ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கை விடுக்க முடியாது – அரசாங்கம் இலங்கைக்கு எதிராக பயண எச்சரிக்கை விடுக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. H1N1 காய்ச்சல் பரவல் காரணமாக கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு தமது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த பயண எச்சரிக்கையானது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது அசாதாரண நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamil…
-
- 0 replies
- 238 views
-
-
‘கடைசி ஆசையைக் கூறியதால் கண்களை பிடுங்கினர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் இலங்கையில் படுகொலைக் கலாசாரம், 1954ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவஞானம் சிறிதரன், “தமிழீழத்தைக் கண்களால் காண்பதே தங்களின் கடைசி ஆசையாகும் என்று நீதிமன்றத்தில் கூறியமையால், சிறைக்குள்ளேயே கண்கள் பிடுங்கியெடுக்கப்பட்ட நிலை அன்று காணப்பட்டது” என்றும் கூறினார். “கடந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒரு பகுதியினருக்கு ஒருவ…
-
- 0 replies
- 250 views
-
-
திருகோணமலையில் இடம்பெற்ற தேசிய யொவுன் புரய 2017 நிகழ்வுக்காக சென்ற ஜெனாதிபதியை அங்குள்ள அரசியல் தலைவர்கள் கிண்ணியா வைத்தியசாலைக்கு ஐனாதிபதியை கூட்டி சென்றது தமது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திருகோணமலைக்கு வந்த ஜனாதிபதியை த.தே.கூட்டமைப்பின் தலைவர் திருகோணமலை பத்திரகாளி கோவிலுக்கு அழைத்து கோவில் கோபுரத்தை உயர்துவதற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். வடகிழக்கில் காணாமல்போன உறவுகள் மாதங்களை கடந்து போராடுகின்றனர்,நிலவிடுவிப்புக்காக போராடுகின்றனர்,வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றனர் ஆனால் இதில் எவற்றுக்குமே ஜெனாதிபதியை அழைத்து சென்று தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஆலையங்களுக்கு அழைத்து முடிசூட்டி கௌரவிப்பதையும், பிறந்தநாள…
-
- 0 replies
- 448 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. முதலாவது சந்தேக நபருக்கு எதிராக புதிய வழக்கு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் புதிய வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபர் , “தம்மை பழிவாங்கும் நோக்குடன் பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து உள்ளதாகவும் , தாம் வெளியில் வந்த பின்னர் அவரை கண்டால் வெட்டுவோம். ” என கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கொலை மிரட்டல் விடுத்தி…
-
- 0 replies
- 179 views
-
-
"யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தை" (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்தில் பிடிப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தையாக உள்ளனர். கேரள கஞ்சா கிலோ கணக்கில் கைப்பற்றும் பொலிஸார் ஏன் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் நாடகம் அரகேற்றப்படுகின்றது. வடக்கில் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்காக நாடகம் அரகேற்றப்படுகின்றது. இதன் பின்னணி இடம்பெயர்ந்தவர்களை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான நாடகமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேள்வி எழுப்…
-
- 1 reply
- 262 views
-
-
சீன உயர் அரசியல் ஆலோசகர் இலங்கை வருகிறார் சீன உயர் அரசியல் ஆலோசகர் யூ ஸெங்செங், நேற்று முதல் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் செல்லவுள்ளாரென, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின், தேசியக் குழுவின் தவிசாளராக உள்ள ஆலோசகர் யூ ஸெங்செங், இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாகிஸ்தான் மேல் சபைத் தலைவர் மியன் ரஸ நபானி ஆகியோரின் அழைப்பின் பேரில், இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரதிநிதி…
-
- 1 reply
- 250 views
-
-
"முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது" : மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா? (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்துள்ள காணி பொது மக்களுக்கு சொந்தமானது. தமது பூர்வீக நிலத்தை இழுந்து வாழும் மக்களின் துயரத்தை பிரதமர் அறிவாரா? மக்களின் துயரங்களை புரிந்து கொண்டு பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ளவர் என்ற வகையில் பிரதமர் பதில் வழங்க வேண்டும். முள்ளிக்குளம் காணி தொடர்பில் பிரதமர் அளித்த பதில் பிரதமர் ஒருவர் அளித்த பதில் அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான நேரடியான…
-
- 0 replies
- 274 views
-
-
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் பிரதமரை நேரில் சந்தித்த டக்ளஸ் எம்.பி கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் நேரடியாக கோரிக்கை விடுத்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த 13 இற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு விடயம் முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நா…
-
- 0 replies
- 156 views
-
-
சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் விசாரணை எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 1ஆவது சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று (05) உத்தரவிட்டார். மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. குறித்த வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் புதன்கிழமை (05), விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. …
-
- 0 replies
- 428 views
-
-
சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மேலும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம…
-
- 0 replies
- 216 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நல்லாட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டி தொடர்பில் தற்போது இணையத்தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. மொரட்டுவ பல்கலைகழக மாணவர்களால் குறித்த போட்டியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமே இதற்கு காரணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சைட்டத்திற்கு எதிராக இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முட்டாள் தன்மையிற்கு எல்லையில்லையா ? என்று பதிவ…
-
- 0 replies
- 169 views
-
-
தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாயகம் திரும்பும் புலம் பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பெருந்தொகையான பணம் கப்பமாக கோரப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் முறைப்பாடுகளை வழங்குவதற்கு தயங்கி வருகின்றனர். மேலும், இது குறித்து தாயகம் திருப்பும்…
