Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை : உறவினர்கள் குற்றச்சாட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி 75 நாளை எட்டியுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 75 நாட்களாக இரவு பகலாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது எங்களால் தெரவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் மஹிந்த வந்துவிடுவார் என்றும், அரசு பதில…

  2. கொழும்பில் விசேட போக்குவரத்து விதிகள் : இலகு ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டம் கொழும்பு மாந­கரில் ஏற்­பட்­டி­ருக்கும் போக்­கு­ரத்து நெரி­சலை கட்­டுப்­ப­டுத்த விசேட திட்­டங்­களை அமுல்­ப­டுத்தி வரு­வ­தாக மாந­கர அபி­வி­ருத்திப் பிரதி அமைச்சர் லசந்த அழ­கி­ய­வண்ண தெரி­வித்தார். அத்­துடன் இலகு ரயில் சேவை மற்றும் மாற்­றுப்­பா­தை­களை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் லசந்த அழ­கி­ய­வண்ண சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக்க பத்­தி­ரன எம்.பி. எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல…

    • 2 replies
    • 566 views
  3. கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையிலான பிளவு வலுக்கிறது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான பிளவு வலுத்து வருகின்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ். மோதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. இதன் போது பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற் குழுக் கூட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எவினால், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய க…

    • 0 replies
    • 289 views
  4. காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணம், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. http://www.tamilwin.com/development/01/144559?ref=view-latest

    • 4 replies
    • 567 views
  5. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது உண்மையாகவே நாம் எதிர்பார்க்கக்கூடிய எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என அமைச்சர் மனோகணேசன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார். நான் இவ்வாறு உண்மைகளை சொல்லுவது சம்பந்தன் சுமந்திரனுக்கு பிடிப்பதில்லை சந்திரனை தருகிறோம்,இந்திரனை பிடித்து தருகிறோம் என த.தே.கூட்டமைப்பு பம்மாத்து காட்டிவருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள மனோ கணேசன் உண்மையாக தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கப்போகின்றது என்பது பற்றி தெளிவுபடுத்துவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உண்மையாகவே கடந்த கால அரசாங்கங்களால் முன்மொழியப்பட்ட அனைத்து தீர்வுகளையும் விட குறைந்த தீர்வைப்பற்றியே இப்போது பேசப்படுகிறது எனவும் த…

    • 4 replies
    • 809 views
  6. அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை – பசில் ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டும் நோக்கிலேயே 19ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். பசில் ராஜபக்ஸ அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருந்தால் அவரினால் இலங்கைத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. h…

    • 0 replies
    • 265 views
  7. இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று தனது 81வது வயதில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றி வந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றிய அவர் 1965இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக தனது அறிவிப்புத்துறையை ஆரம்பித்தார். 1969இல் நிரந்த அறிவிப்பாளரான அவர், தொடர்ந்து பல பதவிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வகித்திருக்கின்றார். இலங்கையில் செய…

  8. ‘யார் யாரென பட்டியல் இடுங்கள்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “இரட்டைப் பிரஜாவுரிமையுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்” என்று, ஜே.வி.பி எம்.பியான விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபரொருவர் எம்.பி. பதவிக்கு தெரிவாக முடியாது. ஆகையால், அந்த தகவல்களைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென கோரிநின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று( 04) இடம்பெற்ற கம்பனிகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிநின்றார். …

  9. ‘புலிக்கதை கூறி ‘நரி’ ஆதாயம் தேட முயற்சி’ நரியொன்று, புலிக்கதையை கூறி, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைத்து ஆயிரம் பொய்களைக் கூறினாலும், உண்மைகள் ஒருபோதும் வரலாற்றை மாற்றி எழுதப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அக்கட்சி, ஊடகங்களுக்கு நேற்று (04) விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம்…

  10. கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் இன்று வழங்கியுள்ளதென கிழக்குமாகாண முதலமைச்சரின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நீண்டகால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதெனவும் இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான முழுமையான முயற்சிகளையும் முன…

  11. கிளிநொச்சியில் முதலாம் ஆண்டு ஆசிரியை நடத்தும் அறுநூறு மாணவர்களை கொண்ட 1சி பாடசாலை கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும் கவலை தெரிவித்துள்ளனர். க.பொ.த உயர்தரத்தில் கலை வர்த்தக பிரிவுகளை கொண்ட பாடசாலையாக அறுநூறு மாணவர்களை கொண்டுள்ள பாடசாலையாக காணப்படுகின்ற முட்கொம்பன் பாடசாலை மீள் குடியேற்றத்தின் பின…

  12. சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கு ; பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை ரி.விரூஷன் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011.11.25 அன்று குற்றச்சாட்டு சம்பமொன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சித்திரவதை வழக்கில் ஆறு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கும் பத்தாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த வழக்கின் இறுதி தொகுப்புரைக்காக இன்றைய தினம் பிற்பகல் யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ் தீர்ப்பை வழங்கினார். இதன்படி …

