ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
இலங்கை கடல் எல்லையின் பல்வேறு பகுதிகளில் தற்போது டொல்பின் மீன்களை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் திருகோணமலை கடலோரத்தில் விளையாடிய டொல்பின் மீன்கள் சில புகைப்படக் கருவியில் பதிவாகி உள்ளன. குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் இலங்கையின் சுற்றாடல் அழகை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இலங்கையில் கொட்டிக்கிடக்கும் அழகில் இவையும் ஒன்று என்றால் அது மிகையாகாது. இந்த டொல்பின் மீன்களுக்கு படகுகளில் சென்று உணவு வழங்குவதும் படங்களில் காணக்கூடியதாக உள்ளது. டொல்பின் மீன்கள் கடலில் துள்ளிக்குதிப்பதை பார்வையிடுவதற்கு பெரும்பாலான மக்கள் திருகோணமலைக்கு செல்கின்றனர். …
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கையர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கொழும்பு - மெல்போர்ன் இடையிலான விமான சேவைகளை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கவிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போன் ஆகிய நகரங்களுக்கும் இலங்கைக்குமான விமான சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்பட்ட சேவைகளை மீளத் தொடங்க இரு நாடுகளும் இணங்கியிருப்பதாகவும், இதன்படி ஏ330 எயார்பஸ் ரக விமானம் மூலமான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், கொழும்பு - அவுஸ்திரேலியா இடையிலான ஒரே நேரடி விமான சேவையாக இது இரு…
-
- 1 reply
- 369 views
-
-
ஆனந்தபுரத்தில் தங்கப்புதையல் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேசிக்கப்படும் இரண்டு இடங்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ளதேவிபுரம் பகுதியில், நடனமிட்டமான் குளத்தில் அருகில் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட இடம் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது எந்தவிதமான பொருட்க…
-
- 0 replies
- 625 views
-
-
வடக்கின் எந்தவொரு கிராமத்துக்கு சென்றாலும் அங்கு படையினர் வீடுகளை, காணிகளை, கட்டிடங்களை அபகரித்து வைத்திருக்கின்றனர் என்று குறைபட்டுக்கொள்ளாத இடங்கள் இல்லை என்றும் இந்த நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறியும் உண்மை நிலை புரியவில்லையென தான் கருதுவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கவலை தெரிவித்திருக்கிறார். முசலி பிரதேச சபையின் சிலாபத்துறை பொதுநூலகத் திறப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; முசலிப் பிரதேசசபையின் அலுவலக கட்டிடம் மற்றும் நூலகம் அமைந்துள்ள பிரதேசங்கள் தற்போது கடற்படையினரின் கைவசம் உள்ளதால் முசலிப் பிரதேசச…
-
- 0 replies
- 217 views
-
-
‘131 விகாரைகள் வடக்கில் உள்ளன’ ஜே.ஏ.ஜோர்ஜ் “வடக்கில், தொல்பொருளியல் திணைக்களத்துக்கு உரிய விகாரைகள் 131 உள்ளன” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்றத்தில் நேற்று (03) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பியான புத்திக பத்திரண கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் -06, கிளிநொச்சியில்-03, முல்லைத்தீவில்- 67,மன்னாரில்-20, மற்றும் வவுனியாவில் -35 என, மொத்தமாக 131 விகாரைகள், தொல்பொருளியல் திணைக்களத்துக்குரிய விகாரைகள் ஆகும். …
-
- 1 reply
- 434 views
-
-
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோன்பு நோற்கும் மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்ய போகின்றனர்? அவர்கள் பதில் வழங்குவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் ப…
-
- 1 reply
- 405 views
-
-
ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தேவைக்காக அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையை மாற்றியவர்கள் இன்று ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் இந்தியாவிற்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர். அனுமன் பாலத்தை அமைக்க அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்த விமல் வீரவன்ச இன்று மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்துவதாக கூறுவது வேடிக்கையானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மஹிந்த, பசில் ஆகியோர் விமல் வீரவன்சவின் கருத்தை ஏற்றுகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.vi…
-
- 1 reply
- 407 views
-
-
'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்க…
-
- 24 replies
- 3.2k views
-
-
காலி முகத் திடல் மே தினக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸவின் 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 42 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னதாக அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், மே தினக் கூட்டத்தின் வெற்றியினால் இவ்வாறு மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் …
-
- 0 replies
- 294 views
-
-
யுத்தத்தினால் தமது சொத்துக்களையும், வீடுகளையும் இழந்து தவித்து வந்த பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் பள்ளித்திடல், பங்குராணை பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டமொன்றை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.பஸீர் அஹமட் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இராhஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பின்வர…
-
- 0 replies
- 345 views
-
-
. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அதனை விடுவிக்க தீர்மானித்தோம்’ என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான விடையளிக்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் போது அவர்களுடைய படகுகளை கைப்பற்றும் செயற்பாடு வழமையான ஒன்றாகும். எனினும் இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைய இந்த படகுகள் கடந்த ஆட்சிவரை வி…
