ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143406 topics in this forum
-
விரிவாக ஆராயாது புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால் எதிர்ப்போம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகிறார் (ஆர்.யசி ) எவரதும் அவசரத் தேவைகளுக்காகவும் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது. விரிவாக ஆராயாமல் செய்தால் அதை எதிர்ப்போம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசாங்கம் அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்குமாயின் நாமும் அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின்…
-
- 0 replies
- 195 views
-
-
நெஞ்சு,வயிறு பகுதிகளில் ஏற்பட்ட காயங்களே மரணங்களுக்கு காரணம் யாழ். விபத்து குறித்து சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு சடலங்கள் வானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டன (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான பதினொரு பேரினதும் சடலங் கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விசேட வானூர்தி மூலம் நேற்று களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் குறித்த பதினொரு பேருக்கும் நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகள் உள்ளடங்கலாக உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான கார ணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 235 views
-
-
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள …
-
- 13 replies
- 760 views
- 1 follower
-
-
ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கட்டார் நாட்டிற்கு கடத்தி செல்ல முயன்ற 3 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் எகிப்து,லெபனான் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பயணப்பையில் மற்றும் ஆடைகளில் அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோ நாணயதாள்கள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/14516
-
- 0 replies
- 189 views
-
-
தடுமாற்றத்தில் இருக்கும் சீனா ஒன்றிணைந்த எதிரணி யின் பிரசாரங்களின் விளைவாக சீனா தடுமாற்றம் அடைந்துள்ள தாக தொழில்திறன் மற் றும் தொழிற்பயிற்சி இரா ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆளும் மற்றும் எதிரணியினை சேர்ந்த 14 எம்.பிக்கள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை செய்துள்ள நிலையில் அதில் இடம்பெற்றுள்ள இராஜாங்க அமைச் சர் பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி,பொருளாதார துறைசார்ந்த விடயங் களை கண்காணிக்கும் நோக்குடனேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இதன்போது சீனாவின் குவன்சிகோ பிராந்தியத்தில் இருந்து இவ்விஜயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 143 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் புதிய அரசியலமைப்பு தோற்றுவிடும் சம்பந்தன் புரிந்துகொள்ள மறுப்பது கவலையளிக்கின்றது என்கிறது சு.க. (ரொபட் அன்டனி) புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது தோற்கடிக்கப்படும் அபாயம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உயர்ந்த பட்ச அதிகார பகிர்வினை மேற்கொள்வதுதான் பொருத்தமானதாக அமையும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். தற்போது நாட்டில் இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது எங்கே இனப்பிரச்சின…
-
- 0 replies
- 158 views
-
-
ஞானசார தேரரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரிடம் காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதனையடுத்து ஞானசார தேரரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அல்லாஹ்வை , ஞானசார தேரர் இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்தார். http://globaltamilnews.net/archives/10722
-
- 0 replies
- 201 views
-
-
‘சகல மாகாண ஆளுநர்களின்அதிகாரங்களை குறை’ எனினும், மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பதையிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடமாகாண சபையோ, எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அந்த அதிகாரமானது, ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த யோசனை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், “ஆளுநர் என்ற வசனத்தின் மூலமாக, மிதமிஞ்சிய அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதி என்பதனால், விசாலமான அதிகாரங்கள் அவரு…
-
- 0 replies
- 135 views
-
-
சாவகச்சேரியில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயி ரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்து றைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவு னியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நே…
-
- 3 replies
- 452 views
-
-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்னால், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா பயணிகள் 10 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மாதம்பேயிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வானொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேருக் குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா வாகனத்தில் பயணித்த, 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அதில் பயணித்த ஏனைய மூன்றுபேர், படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ். போதான வைத்…
-
- 18 replies
- 2.6k views
- 1 follower
-
-
போதை மூலமான பேராபத்து; தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் உலகில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நாடுகள் எவை என நாம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், நமது வீட்டின் கோடியிலேயே அவை அதிகரித்து வருவது நமக்குத் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியமானது. அண்மைக்காலமாக கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதை வஸ்துக்கள் சூசகமான முறையில் கொள்கலன்களில் மறைத்தும் உணவுப் பொருட்களுடன் சேர்த்தும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து கைப்பற்றப்படும் பெருந்தொகையான போதைப் பொருட்களை பார்க்கையில் இதுவரைகாலம் போதைப் பொருட்களை கடத்துவதற்கு இலங்கை இலகுவான…
-
- 1 reply
- 636 views
-
-
சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை (எம்.சி.நஜிமுதீன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். இதேவேளை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தது. இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. ஆகவே அவர்கள் எதிர்பார்ப்பது போல் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றார். அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்…
-
- 4 replies
- 610 views
-
-
