ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143409 topics in this forum
-
லசந்தவை இராணுவ புலனாய்வுப் பிரிவினரே சுட்டுக் கொலை செய்தனர் : சி.ஐ.டி. மன்றில் அதிர்ச்சி தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என சி.ஐ.டி.யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்களின் அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது. இது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிக்கை முன்வைத்த போதும் அவர் அதனை நிராகரித்துள்ளதாகவும் பாதுகாப்ப…
-
- 0 replies
- 453 views
-
-
யாழ். தீவகப் பகுதியில் த.தே.கூ உறுப்பினர்கள் மீது தாக்குதல்: முதலாவது சாட்சியம் பதிவு யாழ். தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முதலாவது சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி தீவகப் பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் நாரந்தனை எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர். நான்கு குற்றவாளிகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத 50 சந்தேகநபர்களுக்கு …
-
- 0 replies
- 348 views
-
-
இணையத்தளத்திற்கான வரி அதிகரிப்பு -காரணம் கூறும் நிதிஅமைச்சர் வழமையான தொலைபேசி அழைப்புக்களிற்கு புறம்பாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொண்டமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரிப்பதற்கான கார ணம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அது மிகவும் அதிகமானது இல்லை எனவும் இன்று நிதியமைச்சில் இடம்பெ ற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ”எம்மோடு நடத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி நிறுவனங்கள் வழமையான தொலைபேசி அழைப்புக்ளிற்கு பதிலாக அனேகமானோர் வைபர் மற்றும் வட்ஸ் அப் பாவிப்பதாவும் இதனால் தமது வருமானம் குறைவடைவதாகவும் தெரிவித்தனர். இந்த மாற்றத்தின் காரணமாக ஏனைய நாடுகளில் உள்ளதைப் ப…
-
- 0 replies
- 235 views
-
-
தவராசா பதவி நீக்கல் விவகாரம் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பிய வடக்கு அவைத்தலைவர் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் பதவி விலகல் தொடர்பாக, வடக்கு ஆளு நர் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அனுப்பி வைத்தி ருந்த கடிதத்திற்கு வட மாகாண அவைத்தலைவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவை பதவி விலக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தவராசாவை பதவி விலக்கி அவருக்கு பதிலாக பிறிதொரு உறுப்பினரான தவநாதனை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு …
-
- 0 replies
- 240 views
-
-
வாகனங்கள், துப்பாக்கிகளுடன் நபர் கைது எம்.இஸட்.ஷாஜஹான் அமைச்சின் செயலாளர் ஒருவரின் பெயரிலும் கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் தேரர் ஒருவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்குச் சமமாகப் போலி ஆவணங்களையும் இலக்கத்; தகடுகளையும் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் இரண்டு துப்பாக்கிகளையும், ரவைகளையும் நீர்கொழும்புப் பிராந்தியப் பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு, அந்த வாகனங்களை வைத்திருந்த சந்தேகநபரொருவரையும் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மாரவில, லங்சியாகம பிரதேசத்திலுள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அந்த வீட்டில் சந்தேகநபரின் மனைவி இருந்துள்ளார். இந்நிலையில், வீ…
-
- 1 reply
- 240 views
-
-
நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்தவர் நீதிமன்றத்துக்கு வெளியில் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டு வந்த ஒருவரை, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து புதன்கிழமை (23) கைது செய்து நீதிமன்ற பொலிஸார், அவரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பகுதியினை சேர்ந்த என்.என்.ஜக்சன் எனும் நபர் தனது முகப்புத்தகம் ஊடாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருந்தார். அதாவது, இரண்டு ம…
-
- 2 replies
- 500 views
-
-
மஹிந்தவின் சீன விஜயத்தின் பின்னணியில் ரணில்.! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அளவுகடந்த அன்பும் அக்கறையும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நெருக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலத்தை சீரழித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…
-
- 0 replies
- 232 views
-
-
யாழிலிருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைக்கின்றது ; ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் பஷில் (லியோ நிரோஷ தர்ஷன்) யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 ஆயிரத்து 29 கிராம சேவகர் பிரிவிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிரங்கி போட்டியிடும் . புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ந…
-
- 0 replies
- 351 views
-
-