-
- 5 replies
- 578 views
-
-
அரசுடன் கூட்டுச் சேர்வதே இப்போது பொருத்தமானது - வடக்கு முதலமைச்சர் எமக்கு அரசியல் ரீதியாகத் தவறு இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. அதற்காக நாம் எம் மனதில் வெறுப்பையும் துவேசத்தையும் வளரவிடுவது பிழையென்றே எனக்குப் படுகின்றது. அது வன்முறைக்கே வித்திடும். வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் இடர்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எமது மக்கள். மீண்டும் பொறாமை, துவேசம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாறவேண்டும். அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வோருடன் கூட்டுச்…
-
- 2 replies
- 397 views
-
-
ஜனாதிபதிக்குக் காலம் வழங்கிய சோதிடரை என்ன செய்வது? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறிப்பிட்ட ஒரு திகதியில் இறப்பார் என எதிர்வுகூறி, தவறான உணர்வுகளைக் கட்டியெழுப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சோதிடரான விஜித ரோஹன விஜயமுனி தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி, சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். சந்தேகநபர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கான அடுத்த திகதியாக, ஓகஸ்ட் 1ஆம் திகதியை, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார குறித்தார். தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120ஆவது பிரிவின் கீழும் கணினிக் குற்றச் சட்…
-
- 0 replies
- 224 views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் வட மாகாண முதல்வரை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18742
-
- 0 replies
- 166 views
-
-
#D M Swaminathan #Northern Province வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சில திட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் சில சில அபிவிருத்திகளை செய்திருந்தாலும் அத்தியாவசியமாக கருதப்படும் உறையுள் இல்லாமல் தினம் தினம் அல்லல்படுகின்றார்கள் மக்கள். அதன்படி மக்கள் தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக உணவுகள் இல்லாமல் தமது பிள்ளைகளுடன் நடுவீதியில் போராட்டம் நடத்தி வருவது ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அது ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க மறுபுறம் யுத்தத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்காமல் 8 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கைக்கு செல்லவேண்டாம் : கட்டார் அரசாங்கம் எச்சரிக்கை! கட்டார் பிரஜைகளை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் அவர்களது டுவிட்டர் தளத்தின் ஊடாக குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். இலங்கையில் எச்.1.என்.1 என்ற பன்றிக்காய்ச்சால் தொற்று பரவிவருவதால், அந்நாட்டு மக்களை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக கட்டார் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் குறித்த தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் நிக்ந்துள்ளதாகவ…
-
- 1 reply
- 342 views
-
-
இரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம் யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருடைய காணியில் மற்றுமொரு நபர்கள் குடியேறியுள்ளதாகம் தற்போது தனது காணியை அவர்கள் தர மறுப்பதாகவும் தெரிவித்து தாய் ஒருவர் தனது மகனுடன் இணைந்து விசப்போத்தலை வைத்துக்கொண்டு வவுனியா நகரில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று, யுத்தம் காரணமாக 1991 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றுள்ளத…
-
- 0 replies
- 256 views
-
-
இரணைமடு தனியார் விடுதியை நேற்று விடுவித்தது இராணுவம் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுச் சந்தியில் இராணுவத்தின் பிடியில் இருந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்புடன் கூடிய தனியார் விடுதி மாவட்டச் செயலரிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது. உரிமையாளரிடம் அதனைக் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியத்து வம் வாய்ந்த இரணைமடுச் சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதியை, பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். போர் முடிவுக்கு வந்ததிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் அத…
-
- 0 replies
- 307 views
-
-
போர்க்குற்றம் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை : ராஜித்த யுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார். அவ்வாறான யுத்தக் குற்ற விசாரணைகள் என்கின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்வது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். வடக்கிற்கு இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலி விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அச் சந்திப்பின…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாதிப்புற்ற தமிழர்களுக்கு மருந்தளிக்க வேண்டும் பிரதமர் ரணிலின் அரசியல் வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்திய லோக்சபா உறுப்பினர் சசி தரூர் கோரிக்கை (பா.ருத்ரகுமார்) முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து பாரிய துன்பங்களை சந்தித்த மக்களின் எதிர்காலத்தைப்பற்றி அரசாங்கம் அவசியம் சிந்திக்க வேண்டும். இந்தியா வழங்கும் உதவிகளை வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு முழுமையாக கிடைக்க உதவ வேண்டும். இடம்பெயர்ந்தும் காணாமலாக்கப்பட்டும் அல்லது வேறுவிதமாகவும் துன்பப்பட்டு வரும் உறவுகளின் காயங்களுக்கு இலங்கை அரசாங்கம் மருந்தளிக்க வேண்டும் என இந்திய எழுத்தாளரும் இந்திய லோக்சபா உறுப்பினருமான சசி தரூர…
-
- 0 replies
- 155 views
-
-
எண்ணம்பாலப்பூவல் மற்றும் முண்டாளமடு கிராமத்தில்...
-
- 0 replies
- 183 views
-
-
சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) உடனான சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://globaltamilnews.net/archiv…
-
- 3 replies
- 686 views
-
-
அவதானம்..! : நாளை முதல் இயற்கையில் ஏற்படப்போகும் மாற்றம் நாளை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18669
-
- 1 reply
- 743 views
-
-
நிலக்கண்ணி வெடியை இல்லாதொழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானியா நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வரையான இந்த வேலைத்திட்டத்துக்கு 1.2 பில்லியன் ரூபாய்களை பிரித்தானியா செலவிட உள்ளது. வடக்கில் அதிக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறந்த உற்…
-
- 0 replies
- 122 views
-