ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரித்து வந்த ஊழல், மோசடிகள் தொடர்பான 76 சம்பவங்கள் பற்றிய ஆவணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால், நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் 14 ஆவணங்களே எஞ்சியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர பிரேமசாந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொனராகலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரேமசாந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவிக்கு தகுதியானவர் எனவும் அவரை அந்த பதவியில் நீடிக்குமாறு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அத…
-
- 0 replies
- 383 views
-
-
இலங்கையில் பாரிய தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மைய நாட்களில் ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலைக்காக 11 பில்லியன் ரூபா நிதி நந்தன ஜயதேவ லொக்குவிதான என்ற உள்ளூர் வர்த்தகரினால் முதலீடு செய்யவுள்ளதாக கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் வைக்கும் நிகழ்விற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதால் ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. ராஜபக்சர்கள் தவறான முறையில் சம்பாதித்த கோடிகணக்கிலான பணத்தை நந்தன லொக்குவித்தானவி…
-
- 0 replies
- 326 views
-
-
இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டு கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐயப்பன் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய விரதங்களில் ஒன்றாகிய ஐயப்பன் விரதம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரதம் அனுஸ்டிப்பவர்கள் தமது நேர்த்தியை நிறைவு செய்ய இந்தியாவின் சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐயப்பன் பக்தர்கள் இந்தியாவின் சபரி மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் சிறிலங்கன் எயார் லைன்ஸ் இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை சடுதியாக உயர்த்தியுள்ளது. சாதாரணமாக 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த இந்திய விமானச்சீட்டு கட்டணம் தற்போது ஐயப்பன் விரத காலத்தில் 40 ஆயிரத்திற்கு மே…
-
- 0 replies
- 408 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது. அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது…
-
- 5 replies
- 466 views
-
-
கட்டாக்காலி கால்நடைகளால் அசுத்தமடையும் பண்ணை பொழுதுபோக்கு மையம் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லையால் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையம் அசுத்தமடைவதாக அங்கு வருகை தருவோர் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு மையத்தில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் உலாவுவதாகவும் அவை எச்சங்களை இட்டுச்செல்வதால் குழந்தைகள் அங்கு உள்ள மணல்பரப்பில் விளையாடு வதால் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் உரிய கவனம் செலுத்தி கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாற…
-
- 0 replies
- 271 views
-
-
கிளிநொச்சி மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவு சமாதி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது : கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளனா். யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னா் கடந்த வருடம் மாவீரா் நாள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும் அப்போது வெறும் தரையில் சிதைக்கப்பட்ட கல்லறை மற்றும் நினைவுக் கற்களின் எச்சங்களை குவித்து அதன் முன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது. இந்தநிலையில் துயிலும…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜனவரி 21இல் எழுக தமிழ் -கே.எல்.ரி.யுதாஜித் “ஜெனிவாவில் எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வட, கிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு நகரிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ் 2017” தொடர்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் எழ…
-
- 0 replies
- 364 views
-
-
யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது வனத்திவிமித்ரு எனும் வனவளபாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(05) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் போது உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே எம்மிடமுள்ள இயற்கை வளங்களை அழியாது பாதுகாக்க தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஷாந்த, கால்நடை வைத்தியர் பி.கிரிதர் மற்றும் துறைசார் அதிகாரிகள் இக்க…
-
- 1 reply
- 382 views
-
-
ஆலய திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர். குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இன்று கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள…
-
- 0 replies
- 543 views
-
-
கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது – ஐ.நா ஆணையாளர் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கப்பொறிமுறைமை குறித்த விசேட செயலணியினால் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் அடிப்படையில் நீதி விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமெனவும், நீதவான் குழாமில் ஒருவரேனும் வெளிநாட்டு நீதவானாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதி விசாரணைப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற அமைப்பு அவசியமானது என்ப…
