ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு நாளை வழங்கப்படவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விசேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மா…
-
- 0 replies
- 213 views
-
-
தமிழ் பேசும் பொலிஸ் இல்லை -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பொருட்டு பொலிஸ் நிலையத்;துக்குச் செல்லும் பொதுமக்கள், நீண்டநேரம் காத்து நின்றே, தமது முறைப்பாடுகள…
-
- 0 replies
- 208 views
-
-
மலையகத்தில் தேசிய தைப்பொங்கல் விழா : பிரதமர் பங்கேற்பு மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், பழனி திகாம்பரம், இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புகைப்பட தொகுப்பு http://www.virakesari.lk/article/15431
-
- 0 replies
- 168 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன். அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களு…
-
- 5 replies
- 646 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண விஹாரைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பௌத்த விஹாரைகள், பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. வீதிகளில் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் பௌத்த சிலைகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திருகோணமலையில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சிலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.ne…
-
- 2 replies
- 477 views
-
-
மைத்திரியின் முட்பாதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தின் முற்பகுதியைக் கடந்து, நடுப்பகுதிக்குள் நகர்ந்திருக்கி றார். ஆறு ஆண்டுகளைக் கொண்ட அவ ரது பதவிக்காலம், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகியது. 2017 ஜன வரி 08ஆம் திகதியுடன், அவரது முதல் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தபோன இரண்டு ஆண்டுகளும், வரவிருக்கும் நான்கு ஆண்டுகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் சாதாரணமானவையல்ல. சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் நடு வில் தான், எஞ்சியுள்ள நான்கு ஆண்டு களையும் கூட அவர் எதிர்கொள்ளப் போகிறார். ஏனென்றால், இதற்கு …
-
- 0 replies
- 241 views
-
-
சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உள்வாங்கும் மறுசீரமைப்புகளுக்கு தயார் பொதுநலவாய அமைப்பு உறுதி லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையில் மறுசீரமைக்கப்பட்டு வரும் புதிய அரசியலமை ப்புக்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிவில் மற்றும் குற்றவியல், நீதி மறுசீரமைப்பு தொடர்பான பொதுநலவாய அலுவலகம் ஒன்றை நிறுவது தொடர்பிலும் பொதுநல வாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போதே பொதுநலவாய அமைப்பின் செய…
-
- 0 replies
- 188 views
-
-
ஓமந்தையிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான, நுழைவாயிலாகவும் மக்களையும் பொரு ட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது. இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இக்காணியின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக தமது காணிகளை மீள் ஒப்ப டைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நடவடிக்கை யில்…
-
- 0 replies
- 451 views
-
-
மீட்கப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு மாலைதீவிலிருந்து பிரதியமைச்சர் ஹரீஸ் எம்.நேசமணி மீன்பிடிக்கச் சென்று கடந்த டிசம் பர் 24 ஆம் திகதி காணாமல் போய் மாலைதீவில் மீட்கப்பட்ட கல்முனயைச் சேர்ந்த ஆறு மீனவர்களை யும் கடல் மார்க்கமாக மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் சகல ஏற்பாடுகளை யும் மாலைதீவு அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். மாலைதீவு ஜனாதிபதி மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின் னரே குறித்த மீனவர்களை மீண்…
-
- 0 replies
- 303 views
-
-
இராணுவத்தையும் அரசியல் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்ப அரசாங்கம் சதி முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண குற்றச்சாட்டு எம்.சி.நஜிமுதீன் நல்லாட்சி அரசாங்கம் இலங்கை இராணுவத்தை மாத்திரமல்லாமல் அரசியல் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றுக்கு பாரம்சாட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுக்கும் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர் பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த துரோகச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை ச…
-
- 0 replies
- 276 views
-
-
வலி. வடக்கு ஊறணியை முழுமையாக விடுவித்து மீள்குடியேற்றத்தை ஏற்படுத்துங்கள் பிரதேச மக்கள் கோரிக்கை - எம்.நியூட்டன் - வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊறணிப் பிரதேசத்தை முழுமையாக விடு வித்து மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊறணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிகாமம் வடக்கு ஊறணி கடற்கரைப் பகுதி 27 வருடங்க ளின் பின்னர் இராணுவக்கட் டுப்பாடு தளர்த்தப்பட்டு நேற் றைய தினம் மீன்பிடி நடவடிக்கைக்காக அனுமதி வழங்கப்பட் டிருந்தது. யாழ்.மாவட்ட அரசாங்க அதி பர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மக் களே மேற்கண்டவாறு கோரிக் கை விடுத்துள்ளனர். அவர்கள…
-
- 0 replies
- 169 views
-
-
நிலக்கண்ணிவெடி குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பு நிலக்கண்ணிவெடி குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை பத்து மாதங்களுக்கு முன்னதாக இணக்கம் வெளியிட்டிருந்த போதும் இந்த பிரகடனத்தை இலங்கையில் அமுல்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கு கண்ணி வெடிகள் மிகவும் அவசியமானவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி இந்த பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. வ…
