ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி.! வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பய…
-
- 0 replies
- 384 views
-
-
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
கூட்டமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்ன? பிரதமர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் கம்மன்பில (க.கமலநாதன்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் வடக்கு மாகாண முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரனும் நல்லாட்சி அரசாங்கம் தமக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறியுள்ளனர். எனவே தமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி யாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில…
-
- 0 replies
- 300 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு நாராஹேன்பிட்ட பகுதியில் வைத்து நடராஜா ரவிராஜ் இனந்தெரியாத நபர்களினால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்…
-
- 9 replies
- 661 views
-
-
நாடு திரும்புவதா இல்லையா என்பதனை இலங்கை அகதிகளே தீர்மானிக்க வேண்டும் – பொன்.ராதகிருஸ்ணன் நாடு திரும்புவதா இல்லையா என்பதனை இலங்கை அகதிகளே தீர்மானிக்க வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள அகதி முகாம் ஒன்றுக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அகதிகள் இந்தியாவிலேயே தொடர்ந்தும் வாழ விரும்பினால் பொருத்தமான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்க…
-
- 0 replies
- 266 views
-
-
தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வானது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பக்கூடிய தீர்வாக இருக்க வேண்டுமே தவிர வடக்கு, -கிழக்கை இணைக்கும் இனவாதத் தீர்வாக அமையக்கூடாது என ஜே.வி.பி.தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கை இணைக்கும் தீர்வுக்கு கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக் கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவியபோதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நீ…
-
- 5 replies
- 401 views
-
-
யுத்தம் பல குடும்பங்களின் அடிப்படையை ஆட்டம் காண வைத்து உள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காணச் செய்து பல குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் பெண்கள் தமது குடும்பத்திற்குத் தலைமை தாங்கி வாழ்வாதார தேடல்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக வலிந்து ஈடுபட வேண்டியவர்கள் ஆக்கி உள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங…
-
- 0 replies
- 370 views
-
-
யாழில் தொலைத்தொடர்பு கோபுரம் சரிந்து வீழ்த்துள்ளது:- யாழில் உள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொமுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம் இன்று திங்கட்கிழமை மாலை சரிந்து வீழ்த்துள்ளது. http://globaltamilnews.net/archives/11705
-
- 6 replies
- 799 views
-
-
மருத்துவ பீட கற்கைநெறிக்கான கட்டடத் தொகுதி யாழ் போதனா வைத்தியசாலையில் அமையவுள்ளது:- Share This! மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna) மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது. 8 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத் தொகுதியில் மருத்துவ பீட கற்கை நெறிகளுக்கான பல்வேறு பிரிவுகளின் காரியாலய அலகுகளும் மாணவர்களுக்கு கற்கை வசதி வழங்…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாதமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இந்தக் காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு, …
-
- 1 reply
- 311 views
-
-
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) முள்ளியவளை நினைவாலயத்தில் முல்லைத்தீவு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும…
-
- 13 replies
- 921 views
-
-
வறுமையில் வாழும் முதியவா்களுக்கு, நத்தாா் தினத்தில் பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இன்று 25-12-2016 நத்தாா் தினத்தில் முதியவா்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவா்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனா். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவா்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனா். கிராமத்தின் முதியோா் சங்கமும், வெளியில் இருந்து சமூகமளித்திருந்த ஒரு அமைப்பும் சோ்ந்து பொலீத்தீன் பைகளில் முதியவா்களுக்கு பொதிகளை வழங்கியுள்ளனா். பலா் இந்த நிகழ்வை பாராட்டி உரைந…
-
- 3 replies
- 760 views
-
-
நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது. அதை நான் தொட்டுப்பார்த்த நிமிடங்கள் இன்னும் எனது நினைவில் இருந்து நீங்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு - ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் லங்காசிறியிடம் இந்த கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்களின் பின்னர் விசாரணைகள் இடம்பெற்றன, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரவிராஜ் கொலைக்கு நீதி கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். …
-
- 0 replies
- 311 views
-
-
வடக்கு மாகாணத்துக்குரிய காட்டுப் பிரதேசங்களான வன்னிக் காடுகளில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கூகுள் வரைபடம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வன்னிக் காடுகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கு பெருமளவில் காடழிப்பு நடைபெற்று வருவதாகவும், காடுகளின் நடுவே பாரிய இடைவெளி காணப்படுவதை கூகுள் வரைபடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட 2016ஆம் ஆண்டுக்கான இறுதி அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து த…
-
- 1 reply