-
- 0 replies
- 433 views
-
-
ஆசியாவின் சிறந்த ஆண் மொடலுக்கான விருது இலங்கையருக்கு! 2017ஆம் ஆண்டுக்கான ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில், இலங்கையின் ஆண், பெண் மொடல்கள் உட்பட மூன்று பேர் விருது பெற்றுள்ளனர். சீனாவின் ச்சொங்கிங்கில் கடந்த 27ம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்து கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை, இந்தியா, நேபாள் ஆகிய தெற்காசிய நாடுகளும் கலந்துகொண்டன. இலங்கை சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உட்பட, மேற்படி நாடுகளின் நவநாகரீக ஆடை, அணிகலன் உற்பத்தித் துறையின் பிரதிநிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் க…
-
- 0 replies
- 597 views
-
-
ஒரே நேரத்தில் வெளிநாடு சென்ற 14 மருத்துவர்களுக்கு எதிராக அமைச்சர் ராஜித சீ.ஐ.டியில் முறைப்பாடு.! மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 14 மருத்துவர்கள் வெளிநாட்டு மாநாடொன்றில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தார். அண்மையில் குறித்த 14 மருத்துவர்களும் நோர்வே நாட்டில் நடைபெறும் கருத்தரங்கொன்றில்; கலந்து கொள்வதாக கூறி சென்றுள்ளனர். ஆனாலும் அவர்களது உத்தியோகப்பூர்வமான விஜயம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளார். …
-
- 0 replies
- 270 views
-
-
வெளிநாடு செல்லும் பயணிகளை ஐந்து மணிநேரம் முன்னதாக வருகை தர கோரிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளது. காலை 8 மணிதொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு 5 மில்லியன் டொலர் செலவு செய்யப்படவுள்ளதா…
-
- 0 replies
- 263 views
-
-
-
- 0 replies
- 386 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த அம்பியூலன்ஸில் வந்தார்.! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளும் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாக துமிந்த சில்வாவுக்கு எதிராக இந்த வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலையிலிருந்து அம்பியூலன்ஸ…
-
- 0 replies
- 198 views
-
-
மட்டக்களப்பில் பாதை போடுவதாக கூறி சிறிய வடிகான் கட்டியுள்ளதாக மக்கள் விசனம் உறுகாமம் அம்மன் கோவில் வீதியில் கொங்கிறீட் இடப்பட்டு பாதை அமைக்கப் பட்டுள்ளது ஆனால் ஒரு சிறிய வடிகான் 2 மதவு மட்டுமே இதில் புனரமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கின்ற போது இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர். பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் வருகின்றனர், பார்க்கின்றனர், போகின்றனர் இது தொடரபாக வினா எழுப்பினால் இது உங்களது பிரச்சினை இல்லை எங்களது பிரச்சினை என்று திருப்பியனுப்புவதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 213 views
-
-
பாதாள உலகக்குழு நபர் 'ரத்தரன்' சற்றுமுன்னர் சுட்டுக்கொலை பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'ரத்தரன்' என அழைக்கப்படும் குமார எலியாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொட , களனிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/15104
-
- 0 replies
- 284 views
-
-
சி.ஐ.டி. என தம்மை அடையாளப்படுத்தியவர்களால் முல்லைத்தீவில் துணிகர திருட்டு முல்லைத்தீவு நகர், செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற நான்குபேர் கொண்ட குழுவினரால் 60 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வீட்டு நபருடைய பெயரைச்சொல்லி கூப்பிட்டபடி தாம் சி.ஐ.டி. யினர் எனவும் விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பில் தங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று நான்குபேரை கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்களில் இருவர் வெளியில் நிற்கவே இருவர் வீட்டிற்குள் நுழைந்து "விடுதலைப்புலிகளின் பணத்தை பயன்படுத்தியே உங்களின் மகனை வெளிநாடு அனுப்பியுள்ளீர்கள்" என்று மிரட்டியுள்ள…
-
- 0 replies
- 189 views
-
-
பதுளை - பசறை பகுதியில் சமய நிகழ்வுகளுக்காக அனுமான் வேடம் தரித்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள கோவிலில் அனுமான் வேடம் தரித்து நடனமாடி வந்த விஸ்வராஜ் பிரபு தேவா என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். குறித்த விளையாட்டில், அனுமான் வேடம் போட்ட மாணவன் மரத்திலிருந்து பாய்ந்த போதே உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இவ்வாறு அனுமான் வேடம் தரித்து இந்த விளையாட்டில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/community/01/130464?ref=right_featured
-
- 2 replies
- 412 views
-
-
யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி" எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெற்றது. இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின…
-
- 11 replies
- 856 views
-
-
வட கிழக்கு முஸ்லிம்களினுடைய பூர்வீக காணிகளை திருப்பி ஒப்படைப்பதே முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெர்வித்த விரிவான விளக்கங்கள் உடனான காணொளி.
