ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143408 topics in this forum
-
மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு -எஸ்.றொசேரியன் லெம்பேட் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. உயிர் நீத்த மாவீர்களை நினைவு கூர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு, தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதேவேளை, மன்னார் மடு பிரதேசச்செயலா…
-
- 0 replies
- 312 views
-
-
இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் இலங்கையைத் தாக்கிய பின்னர், மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்காக டியாகோகார்சியாவில் உள்ள தளத்தில் இருந்து மூன்று போர்க்கப்பல்களில் சுமார் 2000 அமெரிக்கப் படையினர் இலங்கைக்கு வந்திருந்தனர். அப்போது மீட்பு உதவிப் பணிகளுக்காக அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவினர், தாம் கொண்டு வந்த இராணுவ வாகனங்களையே பயன்படுத்தியிருந்தனர். ஹெலிகொப்டர்களும், படகுகளும், ஏனைய வாகனங்களும், அமெரிக்க கப்பல்களிலேயே கொண்டு வரப்பட்டிருந்தன. அதற்குப் பின்னர், கடந்த வாரம் தான் முதல் முறையாக அதிகளவிலான அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கையில் நடமாடித் த…
-
- 0 replies
- 292 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்த நாள் நேற்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவிலும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது. இதேவேளை, புலம்பெயர் நாடுகள் எங்கிலும்,நேற்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்…
-
- 1 reply
- 463 views
-
-
கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் பிரபாகரனுக்கு வாழ்த்தி சுவரொட்டிகளும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்கள் என்பன எழுதப்பட்டும்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் இன்று ஞாயிறு காணப்படுகின்றது . குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது , நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில் இனந்தெரியாத நபர்களினால்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஐம்பதிற்கு மேற்ப்பட்டவை ஏ35 பாதையில் வீசப்பட்டுள்ளதுடன் வட்டக்கச்சி சந்தையில் உள்ள விளம்பரப்ப…
-
- 0 replies
- 313 views
-
-
விதைகளுக்கு விழிநீர் ஊற்ற தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் எஸ்.என்.நிபோஜன் தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள் குடியமர்ந்த பின்னர் கடந்த ஏழு வருடங்களாக தங்கள் பிள்ளைகளை நினைவு கூற முடியாதவர்களாக தவித்து வந்துள்ளனர். ஆனால் இன்றைய தினம் குறித்த அஞ்சலி நிகழ்வினை கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் நடத்துவதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கி…
-
- 0 replies
- 382 views
-
-
ஆப்கன் பெண் புகழ் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, ஈழம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சிங்களவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர். அதற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிங்களவர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார் மெக்கர்ரி. இந்தப் புகைப்படத்தில் வயல் வெளி ஒன்றில் ஒரு விவசாயி ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கிறார். மறுபுறம் …
-
- 0 replies
- 358 views
-
-
மட்டக்களப்பில் மாவீரர்களை மகிமைப்படுத்தி மாவீரர் தினமாகிய இன்று(27) மட்டக்களப்பு தமிழ் சமூகம் என்று உரிமை கோரப்பட்டு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டுள்ள அந்தப் பிரசுரங்களிலே, “மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள் மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள் எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள் கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள் கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள் காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள் ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள் நேருக்குப் போர் செய்து ந…
-
- 0 replies
- 424 views
-
-
வவுனியா முன்னாள் நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தலைமையில், மன்னார், மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பகுதிகள் இடம்பெற்று வருகிறது. குறித்த சிரமதான பணியானது இன்று(27) மாலை நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வின் பெருட்டே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிரமதான பணியில் பெரியபண்டிவிரிச்சான் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அஞ்சலி நிகழ்வானது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி தமது உயிர் நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் தேசிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் வீதியோரங்களில் காணப்படுகின்றது. இதேவேளை, விஸ்வமடுப்பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளதுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என…
-
- 0 replies
- 284 views
-
-
இன்று மாவீரர் நாள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீர்களி்ன் நினைவுதினம் இன்றாகும்.இதன்படி இன்றுமாலை 6.05 மணியளவில்தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் அமைதியானமுறையில் நினைவு கூரப்படவுள்ளது மாவீரர் தினம். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம்,முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம்,முழங்காவில் துயிலுமில்லங்கள் இன்றைய மாவீரர் நாளுக்காக மக்களால் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இராணுவத்தால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகளை ஒன்று சேர்த்து அதன் மேல் மாவீரர் தீபம் ஏற்றி மாவீரர் நாளை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவி…
-
- 1 reply
- 966 views
-
-
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும் மேலும் அதற்கென உழைப்பதே மாவீரர்கள் கனவை நனவாக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(27) வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப்பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்…
-
- 0 replies
- 271 views
-
-
"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர். இருக்காதா பின்னே....? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே! கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந…
-
- 1 reply
- 713 views
-
-
யாழில் குடு பேபி கைது! 180 மில்லிகிராம் குடு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வைத்து குறித்த இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர். யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு போதை பொருளினை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு இவர் குறித்து கிடைத்த தகவலின் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் உட…
