ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
நெடுந்தீவு சிறுமி கல்லால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். தலைப்பகுதியில் மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதனால் மண்டையோடு உடைந்து மூளை கலங்கள் பாதிப்படைந்து சிறுமியின் மரணம் சம்பவித்து உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியம் அளித்தார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 598 views
-
-
ஈ.பி.டி.பி. நெப்போலியன் , மதனை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை. இரட்டை கொலை குற்றவாளிகளை நாடு கடத்த ஏதுவாக அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நேற்று திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் , 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். …
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் போராட்டத்தில் இன்று (31) பட்டதாரி இளைஞன் ஒருவனின் அழுகுரல்
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன காலமானார்.! இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன கொள்ளுப்பிட்டி, கெபிடல் ரெசிடென்ஸ் வீதியில் இன்று தனது 80வது வயதில் நண்பகல் காலமானார். http://www.virakesari.lk/article/18647
-
- 2 replies
- 579 views
-
-
பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய் : முல்லைத்தீவை சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம் (படங்கள்) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கணவனை பிரிந்து வாழ்ந்துவரும் வாய் பேச முடியாத ஒரு பிள்ளையின் தாயார் ஒருவருக்கு நேற…
-
- 0 replies
- 290 views
-
-
மாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள் : நல்லூரில் சம்பவம் யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர் ஒருவர் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுடன் வந்த மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை, அவரது மனைவி தாக்குதலில் இருந்து காப்பாற்ற முயன்றதாகத் தெரியவருகின்றது. தற்போது தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசா…
-
- 0 replies
- 368 views
-
-
ஐரோப்பிய ஒன்றியமும் வடக்கு மாகாண சபையும் புரிந்துணர்வோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானம் : சி.வி.விக்கினேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்கு மாகாண சபையும் புரிந்துணர்வோடு இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல்கோப்றி யாழ் . நகரிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப…
-
- 0 replies
- 225 views
-
-
முள்ளிக்குளம் மக்களை சந்தித்தனர் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள் மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அவர்களை நேரில் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர். மக்களுடனான சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணி விடுவிப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் மக்கம் இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்கக்கோரி இன்று 12 ஆவது நாளாகவும் தொடர…
-
- 0 replies
- 216 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது : காரணம் இதுவா.? இனந்தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், விடுதி மாணவர்களை நாளை நண்பகலுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/18653
-
- 0 replies
- 275 views
-
-
புலிகள் படுகொலை; இராணுவத்தினருக்கு அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், லெப்டினன்ட் கேர்ணல் குமார வீரசிங்ஹ உள்ளிட்ட அறுவருக்கு எதிராகவே, அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனை…
-
- 1 reply
- 460 views
-
-
தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள். குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை த…
-
- 6 replies
- 1.2k views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சூத்திரத்தை நான் அறிவேன் கடினமான பணி என்கிறார் அமைச்சர் மனோ (க.கமலநாதன்) நாட்டிற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பணி என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது கடினமானதும் சவாலானதுமான பணியாகும். இருப்பினும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் சூத்திரத்தை நான் அறிவேன் என தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மண்டபம் மற்றும் நூலகமொன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்…
