ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
சிறிலங்கா விமானப்படைக்கு, பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த, ஆறு அடிப்படை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்காக 5 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது. ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த விமானம், விமானப்படை விமானிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சீன விமானப்படையும், பங்களாதேஸ், பாகிஸ்தான், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளும் பி.ரி-6 விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றன. பி.ரி-6 ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்காக கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சீனாவின் தேசிய வான்தொழில்நுட்ப இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது. …
-
- 0 replies
- 210 views
-
-
கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை-மாவை குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து மக்களின் தேவைகளை அறிந்து ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை. சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்று கையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கும், அபிவி…
-
- 5 replies
- 463 views
-
-
‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம். இது ஆர்வத்தினால் எழுந்ததல்ல. இது எமது மரபணுவில் ஊறிப்போயுள்ளது’ இவ்வாறு கூறியிருந்தார் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி.ஹரிஸ். ‘அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடமானது எமது உள்ளக முகவர் பங்காளிகள் மற்றும் கட்டளைநிலையில் வைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் ஆகியோருடன் இணைந்து எமது தேசிய நோக்கங்களை பூகோள ரீதியாக நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றுவோம். பசுபி…
-
- 0 replies
- 278 views
-
-
சீன படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, படை அதிகாரிகளே கல்வி மற்றும் ஆய்வுப் பயணமாக சிறிலங்காவுக்கு வந்துள்ளனர். மேஜர் ஜெனரல் வூ சுலி தலைமையிலான இந்தக் குழுவில், ஆறு மேஜர் ஜெனரல்கள் மற்றும் 40 மூத்த கேணல் நிலை அதிகாரிகள் என, மொத்தம் 46 படை உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள், சிறிலங்கா இராணுவத்தின் மேற்கு படைகளின் தலைமையகத்தின், தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் படைப்பிரிவின் ரெஜிமென்ட் தலைமை அதிகாரியாக ம…
-
- 0 replies
- 159 views
-
-
அமெரிக்கா பறந்தார் பசில் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா விற்கு நேற்று பயணமாகியுள்ளதாக ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான 29 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி 5 மில்லியன் புதுவருட நாட்காட்டிகளை அச்சி ட்டு விநியோகித்தமை த…
-
- 0 replies
- 173 views
-
-
ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் விசாரணைகள் ஆரம்பம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்ப ட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் அறிக்கையிடலின் போது பின்பற்றப்படும் ஒழுக்கக் கோவைகளை குறித்த ஊடகவியலாளர் தவிர்த்த மையே இந்த சம்பவத்தின் அடிப்படை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணை க்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 202 views
-
-
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 29 மீனவர்கள் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த 29 உள்ளுர் மீனவர்களை கடற்படையினர் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர். கரையில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த மீனவர்கள் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டமைக்கான சான்றுகளை சமர்ப்பிக்க கடற்படை தவறியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம்…
-
- 0 replies
- 225 views
-
-
வடமாகாணசபைக்கு தனியான தேசியகீதம் உண்மைக்கு புறம்பானது-சிவஞானம் வடமாகாண சபைக்கு தனியான தேசிய கீதம் என்ற தலைப்பில் திவயின பத்திரிகையில் கடந்த 10ஆம் திகதி வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் தலைவர் சி.பி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை சிவஞானம் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் சிவஞானம், அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபைக்கு 3 வருட காலம் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஏனைய மாகாணங்களைப் போன்று…
-
- 0 replies
- 153 views
-
-
மாங்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது முல்லைத்தீவு மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com/news/21255
