ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143376 topics in this forum
-
பிரபாகரனை விடவும் ரணில் ஆபத்தானவர் – ஞானசார தேரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஓர் வஞ்சகமான நரி என பிரபாகரன் கூறியிருந்தார் எனவும் அதன் அர்த்தம் தற்போது புரிகின்றது எனவும் அதனை விடவும் ரணில் மோசமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 70, 71, 88 மற்றும் 89ம் ஆண்டு பாரிய மனித கூட்டுப் படுகொலைகளுடன் ரணிலுக்கு தொடர்பு உண்டு என அவர் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையே, ரணிலின் இலங்கை மக்கள் மீ…
-
- 3 replies
- 900 views
-
-
கடந்த சில நாட்களாக இலங்கையில் மதத்தின் பேரால் காடையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு விடியல்களிலும் எந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது எத்தனை கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்கிற கவலைகளோடு விடிகின்றன . நாடு தீப்பற்றி எரிகிற போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நாட்டின் தலைவர்கள் ரோம் எரிகின்ற பொது பீடில் வாசித்த நீரோக்களை ஞாபகம் ஊட்டுகிறார்கள் . இலங்கையின் சட்டம் ஒழுங்கு ஆகியன கேள்விக்குறிகளாக்கப்பட்டுள்ளன . சில பௌத்த துறவிகள் மடங்களை விட்டு மடை திறந்த வெள்ளங்களாக சமூகத்துக்குள் ஊடுருவி சமூக ஒற்றுமையை சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிற நிலையில் பொலிஸாரின் கையால் ஆகாத தனம் கவலை அளிக்கிறது . 21 முஸ்லீம் அரசியல் வாதிகள் நாட்டின் பல்வேறு பட்ட தரப்பினரை தொட…
-
- 1 reply
- 641 views
-
-
கன்பராவில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவினர், இன்று காலை, கன்பரா விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். இதன்போது ஜனாதிபதிக்கு, விசேட வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கன்பராவில்-ஜனாதிபதிக்கு-வரவேற்பு/46-197225
-
- 0 replies
- 154 views
-
-
வல்வெட்டித்துறையில் 51 கிலோ 725 கிராம் கஞ்சா மீட்பு வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தேவடி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் சுமார் 51 கிலோ 725 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸாரைக் கண்ட சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://uthayandaily.com/
-
- 0 replies
- 201 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவலகள் தெரிவிக்கின்றன. நாட்டில் பயங்கரவாதம் கிடையாது என்ற காரணத்தினால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை என கூட…
-
- 0 replies
- 161 views
-
-
சம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது, அந்த அமர்வில் அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டி…
-
- 0 replies
- 418 views
-
-
எமில் காந்தனுக்கு எதிரான வழக்கு: ‘நகலை வழங்கத் தயார்’ Thipaan / 2017 மே 24 புதன்கிழமை, மு.ப. 05:53 Comments - 0 Views - 28 ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பால் கோரப்பட்ட ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளரூடாக வழங்கத் தயார் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடகொட, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (23) அறிவித்தார். 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதிவரை, ராடா (புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவரகம்) நிறுவனத்தில் அரச பணமான, 124 மில்லியன் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. …
-
- 0 replies
- 346 views
-
-
இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..! உங்களுடைய இரட்டை அர்த்தப் புகழ்ச்சி யானது எனக்கு அச்சமளிப்பதாக உள்ளது என மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப் பெருமவை பார்த்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது நிதி அமைச்சரிடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட கூட்டு எதிரணி ஆதரவு பாராளு மன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வினாவொன்றைத் தொடுத்திருந்தார். இச்சமயத்தில் நிதி மற்றும் ஊடக அமைச்சராக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர தனது ஆசனத்திலிருந்து எழுந்து, நான் நிதி அமைச்சைப்…
-
- 0 replies
- 236 views
-
-
ஞாசாரவின் விவகாரம் : அமைச்சரவையில் தெரிவித்த மனோ : தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு இன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இவ்விடயங்களை கொண்டு வந்த அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சுக்குள் அல்ல…
-
- 2 replies
- 312 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்கள் மூவருக்குத் தடை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் 3 பேருக்குப் பல்கலைக்கழகத்தி னுள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றுச் சிறு மோதல் ஏற்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதலாம் வருட மாண வர்களைப் பல்கலைக்கழகத்துக்குள் வேட்டியுடனேயே வரவேண்டும் என மூத்த மாணவர்கள் அறிவு றுத்தியுள்ளனர். அதன்படி முதலாம் வருட மாண வர்களும் வேட்டியுடன் பல்கலைக் கழகத்துக்குள் வரு…
-
- 1 reply
- 360 views
-
-
சக்தி டிவி செய்திகள் 23th May 2017, 8PM
-
- 0 replies
- 194 views
-
-
நாவற்குழியில் விகாரை அமைப்பதற்குத் தடை! நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. அதில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டடங்கள் கட்டுவதை உடன் நிறுத்துமாறு பிரதேசசபை குறிப்பிட்டுள்ளது. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தில் அண்மையில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. விகாரை அமைக்கப்பட்ட இடமானது சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசமாகையால், பிரதேச சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமல், சட்டவிரோதமாக கட்டிடம் அமைக்க முற்பட்டமையினால், உடனடியாக இப்பணியை இடைநிறுத்து…
-
- 1 reply
- 521 views
-
-
மண்மேடு சரிந்துவிழுந்ததில் பலரை காணவில்லை மாவனெல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிலர் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும், இவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.tamilmirror.lk/top-story/மண்மேடு-சரிந்துவிழுந்ததில்-பலரை-காணவில்லை/150-197162
-
- 0 replies
- 255 views
-
-
மூதாட்டியை அச்சுறுத்தி 15 பவுண் நகை கொள்ளை உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஓடு பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் 5 பேர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாம் கொண்டு சென்ற ர…
