ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
வடக்கில் மறைமுகமாகவும் துரித கதியிலும் தோன்றும் புதிய விகாரைகள் (ஆர்.வி.கே.) நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை …
-
- 0 replies
- 656 views
-
-
நாங்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் விஷேட கூட்டம் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நாட்டின் பெரும்பான்மையினத் தலைவர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடமுடியாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நாம் எதிர்பார்க்காத அரசியல் மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட்டது. அது எங்களுக்கு அதிர்ச்சி தரக்…
-
- 4 replies
- 662 views
-
-
ஜனாதிபதியுடனான சி.வி.யின் பேச்சுவார்த்தை : 500 மில்லியன் ரூபா விடுவிப்பு வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரைக்கும் 34 வீதமான நிதிகளே மாகாணத் திறைசேரிக்கு கிடைத்த நிலையில் நேற்றைய தினம் மேலும் ஒரு 500 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நடப்பாண்டிற்கான நிதியில் சுமார் 45 வீத நிதிகள் மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதியில் 1ஃ3 பங்கு நிதியே இதுவரை கிடைத்துள்ளமையினா…
-
- 1 reply
- 359 views
-
-
“ஆவா குழு” என சந்தேகிக்கப்படும் 11 பேர் பிணையில் விடுதலை ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 11 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் இன்று (30) பிறப்பித்துள்ளார். சந்தேக நபர்களில் ஒருவர் தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/
-
- 1 reply
- 359 views
-
-
இரண்டு ஆண்டுகளில் மஹிந்தவின் வெளிநாட்டுப் பயணச் செலவு 230 கோடிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரண்டு ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் சுமார் 230 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2.3 பில்லியன் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின…
-
- 0 replies
- 186 views
-
-
நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு நாடு முழுவதுமுள்ள வைத்தியர்கள், இன்று புதன்கிழமை (30), பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். காலை 8 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று தெரிவத்திருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரம் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். மகளிர் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு ஆகியவை வழமைபோல இயங்கும் …
-
- 0 replies
- 178 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும் ஊடகச் சுதந்திரத்தின் அவசியம் குறித்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டியதன் தேவை குறித்தும் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திற்கான வரவு –செலவுத்திட்டத்தின் ஊடகத்துறை அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறியிருக் கின்றனர். இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தற்…
-
- 0 replies
- 198 views
-
-
http://www.tamilmirror.lk/187181/-கஞ-ச-க-ட-ச-ச-ற-வ-ச-ட-அத-ரட-ப-பட-ம-க-ம-ப-ல-கள-த-க-க-னர-
-
- 0 replies
- 401 views
-
-
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும், ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படுமெனவும் சிறீலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், சமஷ்டி குறித்து சிலர் பொய்யான தகவல்களை நாட்டில் வெளியிட்டு இனவாத, மதவாத அரசியலை நடாத்த முனைகின்றனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வாதத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தரப்பின் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நடுநிலையாக செயற்பட இணைந்துள்ளமை வரவேற்கத் தக்கது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கல்ல, ஒற்றையாட்சிக்கே முன்னு…
-
- 0 replies
- 242 views
-
-
“பாடசாலைக் கல்வியை 18 வயது வரை கட்டாயப்படுத்தி, இந்தப் பிள்ளைகளுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு வழிகளைப் போதிப்பது அல்லது ஆணுறை விநியோகத்தை வியாபிப்பது, சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொருத்தமான தீர்வல்ல” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சுட்டிக்காட்டினார். “இதேவேளை, 9ஆம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆபாசப்படங்கள் உடனான பாலியல் கல்வி பாடப்புத்தகம் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும்” என்றும் கோரிநின்றார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2015 இல், இலங்கையில் 12 -17 வயதுக்குட்பட்ட 20,780 சிறுமிகள…
-
- 0 replies
- 278 views
-
-
2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக நடந்தேறி முடிந்திருக்கிறது. மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றுமுடிந்தாலும் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீதான விமர்சனங்களும் சரமாரியாக காணப்பட்டுவருகின்றன. உண்மையில் கிழக்கிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வே மிகக்கூடுதலாக அவதானிக்கப்பட்டதாக தெரிகிறது. நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளில் தங்கள் உறவுகளுக்கு அவர்கள் விதைக்கப்பட்ட மண்ணில் சுடரேற்றுகின்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்தார்கள்…
-
- 0 replies
- 533 views
-
-
டொனால்ட் ட்ரம்பிடம் சரணடையும் ஜனாதிபதி மைத்திரி மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்ய ப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து எம்மை விடுவியுங்கள் என்று ஜனாதிபதி ட்ரம்புக்கு கடிதம் எழுதப்போகிறேன் என்று ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனித உரிமை, பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுகளில் இருந்து ட்ரம்ப் இலங்கையை விடுவிப்பார் என்றும், அவர் நம்பிக்கை வெளி யிட்டுள்ளார். காலியில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய …
-
- 5 replies
- 551 views
-
-
புனர்வாழ்வின் பின்னர் மூவர் சமுகத்துடன் இணைப்பு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த மூவர் இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களில் திருகோணமலை மற்றும் வவு னியா மாவட்டங்களைச் சேர்ந்த இருவரும் சிங்கள இளைஞர் ஒருவரும் அடங்கியுள்ளனர். திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த சிங்கராசா எட்மன், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் சிறீதரன் மற்றும் கொழும்பு மோதர பகுதியைச் சேர்ந்த அஜித் குமார ஆகிய மூவரே புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தப்பட்டவர்களாவர். சிங்கள இளைஞர் ஒருவரும் முன்னாள் விடுதலைப் பு…
-
- 0 replies
- 210 views
-
-
