ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
வடக்கு மாகாணத்தின் செயற்பாடுகளுக்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ இணங்காமையினாலேயே வடக்கு மாகாணசபையினால் பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2013ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையை அமைப்பதற்கு முன்னர், மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ அதனைத் தான்தோன்றித் தனமாகப் புறக்கணித்தார். …
-
- 0 replies
- 383 views
-
-
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் யாழில்… யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடைபெற்றது. இம் மருத்துவ முகாமில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் பயன்பெற்றனர். யுத்தத்தினாலும் விபத்துக்களினாலும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளுக்குரிய டெற்ரோல் > ஓடிக்கலோன்> லைபோய்சோப் > செவ்எக்சல் முதலான பொருள்க…
-
- 0 replies
- 263 views
-
-
நாங்கள் கொண்டுவந்த அரசாங்கம் என்று கூறுகின்றனர்,நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை என்கின்றனர்.எங்களால்தான் முதலமைச்சர் வந்தார் என்கின்றார்கள். வேலைநடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள்.இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். நேற்று புதன்கிழமை பிற்பகல் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீன்பிடியாளர்கள் மற்று பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமத…
-
- 1 reply
- 515 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது, அவர் 2015ல் செய்த நிதி மோசடிகள் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறதே, அப்படியானவரை ஏன் தொடர்ந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபராக வைத்திருக்கிறீர்கள் என மட்டக்களப்பில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் கேட்டேன். அவர் குற்றம் செய்திருந்தாலும் அவரை இடமாற்றம் செய்த மாட்டார்கள் என அவர் உறுதியாக சொன்னார். அவருக்கு வருடாந்த இடமாற்றம் 2017 ஜனவரியில் வர இருந்தது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் அவரின் இடமாற்றம் தடுக்கப்பட்டிருக்கிறது என அந்த அரசியல் பிரமுகர் கூறினார். தமிழ் பிரதேசங்களின் அரச அதிகா…
-
- 0 replies
- 406 views
-
-
இந்த ஆண்டில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை தேசிய இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நிலையானதும், நிரந்தரமானதுமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் பிளவடைய விரும்பக் கூடாது எனவும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து தரப்பினரும் இணைந்து வாழவும…
-
- 6 replies
- 537 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டத்தைக் கூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுத்ததற்கமையவே இக்கூட்டம் கூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டமொன்றுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்தபோது அந்த அழைப்பு இரா.சம்பந்தனால் தட்டிக்கழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே தற்போது எதிர்வரும் 6ஆம்…
-
- 8 replies
- 690 views
-
-
மட்டக்களப்பில் விபத்துகள் காரணமாக 59 பேர் உயிரிழப்பு : 300 பேர் காயம் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வீதி விபத்துகள் காரணமாக 59 பேர் உயிரிழந்ததுடன், 300 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார். வீதி விபத்துகளை இல்லாமல் செய்யும் செயற்றிட்டம் காத்தான்குடியில் நேற்று முன்னெடுக்கப்பட்டபோதே, அவர் இதனைக் கூறினார். இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களாக சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் எனப் பலரும் அடங்குகின்றனர். வாகன விபத்துகளில் சிக்கிய பலர் அங்கவீனர்களாகியுள்ளனர். எனவே, வாகன விபத்துகளை இல்லாமல் செய்வதற்கு சமூக மட்டத்தில் விழிப்புணர்வு அவசியம் எனவும் அவர் கூ…
-
- 0 replies
- 131 views
-
-
2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றம் முக்கியமானது – நா.வேதநாயகன் 2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகருக்கிடையிலான பாலம் அமைப்பு என்பன முக்கியமானதாகுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், புதுவருடத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி பங்களிப்பு என்பன குறித்து விளக்கமளிக்கும் வகையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் 2016ம் ஆண்டில் யாழ்…
-
- 0 replies
- 307 views
-
-
2016இல் ஈழம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்த ஆண்டிலாவது எங்கள் துயரங்கள் தீராதா? என்ற எதிர்பார்ப்புடன்தான் ஈழத் தமிழர்களின் வாழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கின்றன. இலங்கை அரசுடனான உரிமைப் போரைாட்டத்தில் கடந்த அறுபது வருடங்களை எவ்வாறு வெறுமையுடன் கழித்தோமோ அவ்வாறே 2016ஆம் ஆண்டும் விடைபெற்றுச் சென்றது. ராஜபக்சவை தோல்வியடைச் செய்தமை, மற்றும் இலங்கையில் ஆட்சி மாற்றித்திற்கு உதவியமை போன்ற முக்கியத்துவங்களை கொண்ட 2015 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினை எட்டும் ஆண்டாக 2016ஐ மாற்றும் என்ற எதிர்பார்ப்பை தமிழ் தலமைகள் முன்வைத்தன. ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் சம்பந்தன் …
