கு வரும் விமானங்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை ! | Virakesari.lk
-
- 0 replies
- 78 views
-
-
27 Nov, 2025 | 07:10 PM மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர். உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் | Virakesari.lk
-
- 1 reply
- 130 views
-
-
திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா 10 இலட்சம் ரூபாய் 27 Nov, 2025 | 03:58 PM அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231662
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து! ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது சபை விவாதத்தை ஆரம்பித்தார். https://athavannews.com/2025/1453961
-
- 5 replies
- 278 views
- 1 follower
-
-
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்! 27 Nov, 2025 | 11:54 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு 27 Nov, 2025 | 10:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/231582
-
-
- 26 replies
- 915 views
- 1 follower
-
-
பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன! Published By: Digital Desk 1 27 Nov, 2025 | 08:31 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், எதிர்வரும் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான …
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
27 Nov, 2025 | 11:48 AM அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று புதன்கிழமை (26) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை Nov 27, 2025 - 01:04 PM அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார். தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அற…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
26 Nov, 2025 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு …
-
- 1 reply
- 105 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!
-
- 0 replies
- 129 views
-
-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk
-
- 0 replies
- 79 views
-
-
26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk
-
- 0 replies
- 124 views
-
-
26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மே…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் கா…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன்…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த மு…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து! ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர்களை ஈர்த்த சிங்கள, முஸ்லீம் போராளிகளின் பெற்றோர்கள் கெளரவிக்கப்படவேண்டுமென மாவீரர் அறிவிழியின் தந்தையும், மூத்த போராளியுமான முத்துக்குமார் மனோகர் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அங்கு மேலும் கருத்துரைக்கையில், இலங்கையிலுள்ள நான்கு இனங்களைச் சேர்ந்த பேராளிகளும் மாவீரர்கள் ஆகியுள்ளனர். எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்தே இறுதி யுத்தம் வரை உறுதியுடன் போராடியுள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே! வருடாவருடம் இந்த விடயம் தொடர்பாக நான் வலிய…
-
-
- 8 replies
- 754 views
-
-
26 Nov, 2025 | 01:15 PM தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:55 AM இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த IMF பரிசீலனை! November 26, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு அடுத்தகட்ட ஒப்புதலுக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்த…
-
- 0 replies
- 97 views
-
-
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட ச…
-
-
- 1 reply
- 144 views
- 1 follower
-
-
யாழில் மாவீரர் வாரத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள்! மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸாரின் கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடினையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றுமாறும் வல்வ…
-
- 0 replies
- 83 views
-
-
அசாதாரண காலநிலை காரணமாக யாழில் 560 பேருக்கு பாதிப்பு! வடமாகாணத்தில் தற்போது நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக, 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர்முகாமைத்துவ பிரிவின்பிரதிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்னர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலைகாரணமாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சங்கானை பிரதேசசெயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள இடர் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஊர்காவற்றுறை பிரதே…
-
- 0 replies
- 62 views
-
-
தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர…
-
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-