ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
இராணுவத்திடம் என் தென்னைகள் நான் தண்ணீரிலேயே கறி சமைக்கின்றேன் - தன் அவல நிலையை எடுத்து விளக்குகிறார் கேப்பாபிலவு மூதாட்டி எனது தோட்டத்தில் தேங்காய் குவியலாகக் கிடப்பதாக நேற்று முன்தினம் கிராமத் துக்குள் சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தண்ணீரில் கறி வைத்தே நானும் கணவரும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறோம் எனக் கேப்பாபிலவில் இராணுவத்திடம் தனது 3 ஏக்கர் தென்னம் காணியைப் பறி கொடுத்த 72 வயதுடைய கணபதிப்பிள்ளை மனோன்மணி கவலையுடன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, போர்க் காலத்தில் எனது மூன்று பிள்ளைகளையும் இழந்து இன்று நானும் கணவரும் தனியாக வாழ்ந்து வருகின்றோம். 20 பேர்ச் காணியில் ஒன்றுமே செய்ய முடியாது. தினமும் செ…
-
- 0 replies
- 269 views
-
-
5,000 ஏக்கர் தனியார் காணிகள் குடாநாட்டில் படையினர் வசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும், முப்படையினர் வசம் 5 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 640 ஏக்கரும், பொலிஸார் வசம் 25 ஏக்கரும், கடற்படையினர் வசம் 800 ஏக்கரும், வான் படையினரின் கட்டுப்பாட்டில் 540 ஏக்கரும் உள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செ…
-
- 0 replies
- 291 views
-
-
யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள 2 இராணுவ முகாம்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அந்த இடங்களிலிருந்து இராணுவம் நகர்த்தவுள்ளதாக அறியமுடிகிறது. போர்க் காலத்தில் யாழ்ப்பாண மாநகரில் பல்வேறு இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போரின் பின்னர் படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன.எனினும் சில முகாம்கள் இன்றுவரை அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன. 2 இராணுவ முகாங்களும் வேறு இடத்துக்கு நகர்த்தப்படவுள்ளன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியும் அவற்றில் அடங்குகின்றது. அதனை சிறுவர் வைத்தியசாலையை அமைக்க மீளளிக…
-
- 0 replies
- 268 views
-
-
பண்டாரவன்னியனின் சிலை திறப்பு... -சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை, வியாழக்கிழமை (20) முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
26 வயது யுவதி செய்த காரியம் : கைதுசெய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார் (எம்.எப்.எம்.பஸீர்) பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கையடக்கத் தொலைபேசிகளை மொத்தமாக கொள்வனவுச் செய்து, அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலைகளை விலையாக செலுத்திய இளம் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இலக்கம் 141, பண்டாரநாயக்க புர. மல்கடுவாவ குருணாகல் மற்றும் 2 ? ஏ 12, பிக்சிட்டி பில்வத்த யடியன ஆகிய முகவரிகளைக் கொண்ட 26 வயதான மு{ஹது கமகே மாரம்பகே லக்மாலி பிரியதர்ஷனி எனும் யுவதியையே இவ்வாறு தேடப்படுவதாகவும் அவர் தொடர்பில் தகவல் வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மினுவாங்கொட பிரதேசத்தில் இவ்வாறு மறுக்கப்பட்ட காசோலைகளை வழங்கி 32 இலட்சத…
-
- 11 replies
- 684 views
-
-
பயங்கரவாத செயற்பாடுகளால் இழந்த காணிகளை மீளப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது A பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக தமது காணிகளை இழந்த மக்கள், அவற்றை சட்டரீதியாக மீள பெற்றுக்கொள்வதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, காணிகளை இழந்தவர்கள் அதனை மீளப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி…
-
- 0 replies
- 184 views
-
-
-
- 0 replies
- 423 views
-
-
195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட வவுனியா பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில் பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம…
-
- 0 replies
- 420 views
-
-
போராட்டத்தைப் பலவீனப்படுத்த ரணில் சதி! - கேப்பாப்பிலவு மக்கள் விசனம் [Thursday 2017-04-20 17:00] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்துக்கு நாங்கள் பலிக்கடாவாக மாட்டோம் என, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர். படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்கள் நடத்தி வரும் போராட்டம் 51 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படுமெனவும் தகவல் வெளியானது. எனினும், “எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது. கோரிக்கை. அவ்…
-
- 0 replies
- 332 views
-
-
கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! - சுமந்திரன் [Thursday 2017-04-20 17:00] தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும். தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்க…
-
- 0 replies
- 358 views
-
-
தொம்பே பகுதியில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு : 15 பேர் கைது கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகம் அடக்கும் பொலிஸார் 15 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தற்போது காணப்படும் குப்பைகளின் அளவை விட 50 டொன் குப்பைகளை இங்கு சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதேச மக்கள் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவ…
-
- 0 replies
- 353 views
-
-
யாழ்தேவியில் மோதி ஒருவர் பலி நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா பொலிஸ் நிலையப்பிரிவில் உள்ள நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பண்டாரிக்குளம் வீதியைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர், ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், இன்று வியாழக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலுடன் மோதி, வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 310 views
-
-
வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கப்பம் கோரிய நான்காவது சந்தேகநபரும் கைது வீட்டில் வாளும் மீட்பு வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்திருந்தவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நான்காவது சந்தேக நபர் நாகர்கோவில் கிழக்கில் அவரது வீட் டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் எனப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்படும்போது அவருடைய வீட்டிலிருந்து வாளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரிடம், நாகர்கோவிலைச் சேர்ந்த 4 பேர் கப்பம் கோரியதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 29 ஆம…
-
- 17 replies
- 877 views
-
-
பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் டாஸ் நிறுவனத்தினரால் நேற்று புதன்கிழமை இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் முழுமையாக காணப்படவில்லை என்பதுடன் குறித்த துப்பாக்கிகள் அனைத்தும் பளை பொலிஸாரிடம் குறித்த நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/19173
-
- 1 reply
- 300 views
-
-
வைத்தியர் வீட்டின் மீது குண்டு தாக்குதல் ; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் வைத்தியரொருவரின் வீடொன்றின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதலில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியரின் தந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19201
-
- 0 replies
- 283 views
-
-
புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்! கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவுசெய்துள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 100-க…
-
- 2 replies
- 359 views
-
-
காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை முல்லைத்தீவு கலந்துரையாடலின் பின்னர் சுமந்திரன் அதிருப்தி (கே.குமணன்) கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இராணுவ தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப்பயனும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து காணிகளை விடுவிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்தார். மக்கள் மாற்றுக் காணிகளை எடுக்கப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதே நிலைப்பாட்டில் இருந்து மக்களின் சொந்த நிலங்…
-
- 4 replies
- 350 views
-
-
அறிமுகமாகிறது இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி..! இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அன…
-
- 0 replies
- 261 views
-
-
மரணங்களுக்கு பொறுப்பேற்கிறோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூன் மாதத்தில் வீடுகள் என்கிறார் பிரதமர் (எம்.சி.நஜிமுதீன்) மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட மரணங்களுக்கு பொறுப்புக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் புதிய வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்று பிர தமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொலன்னாவ மீதொட்டமுல்லவில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்…
-
- 0 replies
- 170 views
-
-
111 ஏக்கரையும் ஒரு வீதியையும் விடுவிப்பதற்கு படை இணக்கம் ஆயினும் திகதி குறித்து இன்னும் முடிவு இல்லை கேப்பாபிலவில் 67 குடும்பங் களுக்குச் சொந்தமான 111 ஏக் கர் காணியையும், வற்றாப் பளை–புதுக்குடியிருப்பு முதன்மை வீதியை யும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் – அரச தலைவர் – தலைமை அமைச்சர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 198 views
-
-
ராணுவம் சொகுசு வாழ்வு காணி விடுவிப்பு சந்தேகம் : கேப்பாபிலவுக் காணிகளை நேரில் பார்வையிட்ட பின் மக்கள் தெரிவிப்பு எங்கள் காணிகளில் இராணுவத்தினர் சொகுசாக இருக்கின்றனர். காணிகளை விடுவிப்பார் கள் என்பதில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. இன்று காணி களை விடுவிப்பார்கள் என்றே எதிர்பார்த்தோம். ஏமாற்றமாக இருக்கின்றது. போராடாமல் இருந்திருந்தால் ஜென்மத்துக்கும் காணிக்குள்ளே சென்றிருக்கவே முடியாது. கேப்பாபிலவு இராணுவ முகாம் காணிகளைப் பார்வையிட்ட பின்னர் மக்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, எங்களது காணிகள் அடையாளம் காண முடியாதவாறு இராணுவத்த…
-
- 0 replies
- 166 views
-
-
பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார் பிரித்தானிய அமைமச்சர் அலோக் சர்மா இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்துள்ளார். அலோக் சர்மா இந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உத்தேசித்திருந்தார். எனினும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு இலங்கை பயணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/24449
-
- 1 reply
- 249 views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி) அனு 7 hours ago காணொளி, தமிழீழம், முக்கிய செய்திகள் 24 Views மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், தியாக தீபம் அன்னை பூபதியின் 29 வது வருட நினைவு நிகழ்வை, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபானை, கல்குடாவில் அமைக்கப்படவுள்ள மதுபான தொழில்சாலை, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான தமிழ்…
-
- 0 replies
- 301 views
-
-
வெற்றிடமோ 308 இடங்கள் விண்ணப்பித்தோரோ 294 பேர் கணித,விஞ்ஞான பாட ஆசிரியர் பதவிகளுக்கே இந்த நிலை வடக்கு மாகாணத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 308 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், 294 பேரே இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் போட்டிப் பரீட்சை நடத்தாது, நேர்முகத் தேர்வை நேரடியாக நடத்தி நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரிகளிடமிருந்து மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங…
-
- 3 replies
- 552 views
-