ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
கிளிநொச்சியில் ஆறாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (25) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்கள் தெரிவித்துவருகின்ற…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், சிறுபான்மையினர்களுடைய பகுதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. நான் வெளிப்படையாக உங்களிடம் சொல்கிறேன். தமிழ் மக்களின் நிலப்பகுதிகள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி இத…
-
- 1 reply
- 416 views
-
-
ஜெனிவாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு ஐ.நா. குழுவின் முன்னால், இலங்கை அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர், இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இறுதிக்கட்ட போரின் போது பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வடக்கில் இராணுவத்தினர் நீக்கப்படவில்லை எனவும், ஐ.நா குழு பிரதிநிதிகள் இலங்கை குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். போர்க்குற்றச்சாட்டு விசாரணை இடம்பெற வேண்டிய ஹைபிரிட் நீதிமன்றம் தொடர்பிலும் கேள்…
-
- 0 replies
- 306 views
-
-
மன்னார் மாவட்டத்தின் அருள் மிகு திருக்கேதீச்சர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஸ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஸ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றனர். சிவராத்திரிய…
-
- 0 replies
- 417 views
-
-
“மஹிந்தவின் பொறியில் சிக்கியுள்ள சம்பந்தன்“ புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் பிரதமர் பதவியில் மஹிந்தவா ரணிலா அமரவேண்டும் என்பதனையும் தீர்மானிக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். காரணம் புதிய அரசியலமைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசாங்கம் ஆட்டம்காணும். மஹிந்தவின் அரசாங்க கவிழ்ப்பு முயற்சியும் சாத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தை 2017 ஆம் ஆண்டில் கவிழ்க்கவேண்டும்…
-
- 1 reply
- 283 views
-
-
சம்பந்தன் வலியுறுத்தியதில் தவறில்லை அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்கிறார் கெஹெலிய (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவான உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை வலியுறுத்துவதில் தவறில்லை. ஆனால் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகி நாட்டின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல எச்சரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இராணுவத்திற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்க…
-
- 1 reply
- 434 views
-
-
பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு தொடர்பான ஆய்வுக்குழு-தவராசா குற்றச்சாட்டு யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு பிழையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றையதினம்(24) விசாரணை குழுவால் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன். இந்த விசாரணை களின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், ஆய்வுக் குழுவின் அறிக்கை பிழையான அறிக்கை என்பதுடன் வடமாகாண…
-
- 2 replies
- 291 views
-
-
""கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் வாய்ப்பு'' (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கால அவகாசம் வழங்கினாலும் குறுகிய காலத்தினுள் அரசாங்க மானது அனைத்து தீர்மானங்களையும் நிறைேவற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கால அவகாசத்திலும் காலத்தை கடத்தும் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட் டினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான விவகாரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
-
- 0 replies
- 267 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு சிங்கள இளைஞர்,யுவதிகளும் ஆதரவு நேரில் சென்று வெளிப்படுத்தினர் (ம .குமணன்) முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங் களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி நேற்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வீதியோரத்தில் வெயில், கொட்டும் பனி மற்றும் இன்னோரன்ன இன்னல்களையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் இவர்களது அறவழிப் போராட்டம் தொடர்கின்றபோதிலும் இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. தென்பகுதியை சேர்ந்த சிங…
-
- 0 replies
- 244 views
-
-
நான்கு விவாதங்கள்; மூன்று அறிக்கைகள்; பிரிட்டனின் இலங்கை குறித்த பிரேரணை திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது ஜெனிவா சமர் மார்ச் 2, 15, 22,ஆம் திகதிகளில் இலங்கை குறித்த விவாதங்கள் 23 ஆம் திகதி இலங்கை குறித்த பிரேரணை மீது வாக்கெடுப்பு (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பாக நான்கு நாட்கள் விவாதங்கள் மூன்று அறிக்கைகள் விசேட பிரேரணை ஆகியவற்றுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவ…
-
- 0 replies
- 199 views
-
-
புதிய அரசியல் சாசனம் வருட இறுதிக்குள் வேண்டும் அரசுக்கு அழுத்தமளிக்குமாறு அமெ.குழுவிடம் கூட்டமைப்பு கோரிக்கை (ஆர்.ராம்) புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் என அமெரிக்க சபை நீதித்துறை காங்கிரஸ் குழுவினரை கேட்டுக்கொண்ட எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க சபை நீதித்துறை தலைவர் பொப் குட்லட் தலைமையிலான எண்மர் கொண்ட அமெரி…
-
- 0 replies
- 185 views
-
-
'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூறு' :2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் வவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடருகின்றது. கடந்த மாதம் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு 4ஆவது நாளுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் தமது தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/17055
-
- 0 replies
- 198 views
-
-
கருணாவைக் கொல்ல முயன்றவர் கைது ...? மஹிந்தவின் அரசில் பிரதியமைச்சராக செயற்பட்டுவந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் எனவும், மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுக்கு கருணா கடந்த மாதம் சென்றிருந்த நிலையில், பலவந்தமாக அவர் மீது மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 430 views
-
-
கடலில் மிதந்து வந்த 11 விசித்திர சிலைகள் மீட்பு காலி கடல் பகுதியில் சாக்கு ஒன்றினுள் கட்டப்பட்ட நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 11 விசித்திரமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அஹுன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவருக்கே இந்த சிலைகள் கிடைத்துள்ளன. குறித்த மீனவர் அந்த சிலைகளை அஹுன்கல்ல விகாரையில் சேவையாற்றும் தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த சிலைகள் மத்திய மற்றும் சிறிய அளவில் காணப்படுகின்றது. இந்த அனைத்து சிலைகளும் மரத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளாதாகவும் அனைத்து சிலைகளும் வானத்தை பார்த்த நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/17040
