ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். என யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரேனிஸ்லாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது அவர்கள் நிறுத்தவில்லை. அதனால் வாள் வெட்டுக்குழு என நினைத்து பொலிசார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். நிறுத்துமாறு பொலிசார் சைகை காட்டிய போது நிறுத்தி இருந்தால் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்க மாட்டார்கள். வ…
-
- 30 replies
- 2.9k views
-
-
வடக்கில் “ஆவா” குழுவை கட்டுப்படுத்த அனுமதி கோருகிறது இராணுவம் வடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது. இதேவேளை, வடக்கில் இயங்கிவரும் இந்த ஆவா அமைப்பின்…
-
- 1 reply
- 177 views
-
-
கோப் குழு அறிக்கை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? விளக்குகிறார் கோப் குழுத் தலைவர் எம்.நேசமணி,எஸ்.கணேசன் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக பாராளுமன்ற கோப் குழு தயாரித்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கோப் குழுவின் பணி நிறைவடைந்துள்ளது. எனவே, அந்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள கோப் குழு அறிக்கை தொடர்பான அடுத்தக் கட்டம் என்னவென்று கேட்டபோதே அவர் இவ்வாறு தெர…
-
- 0 replies
- 154 views
-
-
யாழில் நடமாடும் ‘ஆவா குழு’ கற்பனையா? சிங்கள பத்திரிகை சந்தேகம் தெரிவிப்பு யாழ்.குடாநாட்டில் ஆயுதங்களுடன் நடமாடுவதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்மையிலேயே செயற்படவில்லை என்றும் இந்தக் குழு தொடர்பாக தென்பகுதியிலுள்ள ஊடகங்களுக்கு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதெனவும் "ராவய" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்.சுன்னாகம் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து "ஆவா" குழு வெளியிட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிர…
-
- 0 replies
- 359 views
-
-
யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாகவே ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமை தொடர்பாக நீதியான விசாரணை நடத்தக் கோருவத ற்கும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கோருவதற்குமே ஜனாதிபதியை சந்திக்க மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் ஏழு பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கடந்தவாரம் தொடக்கம் விரிவுரைகளைப் …
-
- 0 replies
- 263 views
-
-
யாழ். மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் அளவெட்டி, நரிஜிட்டான் முகரி பகுதியில் இடம் பெற்றுள்ளது. சுன்னாகம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் கத்திகளுடன் வந்த குழு நரிஜிட்டான் முகரி பகுதியில் இருந்த குழுவுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை பெரும்திரளான மக்கள் வேடிக்கை பார்த்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. மோதலின் காரணமாக இருவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 381 views
-
-
நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார். “தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் …
-
- 11 replies
- 701 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களான பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கறுவாச்சோலை, புளுக்குனாவ, கெவுளியாமடு, கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்கள் தமிழ்களிடமிருந்து மெதுமெதுவாக கைநழுவி செல்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்தக்கிராமங்கள் மட்டக்களப்பு–அம்பாறை எல்லைக்கிராமங்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைய காலங்களில் தமிழர் காணிகள் அபகரிப்புக்குள்ளாகி அடாத்தாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வருவது அறிந்த விடயம். அந்த செயலுக்கு இந்த கிராமங்களும் விதிவிலக்கல்ல. அண்மையில் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சகிதம் கறுவாச்சோலை கிராமத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது அங்கே சென்ற அனைவரின் மனங்களிலும…
-
- 0 replies
- 450 views
-
-
கிளிநொச்சியில் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் காவல் பிரிவினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://newsfirst.lk/tamil/2016/10/கிளிநொச்சியில்-பெறுமதி-வ/
-
- 2 replies