-
- 0 replies
- 180 views
-
-
ஊடகவியலாளரின் தவறே தாக்குதலுக்கு காரணம் -அரசாங்கம் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ரொஷான் திலீப் குமார மீது கடற்படைத் தளபதி நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு குறித்த ஊடகவியலாளரின் தவறே காரணம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த ஊடகவியலாளர் முரண்பா டுகள் தொடர்பான அறிக்கையிடலின் போது பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச ஊடக ஒழுக்கத்தையேனும் பின்பற்றவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்களின…
-
- 0 replies
- 177 views
-
-
வடக்கு - கிழக்கு மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு அபாயம் 10 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கை, இன்று ( 12) முதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருணாகல், புத்தளம், மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்குக் காய்ச்சல் அபாயம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ள 10 மாவட்டங்களில் உள்ள, சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் 30 இல் உள்ள சுகாதார அதிகாரிகளின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 173 views
-
-
‘சம்பூர் காணிகளை மீளவும் கையளிக்கவும்’ பொன்ஆனந்தம் சம்பூர் அனல் மின் நிலையத்தின் பாவனைக்கான நிலக்கரி கொண்டுசெல்லல் மற்றும் கடல் நீர்கொண்டுசெல்லல் என இரு பாதைகளுக்கும் தேவைக்கென எடுக்கப்பட்ட தமது காணிகளை மீளக்கையளிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட, சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் வசிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 223 views
-
-
‘மத அடையாளத்துக்காக தேசிய இனமாக எம்மை வரையறுக்கவில்லை’ “இலங்கை முஸ்லிம்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டதன் காரணம். இஸ்லாமிய தத்துவ ஞானங்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தன்பால் ஈர்த்த ஒரு மொழியாக தமிழ் இருந்தமைதான். மாறாக வெறும் அரசியலுக்காக மத அடையாளத்துடன் தேசிய இனமாக எம்மை வரையறுக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, இலங்கை மன்றக் கல்லூரியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…
-
- 0 replies
- 143 views
-
-
'கடலலை 2 மீற்றருக்கு மேலெழுகிறது' மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரியிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் இரண்டு மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/187870/-கடலல-ம-ற-றர-க-க-ம-ல-ழ-க-றத-#sthash.MLqMCTlA.dpuf
-
- 0 replies
- 549 views
-
-
சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வளவு தூரம் பணியாற்றியுள்ளது என்பது தொடர்பாக கடந்த புதனன்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை ஆணைக்குழு வினவியது. சிறிலங்கா காவற்துறையால் தொடர்ந்தும் சித்திரவதைகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், 2009ல் நிறைவுற்ற 26 ஆண்டுகால கொடிய யுத்தத்தின் இறுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பல்வேறு போர்க் குற்றங்கள் இழை…
-
- 2 replies
- 350 views
-
-
வவுனியாவில் புனித யோசவாஸ் திருச்சொரூபம் மீது தாக்குதல். வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள புனித யோசவாஸ் திருச் சொரூபம் மீது நேற்றிரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா இறம்பைக்குளம், யோசவாஸ் வீதியில் அருகே வைக்கப்பட்ட புனித யோசவாஸ் திருச் சொரூபம் மீது நேற்றிரவு 10.45 மணியளவில் இதந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சொரூபத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்குச் சென்ற புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ் சொரூபத்தினைப் பார்வையிட்டதுடன் வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். …
-
- 1 reply
- 451 views
-
-
அமைதிக்கு தடையாகும் இராணுவமும் பௌத்தமும் இலங்கையில் கடந்த நான்கு தசாப்தங்களில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள், பேச்சுவார்த்தைகளுக்குச் சவாலான விடயங்களாக இரண்டு முக்கியமான விடயங்கள் இருந்து வந்துள்ளன. முதலாவது இராணுவமும், அதன் நலன்களும். இரண்டாவது- பௌத்த மதமும், அதனைச் சார்ந்த அடிப்படைவாதமும். இந்த இரண்டுமே, கடந்த பல தசாப்தங்களாகவே, அமைதியான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்தன.வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலும் சரி, பின்னர் விடுதலைப் புலிகள் உச்ச பலத்துடன் இருந்த …
-
- 3 replies
- 247 views
-
-