-
- 0 replies
- 236 views
-
-
சமஸ்டி வழங்கப்படாது – ஜனாதிபதி சமஸ்டி முறைமை ஆட்சி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் கூறுவதனைப் போன்று சமஸ்டி முறை ஆட்சியை வழங்கப் போவதுமில்லை எனவும் நாட்டின் காணி நிலங்களை விற்பனை செய்யப் போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை அரசாங்கத்திற்கு கிடைக்க இருப்பதனால் இவ்வாறு பொய்ப் பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சமஸ்டி முறை ஆட்சியை ஏற்படுத்தவே ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகின்றது என சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 362 views
-
-
யாழ் போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு யாழ் போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடு தொடர்பாக மனித உரிமை அமைப்பின் யாழ்.அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகியிருந்தன. இதில் இரு முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்ததுடன் ஓரு முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்தார். மற்றைய முச்சக்கர வண்டியை யாழ் போக்குவரத்துத்துறை பொலிஸார் துரத்திவந்ததே விபத்துக்கு காரணம் என காயமடைந்த சாரதி தெரிவித்தார். …
-
- 0 replies
- 210 views
-
-
மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..! நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வ…
-
- 6 replies
- 963 views
-
-
விடைபெறுகிறார் நிஷாபிஸ்வால் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெற வுள்ளார். வரும் 20ஆம் நாள், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் பதவியேற்கவுள்ளார். அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கமைய, கடந்த மூன்றரை ஆண்டுகளாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணி யாற்றிய, நிஷா பிஸ்வாலுக்குப் பதிலாக பு…
-
- 0 replies
- 616 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை மீள பெறும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தம் இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை,இலங்கை பெற்றோ லியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளார். இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரையில், இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் அறிவு றுத்தியுள்ளார். பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 201 views
-
-
கடும் குளிரான காலநிலை எவ்வளவு காலம் தொடரும்..? : காலநிலை அவதான நிலையம் தகவல் நாட்டில் தற்போது அதிகாலை வேளையில் நிலவும் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பினனர் குறைவடையும் சாத்தியமுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.பிரேமலால் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிருடன் கூடிய காலநிலையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஏனெனில் தற்போது இந்தியாவூடாகச் செல்லும் காற்றே இலங்கைக்கும் கிடைக்கிறது. அக்காற்ற…
-
- 0 replies
- 179 views
-
-
குண்டு, துப்பாக்கியுடன் காட்டில் வசித்த கணவன் மனைவி கைது : வவுனியாவில் சம்பவம் வுனியாவில் நேற்று (13) இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஓமந்தைப் பொலிசார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்களிடமிருந்து கைக்குண்டு இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இரு…
-
- 0 replies
- 160 views
-
-
27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர். இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர். இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீர…
-
- 7 replies
- 848 views
-
-
மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவரவா சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுகின்றது? டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்கிறார் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறையை நீக்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தினால் அரசியல் தீர்வை பெறுவதற்கான இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம். அத்துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக உருவெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். சர்வஜன வாக்கெ…
-
- 1 reply
- 263 views
-
-
ரட்ணசிறியின் வீடு சம்பந்தனுக்கு கையளிப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட…
-
- 13 replies
- 789 views
-
-
எம்.ஜீ. ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் கல்வியங்காட்டில் யாழ்ப்பாணம் எம். ஜீ. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜீ.ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர் சிலையருகே நடைபெறவுள்ளது. ஈழத்து எம். ஜீ. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக இந்திய உதவி உயர்ஸ்தானிகரக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எம். ஜீ. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு புத்தாடைகளும், அன்பளிப்புகளும் வழங்கப்…
-
- 0 replies
- 308 views
-
-
சம்பந்தனின் கோரிக்கைகள் என்றும் நிறைவேறாது (க.கமலநாதன்) புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர். இருப்பினும் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பினை அடுத்த ஆட்சியிலேயே கொண்டுவர முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் …
-
- 0 replies
- 262 views
-
-
எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள்…
-
- 10 replies
- 1.7k views
-