ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது சூட்சுமமான முறையில் பணம் மறைத்துவைக்கப்பட்டமை அம்பலம் மூன்று வாகனங்கள் மீட்பு;ஜப்பான் சூடியை தேடி வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாவத்த பகுதியில் மீட்கப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 80 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பிரபல போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் ஊடாக நாட்டிற்குள் கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் ஹெரோயின் போதைப்பொருளை நாடளாவிய ரீதியில் விநியோகம் செய்யும் முக்கிய வலைய…
-
- 0 replies
- 421 views
-
-
இலங்கை தொடர்பில் விபரமான விடயங்களை முன்வைக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் அறி க்கை என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி விபரமான அறிக்கை ஒன்றை வெ ளியிட வுள்ளது. குறிப்பாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை குறித்த விபர அறிக்கை ஒன்றை முன்வைக் கவுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் …
-
- 0 replies
- 245 views
-
-
கனடாவிலிருந்து வந்த பெண் விபத்தில் பலி : யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இருந்து தாய் நாட்டிற்கு வந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விஜயரூபன் சர்மிளா (37வயது) எனும் பெண்ணே உயிரிழந்தவராவர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி அங்கே வசித்துவந்துள்ளார்.இவருக்கு 11வயது மற்றும் 3 வயதுகளில் இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த நாட்டிற்கு தனது பிள்ளைகள் இருவருடனும் வருகை தந்துள்ளார். …
-
- 0 replies
- 318 views
-
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலைவாய்ப்புக் கோரி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகவும் நீடிக்கிறது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து வீதியில் வைத்து உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் "கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்", அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?" என சுலோகங்கள் அடங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கோரிய…
-
- 67 replies
- 4.1k views
-
-
இலங்கை விடயத்தில் கால அட்டவணையும் ஐ.நா. அலுவலக கண்காணிப்பும் அவசியம் பிரேரணையில் உள்ளடக்கவேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ஜெனிவாவில் வலியுறுத்தல் (ரொபட் அன்டனி) இலங்கை நல்லிணக்கப் பொறிமுறை விடயத்தில் எவ்வாறு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பான கால அட்டவணை மற்றும் அதற்கான கட்டமைப்புத் திட்டம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பரிந்துரையை புதிய பிரேரணையில் உள்ளடக்கவேண்டுமென ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்புநாடான சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. அந்த கால அட்டவணையையும் கட்டமைப்புத் திட்டத்தையும் இலங்கை அராங்கம் அடுத்தவரும் இரண்டு வருடங்களுக்கு உரிய முறையில் பின்…
-
- 0 replies
- 371 views
-
-
10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்) பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். சாரதியை பொலிஸார் கைது ச…
-
- 0 replies
- 310 views
-
-
ஐ.நா.வின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது இலங்கை அரசாங்கம் உறுதியாக பதிலளிக்கவேண்டுமென வட–கிழக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் கூட்டாக விண்ணப்பம் சர்வதேச தீர்ப்பாயம் அவசியம் கால அவகாசம் வழங்குவது நீதிக்கான தேடலை நீர்த்துப்போகச் செய்யும் ஐ.நா.கண்காணிப்பு அலுவலகங்கள் தேவை வடக்கு முதலமைச்சரும் ஆதரவு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகியுங்கள் மதிப்பீட்டை மேற்கொள்ளுங்கள் (ரொபட் அன்டனி) இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினது நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த விடயத்தில் ஐ.நா. மனித…
-
- 0 replies
- 316 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : "இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை" (ஆர்.யசி ) ஆண்டுதோறும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை இந்திய மீனவர்கள் வருடாந்தம் கலந்துகொள்ளும் நிலையில் இம்முறை இந்திய மீனவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ள…
-
- 0 replies
- 222 views
-
-