- 496 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை கண்டியில் அஸ்கிரி மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது, அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால் தனித்தனியாக இரண்டு கடிதங்கள் சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அந்தக் கடிதங்களில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், நாட்டின் இறைமை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்பு…
-
- 1 reply
- 400 views
-
-
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா : சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. எமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவதில் ஆரம்பித்து, படிப்படியான அதிகாரப் பகிர்ந்தளிப்பை நோக்கிச் செல்லும் செயற்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடிய அதிக…
-
- 0 replies
- 247 views
-
-
அமைச்சர்களுக்கு ஒருவித நோய் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஒரே விதமாக வசனம் பேச முடியாத ஒரு நோய் ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமை ப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார். அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்கப் போகும் காணியின் அளவு குறித்து ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்காகவாது ஒரே கருத்து கிடையாது. அவர்கள் எவ்வளவு காணியைக் கொடுத்தாலும் பரவாயில்லை. எல்லோரும் ஒரே கணக்கை சரியாக கூற வேண்டும் எனவும் தேரர் மேலும் …
-
- 0 replies
- 217 views
-
-
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் பிரபல பாடசாலையில் சாதாரண தர மாணவனின் கழுத்தை பிடித்து, கமால் குணரத்ன அச்சுறுத்தல் விடுத்ததாக குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குருந்துவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்து மாணவனுடன் சமாதானமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய கமால் குணரத்னவுக்கு எதிராக மாணவர் மேற்கொண்ட முறைப்பாடு மாணவனினால் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் சம்பவம் இடம்பெற்ற டிசம்பர் மாதம் 14ஆம் திகதி தான் இலங்கையில் இர…
-
- 1 reply
- 327 views
-
-
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற துணிச்சல் மிக்கவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவாகவேண்டும் என மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எங்கள் அனைவரையும் மீட்கவந்த யேசு கிறிஸ்து மனிதம் தளைக்க வேண்டும், மனித நேயம் உயரவேண்டும் என்பதற்காக பிறந்து அதற்காக வாழ்ந்து அதற்காக இறந்த அவரின் பிறப்பு நாளிலே மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் மரணித்தது மறக்கமுடியாது. இன்றும் எமது…
-
- 1 reply
- 338 views
-
-
எக்காரணத்தைக் கொண்டும் வலி.வடக்கில் உள்ள மயிலிட்டிப் பகுதியை இராணுவத்தினர் விட்டுக்கொடுக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் மக்களை மீள்குடியேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படை அதிகாரிகளின் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற அமைப்பு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது. குறித்த அமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போர் வீரர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர இவ்வாறு…
-
- 2 replies
- 353 views
-
-
நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப்பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற மேற்படி வாள்வீச்சு சம்ப வத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிர நீத், நவாலியைச்சேர்ந்த இளைஞ ரான வின்சன், ஆட்டோச் சாரதியான சாய்சமாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் நத்தார் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். இதில் முதலில் பிரநீத், வின்ச…
-
- 0 replies
- 337 views
-
-
நகர்ப்புறங்களில் காட்டப்படும் அக்கறை கிராமங்களுக்கு மறுப்பு கிழக்கு மாகாண மாணவர் கல்வி குறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும் அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் வித்தியாசம், வேறுபாடின்றி ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியமாகும். கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர் கல்வி தொடர்பில் அண்மைக்காலத்தில் பல்வேறு எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் இக்கருத்துக்கள், கிழக்கு மாகாணத்தில் துரித கல்வி விருத்திச் செயற்பாடுகளின் தேவையை சுட்டி நிற்கின்றன. ஒ…
-
- 0 replies
- 308 views
-
-
ஜெனிவா அமர்வுக்கு வெற்றிகரமாக அரசாங்கம் முகம்கொடுக்கும் ஜெனிவா எமது முன்னேற்றத்தை பார்க்கின்றது என்கிறார் விஜேதாச (க.கமலநாதன்) அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகளில் பொறுப்புடன் செயற்படுவதை ஜெனிவா மனித உரிமை பேரவையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது. எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ கேசரிக்கு தெரிவித்தார். அதேநேரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண எத்த…
-
- 0 replies
- 166 views
-
-
மட்டு. மாவட்டத்தில் சுனாமி நினைவுதினம்.! சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. …
-
- 1 reply
- 367 views
-
-
யாழ். செயலகத்திலும் சுனாமியில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2004ம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு யாழ் மாவட்ட செயலக உத்தியோ கத்தர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாவட்ட கேட்போர் கூடத்தில் இன்று காலை 9மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத விப் பணிப்பாளர் ச.ரவி தலைமையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் மற்றும் உத்தியோ கத்தர்கள் உட்பட ப…
-
- 0 replies
- 216 views
-