-
- 1 reply
- 402 views
-
-
சிவராத்திரி – உறங்காத இராத்திரிகளுக்கு முடியட்டும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றிரவு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர்களும் வெள்ளை உடையணிந்த இராணுவத்தினரும் அருகில் உள்ள இராணுவ முகாமிலிருந்து கிளிநொச்சியில் இப்போது இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை நோக்கிச் சென்றார்கள். எங்கள் மக்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க அவர்கள் மேளதாளங்களுடன் நடனங்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். எங்கள் உறவுகளை காணாமல் போகச் செய்தவர்கள், எங்…
-
- 0 replies
- 409 views
-
-
கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீட்பதற்காக தொடர்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு -கேப்பாப்புலவு மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு கரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை, காத்தான்குடி அரசியல் களம் என்பன இணைந்து காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் உட்பட இளைஞ…
-
- 0 replies
- 349 views
-
-
வடக்கு கடற்பரப்பில் கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது : 2016 இல் இருந்து இன்று வரை 700 கிலோ கேரள கஞ்சா மீட்பு வடக்கு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா கடத்தலிலீடுபட்ட 5 சந்தேகநபர்களை தாம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று 24 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வரை 700 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. வடக்கு கடற்பரப்பிலுள்ள காங்கேசன்துறைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 154.6 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை படகு மூலம் கடத்தவிருந்த நிலையில் கஞ்சாவுடன் 3 பேரை கைதுசெ…
-
- 0 replies
- 483 views
-
-
காலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது : இந்தியாவிலிருந்து பயிற்சியும், சீனாவிலிருந்து ஆயுதமும் கிடைத்தது : முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போரை வெற்றிகொள்வதற்கு இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பான்மையான ஆயுதங்களும் கிடைக்கப்பெற்றன. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய, சீனாவிடையே எழுந்துள்ள இலங்கை மீதான முதலீட்டு போட்டிகளுக்கிடையே, தற்போது கோத்தபாய ராஜபக்ஷ உள்ளூர் ஊடகமொன்றிக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆயுதம் தாங்கிய யுத்தத்திற்கு, இந்திய அரசானது மிகவும் கடுமையான பயிற்சியை, இலங்கை இராணுவத…
-
- 0 replies
- 344 views
-
-
மார்ச் 15 இல் ரீட்டா ஐசாக்கின் அறிக்கை தொடர்பான விவாதம் (ரொபட் அன்டனி) சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது தனது இலங்கை தொடர்பான அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேரவையில் முன்மொழிவார். அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பான ரீட்டா ஐசாக்கின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். இ…
-
- 0 replies
- 387 views
-
-
மட்டு. காணி ஆணையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் 5 குழுக்கள் விசாரணை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு (எம்.எப்.எம்.பஸீர்) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேச குமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப் பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசார ணைகளுக்கு 5 பொலிஸ் குழுக்கள் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆரச்சியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஐந்து பொலிஸ் குழுக்களும் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அதன்படி நேற்று மாலை வரை இந்த சிறப்பு விசாரணைக…
-
- 0 replies
- 302 views
-
-
தமிழ் மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சபையில் உறுதியளித்தார் காணி அமைச்சர் ஜோன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள கையளிப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும் பாலான காணிகள் மீள வழங்கப்பட்டுள்ளன.எஞ்சிய காணிகளையும் கால தாமதம் இன்றி வழங்கவிருக்கிறோம் என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை காணி எடுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது குறித்த சட்டமூல விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போ…
-
- 0 replies
- 397 views
-
-
‘தமிழர்கள் என்பதனாலா பாராமுகம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பிரதேசத்தில் கடந்த 24 நாட்களாகப் பொதுமக்கள், தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “தமிழ் மக்கள் என்பதன் காரணமாகவா அவர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கெடுக்க, அரசாங்கம் முன்வரவில்லை. இதே, தெற்கில் உள்ள சிங்கள மக்கள் போராடியிருந்தால், அரசாங்கம் இவ்வாறு பாராமுகமாக இருக்குமா?” என்று கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்…
-
- 0 replies
- 332 views
-
-
‘சந்திரிகாவின் தகுதியை உரசி பார்க்கவேண்டும்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு, பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அவருக்கு, தற்போதைய முப்படைகளின் தற்போதைய தளபதியான ஜனாதிபதியே பதிலளிக்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, “அவருடைய தகுதியை அரசாங்கமே உரசிப்பார்க்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக்க, சர்வதேசத்தின் முன்னிலையில் தங்களுடைய இராணுவத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்ற தலைப்பிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 345 views
-
-
சீனா எப்போதுமே இலங்கையின் உண்மையான நண்பனாக இருக்கும் இலங்கையுடன் எப்போதும் உண்மையான நண்பனாக சீனா இருக்கும் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளி விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெ ளிவிவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சோங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட்…
-
- 0 replies
- 242 views
-
-
விமல் வீரவன்சவுக்கு நான் அடைக்கலம் கொடுப்பேன் விமல் வீரவன்ச தற்போது சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் தனித்தாலும் அவருக்கு அரசியலில் அடைக்கலம் கொடுப்பதற்கு நான் தயாரக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். தேசிய வளப்பாதுகாப்பு மத்திய நிலையம் நேற்று வியாழக்கிழமை நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அபயராம விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்கும் அவ்வேலைத்திட்டங்களை முகா…
-
- 1 reply
- 364 views
-