-
- 1 reply
- 301 views
-
-
ரயில் கடவைக் காவலரை தாக்கிய முதியவர் கைது தெல்லிப்பழைப் பகுதியில் தொடருந்துக் கடவைக் காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற முதியவர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழை வைத்தியசாலை சாலையில் நேற்று முன்தினம் பகல்வேளை 11 .30 மணியளவில் தொடருந்து வருவாத கிடைத்த உத்தரவையடுத்து கடவை காவலாளி சமிக்கையை ஒலிக்க விட்டு பாதையை தடை செய்துள்ளார் . அந்த நேரம் அங்கே வருகை தந்த 76 வயது ஓய்வூதியர் ஒருவர் தொடருந்து அருகில் வரவில்லை எனக் காரணம் கூறி கடவையைக் கடக்க முயன்றுள்ளார். இதனை அவதானித்த கடவை …
-
- 0 replies
- 214 views
-
-
கபடிப் போட்டியின் நிறைவில் ரசிகர்களிடையே கைகலப்பு கபடிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட சொற்போர் கைகலப்பில் முடிவ டைந்தது. இந்தச் சம்பவம் நேற்று வடமராட்சி திக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, திக்கம் இளைஞர் விளையாட்டு கழகம் வடக்கு மாகாண ரீதியிலான கபடிச் சுற்றுப் போட்டியை நடாத்தி வருகின்றது. இதன் காலிறுதியாட்டம் நேற்று குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. இதில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கிளிநொச்சி உழவர் ஒன்றியம் அணி மோதியது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய போதும் ஆட்ட …
-
- 0 replies
- 322 views
-
-
சீனாவுடனான எமது உறவு தொடர்பில் இந்தியா விரக்தியடையத் தேவையில்லை புதுடில்லி கூடுதலாக அலட்டிக்கொள்கிறது என்கிறார் பிரதமர் (பா.ருத்ரகுமார், க.கமலநாதன்) சீனாவுடனான எங்களது நட்பு இந்தியாவை பகைத்துகொள்வதற்கானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவுடன் உறவு வைத்திருப்பது தொடர்பில் இந்தியா விரக்தியடையத் தேவையில்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம் வெவ்வேறான தொடர்பை வரலாற்றிலிருந்து பேணி வந்துள்ளோம். ஆனால் இது தொடர்பில் இந்தியா கூடுதலாக அலட்டிக்கொள்கின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதிகார பகிர்வென்பது வெறுமனே தமிழ் சிங்…
-
- 0 replies
- 171 views
-
-
2017 இல் மாற்ற முடியாவிட்டால் 2018 இல் ஆட்சியை மாற்றுவோம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார் (க.கமலநாதன்) நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளவர்கள் இவ்வருடத்திற்குள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுமாறு சவால் விடுகிறார்கள். மாற்ற வேண்டுமாயின் மாற்றுவோம். இவ்வருடத்தில் இல்லாவிடின் அடுத்த வருடத்தில் ஆட்சியை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கூட்டு எதிரணியின் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்…
-
- 0 replies
- 358 views
-
-
“12 ஆயிரம் புலிகளை கைதுசெய்து தண்டிக்க வேண்டும்” நீங்கள் தயாரா.? நாம் தயார் சர்வதேச விசாரணைகள் தான் தமிழர் தரப்பினருக்கு அவசியம் என்றால் கடந்த காலத்தில் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகளை கைதுசெய்துதண்டிக்க வேண்டும். இதற்கு தமிழர் தரப்பு தயார் என்றால் நாமும் விசாரணைகளை முன்னெடுக்க தயார். பக்கசார்பான எந்தவொரு விசாரணையும் அரசாங்கம் ஏற்காது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வதேச விசாரணைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பட்டை தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/18617
-
- 4 replies
- 841 views
-
-
ஊழல்வாதிகளை தண்டித்தே தீருவேன் அனைத்து சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுவேன் என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி ) ஊழல் மோசடிக்காரர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள், மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், இப்போது கொள்ளையடிப்பவர்கள் என எவராக இருந்தா லும் அவர்கள் எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களை தண்டிப்பேன். அதில் ஒருபோதும் நான் பின்னிற்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிக்கொண்டவர்கள் இப்போது எனது ஜனநாயக நடவடிக்களை தடுத்து வருகின்றனர். …
-
- 0 replies
- 141 views
-
-