சிங்கள கர்பிணி தாய்மார்களை இலக்குவைத்து கருக்கலைப்பு மாபியா : பொதுபலசேன (க.கமலநாதன்) சிங்கள தாய்மார்களை இலக்கு வைத்து அரச சார்பற்ற நிறுனங்கள் இரண்டு கருக்கலைப்பு மாபியாவை முன்னெடுவத்து வருகின்றதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தெரிவித்தார். கொழும்பின் ஜா-எல, கொட்டாஞசேனை ஆகிய இடங்களிலும் ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் 11 இடங்களின் இந் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . http://www.virakesari.lk/article/17586
-
- 2 replies
- 581 views
-
-
புலியால் சபையில் பெரும் சலசலப்பு ஜே.ஏ.ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று (09) கடும் வாங்குவாதம் ஏற்பட்டதுடன், அவ்வப்போது சிரிபொலியும் எழுந்தது. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், புலிகளால் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர மாவட்ட ரீதியாக கேட்டுவருகிறார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பில் நேற்று (09) கேள்வியெழுப்பியிருந்தார். கேள்விகளுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அப…
-
- 0 replies
- 280 views
-
-
சிறுபான்மை சமூகங்களுக்கு வெறும் வீர வசனங்களை பேசி கைதட்டல்களை பெறும் அரசியல் தலைமைகள் அவசியமல்ல இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு இரு தரப்புக்களுக்கும் வெ ளிப்படைத்தன்மையுடன் பரஸ்பர முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பல்வேறு அரசியல் நெருக்கடியான காலகட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளதால் இனிமேலும் அவர்களுக்கு இழப்புக்கள் ஏற்படா வண்ணமான பொறிமுறையொன்றையே இரு சமூகங்களும் வேண்டி நிற்கின்றன. கிழக்கில் இன்று பெரும்பாலான பொதுமக்களின் காணிகள் இன்னும் இராண…
-
- 0 replies
- 271 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் தின ஊர்வலம் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் உரிமையை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்றது. அரசியலில் பெண்களின் பங்களிப்பினை உறுதிசெய், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கு ஆகிய தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது. இதன்போது பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பட்டதா…
-
- 1 reply
- 509 views
-
-
முறுகண்டியில் ரயிலுடன் மோதிய வேன் : அதிர்ஷடவசமாக உயிர்த்தப்பிய சாரதி (படங்கள்) முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில் இன்று முற்பகல் ரயிலுடன், வேன் ஒன்று மோதியதில் வேன் சாரதி அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். ஸ்கந்தபுரம் பகுதியில் ,இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால், யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேனில் சாரதி மட்டுமே பயணித்தமையால் உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை. …
-
- 0 replies
- 640 views
-
-
திருமலை, காலி துறைமுகங்கள் இலாபமீட்ட தொடங்கியுள்ளன :அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்திற்கும் விரைவில் தீர்வு (க.கமலநாதன்) அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் குறித்த இறுதி தீர்மானம் ஓரிரு வாரத்தில் அறிவிப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரமும் விரைவில் சமர்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அதேநேரம் கடந்த காலத்தில் நஷ்டமீட்டி வந்த திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களும் தற்போது சிறிதளவு லாபமீட்ட தொடங்கியுள்ளதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்ற…
-
- 0 replies
- 314 views
-
-
வித்தியா படுகொலை வழக்கு சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12ஆவது சந்தேகநபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஏ.எம்.எம் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்கள் பன்னிருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதில் குறித்த 12 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி…
-
- 0 replies
- 297 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பினர் சனியன்று அவசர சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே கருத்து முரண்பா டுகள் அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் வடக்கு - கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதம் அனுப்பியமை தொடர்பில், கூட்டமைப்பினுள் சர்ச்சை மூண்டு…
-
- 0 replies
- 314 views
-
-
புதிய பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் தமிழர் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நடைபெற்று வரும் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான உப குழுக்கூட்டங்களில் கலந்துகொள் ளும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கால அவ காசம் வழங்கக்கூடாது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெனிவா வளாகத்தில் நடைபெறுகின்ற இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் பங்கேற்கும் புலம் பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் இருந்து சென்று…
