ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143394 topics in this forum
-
‘வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பு?’ ஜே.ஏ.ஜோர்ஜ் “கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பினார். தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொ…
-
- 3 replies
- 293 views
-
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சந்தேக நபர்களை தெளிவாக அடையாளம் காட்டிய சிறுவன். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேகநபர்களை 14 பேர்களுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியமான சிறுவன் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. அதன் போது சந்தேக நபர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டு இருந்தனர். …
-
- 0 replies
- 432 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதையை தாங்கிய பிரசுரம் வெளியீடு! கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின் போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை "விதை குழுமம்"தாயாரித்திருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இ…
-
- 1 reply
- 319 views
-
-
காத்தான்குடியில் தமிழ் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் காடையர் ஒருவரால் தாக்கப்பட்டார். மட்டக்களப்பு மட் /மம /காத்தான்குடி மத்திய கல்லூரியில் கற்பிக்கும் எஸ்.ராகுலன் எனும் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த (16/02/2017) வியாழக்கிழமை 7:45 மணியளவில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் இல்ல விளையாட்டுப்போட்டிக்கான இல்ல அலங்கார வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதனை இரசிக்கத்தெரியாத காடையர் அவ் அலங்கார வேலைப்பாட்டையும், விளையாட்டு இறுதிநாள் நிகழ்வையும் குழப்பும் வகையிலும் காத்தான்குடி தாருஸ்ஸலாம் வீதியில் வசித்துவருபவரும் நீர்பாசன திணைக்களத்தில் கடமைபுரியும் க.ஆ.நியாஸ் என்பவரால் குறித்த தமிழ் ஆசிரியர் …
-
- 0 replies
- 534 views
-
-
விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபர்களுக்கெதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய ம…
-
- 0 replies
- 748 views
-
-
வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். இதன்படி குறித்த 12 சந்தேகநபர்களில் 11ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று அறிவித்துள்ளார். அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமையவே குறித்த 11ஆவது இலக்க சந்தேகநபர் …
-
- 0 replies
- 421 views
-
-
இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்தால் கூட்டமைப்பிற்கு ஏமாற்றம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளி விவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது- இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க இந்திய அரசு வலியுறுத்தாது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏமாற்றத்தை ஏற்ப டுத்தியுள்ளது. …
-
- 2 replies
- 403 views
-
-
வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆ…
-
- 3 replies
- 601 views
-
-
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 4 பேர் சமூகத்துடன் இணைவு.! வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று காலை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வில் அவர்களது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப்பணியகத்தில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பணிப்பாளர் கேணல் ஹமில்டோன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வு நிலைய பயிற்சிப் பொறுப்பாளர் கேணல் சித்திரகுணதூங்க, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த குணசேகர, புனர்வாழ்வு நிலைய பின்னாய்வு அதிகாரி ஏகன் பெர்ணான்டோ, பூந்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகா…
-
- 0 replies
- 303 views
-
-
அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே கொண்டுவரப்படும் சமஷ்டி, சர்வதேச நீதிபதிகள் இல்லை என்கிறார் எஸ்.பி. (க.கமலநாதன்) சமஷ்டி முறைமையை மையப்படுத்திய அரசியலமைப்போ அல்லது சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்போ ஒருபோதும் வராது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்ற பலர் அது தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வ…
-
- 0 replies
- 335 views
-
-
காலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசுக்கினார்கள். சுமணனை அடித்தே கொன்றார்கள். சுன்னாக காவல்துறையினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் சாட்சியம். முழங்காலில் இருத்தி , இரு கைகளையும் கால்களுடன் இணைத்து கட்டி , இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி தூக்கி உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. என யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமட…
-
- 3 replies
- 317 views
-
-
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது. வன்னிப் படுகொலைக…
-
- 5 replies
- 847 views
-
-
'ஆக்கப்பூர்வமாகச் செயற்படுங்கள்' -எஸ்.என்.நிபோஜன் “போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சி யில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்போராட்டமும் பரவிபாஞ்சான் மக்களின் காணி மீட்புக்கான தொடர் பேராட்டமும், இரவு பகலாகத் தொடர்கிறது. இன்று மூன்றாவது நாளாகவும், இரண்டு போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ள அம்மக்கள் கூறியதாவது, “நாங்கள், மக்கள் பிரதிநித…
-
- 0 replies
- 220 views
-
-
மட்டக்களப்பில் ரி-56 ரக துப்பாக்கியுடன் இளைஞன் கைது.! வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குப் பயணித்த பஸ்ஸிலிருந்து ரி-56 ரகத் துப்பாக்கியொன்றை நேற்றிரவு பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பஸ்ஸில் சோதனை மேற்கொண்டு இத்துப்பாக்கியை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் தற்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரனைகளுக்காக தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/16942
-
- 0 replies
- 383 views
-
-
முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியை கண்டுப்பிடித்த காத்தான்குடி மாணவன் : அமெரிக்கா சென்று சாதிக்க வேண்டும் என்கிறார் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார். இவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். முழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையத…
-
- 0 replies
- 214 views
-
-
காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.! ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள நிலங்களை மீளத்தரக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையம் முன் ஆரம்பமான மேற்படி ஆர்ப்பாட்டம், பின்னர் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு ப…
-
- 0 replies
- 234 views
-
-
ஜெனிவா செல்கிறது உயர்மட்ட தூதுக்குழு (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் அக்கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்வதற்கு தயாராகிவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான ன குழுவினரே இந்தக்இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் தலைமைவகித்து கலந்துகொள்ளவுள்ளனர். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா செல்லவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர 28 ஆம் திகதி ஜெனிவாவில் உரையாற்றவுள்ளார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின…
-
- 0 replies
- 252 views
-
-
""இராணுவப்பிடிக்குள் ஜனாதிபதி உள்ளாரா?'' (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்திரமான தீர்மானம் எடுக்க முடியாதிருப்பதானது அவர் இராணுவ பிடிக்குள் இருக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சந்தேகம் வெளியிட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தனது உரையில் மேலும் தெரிவ…
-
- 1 reply
- 391 views
-
-
அவலங்களுடன் தொடர்கிறது போராட்டம் யாழ்.பல்கலை மாணவர்கள் நேரில் சென்று ஆதரவு (கே.குமணன்) கேப்பாப்புலவு பிலக்குடியி ருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி முன்னெடுத் துவரும் தொடர் போராட்டம் நேற் றும் தொடர்ந்தது. போராட்டத்தின் 22 ஆவது நாளான நேற்று யாழ்.பல் கலைக் கழக மருத்துவபீட மாணவர்கள் போராட்டக்களத்துக்கு வருகைதந்து மக்களுக்கான ஆதரவினை தெரிவித்தனர். அத்துடன் உதவி பொருட்களையும் வழங்கி வைத்தனர். தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களுடன் இணைந்து விமானப்படை முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மாணவர்கள் முன்னெடுத்தனர். இந்நிலையில் போராட்…
-
- 0 replies
- 275 views
-
-
'யுத்த அங்கவீனர்களை கணக்கிட காலம் தேவை’ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிநின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இ…
-
- 0 replies
- 203 views
-
-
‘தனியார் நீதிமன்றமா, இது கூடத் தெரியாதா?’ -ஜே.ஏ.ஜோர்ஜ் ‘”உலகில் எந்த நாட்டிலும் நீதித்துறையை தனியார் மயப்படுத்தும் முறை இல்லை. இதனைக் கூட அறியாதவர்கள் உள்ளமைதான், மக்கள் விடுதலை முன்னணியின் இன்றைய நிலைக்கு காரணம்” என, சபைமுதல்வரும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் தொடரந்து கூறுகையில், “இலங்கையில் கல்விகற்கும் மருத்துவ மாணவர்கள், பட்டம் பெற்றதும் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுவதால் தான், நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுபாடு நிலவுகின்றது. அதன்காரணமாகத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இடமளிக்க வேண்டியுள்ளது” என்றார். அதன்போது குறுக்கிட்டுக் கேள்வியெழுப்பிய பிமல் …
-
- 0 replies
- 189 views
-
-
‘கிளி, முல்லையில் நகர சபையே இல்லை’ ஜே.ஏ.ஜோர்ஜ் நாட்டில் இருக்கின்ற 25 மாவட்டங்களுக்கும் நகர சபைகள் இருக்கின்றன. எனினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரு நகர சபையேனும் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம், வட மாகாண சபையின் கீழுள்ள, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்குரிய மடு, ஒட்டுசுட்டான், கண்டாவளை மற்றும் மருதகேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக…
-
- 0 replies
- 274 views
-
-
விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார் மத்திய வங்கி ஆளுநர் விசாரணைகள் இன்றும் தொடரும் (பா.ருத்ரகுமார்) மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின. மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியின் சாட்சிப் பதிவோடு இந் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வ தற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை அணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவி கணக்காய்வாளர் நாயகம் கே. வேலுப்…
-
- 0 replies
- 196 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாடு தேவை அமெரிக்க காங்கிரஸ் குழுவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உங்களின் கோரிக்கைகள், இலங்கை குறித்த அவதானங்கள் உள்ளிட்ட விடயதானங்களடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வாஷிங்டனுக்கு சமர்ப்பிப்போம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ்குழு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜ யம் மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமெரிக்க காங்கிரஸ் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அமெரிக்க சபை ஜனநாயக …
-
- 0 replies
- 323 views
-
-
'படம்பிடித்து அச்சுறுத்தவில்லை' மேனகா மூக்காண்டி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களைப் படம்பிடிக்கவோ அல்லது வீடியோப் பதிவு செய்யவோ, பாதுகாப்புத் தரப்பு உத்தரவிடவில்லை. அத்துடன், முகாம் தேவைக்காக, அங்கிருக்கும் படையினர் புகைப்படம் எடுத்திருக்கலாமே தவிர, அது பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என்று, பாதுகாப்புத் தரப்பு, நேற்றுத் தெரிவித்தது. “படை முகாம் என்பது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெளியிலிருந்து படை முகாமுக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தேவையும், அம்முகாமில் உள்ள அதிகாரிகள் வசம் உள்ளது. அதனால், தங்களது பாதுகாப்புக்காக அவர்கள் ப…
-
- 0 replies
- 476 views
-