விமலின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு.! பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தாக்கல் செய்த பிணை விண்ணப்பத்தை, கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விமல் வீரவன்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார். பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 90 மில்லியன் ரூபா இழப்பு அரசா…
-
- 0 replies
- 195 views
-
-
எம்.பிக்கள் ஐவர் பங்களாதேஷ் பயணம் ஏ.எச்.ஏ. ஹுஸைன் பங்களாதேஷில் இடம்பெறும் 136ஆவது அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் அமர்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்குப் பயணமாகியுள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான் காதர், மஹ்றூப் அப்துல்லாஹ், குமாரி விஜயரத்ன றோஹினி மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரே இவ்வாறு பயணித்துள்ளனர். உலகின் 180 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள், கடந்த 01ஆம் திகதி தொடக்கம் நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை இடம்பெறு…
-
- 0 replies
- 159 views
-
-
‘கூட்டமைப்பை ஏமாற்றுவது போல மக்களை ஏமாற்ற முடியாது’ ஏ.எச்.ஏ. ஹுஸைன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டில் இனிமேல்தான் நல்லாட்சி ஏற்படப்போகின்றது என மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வரும் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டார். இது தொடர்பாக நேற்றுக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, …
-
- 0 replies
- 182 views
-
-
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்புக் கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளைக்குச் செல்லவிருந்த இரவு தபால் தொடருந்தில் குண்டு இருப்பதாகப் புரளியைக் கிளப்பி பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக 18 வயது மாணவிக்கு இரண்டு வருட நன்னடத்தைக் காலத்தை வழங்கி கொழும்புக் கோட்டை நீதிவான் செல்வி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். மாணவியை ஒரு இலட்ச ரூபா ஆள் பிணையில் அவரது தாயாரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்று கட்டளையிட்டது. சம்பவ தினம் தனது காதலன் தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக அந்தத் தொடருந்தில் அவரது நண்பர்கள் சிலருடன் சுற்றுலா செல்லவிருந்ததாகவும், அவரது பயணத்தைத் தடுத்து நி…
-
- 0 replies
- 317 views
-
-
“இலங்கை அரசு உருவாக்கத் தீர்மானித் துள்ள காணாமற்போனோர் அலுவலகம் மற் றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு ஆகியவை குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமானால் போர்க்குற்றங்கள் குறித்த நீதி விசாரணைப் பொறிமுறைக்கான அவசியம் இல்லாமல் போகலாம்”இவ்வாறு அயலுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக அரசு உள்நாட்டுப் பொறி முறையை உருவாக்கும். காணாமற்போனவர்கள் விவகாரங்களைக் கையாள்வதற்காக காணாமற்போனோர் அலுவலகத்தை ஏற்படுத்துவது அவசியம்.இந்த அலுவலகம் மக்கள் விடுதலை…
-
- 0 replies
- 292 views
-
-
தங்காலை, சீனிமோதர கடலில் கடந்த வியாழக்கிழமை நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். ஜி.சீ.ஈ சாதாராண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன. இதில் சிறப்பாகச் சித்தியடைந்த இவர்கள் மூவரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக சீனிமோதர கடலில் நீராடச் சென்றிருந்தபோதே இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெலியத்த, பள்ளியகஹாவத்த பிரதேச வாசியான ஜனித் இசான் லக்சித (வயது- 17) மற்றும் தங்காலை பொலம்மாருவ பிரதேசவாசியான சமுதித தில்சான் (வயது - 17) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர். …
-
- 0 replies
- 297 views
-
-
போர் என்பது அரசியலின் தொடர்ச்சி என்று தெரிவிக்கப்படுவதில் மீண்டும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நாட்டில் மீண்டும் ஒரு போர் மூளாத நிலமையை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். மகேஸ் சேனநாயக்கவின் பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது முன்னோடிகள் சமாதானம் தொடர்பில் மிகச் சிறந்த பணியை ஆற்றியுள்ளனர். அது பலவீனமானதாகக் காணப்படலாம். ஆனால் அவர்கள் அது தொடர்பில் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர். தற்போது நாங்கள் இந்தச் சம…
-
- 0 replies
- 440 views
-