ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழ்ப் பிரிவினைவாதிகளின் தேவைக்கு அமைய புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முழு வரலாற்றுக் காலத்திலும் தமிழ்ப் பிரிவிணைவாதிகள் விடுத்த பிரிவினைவாத கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் இந்த அரசாங்கம் அரசியல் சாசனத்தை உருவாக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் இரகசியமான முறையில் இந்த கோரிக்கைகள் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு இடமளித்தால் எமது எதிர்கால சந்ததியினருக்கு நாடே இல்லாமல் போய்விடும் என குறிப்பிட்டுள்ள …
-
- 2 replies
- 314 views
-
-
பிரதான வழி நடத்தல் குழுவின் அறிக்கை வந்ததும் எவ்வாறான தீர்வு என்பதனை அறிந்துகொள்ள முடியும் மிக விரைவில் உபகுழுக்கள் மற்றும் வழிநடத்தல் குழு ஆகியவற்றின் இடைக்கால அறிக்கைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன. அவ்வறிக்கையில் உள்ள விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றபோது தமிழ் மக்களுக்கு எத்தகைய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட விருக்கின்றதென்று தமிழ் மக்களும் தென்னிலங்கையரும் அறிந்துகொள்ள முடியும் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதுடில்லி சென்று திரும்பிய அவரி…
-
- 0 replies
- 438 views
-
-
கச்சதீவை அடுத்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியதோடு அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. நேற்று மாலை 3000இற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தியக் கரையோரப் பட்டணத்திலிருந்து 641 இயந்திரப் படகுகளில் கச்சதீவையொட்டிய இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்க முயன்றபோதே குறித்த மீனவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதேவேளை 30 படகுகளை மட்டும் சுற்றி வளைத்த கடற்படையினர் வலைகளைத் திருப்பித் தருமாறு தெரிவிக்கும் முன்னர் அவற்றை வெட்டியுள்ளனர் என புதுச்சேரி மீனவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.போஸ் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 333 views
- 1 follower
-
-
அதிகார பரவலாக்கம் குறித்த விடயத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம் பௌத்தமத உரிமை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பில் அதிகாரபரவலாக்கம் குறித்தான விடயதானத்தில் அனைவரும் இணக்கத்திற்கு வந்துள்ளோம். அத்துடன் மேலும் பல்வேறு அடிப்படை அம்சங்கள் தொடர்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனாதிபதியின் 2 வருட பதவிக்கால பூர்த்தியான ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பு புதிய அரசியலமைப்பு எது என்பதனையும், அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தித் திட்டம் எது என்பதனையும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கி…
-
- 0 replies
- 499 views
-
-
ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவாக வேண்டுமெனப் பிரார்த்திக்கு முகமாக, 1,008 தேங்காய்களை உடைத்துப் பிரார்த்தனை செய்யவுள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்விடயத்தை வெளிப்படுத்தினார். இதன்படி, இன்று (02) மாலை 5 மணியளவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில், 1008 தேங்காய்களை உடைத்து விசேட வழிபாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், யாழ். மரியன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் களனி பகுதியில் மீட்பு களனி பெதியகொட பகுதியில் 450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. கொள்கலன் ஒன்றிலிருந்தே 31 கிலோ நிறையுடைய குறித்த கொக்கையின் தொகை மீட்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13359
-
- 0 replies
- 271 views
-
-
மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடற்பன்றி ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அசோக ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். கடற் பன்றியானது இலங்கையில் பரவலாகக் காணமுடியாததொரு அரிய வகை உயிரினமொன்று என அவர் தெரிவித்துள்ளார். இக்கடற்பன்றி சுமார் ஐந்து அடி நீளமானதெனவும் 450 – 500 கிலோ வரையான நிறையை கொண்டதெனவும் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்பிரதேசங்களில் இவ்வகையான கடற்பன்றிகள் மிகவும் அரிதாகவே காணக்கூடியதாகவுள்ள அதேவேளை, இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் இவ்வகையான 7-8 வரையான கடற்பன்றிகள் காணப்…
-
- 0 replies
- 311 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டி ற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்து ள்ளார். மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது நாடாளுமன்றத்தினதோ, அல்லவெனவும் அனைத்து மக்களும் ஏற்றுக்க…
-
- 0 replies
- 262 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இலங்கையர்கள் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுடன் இணைகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் இலங்கையர்கள் இணையக்கூடிய அபாயம் குறித்து கண்காணிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டில் சிரியாவில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ளப்பட்டமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வரும் சர்வதேச காவல் துறையின் 85ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற போது…
-
- 0 replies
- 149 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஹாவா குழு என்ற அடிப்படையில் இராணுவப் படையினர் எவரும் கைதாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவப் படையில் கடமையாற்றி வரும் எவரும் ஹாவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு ஏதேனும் கைதுகள் இடம்பெற்றிருந்தால் குறித்த முகாமின் ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இதுவரையில் அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 172 views
-
-
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையின் அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் அரசாங்கமானது இந்த விடயத்தில் மாற்று நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. இதனால் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தின்போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஆயிரக்க…
-
- 0 replies
- 219 views
-
-
பொருளாதார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் இடையூறு வடக்கில் காணப்படும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளமையால், அங்குள்ள மக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலாலான சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தான…
-
- 1 reply
- 236 views
-
-
கனேடிய வெளிவிவகார அமைச்சின் ஐவாத் குரேசி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகளைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். குறித்த குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஐயம் மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருவதற்குக் கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கூறினார். …
