Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது. அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது…

  2. கட்டாக்காலி கால்நடைகளால் அசுத்தமடையும் பண்ணை பொழுதுபோக்கு மையம் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையம் அசுத்தமடைவதாக அங்கு வருகை தருவோர் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையத்தில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் உலாவுவதாகவும் அவை எச்சங்களை இட்டுச்செல்வதால் குழந்தைகள் அங்கு உள்ள மணல்பரப்பில் விளையாடு வதால் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் உரிய கவனம் செலுத்தி கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாற…

  3. கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது : கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா். யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது. இந்தநிலையில் துயிலும…

  4. ஜனவரி 21இல் எழுக தமிழ் -கே.எல்.ரி.யுதாஜித் “ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வட, கிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ் 2017” தொடர்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் எழ…

  5. யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது வனத்திவிமித்ரு எனும் வனவளபாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(05) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் போது உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே எம்மிடமுள்ள இயற்கை வளங்களை அழியாது பாதுகாக்க தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஷாந்த, கால்நடை வைத்தியர் பி.கிரிதர் மற்றும் துறைசார் அதிகாரிகள் இக்க…

    • 1 reply
    • 381 views
  6. ஆலய திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர். குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இன்று கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள…

  7. கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது – ஐ.நா ஆணையாளர் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கப்பொறிமுறைமை குறித்த விசேட செயலணியினால் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் அடிப்படையில் நீதி விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமெனவும், நீதவான் குழாமில் ஒருவரேனும் வெளிநாட்டு நீதவானாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதி விசாரணைப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற அமைப்பு அவசியமானது என்ப…

  8. ஆசியாவின் சிறந்த ஆண் மொடலுக்கான விருது இலங்கையருக்கு! 2017ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஆண், பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர். சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன. இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் க…

  9. ஒரே நேரத்தில் வெளிநாடு சென்ற 14 மருத்துவர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சீ.ஐ.டியில் முறைப்பாடு.! மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தார். அண்மையில் குறித்த 14 மருத்துவர்களும் நோர்வே நாட்டில் நடைபெறும் கருத்தரங்கொன்றில்; கலந்து கொள்வதாக கூறி சென்றுள்ளனர். ஆனாலும் அவர்களது உத்தியோகப்பூர்வமான விஜயம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளார். …

  10. வெளிநாடு செல்லும் பயணிகளை ஐந்து மணிநேரம் முன்னதாக வருகை தர கோரிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது. காலை 8 மணிதொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலவு செய்யப்படவுள்ளதா…

  11. மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த அம்பியூலன்ஸில் வந்தார்.! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளும் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாக துமிந்த சில்வாவுக்கு எதிராக இந்த வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலையிலிருந்து அம்பியூலன்ஸ…

  12. மட்டக்களப்பில் பாதை போடுவதாக கூறி சிறிய வடிகான் கட்டியுள்ளதாக மக்கள் விசனம் உறுகாமம் அம்மன் கோவில் வீதியில் கொங்கிறீட் இடப்பட்டு பாதை அமைக்கப் பட்டுள்ளது ஆனால் ஒரு சிறிய வடிகான் 2 மதவு மட்டுமே இதில் புனரமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கின்ற போது இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர். பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் வருகின்றனர், பார்க்கின்றனர், போகின்றனர் இது தொடரபாக வினா எழுப்பினால் இது உங்களது பிரச்சினை இல்லை எங்களது பிரச்சினை என்று திருப்பியனுப்புவதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

  13. பாதாள உலகக்குழு நபர் 'ரத்தரன்' சற்றுமுன்னர் சுட்டுக்கொலை பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'ரத்தரன்' என அழைக்கப்படும் குமார எலியாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொட , களனிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/15104

  14. சி.ஐ.டி. என தம்மை அடையாளப்படுத்தியவர்களால் முல்லைத்தீவில் துணிகர திருட்டு முல்லைத்தீவு நகர், செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற நான்குபேர் கொண்ட குழுவினரால் 60 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வீட்டு நபருடைய பெயரைச்சொல்லி கூப்பிட்டபடி தாம் சி.ஐ.டி. யினர் எனவும் விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பில் தங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று நான்குபேரை கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்களில் இருவர் வெளியில் நிற்கவே இருவர் வீட்டிற்குள் நுழைந்து "விடுதலைப்புலிகளின் பணத்தை பயன்படுத்தியே உங்களின் மகனை வெளிநாடு அனுப்பியுள்ளீர்கள்" என்று மிரட்டியுள்ள…

  15. பதுளை - பசறை பகுதியில் சமய நிகழ்வுகளுக்காக அனுமான் வேடம் தரித்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள கோவிலில் அனுமான் வேடம் தரித்து நடனமாடி வந்த விஸ்வராஜ் பிரபு தேவா என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். குறித்த விளையாட்டில், அனுமான் வேடம் போட்ட மாணவன் மரத்திலிருந்து பாய்ந்த போதே உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இவ்வாறு அனுமான் வேடம் தரித்து இந்த விளையாட்டில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/community/01/130464?ref=right_featured

    • 2 replies
    • 411 views
  16. யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெற்றது. இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின…

  17. வட கிழக்கு முஸ்லிம்களினுடைய பூர்வீக காணிகளை திருப்பி ஒப்படைப்பதே முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெர்வித்த விரிவான விளக்கங்கள் உடனான காணொளி.