-
- 1 reply
- 346 views
-
-
பகிடிவதை உச்சம், கிழக்கு பல்கலை மருத்துவபீடத்தின் ஒருபகுதி கற்கை நெறிகள் இடைநிறுத்தம்-மாணவர்களையும் வெளியேற பணிப்பு கிழக்குப் பல்கலையின் மருத்துவ பீட முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஒரு பகுதிக்கான கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் சிலர் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேற்று (சனிக்கிழமை) கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக பேரவை இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன்…
-
- 0 replies
- 240 views
-
-
மஹிந்த -ரணில் இணக்கப்பாடு அம்பலம் மஹிந்தவின் சீன விஜயத்திற்கான அனைத்துவித ராஜதந்திர வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியிருப்பதன் மூலம் மஹிந்த மற்றும் ரணிலுக்கு இடையிலுள்ள இண க்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனது சீன விஜயத்தினுள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் தீர்மானிக்கப்பட்டுள்ள 15000 ஏக்கரிலான கைத்தொழில் வலயத்திற்கு இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதியளித்துள்ளார். அந்த இணக்கப்பாட்டிற்கான நன்றியாக சீன விஜயத்தில் இர…
-
- 0 replies
- 195 views
-
-
யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்களாகியும் படையினரின் ஆக்கிரமிப்பில் பொதுமக்களின் காணிகள் -ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் - சபையில் மாவை எம்.பி. பகிரங்கமாக தெரிவிப்பு 65ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கை இழப்பு மக்களுக்கு ஒரேமாதிரியான வீடுகளே அவசியம் யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களாகின்ற போதும் மக்களின் காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அவை உடன் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தவைவரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சபையில் வலியுறுத்தினார். வடக்கில் …
-
- 0 replies
- 192 views
-
-
இராணுவத்தினர் பற்றிய தகவல்களை கூட்டமைப்பிடம் கேட்ட ஜனாதிபதி ஜெ.ராஜன், எஸ்.கே. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பற்றியும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை நசுக்கும் விதத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்ற நடவ டிக்கைகள் குறித்த முழுத் தகவலையும் அறிக்கைவடிவில் தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இத்தரவுகளைக் கேட்டுள்ளார். தற்போது வ…
-
- 0 replies
- 352 views
-
-
'தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்!' - சீறும் சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் இன்று! அதேசமயம் நாளை (27-11-2016) மாவீரர் நினைவு தினம்! விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இலங்கையில் நடைபெற உள்ள நிகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். …
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது-ஜனாதிபதி அதிருப்தி சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். காவல்துறை வாகனத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு. எதிர்வரும் டிசெம்பர் 6ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் ந…
-
- 0 replies
- 222 views
-
-
95 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை ; அமெரிக்க கப்பல் நேற்று நாடு திரும்பியது அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான கூட் டுக் கடற்படை பயிற்சி நடவடிக்கை கள் திருகோணமலை கடற்பரப்பிலும் அதனை அண்டிய காட்டுப் பகுதியி லும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க – இலங்கை கூட்டுப் படைகளின் உறவை பலப்படுத்த இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையிலும் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையிலும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலை துறை…
-
- 0 replies
- 198 views
-
-
ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து ஆணின் சடலம், வெள்ளிக்கிழமை (25) மாலை மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர் ரீ.பிரதீபன் தெரிவித்தார். மேற்படி நபர், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யாழ். தேவி ரயியில் பயணித்துள்ளதாகவும் களைப்பு காரணமாக ஓய்வெடுத்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/186976/ரய-ல-ந-ல-யத-த-ல-இர-ந-த-ஆண-ன-சடலம-ம-ட-ப-#sthash.diktJNaa.dpuf
-
- 0 replies
- 176 views
-
-
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது பிரதியமைச்சர் இரான் விக்ரமரட்ன நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன் நாட்டில் ஜனநாயகம், பொருளாதாரம் என சகல துறைகளும் வலுவடைந்து வருவதன் மூலம் அரசாங்கம் ஸ்திரமடைந்துள்ளது. எனவே அடிப்படைவாதத்தை மேலெழச்செய்து அதிகாரத்தைக் கைப்பெற்ற எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றனர். எனினும் இந்த அரசாங்கத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருபோதும் ஆட்சி கவிழ்க்க முடியாது என பிரதியமைச்சர் இரான் விரக்ரமரட்ன தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்த செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி : 2017 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட…
-
- 1 reply
- 243 views
-
-
பிரபாகரனோ மஹிந்தவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை – ரெஜினோல்ட் குரே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ யுத்தத்தில் வெற்றியீட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தில் வேதனைகள், வலிகள், அழுகைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் யுத்தம் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எழுக தமிழ் திட்டம் நல்ல திட்டம் எனவும் இதனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கிலும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 333 views
-
-
வடக்கில் சிங்கள பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்-ஆளுநர் கோரிக்கை வடக்கில் மாணவர்களுக்கு சிங்கள பாடத்தை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் எவரும் இல்லை. எனவே இது தொடர்பில் வடக்கு முத ல்வர், கல்வியமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.வலிகாம கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் யா.சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்க ண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது இந்த உலகத்திலேயே முக்கியமான சேவையை செய்பவர்கள் ஆசிரியர்கள்,எந்த தொழி…
-
- 1 reply
- 247 views
-
-
யாழ்பல்கலையில் பிரபாவின் பிறந்ததினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் நடை பெற்றுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் கேக் வெட்டி அவரின் பிறந்ததின நிகழ்வு நடைபெற்றது. . http://www.onlineuthayan.com/news/20702
-
- 4 replies
- 1.1k views
-