-
- 0 replies
- 267 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கை ட்ரயல் அட் பார் முறையில் விசாரித்திருக்க வேண்டும் எஸ்.கே, ஜெ.ராஜன் நடராஜா ரவிராஜின் கொலைவழக்கை ட்ரயல் அட் பார் முறையிலேயே விசாரித்திருக்க வேண்டும். விசேட ஜூரி களை அமர்த்தி இந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது. ட்ரயல் அட் பார் முறையில் மூன்று நீதிபதிகள் விசாரணை களை மேற்கொண்டு அவர்கள் அதற்கான தீர்ப்பை வழங்குவார்கள். அத்துடன் குற்றவாளியா அல்லது சுற்றவாளியா என்ற காரணத்தையும் விளக்குவார்கள். மேலும் இந்தக் காரணத்துக்காகத் தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் கூறுவார்கள். ஆனால் விசேட ஜூரிகள் அவ்வாறல்ல என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னாள் பிரதம நீதியரச…
-
- 0 replies
- 232 views
-
-
மூன்று ஆலயங்களில் கொள்ளை மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எஸ்.சதிஸ் ஹட்டன் டிக்கோயாவுக்கு உட்பட்ட மூன்று ஆலயங்களில், பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். ஹட்டன் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேற்பிரிவு மருதவீரன் ஆலயம், வனராஜா விநாயகர் ஆலயம் என்பவற்றிலே, இக்கொள்ளைச் சம்பவங்கள், நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு சாத்தப்பட்டிருந்த தாலிக்கொடி, 4 இலட்சம் ரூபாய் பணம், பிள்ளையாருக்கு சாத்தப்பட்டிருந்த வெள்ளி ஆபரணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 287 views
-
-
வடக்கு கடற்பரப்பில் கடந்த வருடம் 136 இந்திய மீனவர்கள் கைது செல்வநாயகம் கபிலன் கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் 136 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையான 12 மாதங்களில் நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவற்றில் 97 மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தி…
-
- 0 replies
- 286 views
-
-
புதிய அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல : ஜனாதிபதி முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் உறுதியளித்தார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும் அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்திற்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது என்பதுடன், அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்…
-
- 0 replies
- 329 views
-
-
பகற்கனவு காண்கிறார் மஹிந்த சாடுகின்றன பிரதான கட்சிகள் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளியோம் உள்ள பதவியும் இல்லாமல் போகும் என்கிறது ஐ.தே.க. (எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கை வரலாற்றில் பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தும் வருடமே 2017 ஆம் ஆண்டாகும். இந்த வருடத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இத்தகைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புதுவருடத்தில் ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுவது பகல் கனவாகும். எக் காரணம் கொண்டும் ஆட்சி மாறாது. இவரது கூற்றுக்கு நாம் அஞ்சபோவதில்லை என ஐக்க…
-
- 4 replies
- 543 views
-
-
“அக்காவுக்கு ஏதேனும் நடந்தால் குண்டு வைக்கவும் தயங்க மாட்டேன் ஊடகவியலாளருக்கு மிரட்டல்” கிளிநொச்சி ஊடகவியலாளாருக்கு கொலை அச்சுறுத்தல் அக்காவுக்கு ஏதேனும் நடந்தால் குண்டு வைக்கவும் தயங்க மாட்டேன் எனவும் மிரட்டல் பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில் வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக கொண்டு ஊடகவியலாளாருடன் தொலைபேசி மூலம் நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 ம…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 லட்சம் ரூபாவுக்கான காப்புறுதி: அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசு 2016-12-31 20:37:07 பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 லட்சம் ரூபாவுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21524#sthash.MJlITu5G.dpuf
-
- 0 replies
- 271 views
-
-
மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கான அழைப்பு சுவரொட்டிகள் இன்று தமிழ் மக்கள் பேரவையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணியாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி சனிக்கிழமை மட்டு நகரில் நடைபெற இருப்பதாகவும் இச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சுவரொட்டியில் “உணர்வு பூர்வமாக கலந்து எமது உரிமையை பிரகடனம் செய்வோம், அடிமையாய் வாழ்வதை விட உரிமைக்காக ஒன்றிணைவோம், எமது உரிமையை நாமே உரத்து கேட்போம், உரிமையை கேட்பது இனவாதமல்ல அதை மறுப்பதே இனவாதம், மெளனத்தைக் க…
-
- 6 replies
- 570 views
-
-
