ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
யாழ். பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நெடுந்தீவை சேர்ந்த தர்மதுரை பகீரதன் (24 ) என்பவரே மேற்படி விபத்தில் உயிரிழந்தவராவர். இந்நிலையில் இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் யாழ்.நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியில் வேகமாக பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து ஏ9பிரதான வீதியின் மாம்பழம் சந்திக்கு அண்மையில் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது. இதனால் தலைப்பகுதியில் பலத்தகாயமடைந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்திருந்தாக மருத்து…
-
- 1 reply
- 441 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரும், புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான எஸ்.ஜே.சாந்தனின் பாடல்களை தற்போது கூட யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாது. இப்படிப்பட்ட பிரபல பாடகரின் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்களிடம் உதவி கோரியிருந்தார். இவ்வாறு கேட்டுகொண்டமைக்கு அமைவாக தனக்கு உதவிகளை வழங்கிய தமிழ் மக்களிடம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் சாந்தன். அவர் மேலும் தமிழ் மக்களிடம் கூறுகையில், http://www.tamilwin.com/diaspora/01/121035?ref=right_featured
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கையர் என்ற எண்ணப்பாடு அவசியம் என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் (ஆர்.ராம்) அனைவரின் மத்தியிலும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாடு தோற்றம்பெற்றாலே பல பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். பாரத மண்ணிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பு சாந்த கிளேயர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற வாணிவிழா நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வை மூவின மாணவர்களும் இணைந்து கொண்டாடுவதை இட்டு மகிழ்…
-
- 3 replies
- 284 views
-
-
புலனாய்வாளர் குறித்து கவலை கொள்ளும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் குறித்து சிந்திக்காதது ஏன்?கேட்கிறார் சுமந்திரன் பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாகும். இராணுவத்தி ற்கும், பொதுமக்களுக்கும் என சட்டங்களை வேறுபடுத்தி நோக்க முடியாது. இராணுவ புலனாய…
-
- 4 replies
- 325 views
-
-
ஜனாதிபதியின் கருத்துக்களால் மகிழ்வடையும் கோத்தா ஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரல…
-
- 0 replies
- 309 views
-
-
130 கிலோகிராம் கஞ்சா மீட்பு -செல்வநாயகம் கபிலன் இளவாலை, மாதகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (14), 130.68 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்து மாதகல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்று, யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் அங்கு சென்ற போது, கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கஞ்சாவை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கடத்தியவர்களை கைது …
-
- 1 reply
- 198 views
-
-
வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். …
-
- 2 replies
- 268 views
-
-
வவுனியாவில் வெடி பொருட்கள் மீட்பு வவுனியா மூன்றுமுறிப்பு தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று பகல் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்பரவு செய்த போது கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளை மீட்டுள்ளார். குறித்த தகரப் பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த வெடிபொருட்களை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். ஜே.எம்.மோ கிளைமோர்- 01, மிதிவெடிகள்- 08, பரா வெளிச்சக்குண்டு- 04, டிக்னேற்றர்- 50 என்பன இதுவரை மீ…
-
- 0 replies
- 303 views
-
-
'வடக்கில் விகாரை கட்ட தீவிரவாதிகளே எதிர்ப்பு' -சரவணபவஆனந்தம் திருச்செந்தூரன் வடக்கில் விகாரைகளை கட்டுவதற்கு, தீவிரவாதிகளே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என, நாகவிகாரை விகாரதிபதி விமலசிறி தேரர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ். மறைக்கல்வி நிலையத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “வடக்கில் விகாரைகள் கட்டுவதற்கு, தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாங்கள் இந்துமத தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வழிபாடாற்றுகின்றோம் என்பதை முடிந்தால், நாக விகார…
-
- 1 reply
- 339 views
-
-
வடக்கில் 84 அதிபர்களின் நியமனங்கள் இரத்து வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள 84 அதிபர்களின் நியமனங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரத்து செய்துள்ளார். வட மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிபர்களுக்காக அண்மையில் இடம்பெற்ற பரீட்சையில் வட மாகாணத்தில் 398 பேர் சித்தியடைந்த போதிலும் 84 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறிருக்கையில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய 314 பேரும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாம் பரீட்சையில் சித்தியடைந்த…
-
- 0 replies
- 221 views
-
-
காவலில் இருந்த இளைஞன் மரணம்: பொலிஸ் பொறுப்பதிகாரி கைது -சொர்ணகுமார் சொரூபன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட பொலிஸாரில், கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார மற்றும் இரண்டு பொலிஸார் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிமன்றத்தினால் கடந்த 10ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் …
-
- 1 reply
- 258 views
-
-
ஜனாதிபதியின் நிகழ்வொன்று இடம்பெற்ற மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி ரவை ஜனாதிபதி கலந்துக்கொண்ட நிகழ்வொன்று இடம்பெற்ற அனுராதபுரம் - சல்காது விளைாயட்டு மைதானத்திற்கு அருகில், பாரவூர்தியொன்றிலிருந்து துப்பாக்கி ரவையொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த மைதைானத்தில் நேற்று (13) ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த மைதானத்துக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த பாரவூர்தியொன்றை சோதனையிட்ட போது குறித்த வாகனத்திலிருந்து துப்பாக்கி ரவை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/123…