- 359 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திலேயாவது எங்களுக்கு பாலம் அமைக்கப்படுமா? (தொகுப்பு-பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் தினமும் சேவையில் ஈடுபடும் மட்டக்களப்பு- குருக்கள்மடம் அம்பளாந்துறை படகுப் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள் தினமும் பல்வேறு அசௌகரியங்களுக்கும்,இன்னல்களுக்கும் ஆளாகி வருவதாக படகுப் பாதையை பயன்படுத்தும் பொது மக்கள்,அரச ஊழியர்கள்,விவசாயிகள் என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பில் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ……. மேற்படி படகுப் பாதை சேதப்பட்டு இருப்பதாலும்,ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை இப் படகுச் சேவை இடம்பெறுவதாலும் அரச உத்தியோகத்தர்களும்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்களும்,விவ…
-
- 0 replies
- 222 views
-
-
30-10-1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீர மரணத்தைத் தழுவிய லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் மற்றும் 2ஆம் லெப். மாலதி ஆகியோர்களின் நினைவெழுச்சி நிகழ்வு நாளை(30) அனுஸ்டிக்கப்பட இருக்கின்றது. இந்த நிகழ்வின் போது தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் விழா ஆரம்பிக்கப்படும். உயிர் நீத்த மாவீரர்களுக்காக இரண்டு நிமிட நேரம் அக வணக்கம் செலுத்தப்படும். தொடர்ந்து ஈகைச் சுடரேற்றி மாவீரர் உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும் நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வுகளை அலங்கரிக்கும் முகமாக வாகைமயில் எனப்படுகின்ற பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் விடுதலைக் கவிதை, விடுதலைப் பாடல், விடுதலை நடனங்கள் என்பன அரங்கேற்ற…
-
- 0 replies
- 501 views
-
-
கடந்த சில வாரங்கங்களாக வடபகுதியில் அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஆவா என்ற குழு செயற்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆவா குழு என்பது அரசியல் நோக்கம் கொண்ட குழுவா என்பது தெளிவற்ற சிலரின் கருத்து பரிமாற்றங்களால் ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. ஆவா குழுவுக்கும் அரசியல் சார்ந்த எந்தவித மோதல்களுக்கும் தொடர்பில்லை என்பது யதார்த்தம். கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாய்ந்து போன்ற விடயங்களில் இந்த குழு ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வாரம் யாழில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் பின்னணியில் இந்த குழு செயற்பட்டதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்நிலையில் வடக்கில் இளம் ஆயுத குழுவொன்று உருவாகுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ…
-
- 0 replies
- 585 views
-
-
யாழில் ஆவா குழுவை உருவாக்கியது இராணுவமே-ஆங்கில ஊடகம் தகவல் யாழ்.குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது. மூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, …
-
- 4 replies
- 1.1k views
-
-
‘அடுத்த வடமாகாணசபை தேர்தலில் மாவை.சேனாதிராஜா போட்டியிடுவார். முதல்வர் விக்னேஸ்வரனிற்கு பதவி ஆசை கிடையாது. அடுத்த தேர்தலில் போட்டியிடுவதோ, தனிக்கட்சி ஆரம்பிப்பதோ அவரது நோக்கமல்ல. தமிழ் மக்களின் அபிப்பிராயங்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற முதல்வரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் சிலரை அப்படி பேச வைத்துள்ளது’ என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அவரது முழுமையான நேர்காணல் இது- கேள்வி: நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் திருப்பதிகரமானதாக அமைந்திருக்கின்றனவா? சிறிதரன்: நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் திருப்தியற்ற நிலையில்தான் உள்ளனர். நல்லாட்சியை உருவாக்கி வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளிற்கு தேவையானால் ந…
-
- 1 reply
- 467 views
-
-
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஜீப் வண்டி கைப்பற்றல் -எம்.எஸ்.எம்.நூர்தீன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் எனப்படும் ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்;றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வ…
-
- 1 reply
- 434 views
-
-
தீபாவளியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள் தீபாவளியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜைகள் நடைபெற்றன. யாழ். மாவட்டத்தில் தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலிலும் மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியிலுள்ள இந்துக்களும் ஆலயங்களுக்குச் சென்று விசெட வழிபாடுகளில் கலந்துகொண்டனர். வவுனியா குருமங்காடு காளி அம்மன் தேவஸ்தானத்தில் பொது…