-
- 0 replies
- 363 views
-
-
தென்னிலங்கை மீனவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும் அவர்களின் தொழில் முறமைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள், தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இன்று(09) காலை முசலி பிரதேச மீனவர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த முசலி பிரதேச மீனவ சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் பிரதான வீதியில் ஒன்று கூடிய முசலி பிரதேச தமிழ் மற்றும் முஸ்ஸிம் மீனவர்கள் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஊர்வ…
-
- 0 replies
- 364 views
-
-
வட மாகாண சபைக்கு 2016ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதம்செலவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று சபையில் தெரிவித்தார். இந்நிலையில் அதிகாரிகளால் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் சரியானது தானா? எனஎதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். வட மாகாண சபையின் 65வது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது 2016ம் ஆண்டுக்கானமூலதன நிதியில் கடந்த 31.08.2016 வரை சுமார் 38 வீதமான நிதியேசெலவிடப்பட்டுள்ளதாக நிதிக்கூற்றறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே அதற்கான பௌதீக முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா முதலமைச்சரிடம் கோரினார். இதன்போதே 50 சத…
-
- 0 replies
- 177 views
-
-
தையிட்டி - கணையவில் பிள்ளையார் ஆலயத்தில் 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தக்குள் இருந்த சாமி விக்கிரகங்கள், காணி விடுவிக்கப்பட்ட சில நாட்களில் காணாமல் போயுள்ளன. மேலும், சுவாமி வாகனங்கள், மணிகள், பொறுமதியான பொழிகற்கள் என்பவையும் ஆலயத்தில் இருந்து திருடப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதியில் இரவு வேளைகளில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்பொருட்கள் காணமல் போனமைக்கான முழுப் பொறுப்பையும் இராணுவத்தினரே ஏற்க வேண்டும் என ஆலயத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பகுதி பொதுமக்களும் கூறுகின்றனர். 1990ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998ஆம் ஆ…
-
- 0 replies
- 208 views
-
-
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு போட்டி பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(09) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு திருகோணமலை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைப்பறெ்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன்,அதிதிகளாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.தங்கவேல், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்த…
-
- 0 replies
- 358 views
-
-
ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடக்கை யும் அச்சுறுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்னணியில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும் அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார, இந்த விவகாரம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூன…
-
- 3 replies
- 550 views
-
-
2013ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற கட்டாய கருத்தடை தற்போதும் நடைபெற்று கொண்டிருந்தால் ஆதாரங்களுடன் எமக்கு தெரியப்படுத்துங்கள், கடுமையான தண்டணை வழங்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 65ஆம் அமர்வு இன்று நடைபெற்றிருந்தது. மேற்படி அமர்விலேயே மாகாணசபை உறுப்பினர் குறித்த விடயத்தை சபைக்கு கூறினார். விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். 2013ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இப்போதும் நடக்கின்றது. அதிக கருக்கலைப்பு செய்த வை…
-
- 1 reply
- 359 views
-
-
“முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம்” ஞானசார தேரர் மீது பொலிஸ் முறைப்பாடு ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொள்ளுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தவர் மீதும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் மீதும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்றைய தினம் கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டம் கடந்த 03.11.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது. குறித்த ஆர்பாட்டத்தை தடை செய்யுமாறு கோரி ஊடகங்களுக்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் 9 சந்தேக நபர்களுக்கு 3 மாத காலம் விளக்கமறியல் யாழ் மேல் நீதிமன்றம் உத்தரவு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்று தொடக்கம் ஒன்பது வரையிலான சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்து அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் மன…
-
- 0 replies
- 196 views
-
-
ஊழல் தொடர்பில் நீண்ட விவாதம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வடமாகான சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்து உள்ளார்.வடமாகாண சபையின் 65 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வவுனியா நகர சபை செயலாளர் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்து ஊழல் செய்துள்ளதாக சபையில் விவாதிக்கப்பட்டது. அதன் போதே எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில், அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களை இடமாற்றம் செய்வது மாத்திரம் ப…
-
- 0 replies
- 199 views
-
-
வட கிழக்கில் 100 விஹாரைகளை புனரமைக்க அரசாங்கம் தீர்மானம் வடக்கு, கிழக்கில் அமைந்திருக்கின்ற 100 விகாரைகளை மீள் புனரமைத்து அவற்றுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/13348
-
- 0 replies
- 242 views
-
-
“ஆவா“ குழு குறித்து நாளை மேலும் முக்கிய தகவல்கள் வெளிவரும் (ரொபட் அன்டனி) ஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பில் நாளைய தினம் இன்னும் அதிகமான தகவல்கள் எனக்கு கிடைக்கும். அப்போது நான் வெளிப்படுத்துவேன். ஆவா குழுவுடன் இராணுவம் தொடர்புபட்டுள்ளதாக நான் கூறவில்லை. மாறாக கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஒரு சில இராணுவ அதிகாரிகளுமே ஆவா குழு உருவாக்கத்தில் தொடர்புபட்டிருந்ததாக நான் தெரிவித்திருந்தேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கரு…
-
- 0 replies
- 268 views
-
-
அர்ஜுன மகேந்திரனின் தற்போதைய பதவியும் பறிக்கப்படும் (ரொபட் அன்டனி்) மத்திய வங்கியி்ன் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு பிரதமரினால் தற்போது வழங்கப்பட்டுள்ள பதவியிலிருந்தும் அவர் விலக்கப்படுவார். இந்த விடயத்தில் அவசரப்படவேண்டாம். பொறுத்திருங்கள். அர்ஜுன மகேந்திர இப்பொழுதான் நாடுதிரும்பியுள்ளார். அவர் கோட் சூட் மாற்றிக்கொண்டு வந்தவுடன் பதவிவிலக்கப்படுவார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்ட…
-
- 0 replies
- 189 views
-