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையின் மறுசீரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு - ஐரோப்பிய ஒன்றியம் உறுதி குறுகிய காலப்பகுதியில் புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வியப்பளிக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைசார் மறுசீரமைப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் முழு அளவில் ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ள டுங்-லாய் மார்கியூ தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவர் டுங்-லாய் மார்கியூ தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதியி…
-
- 0 replies
- 150 views
-
-
இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில் ஒலிபெருக்கியில் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலையில் சிங்களமக்கள் எவருமே வாழாத தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசமான இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள பாரிய பவுத்த விகாரை இதுவ…
-
- 1 reply
- 710 views
-
-
நேற்றிரவு வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியிலும், மாகாண, மாவட்ட ரீதியிலும் முதலிடத்தை பெற்றுகொண்டார். அத்துடன், குளியாப்பிட்டிய, அஸ்ஸெத்தும சுபாரதி பாடசாலையில் கல்வி பயிலும் ருவன்யா மெத்மி குணசேகர என்ற மாணவியும் 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினையும், மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார். அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் ஜோன…
-
- 18 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி நகரில் வர்த்தகர் கடத்தல் யாழ்ப்பாணம் - இடைக்குறிச்சி - வரணியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சி நகரில் வைத்து இனந்தெரியாத நபர்களால் நேற்று மதியம் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டில் இருந்து கிளிநொச்சியில் உள்ள தனது பதிப்பகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் கடத்தப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம…
-
- 1 reply
- 374 views
-
-
வவுனியாவிலும் கையெழுத்து வேட்டை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வவுனியாவில் கையெழுத்து பெறும் நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா இலுப்பையடியில் இந்த செயற்பாடு இடம்பெற்றது. இதன்போது, முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டு, கையெழுத்திட்டிருந்தனர். http://onlineuthayan.com/news/18917
-
- 0 replies
- 343 views
-
-
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் பணிப்பாளர்நாயகம் பதவி விலகத் தீர்மானம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களில் ஒன்றான இந்தக் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக தில்ருக்ஸி கடமையாற்றி வருகின்றார். அண்மைக் காலமாக நிறுவனம் தொடர்பில் சில தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துக்களால் அதிருப்தி அடைந்துள்ள தில்ருக்ஸி கடுமையான நெருக்கடிகளிலும் சிறந்த முறையில் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், கடற்படையின் முன்னாள் தளபதிகள்…
-
- 0 replies
- 200 views
-
-
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு இடையில் விசேட சந்திப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு அவசர விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீன ஆணைக்குழுக்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆகியன தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றி இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 419 views
-
-
பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை காணியை ஏலத்தில் விடுமாறு நீதிமன்றம் உத்தரவு பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று (14) பிறப்பித்துள்ளார். இதேவேளை குறித்த ஏலத்தில் கிடைக்கப்பெறும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நீதிமன்ற விசாரணையின் போது பசில் ராஜபக்ஷ மல்வானை காணி தன்னுடையது அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12368
-
- 0 replies
- 210 views
-
-
இராணுவ வீரர்களின் விளக்கமறியல் தொடர்பில் சந்தேகம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் சிலர், விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றுமொரு இனவாத செயல் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இனவாத கருத்துகள் ஊடாக அரசியல் நடத்துவது மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படுவதாக வண. போகமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக தமிழ் நீதிபதிகளை நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நபர்கள் காணாமல் போன இரண்டு சம்பவங்கள் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/183905/இர…
-
- 0 replies
- 183 views
-
-
வடக்கின் கல்வி அபிவிருத்திக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடு -ஜனாதிபதி கடந்த ஆட்சியாளர்கள் வடக்கிற்கு செய்த அசாதாரண செயற்பாடுகளே அவர்களை ஆயுதமேந்த செய்து போரிற்கு வழிவகுத்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளின் போது, அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் அச்சேவைகள் சமமாக உரிய முறையில் செ…
-
- 0 replies
- 174 views
-
-
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பில் திருப்தியில்லா விட்டால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் தொடர்பில் திருப்தியில்லாவிட்டால் அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என பிரிவின் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மறைமுகமாக இதனைத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் கருத்து குறித்து நேரடியாக தாம் எதனையும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். தாம் ஓர் அரசாங்க ஊழியர் என்ற க…
-
- 0 replies
- 178 views
-
-
நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் நெடுந்தீவு வைத்தியசாலையின் தரத்தை உயர்துமாறு கோரி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ப்பட்டுள்ளது. வைத்தியர் பற்றாக்குறையினால் 18 வயதுடைய பாடசாலை மாணவி ர. டிலாஜினி திடீர் மரணமடைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 4 ஆயிரத்து 500 குடும்பங்களைக்கொண்ட நெடுந்தீவில் ஒரு வைத்தியர் மாத்திரமே சேவையாற்றி வருவதாக அவர்கள் தெரி வித்தனர். இதனால் திடீர் சுகயீனமடையும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குரிய வசதிகள் நெடுந்தீவு வைத்தியசாலையில் இல்லையெனவும் அதனை தரமுயர்த்துமாறும் அவர்…
-
- 0 replies
- 143 views
-
-
ஆறுமுகம் தொண்டைமானின், அநாகரிகச் செயலை பாருங்கள்.
-
- 0 replies
- 265 views
-