-
- 1 reply
- 209 views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்கம் பாரிய முட்டுக்கட்டையான நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி பாரிய முட்டுக்கட்டை நிலையை எதிர்கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்து ள்ளது. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் பாரிய முட்டுக்கட்டை நிலையை சந்தித்து ள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கருத்தறியும் குழுவினர் நாடாளாவிய ரீதியில் மேற்கொண்ட கருத்து திரட்டலை கைவிட்டு விட்டு புதிய அரசமை ப்பின் வடிவம் தொடர்பில் பொதுமக்களிடம் மீண்டும் ஆலோசனைகளைப் பெறப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மதத்தின் உயர் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 188 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய மரணத்தண்டனை கைதியின் செயல் : இலங்கையில் வரலாற்றுச் சம்பவம் மொஹமட் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவர் இளமானி பட்டதாரி கல்வியை முடித்துள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதியொருவர் பட்டதாரி கல்வியை முடித்துள்ளமையானது சிறைச்சாலைகள் வரலாற்றில் இதுவே முதற்தடவையென சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. குறித்த பட்டப்படிப்பினை பூர்த்திசெய்துள்ளவர் லக்மினி இன்டிக பமுனுசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் கைதுசெய்யப்படும் போது அவர் குறித்த இளமானி பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் வைத்து அவர் கல்…
-
- 0 replies
- 441 views
-
-
தூக்குக்கயிறை நெருங்கும்போது மஹிந்த குடும்பம் எதையாவது செய்யும் தொங்கினாலும் அரசாங்கம் கவிழாது என்கிறார் அமைச்சர் (ரொபட் அன்டனி) மஹிந்த ராஜபக் ஷவின் குடும்பத்தினர் சிறைகளுக்கும் தூக்குக்கயிறுகள் இருக்கும் இடத்திற்கும் செல்லப்போகும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் போது அவர்கள் எதையாவது ஒரு விடயத்தை கையில் எடுத்து இவ்வாறு தூக்கிப்பிடிப்பார்கள். எதிர்ப்புக்களை கிளப்புவார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கம் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அரசாங்கம் ஒருபோதும் வீழ்ந்துவிடாது. தொங்கிக்கொண்டு இருக்கின்ற அனைத்தும் வீழ்ந்துவிட்டால்…
-
- 0 replies
- 195 views
-
-
பேருவளை கலவரத்தின் பின்னணியில் கோத்தாவே முழுமையாக செயற்பட்டார் கோத்தாவுக்கு அஞ்சியே மஹிந்த இருந்தார்; பகிரங்கமாக அறிவித்தார் ராஜித (ரொபட் அன்டனி) பேருவளை கலவரத்திற்குப் பின்னால் முன் னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக் ஷவே செயற்பட்டார் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். கோத்தபாய ராஜபக் ஷவின் கட்டளையின் பேரில் அனுர சேனநாயக்கவே வன்முறையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கோத்தபாய ராஜபக் ஷவுக்கு மஹிந்த ராஜபக் ஷ பயந்துகொண்டே இருந்தார். மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தும் கோத்தாவிற்கு பயந்துகொ…
-
- 0 replies
- 245 views
-