-
- 0 replies
- 278 views
-
-
திருகோணமலையில் 12 டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு : 9 பேர் கைது திருகோணமலை கடற்பரப்பில் நேற்று (08) மாலை, மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களது வலையில்அகப்பட்ட 12 டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை உட்துறைமுக பகுதியிலுள்ள கடற்பரப்பில், வீசப்பட்ட வலையில் 12 டொல்பின் மீன்கள் அகப்பட்டுள்ளது. இந்நிலையில் அகப்பட்ட டொல்பின்களை கயிற்றினால் கட்டி, கடனிலுள் விட்டுள்ள போதும் குறித்த டொல்பின்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்துள்ள திருகோணமலை பொலிஸார், உயிரிழந்த நிலையில் காணப்பட்ட …
-
- 0 replies
- 399 views
-
-
பிரித்துவிடக் கூறியோர் இணைந்து செல்கின்றனர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “நாடாளுமன்றத்துக்குள் தனிக்கட்சியாகச் செயற்படுவதற்கு அனுமதியளிக்குமாறு, கூச்சலிடும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள், குழுவாக வெளியேறி, தாம் பிரியவில்லை என்று சபைக்குக் காட்டிவிட்டனர்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்ததுடன், சபாநாயகரின் கட்டளையைப் புறக்கணித்தமை காரணமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு, சபை நடவடிக்கைகளின் கலந்துகொள்ள ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். அதன் போதே …
-
- 0 replies
- 408 views
-
-
பாராளுமன்ற விவாதத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் , நிதி அமைச்சர்களை நோக்கி திரு வியாழேந்திரன் பேசியபோது!
-
- 0 replies
- 181 views
-
-
பரராஜசிங்கம் கொலை வழக்கு: குற்றப்பத்திரம் தாக்கல் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில், நேற்று (08) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திர…
-
- 0 replies
- 465 views
-
-
‘தீர்ப்பை மாற்ற மாட்டேன்’; ‘சண்டித்தனத்துக்கு சளைக்கேன்’ ஜே.ஏ.ஜோர்ஜ் சபாநாயகர் கடும் உத்தரவுகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தார். அவைக்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன, அவையிலிருந்து வெளியேற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டமை போன்றவை இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போது, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றத்துக்கு தனிக்கட்சியாக அங்கிகரிக்கமுடியாது என்று பல உதாரணங்களையும் விளக்கங்களையும் அளித்து தனது தீர…
-
- 0 replies
- 431 views
-
-
மீனவர் மீதான துப்பாக்கிசூட்டு விவகாரம் : ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை நாடும் மீனவர் அமைப்பு..! இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க வந்தபோது, கடற்படையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்திய மீனவர் அமைப்பு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடொன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரிட்ஜோ என்பவர் கடந்த 6 ஆம் திகதி, இலங்கை கடற்படையால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், இரு நட்டு அரசாங்கங்களும் குறித்த விடயம் தொடர்பாக, தமது மௌனத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தாம் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடவுள்ளதாக தேசிய மீனவத்தொழிலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட…
-
- 0 replies
- 212 views
-
-
பஸ்ஸில் ஏற்றிச் சென்ற மகனுக்கு நடந்தது என்ன..? : அரசு பதில் கூற வேண்டும் முல்லைத்தீவு வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து 2009.05.19 அன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டனர். அவர்கள் எங்கே.? தயவு செய்து இருவரையும் மீட்டுத்தாருங்கள்.. என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஒருவரான கிருஸ்ணகுட்டி கலாவதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்வர்களின் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட 63 வயதான தாயொருவர் தனது கண்ணீர் கதையை கூறும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர்…
-
- 0 replies
- 325 views
-
-
கடலில் மிதந்து வந்த கஞ்சா : யாழில் சம்பவம்..! கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர், கடலில் பொதியொன்று மிதந்து வருவதை கண்டநிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நீர் சுமையுடன் கைப்பற்றப்பட்ட சுமார் 52 கிலோ கிராம் கஞ்சாவை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீசார…
-
- 1 reply
- 315 views
-