-
- 0 replies
- 295 views
-
-
ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி l ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் சந்திப்பிலேயே மேற்குறித்த விடையம் தொடர்பில் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள். சபையானது மாகாண அரசுடன் பேச்…
-
- 3 replies
- 607 views
-
-
சக்தி டிவி செய்திகள் 3r May 2017, 8PM
-
- 0 replies
- 211 views
-
-
அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட மாகாணசபை தவறவிட்டுள்ளது : தவராசா வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9 ஆவது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட…
-
- 1 reply
- 521 views
-
-
‘ஈரோஸை தாரை வார்க்கவில்லை’ எம்.எஸ்.எம்.நூர்தீன் ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணிக் கட்சியை யாருக்கும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. ஈரோஸ் கட்சிக்கு தெருவழிப் போக்கர்கள் ஒரு நாளும் சொந்தம் கொண்டாட முடியாது என அக்கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். ஆரையம்பதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ஈரோஸ் கட்சி பல தமிழ் இளைஞர்களின் தியாகத்தினால் உருவாகி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சியின் செயலாளர் பதவியில் நானே இருக்கின்றேன். வேறு எவராவது இந்தக் கட்சிக்கு செயலாளர் பதவியை…
-
- 0 replies
- 355 views
-
-
பொய்களைப் பரப்பி, நாட்டு மக்களை குழப்ப வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில், நாடு இப்போது இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் மகிந்த ராஜபக்சவே என நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன். ஆனால் மே தினக் கூட்டங்களிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் மகிந்த, பொய்களைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றார். நாட்டின் கடன்களைப் பற்றியும் அபிவிருத்தி பற்றியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார். கடந்த கால ஆட்சியில் மொத்தமாக 10400 பில்லியன் கடன்களாக பெறப்பட்டுள்ளன. இந்த கடன்களுடனேய…
-
- 0 replies
- 357 views
-
-
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாட்டை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அரசாங்க மருத்துவ சம்மேளனம், ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய நாளில் தாம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை நடத்தப்போவதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. தமது தரப்பு இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என்றும் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இன்று செய்தியாளர் சந்திப்பில் கோரியுள்ளார். தமது போராட்டத்தின்போது பல்வேறு துறைசார்ந்த 160 தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/community/01/14…
-
- 0 replies
- 250 views
-
-
மேதினக் கூட்டு நிகழ்வும் வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட்டமும் யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேதினக் கூட்டு நிகழ்வினையும், வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட் டத்தினையும் படங்களில் காணலாம். 1 https://globaltamilnews.net/archives/25682
-
- 1 reply
- 323 views
-
-
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் கொலைகள் இடம்பெற்றுள்ளன : பிரதான சந்தேக நபர் கடல் மார்க்கமாக தப்பியிருக்கலாம் : சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் கடத்தப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கன்சைட் சித்திர வதைக் கூடத்தில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே இந்த கடத்தல் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோருக்கு எதிரான விசாரணைகள் முன…
-
- 0 replies
- 182 views
-
-
யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்! படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச ஊடக சுதந்திர நாளான இன்று யாழ். நகரில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், பன்னாட்டு ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்கு …
-
- 0 replies
- 241 views
-
-
அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு…
-
- 0 replies
- 125 views
-
-
மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேத…
-
- 16 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஒரு தொகுதி தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த தமிழ் கனேடிய தமிழ் வர்த்தகர்களே சக வர்த்தகர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அவர்கள் இரண்டாம் தலைமுறையினர் யுத்தத்தில் ஈடுபடுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/25739
-
- 1 reply
- 324 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக மீண்டும் கடமையில் அமர்த்தும் திட்டமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு பொறுப்பாக சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். நாட்டில் விசேட இராணுவப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வாரம் அமைச்சரவையில் குப்பை பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், சரத் பொன்சேகா பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் பொறுப்பினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அண்மையில் ச…
-
- 0 replies
- 226 views
-