  13. சக்தி டிவி செய்திகள் 4th May 2017, 8PM

  14. பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்க நீக்கம்! கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவரது காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியதாச கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/19662

  15. மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் 42பேர் நீக்கம் : சபையில் கடும் தர்க்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தருவாயில் அவரது பாதுகாப்பு பிரிவின் 42 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினேஷ் குணவர்தன சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த போது ஆளும் எதிர்த் தரப்பினரிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது. தர்க்கத்தின் முடிவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட கவனத்திற்கு கொண்டு வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதியளித்தார். பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை காலை 10…

  16. இலங்கை கடல் எல்லையின் பல்வேறு பகுதிகளில் தற்போது டொல்பின் மீன்களை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் திருகோணமலை கடலோரத்தில் விளையாடிய டொல்பின் மீன்கள் சில புகைப்படக் கருவியில் பதிவாகி உள்ளன. குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் இலங்கையின் சுற்றாடல் அழகை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இலங்கையில் கொட்டிக்கிடக்கும் அழகில் இவையும் ஒன்று என்றால் அது மிகையாகாது. இந்த டொல்பின் மீன்களுக்கு படகுகளில் சென்று உணவு வழங்குவதும் படங்களில் காணக்கூடியதாக உள்ளது. டொல்பின் மீன்கள் கடலில் துள்ளிக்குதிப்பதை பார்வையிடுவதற்கு பெரும்பாலான மக்கள் திருகோணமலைக்கு செல்கின்றனர். …

    • 0 replies
    • 431 views
  17. இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு - மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு - அவுஸ்திரேலியா இடையிலான ஒரே நேரடி விமான சேவையாக இது இரு…

  18. ஆனந்தபுரத்தில் தங்கப்புதையல் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேசிக்கப்படும் இரண்டு இடங்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ளதேவிபுரம் பகுதியில், நடனமிட்டமான் குளத்தில் அருகில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட இடம் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது எந்தவிதமான பொருட்க…

    • 0 replies
    • 623 views
  19. வடக்கின் எந்தவொரு கிராமத்துக்கு சென்றாலும் அங்கு படையினர் வீடுகளை, காணிகளை, கட்டிடங்களை அபகரித்து வைத்திருக்கின்றனர் என்று குறைபட்டுக்கொள்ளாத இடங்கள் இல்லை என்றும் இந்த நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறியும் உண்மை நிலை புரியவில்லையென தான் கருதுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கவலை தெரிவித்திருக்கிறார். முசலி பிரதேச சபையின் சிலாபத்துறை பொதுநூலகத் திறப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; முசலிப் பிரதேசசபையின் அலுவலக கட்டிடம் மற்றும் நூலகம் அமைந்துள்ள பிரதேசங்கள் தற்போது கடற்படையினரின் கைவசம் உள்ளதால் முசலிப் பிரதேசச…

    • 0 replies
    • 216 views
  20.  ‘131 விகாரைகள் வடக்கில் உள்ளன’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், தொல்பொருளியல் திணைக்களத்துக்கு உரிய விகாரைகள் 131 உள்ளன” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்றத்தில் நேற்று (03) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் -06, கிளிநொச்சியில்-03, முல்லைத்தீவில்- 67,மன்னாரில்-20, மற்றும் வவுனியாவில் -35 என, மொத்தமாக 131 விகாரைகள், தொல்பொருளியல் திணைக்களத்துக்குரிய விகாரைகள் ஆகும். …

    • 1 reply
    • 434 views
  21. முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்ய போகின்­றனர்? அவர்கள் பதில் வழங்­கு­வார்­களா என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விசேட வியா­பார பண்ட அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் ப…

    • 1 reply
    • 404 views
  22. ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தேவைக்காக அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையை மாற்றியவர்கள் இன்று ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் இந்தியாவிற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர். அனுமன் பாலத்தை அமைக்க அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்த விமல் வீரவன்ச இன்று மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்துவதாக கூறுவது வேடிக்கையானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மஹிந்த, பசில் ஆகியோர் விமல் வீரவன்சவின் கருத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.vi…

    • 1 reply
    • 405 views
  23.  'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்க…

    • 24 replies
    • 3.2k views
  24. காலி முகத் திடல் மே தினக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸவின் 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னதாக அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், மே தினக் கூட்டத்தின் வெற்றியினால் இவ்வாறு மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் …

    • 0 replies
    • 293 views
  25. யுத்தத்தினால் தமது சொத்துக்களையும், வீடுகளையும் இழந்து தவித்து வந்த பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பள்ளித்திடல், பங்குராணை பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.பஸீர் அஹமட் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இராhஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பின்வர…

    • 0 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.