கொழும்பு புதுச்செட்டித்தெருவில் அமைக்கப்படுகின்ற ஆலயமொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ (படங்கள் இணைப்பு) கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஸ்ணா ஆலயத்தில் தீடீரென தீப்பற்றியுள்ளது. குறித்த தீயினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் குறித்த இடத்துக்கு வருகைத்தந்துள்ளனர். தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவித தகவல்களும் வெளியாகவில்யைனெ்பதுடன், சேத விபரங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை. எவ்வாறாயினும் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் முற்றாக தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14947
-
- 0 replies
- 391 views
-
-
மகாத்மா காந்தி, அணு ஆயுதங்களை விட மனோ திடம் கொண்ட அஹிம்சைப் போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டிய மகான். இந்த வகையில் அவருக்கு வந்த மகாத்மா காந்தியின் சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவத்தை கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார். குறித்த சிலையை விசமிகள் சிலர் உடைத்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று(31) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அந்த அறிக்கையில், தென்னாபிரிக்காவில் தொடங்கிய அவரது அஹிம்சைப் போராட்டம் இந்தியாவில் விரிவடைந்த போது அது ஆசிய விடுதலையாக வெற்றியுடன் உருப்பெற்றது. அவர் எடுத்துக்கொண்ட அஹிம்சை என்ற ஆயுதம் உலகெங்கும் அவரை அஹிம்சையின் தந்தையாக ஏற்றுக்கொள்ள…
-
- 2 replies
- 416 views
-
-
மட்டக்களப்பு : காணிகளை விடுவிக்கக் கோரி சாலையில் இறங்கி பிராத்தனை போராட்டம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போலிஸாரின் பாவனையிலுள்ள தமக்குரிய காணியை விடுவிக்கக் கோரி தரும ஸ்தாபனமொன்றை சேர்ந்தவர்கள் இன்று சனிக்கிழமை சாலையில் இறங்கி பிரார்த்தனை வழியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான நெடுஞ்சாலையிலுள்ள மைலம்பாவெளி போலிஸ் காவல் நிலையம் அமைந்துள்ள குறித்த காணிக்கு முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது. தரும ஸ்தாபனத்தின் பராமரிப்பிலுள்ள சிறுவர்கள் , பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்ட இற்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான …
-
- 0 replies
- 278 views
-
-
'ஏழ்மையில் தவிக்க இடங்கொடுக்ககூடாது' “நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். “பல இலங்கையர்கள் ஏழ்மையால் தவிக்கின்றார்கள். நாம் இந்நிலைக்கு இடங்கொடுக்ககூடாது. எம் நாட்டை அபிவிருத்திச் செய்ய வேண்டும். எம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் வாழ்வதற்…
-
- 1 reply
- 355 views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே இலங்கையில் என்னுடைய ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியா, இப்போது அந்நிகழ்வுக்கு அமைதியாக உள்ளது என்று ராஜபக்சே பேசி உள்ளார். கொழும்பு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு செய்தியாளருக்கு அளித்து உள்ள பேட்டியில், “இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது, என்னுடைய இந்திய நண்பர்கள் எனக்கு எதிராக எழுந்தனர். ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர்,” என்று கூறிஉள்ளார் ராஜபக்சே. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு …
-
- 7 replies
- 726 views
-
-
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அல்லைப்பிட்டி பாலர் பாடசாலைகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் பாலர் பாடசாலைகள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதால் குழந்தைகளின் கல்வி பிள்ளைப் பருவத்திலேயே அழிவடைந்து போகும் நிலை உண்டாகியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ள குறித்த பிரதேசத்து மக்கள்,கல்வித்துறையிலே பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். ஒரு பிள்ளையின் , விளையாட்டு மூலமான கற்றல் நடவடிக்கைகள் இந்த பாலர் பாட சாலையிலேதான் விருத்தி அடைகின்றது.ஆனால் குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாலர் பாடசாலைகள் பௌதீக ரீதியாக உரிய கட்டுமான வசதிகள் இல்லாமலும்,குழந்த…
-
- 0 replies
- 306 views
-
-
பெண்களின் வாழ்வாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாணவர்களின் கல்வி ஆகிய மூன்று விடயங்களும் தமிழ் இனத்துக்கு விடப்படும் சவாலாக அமைந்துள்ளன. இதனை முறியடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் அருட் கலாநிதி ஸ்ரனி அன்ரனி தலைமையில் பகிர்வு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், போர் பாதிப்புக் காரணமாக எமது மக்கள் உரிமைகள், சொத்துக்களை இழந்து வாழ்க்கைக்காகத் தவிக்கும் போது எமது மக்களினதும், மாணவர்களி…
-
- 1 reply
- 173 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின்முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவில் நள்ளிரவு வேளையில் மூன்று இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இந்தியன் எக்ஸ்பிறஸ் இற்கு வழங்கிய நேர்காணலில் இதன் பின்னணி முழுமையாகவே தன்னுடையது என்பதை ஒத்துக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மறைமுகமாக இந்திய அரசின் செயற்பாடுகளுக்கு உள்ளூர் அரசியல்வாதியான ரவிகரன் மீது குற்றம்சாட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகளின் போட்டிகளுக்கு அப்பாவி இளைஞர்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் அங்கிருந்த…
-
- 3 replies
- 668 views
-