-
- 0 replies
- 225 views
-
-
பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இலங்கை எவருக்கும் பாதிப்பில்லையென வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலுக்கு இலங்கை தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலடைய பிரார்த்தனை செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிசினி கொலன்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மென்செஸ்டர் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளடன், 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. http://w…
-
- 0 replies
- 277 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் -எஸ்.நிதர்ஷன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதென, ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. யாழ். நகரில், ஞாயிற்றுக்கிழமையன்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன கலந்துகொண்டிருந்தன. இதன்போது, பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் ந…
-
- 0 replies
- 186 views
-
-
கேரள கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது! வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இராணுவ வீரரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20237
-
- 0 replies
- 277 views
-
-
இடைக்கால அறிக்கை வரைபு வெளியீடு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படுமா? (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுக் கூட்டம் இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த மூன்றாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியிருந்த வழிநடத்தல் குழுக்கூட்டத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கலந்துரையாடப்பட்டு கொள்கையளவில் இணக்கப்பாட்டை எட்டிய விடயங்கள் மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகளில் முன்மொழியப்பட்ட விடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையின் வரைபு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் 21 உறுப்பினர்களிடத்திலும் …
-
- 0 replies
- 267 views
-
-
அமைச்சர் மனோவுக்கு தூதுவிட்ட ஞானசாரர் தனது கைதைத் தடுப்பதற்காக தான் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்காகப் பொது பல சேனாவின் பொதுச் செய லாளர் அத்தே ஞானசார தேரர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் தூது சென்றுள்ளார் மாகாண முதலமைச்சர் ஒருவர். தேரரைக் கைது செய்யுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்த வேண்டாமென குறித்த முதலமைச்சர் தன்னிடம் கேட்டார் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி யின் தலைவரும் தேசிய கலந்துரையா டல், சகவாழ்வு மற் றும் அரசகரும மொழி கள் அமைச்சருமான மனோ கணேசன் நேற்றுத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மையக் குழ…
-
- 0 replies
- 357 views
-
-
9 வருடங்கள் தடுப்பிலிருந்த அரசியல் கைதி விடுதலை சிறப்பு நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கடந்த 9 வருடங்களாகத் தடுத்து வைக் கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை வழங்கியது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக சட்டமா அதிபரால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நிராகரித்தார். ஜப்பான் அரசால் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தொட்டலங்க பாலத்துக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கத் திட்டம் தீட்டினார் என்று முதல் குற்றச்சாட்டும், …
-
- 0 replies
- 198 views
-
-
இன்று இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் இனவாத தாக்குதல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மூலவேர் எது என்று நாம் சிந்திக்க துவங்கினோமானால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான் என்பதை புரிந்து கொள்ளமுடியும். அதற்கு இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலைபற்றியும் கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கவேண்டும் அப்போதுதான் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். இன்று தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை அங்கே ஒருகோடிக்குமேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் சட்டசபைக்கு முஸ்லிம்கள் தரப்பாக யாரும் சட்டசபை உறுப்பினராகவோ அமைச்சராகவோ கோலோச்சிய வரலாறுகளை காணமுடியவில்லை, அதனால் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அபிவிருத்தியிலும் உரிமையிலும் நாங்கள் பி…
-
- 1 reply
- 553 views
-
-
வடக்கின் முதலமைச்சர் களத்தில் இறங்க வேண்டும் தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கின்ற அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ் மக்களின் மிக இக்கட்டான சூழ்நிலையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வந்திருந்தாராயினும் அவர் தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் எந்தவிதமான உறுதி மொழிகளையோ அல்லது இலங்கை அரசுக்கான அழுத்தத்தையோ கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நாங்களும் பிரதமர் மோடியைச் சந்தித்தோம் என்ற ஒரு பதிவைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இந்தியப் பிரதமருக்குமான சந்திப்பு எந்த வகையி…
-
- 0 replies
- 565 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22th May 2017, 8PM
-
- 0 replies
- 232 views
-
-
மிகச் சிறந்த நிதி அமைச்சரை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கேள்வி மிகச் சிறந்த நிதி அமைச்சரவை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்கவை ஏன் மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் டலஸ் அழப்பெரும இந்தக் கேள்விளை எழுப்பியுள்ளார். மிகச் சிறந்த நிதி அமைச்சரை அரசாங்கம் ஏன் மாற்றியது என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/27679
-
- 0 replies
- 331 views
-
-
ஜனாதிபதியின் கருத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளோம் – ச.சஜீவன் ஜனாதிபதிக்கு எதிராக யாழில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் இராணுவத்தினர் பல ஆயிர கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து நிலை கொண்டுள்ளனர். அதனால் மக்கள் தமது சொந்த காணிகளை இழந்து நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. தற்போது காணி வேண்டி போராடுபவர்கள் மேலதிக காணி வேண்டியே போராடுகின்றார்கள். என திருகோணமலையில் நடை…
-
- 0 replies
- 421 views
-