யாழில் மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினர் அனுசரணையுடன் மகா கவி பாரதியார் பிறந்த தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி யளவில் நல்லூர் துர்க்காதேவி மனிமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்னிந்திய பேச்சாளர் இலக்கிய பேரரசு நெல்லை கண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் உள்ளூர் இசைக் கலைஞர்களின் மெல்லிசைக் கச்சேரி போன்றனவும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினர்களான முருகேசுசந்திரகுமார்,சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வ…
-
- 5 replies
- 465 views
-
-
மரபு, புதிய கவிதையில் ஆளுமை கொண்ட கல்வயல் வே. குமாரசாமி:- ஈழத்தின் மூத்த கவிஞரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை விரிவரையாளருமாகிய கல்வயல் வே.குமாரசாமி நேற்று இரவு காலமானார்.இவர் தமிழின் மரபுக் கவிதையிலும் புதிய கவலிதையிலும் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். . கல்வயல் வேதவனப் பிள்ளையார் கோவில் சூழலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் (சனவரி 1, 1944 – திசம்பர் 10, 2016) அவர். சங்கத்தானையில் வசித்து வந்தார். தபால் திணைக்கள தபால் அதிபராகப் பணியாற்றினார். தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்ட இவர் ஆசிரியர் கலாசாலையில் சில காலங்கள் வருகை விரிவுரையாளராகத் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டார். மரபு …
-
- 0 replies
- 566 views
-
-
‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்த சில மதவாத சக்திகளும், கடும் போக்காளர்களும் முயற்சிக்கின்றனரா? என்ற சந்தேகம் மீண்டும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கிழக்கில் தேரர் ஒருவர் நடந்து கொண்ட விதமும், அவரது அடாவடித்தனங்களும் இலங்கையின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், புனிதத் தன்மையையும் சந்தி சிரிக்க வைத்து விட்டன. நீதிமன்ற உத்தரவைக்கூட உதாசீனம் செய்யும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அவரது இத்தகைய வரம்புமீறிய செயல் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும், நீதித்துறைக்கும் பெரும் தர்மசங்கடமான நிலைமையை உர…
-
- 0 replies
- 400 views
-
-
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழா திகதி அறிவிக்கப்பட்டது.! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்படவுள்ளது. 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், ஒப்பந்தத்தின் பிரகாரம், அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரஜைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டிருந்த கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா, 2010 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், தீவில் புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 7 ஆம் திகதி அதன் திறப்பு விழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிரு…
-
- 0 replies
- 263 views
-
-
இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் ; ரவி நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/14304
-
- 6 replies
- 567 views
-
-
மட்டுவில் கடல் பெருக்கு மீனவர்கள் பாதிப்பு !! கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்ததன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் . சுமார் 200 மீற்றர் வரை கடல் நீர் கிராமத்துக்குள் வந்துள்ளது இதன் காரணமாக நாவலடி கடலாட்சி அம்மன் கோவிலுக்கு முன்னாள் செல்லும் பிரதான பாதை நீரில் மூழ்கி காணப்படுகின்றது . இது தொடர்பாக நாவலடி பிரதேச மீனவர் கருத்து தெரிவிக்கையில் வருடம் தோறும் இது போன்று கடல் பெருக்கு ஏற்படுவது வழமை ஆனால் இம்முறை சற்று அதிகரித்துள்ளது . தற்போது எமக்கு தொழில் செய்வதற்கு முடியாத நிலை உள்ளதாகவும் மீனவர்களிடம் எந்தவித கேள்விகளும் கேட்க்காமல் ஆத்துவாய்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காணாமல் ஆக்கப்படவர்களின் தகவல்களை வெளிப்படுத்து – யாழில் போராட்டம். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்துமாறு கோஷமிட்டனர். இதேவேளை சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பணத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் …
-
- 3 replies
- 458 views
-
-
அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பிலும் இவ்வாறு முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான அடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளித்து முழு அளவில் அரசியல் சாசனம் புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வெற்றியீட்டக்கூடிய இயலுமை அரசாங்கத்திற்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது…
-
- 0 replies
- 197 views
-