-
- 0 replies
- 263 views
-
-
இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிளிநொச்சியில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (28.10.2016) வடக்கு விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலப்பினப் பசுமாடுகளை வழங்கி வைத்து இத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனத்தின் இலகு கடன் வசதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரணைமடுக்குள நீர் வழங்கு பிரதேசத்தின் கட்டுமானங்களைப் புனரமைத்து நீர் விநியோகப் பொறிமுறையை சீர் செய்வதன் மூலம் நெல் உற்பத்தியையும், அதனுடன் இணைந்ததாக மறுவயல் பயிர்ச் செய்கையையும் கால்ந…
-
- 1 reply
- 417 views
-
-
சட்ட வைத்திய அதிகாரி ஆலோசனை வழங்கியும் தற்கொலை செய்துகொண்ட புலனாய்வாளரின் கைவிரல் ரேகையை பெறாதது ஏன்? - லசந்த கொலை விவகாரத்தில் துருவுகிறது சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலைச் செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு படுகொலை செய்துகொண்ட ஓய்வுபெற்ற இராணுவ புலனய்வு வீரர் ஜயமான்னவின் கைவிரல் ரேகையை பதிவு செய்யாது சடலத்தை உறவினர்களிடம் பொலிஸார் ஏன் கையளித்தனர். அதில் ஏதும் உள் நோக்கம் உள்ளதா என்பது குறித்து லசந்த படுகொலை விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு குற்றப் புலனயவுப் பிரிவுக் குழு துருவ ஆரம்பித்துள்ளது. தற்கொலைச் செய்துகொள்ளும் எவராக இருப்பினும் அவரது …
-
- 0 replies
- 143 views
-
-
பட்டாசால் எரிந்து அழிந்தது வீடு -முல்லை கைவேலியில் அனர்த்தம் முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்ததில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும் ட்கமுடியாது அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன. பாடசாலைக்கு செல்லும் உதய…
-
- 0 replies
- 230 views
-
-
யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ள ஜனாதிபதி (ரி.விரூஷன்) எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கவுள்ளார். அத்துடன் அன்றைய தினம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 460 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பாகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலை மையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் த…
-
- 2 replies
- 554 views
-
-
யாழில் மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசார ணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று பொலிஸ் ஆணைக்குழு வின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பொலிஸ் ஆணைக்குழுவும் தனித்து விசாரணை யொன்றை மேற்கொண்டு வரு…
-
- 0 replies
- 261 views
-
-
யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர கத்தில் விண்ணப்பித்திருந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியமை மற்றும் பாதத்தில் சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய அடுத்த நாட்களில் மரதன் போட்டி யில் யோஷித கலந்து கொண்டார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக யோஷித மீது நம்பிக்கை வைக்க முடியாது என்பதால், அவரது விசா நிராகரிக்கப்பட்டு ள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் த…
-
- 0 replies
- 304 views
-
-
வட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது வெளிநாட்டு பயணம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவிற்கு அறிவிக்கவோ அல்லது அனுமதி கோரவோ இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் கடந்த 14ம் திகதி வெளிநாட்டு பயணம் செய்துள்ளதாகவும் 29ம் திகதி வரையில் அவர் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்;கப்படுகிறது. இ…
-
- 2 replies
- 398 views
-
-
ஆத்மசாந்தி பிரார்த்தனை... யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், இன்று வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். (சபேஸ்வரன்) http://www.tamilmirror.lk/184960/ஆத-மச-ந-த-ப-ர-ர-த-தன-
-
- 2 replies
- 397 views
-
-
புத்தொளி வீசும் தீப திருநாளாக அமையட்டும் இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும் இழப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச்சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையைும் அறியாமைக்கெதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலக உண்மையே தீப ஒளியில் பிரகாசிக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின் மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோ…
-
- 1 reply
- 239 views
-