    • 1 reply
    • 208 views
  18. புதிய அரசமைப்பு உருவாக்கம் பாரிய முட்டுக்கட்டையான நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி பாரிய முட்டுக்கட்டை நிலையை எதிர்கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்து ள்ளது. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் பாரிய முட்டுக்கட்டை நிலையை சந்தித்து ள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கருத்தறியும் குழுவினர் நாடாளாவிய ரீதியில் மேற்கொண்ட கருத்து திரட்டலை கைவிட்டு விட்டு புதிய அரசமை ப்பின் வடிவம் தொடர்பில் பொதுமக்களிடம் மீண்டும் ஆலோசனைகளைப் பெறப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மதத்தின் உயர் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். …

  19. ஆச்சரியத்தை ஏற்படுத்திய மரணத்தண்டனை கைதியின் செயல் : இலங்கையில் வரலாற்றுச் சம்பவம் மொஹமட் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் இளமானி பட்டதாரி கல்வியை முடித்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதியொருவர் பட்டதாரி கல்வியை முடித்துள்ளமையானது சிறைச்சாலைகள் வரலாற்றில் இதுவே முதற்தடவையென சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. குறித்த பட்டப்படிப்பினை பூர்த்திசெய்துள்ளவர் லக்மினி இன்டிக பமுனுசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் கைதுசெய்யப்படும் போது அவர் குறித்த இளமானி பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் வைத்து அவர் கல்…

  20. தூக்குக்கயிறை நெருங்கும்போது மஹிந்த குடும்பம் எதையாவது செய்யும் தொங்கினாலும் அரசாங்கம் கவிழாது என்கிறார் அமைச்சர் (ரொபட் அன்­டனி) மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்­பத்­தினர் சிறை­க­ளுக்கும் தூக்குக்கயி­றுகள் இருக்கும் இடத்­திற்கும் செல்­லப்­போகும் நாட்கள் நெருங்­கிக்­கொண்­டி­ருக்கும் போது அவர்கள் எதை­யா­வது ஒரு விட­யத்தை கையில் எடுத்து இவ்­வாறு தூக்­கிப்­பி­டிப்­பார்கள். எதிர்ப்­பு­க்களை கிளப்­பு­வார்கள் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சாங்கம் தொங்­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. ஆனால், அர­சாங்கம் ஒரு­போதும் வீழ்ந்­து­வி­டாது. தொங்­கிக்­கொண்டு இருக்­கின்ற அனைத்தும் வீழ்ந்­து­விட்டால்…

  21. பேரு­வளை கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் கோத்­தாவே முழு­மை­யாக செயற்­பட்டார் கோத்­தா­வுக்கு அஞ்­சியே மஹிந்த இருந்தார்; பகிரங்கமாக அறிவித்தார் ராஜித (ரொபட் அன்­டனி) பேரு­வளை கல­வ­ரத்­திற்குப் பின்னால் முன் னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே செயற்­பட்டார் என்­பதை பகி­ரங்­க­மாக கூறு­கிறேன். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் கட்­ட­ளையின் பேரில் அனுர சேன­நா­யக்­கவே வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கினார் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு மஹிந்த ராஜ­பக் ஷ பயந்­து­கொண்டே இருந்தார். மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்தும் கோத்­தா­விற்கு பயந்­து­கொ…

  22. தேசிய அரசாங்கமானது ஸ்திரமாகவே உள்ளது எம்.பி.பதவியைப் பாதுகாக்க மஹிந்த முயற்சி (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. எமக்குள் பிள­வினை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்கின்­றனர். நானும் ஜனா­தி­ப­தியும் ஐக்­கி­யத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம். எமது அபி­வி­ருத்திப் பய­ணத்தை ஒரு­போதும் தடுத்து நிறுத்த முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்ந்தும் பாது­காக்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இந்த வரு­டத்தில் 'எட்கா' ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும். அதே­போன்று சீனா, சிங்­கப்பூர், ஜப்பான் , பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் வர்த்­தக உடன்­ப­…

  23. சீனாவுடன் காேபம் இல்லை - ஆட்சியை கவிழ்ப்பேன் : மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சூளுரை (லியாே நிராேஷ தர்ஷன்) அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது குறிப்பாக சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து காெள்கையற்ற தற்பாேதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீதே கடும் காேபமும் சாபமும் காணப்படுகின்றதே தவிர , சீனா உள்ளிட்ட எந்தவாெரு வெளிநாட்டுடனும் தமக்கு பிரச்சிைனையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு அல…

  24. நல்லிணக்க செயலணியின் பரிந்துரையை நிராகரித்தது அரசாங்கம் உள்ளக விசாரணையில் கலப்பு நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிபதி உள்வாங்கப்பட வேண்டும் என நல்லிணக்க செயலணி முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை ஏற்பதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன அரசின் மேற்படி நிலை ப்பாட்டை அறிவித்தார் யார் எவ்வகையான பரிந்துரைகளை முன்வைத்தாலும் அதனை ஏற்பதா? இல்லையா? என்பது பற்றி அமைச்சரவையே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அமைச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.