மாவீரர்களை அஞ்சலிப்பது நல்லிணக்கத்தை பாதிக்குமாம்- என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் யுத்தத்தினால் உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் அஞ்சலிப்பதால் தற்போதைய நல்லிணக்க முயற்சிகளே பாதிக்கும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எனவே உயிர்நீத்த உறவுகளை மாவீரர் என்ற பெயரில் நினைவுகூராமல் அவர்களை அஞ்சலிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொ ண்டார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் 165ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு தென்னிலங்கையின் காலி நகரில் எதிர்வரும் 30ஆம் திகதி விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய…
-
- 0 replies
- 346 views
-
-
எழுவைதீவு சாதாரணதர மாணவர்களின் அவலம் யாழ்ப்பாணம் எழுவை தீவில் உள்ள கா.பொ. சாதாரணதர மானவர்களுக்கு மக்கள் எழுவை தீவில் மண்டபம் ஒன்றினை அமை த்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் இன்மையால் கொட்டும் மழையில் மாணவர்கள் படகில் சென்றே பரீட்சை எழுதவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு சென்றுள்ளனர். இது தொட ர்பில் ல் மேலும் தெரிவிக்கப்படுவதாவது எழுவை தீவில் மண்டபம் ஒன்றினை அமைத்ததுதரும்படி2014ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்டு பரீட்சை நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிப்பார்கள் ஆனால் நடைமு றைப்படுத்தமாட்டார்கள் . இந்த ஆண்டின் ஆரம்பம் மு…
-
- 0 replies
- 242 views
-
-
அமைச்சர் குளிக்க மன்னார் தாராபுரத்தில குளம்-சாள்ஸ் எம்.பி அமைச்சரொருவர் குளிப்பதற்காக தற்போது பயன்படுத்தும் தாராபுரத்தில் உள்ள குளமொன்றிற்கு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க ப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தாராபுரத்தில் விவசாய தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குளம் ஒன்று தற்போது அமைச்சர் ஒருவரின் தனியார் தேவை களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.ஆனாலும் இந்தக் …
-
- 0 replies
- 290 views
-
-
மாணவர்களை சுடப்போவதாக பொலிஸார் மிரட்டல் ; யாழ்.பல்கலைக்கழக விடுதிக்குள் சம்பவம் (ஆர்.வி.கே.) யாழ்ப்பணம் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக மிரட்டியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளனர் . இச் சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இடம்பெற்றுள்ளது. மாணவன் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார் இப்படி ஒரு கொண்டாட்டமும் இனி கொண்டாட முடியது எனவும் குழப்பங்களில் ஈடுபட்டால் சுடுவோம் எனவும் அச்சுறுத்தி சென்றுள்ளதோடு சில மாணவர்களின் தகவல்களையும் திரட்ட…
-
- 2 replies
- 453 views
-
-
அன்று ஆயுதங்களால் கொல்லப்பட்டார்கள்.. இன்று சட்டத்தால் கொல்லப்படுகிறார்கள்! இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேர்காணல் #Exclusive சென்னை கவிக்கோமன்றத்தில், 'இன்றைய தமிழ் ஈழ மண்ணில் தமிழர்களின் நிலைமை!' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. இலங்கையில் இன்று, தமிழர்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது? அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்னென்ன? என்பன பற்றி அனைவரும் அறிந்து கொள்வதற்காக 'மக்கள் சிவில் உரிமைக் கழகம்' இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. யாழ்பாணத்தின் முன்னாள் மந்திரி சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன? என்பது பற்றி அவர் விகடனுக்கு அளித்த பேட்டி: …
-
- 0 replies
- 210 views
-
-
இலங்கையிலும் “கறுப்பு வெள்ளி” தினம் முதற்தடவையாக அறிமுகம் இலங்கையின் முதற்தர இணைய விற்பனையாளரான டாரஸ்.எல்.கே நவம்பர் 25ஆம் திகதி அன்று இணையம் ஊடாக கறுப்பு வெள்ளி விற்பனையை இலங்கையில் முதற் தடவையாக நிகழ்த்துகின்றது. இணைய வர்த்தக தொழிற்துறையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெறும் இராட்சத விற்பனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கைமு, டாரஸ் ஆகிய இரு பிரபல்ய இணைய வியாபாரிகளும் கூட்டுச் சேர்ந்ததன் காரணத்தினால் மட்டுமே, இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹட்ச் தொலைபேசி நிறுவனம் இலவச சிம் அட்டைகளை வழங்குவதோடு, விசேட கழிவுகளையும் வேறு சேவைகளையும் வாடிக்கையாளருக்கு அளித்…
-
- 0 replies
- 304 views
-
-
வின்ஸன் சேச்சிலுக்கு நடந்த கதைதான் தனக்குமாம்-மகிந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் பல வழிகளிலும் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வீஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் ராஜா பர்வீஸ் அஷ்ரப் மற்றும் அவரது பாரியார் பேகம் நுஷ்ரத் அஷ்ரப் அவர்களும் நேற்று முன்தினம்(22) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து ப…
-
- 0 replies
- 254 views
-
-
“சிங்கள மொழியில் கடிதம் வந்தால், அனுப்பியவருக்கு அதனை திருப்பி அனுப்புவேன்” எம்.றொசாந்த் 'எனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, எனக்கு அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன்' என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாணசபையின் 66ஆவது அமர்வு நேற்றுச் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவைத்தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உரையாற்றும் போது, 'வடமாகாணத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இங்குள்ள திணைக்…
-
- 0 replies
- 368 views
-
-