அரசாங்கம் மீது பாயும் கோத்தா - ஆர்.யசி நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பது செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றி கொள்வதற்கு எதிரானவர்கள் தவிர ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக தனக்கு எவ்வித பிரச்சினைகளும் இருக்கவில்லை என்று அவர் கூறினார். ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அமைப்புகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 276 views
-
-
இந்தியாவின் ஆலோசனையை ஏற்கும் நிலையில் மஹிந்த இருக்கவில்லை இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் லியோ நிரோஷ தர்ஷன் அனைத்து இலங்கையர்களுக்குமான தலைவராக வரவேண்டும் என்றால், அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து, மனித உரிமைகளை நிலைநாட்டி, வெற்றிபெற்றவர், தோற்கடித்தவர் என்ற கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக் ஷ விடம் இந்தியா தெரிவித்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டில் அவர் இருக்கவில்லை போர் வெற்றியின் பின்னர் அரசாங்கமும், சிங் களப் பெரும்பான்மையினரும், உண்மையான அமைதிக்குத் தேவையான பெருந்தன்மையை வெளிப்படுத்த வில் லை என இந்தியாவ…
-
- 0 replies
- 259 views
-
-
தவறான தகவல்களைப் பரப்பும் இணையதளங்களை மக்கள் நம்பிவிடுகின்றனர்.! கோலாலம்பூரிலிருந்து ரொபட்அன்டனி மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதாகவும் இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதாகவும் பொய்யான பிரசாரங்களை சிலர் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித்தார். அவ்வாறு இணையதளங்களில் வருகின்ற தகவல்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் நம்பிவிடுகின்றனர். ஆனால் அவை பொய்யான தகவல்களாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மல…
-
- 0 replies
- 149 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பிரதேசத்தை ஆக்கிரமித்துவைத்திருந்த இராணுவத்தினர், அப்பிரதேசத்து மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக ஒருதொகுதி காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில், அக்காணிகளை மக்களிடம் கையளிப்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு பயணம் செய்யவுள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஜனவரி எட்டாம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்புலவு காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது. ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் முல்லைத்தீவுப் பயணத்தின்போது முல்லைத்தீவில…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று எல்லாத் தரப்பினருமே நினைக்கிறார்கள்! - ரணில் விக்ரமசிங்க பேட்டி என்.ராம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கையில் நான்காவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்றிருப்பவருமான ரணில் விக்ரமசிங்க (67) இலங்கை அரசின் அமைப்பு முறையையே மாற்றும் முக்கியமான அரசியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அரசியல் சட்டத்தையே மாற்றும் இந்தப் பணி நாடாளுமன்றம், மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிபர் பதவி ஆட்சி முறையிலிருந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை முக்கியத்துவம் பெறும் …
-
- 0 replies
- 141 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமான முறையில் இந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவ்வாறு பாரியளவு பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் கூட்டாக இணைந்து விசாரணைகளை நட…
-
- 0 replies
- 165 views
-
-
வாகனேரி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலுக்கு சேதம் விளைவிப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் இனந்தெரியாதோரால் தூக்கி எறியப்பட்டுள்ளதுடன், திரைச்சீலையும்; கிழித்து எறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அக்கோவிலிலிருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். வழமை போன்று சனிக்கிழமை (17) இரவு கோவிலில் பூஜையை முடித்துவிட்டு, இன்று (18) அதிகாலை பூஜை வழிபாட்டுக்காக கோவிலுக்குச் சென்ற பூசகர், இச்சம்பவத்தை அவதானித்துள்ளார். இது தொடர்பில் கோவில் நிர்வாகத்தினருக்கு அவர…
-
- 0 replies
- 260 views
-
-
புதிய பயங்கரவாத சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி, இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐ.நா கரிசனை கொண்டுள்ள தாக தெரிவித்துள்ளார். “நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணி நேரமாக உள்ள ஆரம்ப தடுப்பு…
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கையில் ஐ.நா வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு இலங்கையில்அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்தப்படவுள்ள ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் செயலகம் ஒன்று நேற்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் செயலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ‘ஐ.நா வெசாக் நாள் முதல் முறையாக இல ங்கையில் கொண்டாடப்படவுள்ளது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், வரும் 2017 மே 12ஆம் நாள் நடைபெறும்.…
-
- 0 replies
- 137 views
-
-
கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி ? கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் பெப்ரவரி மாதத்துடன், கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்த்தன சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.இதன் பின் அவர் உயர் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். அண்மையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்…
-
- 0 replies
- 203 views
-
-
முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர் : பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வின் போது அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இம்மூவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய ஒரு வருட புனர்வாழ்வைப் பூர்த்தி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://…
-
- 0 replies
- 218 views
-
-
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (17.12.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடக்கு கால்நடை அமைச்சு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், போசணை மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடும் தகர் என்ற பெயரில் ஆடு வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்க…
-
- 1 reply
- 456 views
-
-
காணிகளை இராணுவத்தினர் கைவசப்படுத்தியுள்ளதனால் மக்கள் பாதிப்பு : முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர் ரட்ணராசா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதும் இன்னமும்; பொதுமக்கள் பலரின் காணிகளில் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாகவும் தொடர்ந்தும் ராணுவத்தினர் மக்களின் காணிகளை கையப்படுத்தி வைத்திருப்பது பொதுமக்களுக்கு எதிரான செயற்பாடாகவே கருதப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடக்க…
-
- 0 replies
- 418 views
-