வியாழேந்திரன் எம்.பி. அச்சுறுத்தல் விடுத்ததாக மட்டு. விஹாராதிபதி பொலிஸில் முறைப்பாடு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி அவர் எனக்கெதிராக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த வியாழேந்திரன் எம்பி. மட்டக்களப்பு–பதுளை வீதியில் உள்ள குறித்த தனியார் காணிக்குள் எவரும் உள்நுழைய முடியாது என்று ஏறாவூர் நீதிமன்றம் கட்ட…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் சாட்சியம் பதிவு யாழ்.தீவகத்தில் தமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இன்றும் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது தாக்குதலுக…
-
- 4 replies
- 847 views
-
-
பாராளுமன்ற சுற்றுப்பிரதேசம் போர்க்களமானது அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை மீறி பாராளுமன்ற வளாகத்துக்குள் நுளைய முற்பட்டதையடுத்து கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்களில் சிக்கிய மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சார…
-
- 1 reply
- 385 views
-
-
காணாமற் போனவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறியும் நிகழ்வு யாழில் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நாட்டில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது காணாமற் போனவர்களின் விபரங்களை கேட்டு அறியும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம்,மன்னார் ,புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் இலங்கை சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன் தலைமையில் நடைபெற்றது. யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து, தெரிவு செய்யப்பட்…
-
- 0 replies
- 223 views
-
-
யாழ் பேருந்து நிலைய வாய்க்கால் மீளவும் மூடப்படுமா?நடைபாதை வியாபாரிகள் கேள்வி யாழ் பேருந்து நிலைய வாய்க்கால் சுத்திகரிக்கப்பட்டும் மூடப்படாமல் விடப்பட்டதால் மீண்டும் குப்பைகள் வாய்க்காலில் சேர்ந்து வருவதாகவும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ள னர். கடந்த 18 ஆம் திகதியில் இருந்து 21 ஆம் திகதிவரை யாழில் பரவலாக கனத்தமழை பெய்திருந்தது. கனத்த மழையின் காரணமாக யாழ் பேருந்து நிலையம் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.. இதனால் பேருந்து நிலையத்தை அண்டிய பகுதியில் வியாபாரம் செய்துவந்த நடைபாதைவியாபாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் வெள்ளம் கடைகளுக்குள் புகுந்ததால் பொருட்க…
-
- 0 replies
- 415 views
-
-
கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் இரத்து கம்போடிய பிரதமர் ஹுன் சேன், இலங்கை உள்ளிட்ட ஏனைய மூன்று நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை, கம்போடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் செனட் தலைவர் மியன் ராசா ரப்பானியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கம்போடியாவில் மேற்கொள்ளவுள்ள முக்கிய பணிகளை நிறைவுசெய்ய வேண்டிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் வரடத்தில் அந்நாட்டில் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ப…
-
- 0 replies
- 190 views
-
-
மாவீரர் தின நிகழ்வுகளைத் தடுக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “ மாவீரர் தினத்தை தடுக்க வேண்டுமா அல்லது நடத்த அனுமதிக்க வேண்டுமா என்பதை பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும். வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி எந்த கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் சிவில் மற்றும் பொலிஸ் நிர்வாக நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றமையால் இராணுவ பாதுகாப்புகளை பலப்படுத்த எந்தத் தேவையும் ஏற்படவில்லை” என்று…
-
- 0 replies
- 427 views
-
-
அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை நோக்கமாக கொண்டே, அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை நினைவு கூர அனுமதி வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ் மக்களை திசை திருப்பும் வகையிலும் அரசாங்கம் மாவீர்ர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கியிருக்கலாம் எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=170794&category=TamilNew…
-
- 0 replies
- 380 views
-
-
சிங்களத்தை காணவில்லை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான பத்திரம், தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதால், அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக, நாட்டுக்காக நாம் எனும் தேசிய அமைப்பின் ஒன்றியம், தெரிவித்தது. கொழும்பு நூலக மற்றும் ஆவணாவாக்கற் சபையின் கேட்போர் கூடத்தில், நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே, மேற்படி ஒன்றியம், இந்தச் செய்தியை வெளியிட்டது. இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், “யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் விநியோகிக்கப்பட்ட மேற்படி அடையாள…
-
- 1 reply
- 572 views
-
-
ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அதே ஞானசார தேரர் உட்பட 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குறித்த 13 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான ரோஹினி வெலகம மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 2008 தலஹென கிருஸ்தவ தேவாலய மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13983
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை ஜேர்மன் நிறுவன விரிவுரையாளர்களுக்கு பயிற்சி செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம், கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உராய்வு நீக்கி தொழில்நுட்பம் தொடர்பான உயர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை அண்மையில் நடாத்தியது. வயது வந்த இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள தொழில்சார் பயிற்சியை வழங்குவதற்காக, இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், மின்சார மற்றும் மின் இலத்திரனியல் தொழில்நுட்பம் உட்பட, தன்னியங்கி, நிர்மாணம், உணவு பதனிடும் தொழில்நுட்பம், இயந்திரவியல் பொறியியல், என்பவற்றுடன் தகவல் தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளை வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்ட…
-
- 0 replies
- 237 views
-
-
வடக்கில் விகாரைகளை புனரமைத்து பௌத்த பிக்குகளை குடியேற்ற வேண்டும் என்று இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 'வடக்கில் சிறிய சம்பவம் நடந்தாலும் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது. தெற்கில் சிறிய சம்பவங்கள் நடந்தால், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். வடக்கில் 270 விகாரைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விக்னேஸ்வரன் அறியாமல் இருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தி அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கில் விகாரைகள் தொடர்பாக தேடி அறிந்து, அவற்றை புனரமைத்து பௌத்த பிக்குகளை அங்க…
-
- 3 replies
- 581 views
-