சிங்கள ஜூரிகள் முன்னிலையில் ஒன்றரை மணிநேரம் விவரிப்பு பேரின்பராஜா திபான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, ஏழு பேர் அடங்கிய விசேட ஜூரிகள் சபையை, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) நியமித்தது. ஜூரிகளை நியமிக்கும் செயற்பாடுகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 11:15க்கு ஆரம்பமானது. இதன்போதே, 7 பேரடங்கிய விசேட ஜூரிகள் சபை நியமிக்கப்பட்டது. அதில் ஆறு ஜூரிகள் பெண்களாவர், ஜூரியின் தலைவராக, எம்.பி.பி.திலகசிறி நியமிக்கப்பட்டார். அனைவரும் சிங்களவர்களாவர். இவர்கள் அனை…
-
- 2 replies
- 488 views
-
-
75 வீதமானவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படவேண்டும் இந்த முறை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மாவை எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திலுமிருந்து 75 சதவீதமானவர்கள் அந்தந்த மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படுவது தொடர் பாக கவனம் செலுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா சபையில் கோரிக்கை விடுத்தார். பல்கலைக்கழகச் சட்டங்களின் பிரகாரம் அவை சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படவேண்டுமென வலியுறுத்திய…
-
- 0 replies
- 151 views
-
-
மாவா பாக்குடன் இளைஞன் கைது செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் செவ்வாய்க்கிழமை (22) மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினார். சந்தேகநபரிடம் இருந்து 53 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டது. கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்ததுடன், மாவா பாக்கு பொதியினையும் மீட்டிருந்தனர். - See more at: http://www.tamilmirror.lk/186815#sthash.OhGcAzt9.dpuf
-
- 0 replies
- 202 views
-
-
இலங்கை மரைன் படைப்பிரிவுக்கு, அமெரிக்க கடற்படை பயிற்சி இலங்கை கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்கு, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவி னர் திருகோணமலையில் பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்த மூன்று நாள் சிறப்புப் பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகியிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் சோமசெற்றில், உள்ள அமெரிக்க மரைன் படையினரின் போர்த்தளபாடங்கள், வாகனங்கள் இந்தப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உலங்குவானூர்திகளில் இருந்து தரையிறக்கும் பயிற்சிகளும், ஈரூடக போக்குவரத்து வாகனமான ஹ…
-
- 0 replies
- 212 views
-
-
அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர்,இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துள்ளனர். பூஓயாவில் உள்ள பொறியியல் படைப்பிரிவுத் தளத்தில், இலங்கை படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டுபிடித்து, அழிக்கும் பயிற்சிகளை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் அளித்துள்ளனர். முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் நாள் நிறைவடைந்தது. …
-
- 0 replies
- 187 views
-
-
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், 1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை சிறிய குழுவாக பிரபாகரன் உருவாக்கினார். அது காலப்போக்கில் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டது. அப்போது விடுதலைப்புலிகள் உருவாகும் போது யாரும் தடுக்கவில்லை அப்போதைய ஆட்சியாளர்களின் கவனயீனத்தினால் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் வளர்ந்தார்கள். பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டனர், ஆனாலும் 30 வருடங்கள் இரத்தம் கொட்டியது புலிகளை அழிக்கப்பட்ட பின்னரும் நாடு பின்னோக்கி…
-
- 0 replies
- 332 views
-
-
ஐ.எஸ். விவகாரத்தில் அரசுக்குள் முரண்பாடு இலங்கையர் எவரும் இல்லை என்கிறார் ராஜித : ஐ.எஸ்.சர்ச்சை, ஆவா குழுவை பயன்படுத்தி தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இல்லா தொழிப்பதற்கு பாரிய சதி (ரொபட் அன்டனி) இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக எவ்விதமான புலனாய்வு அறிக்கையும் பாதுகாப்புப் பேரவையினால் வெளியிடப்படவில்லை. இது முற்றிலும் தவறான தகவலாகும் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ முன்வைத்த தகவ லானது அவருடைய தனிப்பட்ட தகவலாகும். அது அரசாங்கத் தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். …
-
- 0 replies
- 184 views
-
-
‘தமிழ் மன்னர்களின் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன’ பாடப் புத்தகங்களில், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசர்கள் பற்றிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “பாடசாலை பாடப் புத்தகங்களில், இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் சம்பந்தமான வரலாறு, திரிபுப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று பாடப்புத்தகத்தில் துட்டகைமுனு மன்னன் பற்றி குறிப்பிடப்ப…
-
- 0 replies
- 279 views
-
-
யாழ். பிள்ளைகள் ஆர்வம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளைகள், கல்விகற்ற ஆர்வமாக உள்ளனர். அதனால் தான், யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நியமிக்குமாறு, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சபை முதல்வரும் உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186758/ய-ழ-ப-ள-ள-கள-ஆர-வம-#sthash.1jRzi3Yl.dpuf
-
- 1 reply
- 417 views
-