ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வடமாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான விவசாய பண்ணை, விவசாய விதை உற்பத்தி நிலையம், விடுதிகள் உள்ளிட்ட 29 இடங்களையும், அவற்றின் சுமார் 2072.103 ஏக்கர் நிலத்தையும் படையினர் ஆக்கிரமித்திருப்பதாக மாகாண விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன், மேற்படி ஆக்கிரமிப்பு தொடர்பான தரவுகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் ஒப்படைத்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமா ன 29 இடங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு தொடர்ந்தம் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவற்றில் கிளிநொச்சி மாவட்டத்தில் 12 இடங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 இடங்களும், வவுனியா மாவட்டத் தில் 06 இடங்களும்…
-
- 0 replies
- 429 views
-
-
வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால் மூலம் அல்லது நேரிலும் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண அமைச்சர்கள் மீது பல்வேறு முறைப்பாடுகள் தனக்கு கிடைத்தவண்ணம் உள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, ஓய்வு பெ…
-
- 0 replies
- 265 views
-
-
முல்லைத்தீவில் திடீரென எரிந்த காடு : இருபது ஏக்கர் எரிந்து நாசம் (எஸ் .என் .நிபோஜன் ) முல்லைத்தீவு வசந்திபுரம் கிராமத்துக்கு பின்புறமாக உள்ள காட்டில் திடீர் என பரவிய தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது. இன்று பிற்பகல் ஒருமணியளவில் முறிகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும் வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள காட்டில் திடீர் என தீ பரவியுள்ளது. குறித்த பிரதேசத்தினை அண்மித்ததாக இருக்கின்ற இரண்டு இராணுவ முகாமில் காவல்கடமையில் இருந்தவர்களால் அவதானிக்கப்பட்டதனை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர், உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ நீர்த்தாங்கி வாகனங்களின் த…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா சர்வதேச ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு இன்று யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர் தின விழாவில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். http://onlineuthayan.com/news/18590
-
- 1 reply
- 486 views
-
-
எதிர்க்கட்சிக்குத் தாவினார் அமீர் -றியாஸ் ஆதம் கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியபோது, மாகாண சபையில் ஆளும் கட்சி வரிசையில் இருந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவர், கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியில் இணைந்து செயற்பட்டார். கிழக்கு மாகாண சபை ஆட்சியில் அதிருப்தியுற்ற நிலையில் எதிர்க்கட்சிக்கு …
-
- 0 replies
- 295 views
-
-
மஹிந்தவின் வளர்ப்பு சரியில்லை : பஷில் அதிரடி குற்றச்சாட்டு (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது. அவரின் வளர்ப்பு சரியில்லையென முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருடனின் தாயிடம் திருட்டு குறித்து குறி பார்ப்பது போன்றதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளும். எனவே எமது ஆட்சிக்காலத்தில் கூட இருந்தவர்கள் இதற்கு உடந்தையாக தற்போது செயற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த நிலை இன்று ஏற்பட்டிருக்காது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ செய்த துரோகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற…
-
- 0 replies
- 285 views
-
-
யாழில் தேசிய மாணவர் படையணி அணிவகுப்பு தேசிய மாணவர் படையணி அணிவகுப்பொன்று யாழ் மாவட்ட பொலிஸாரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேற்படி படையணி அணிவகுப்பானது யாழ் மாவட்ட பொலிஸாரால் வருகின்ற 14ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்காக யாழ் மாவட்டத்தில் உள்ள 7 பாடசாலைகளின் மாணவர்கள் இணைக்கப்படவுள்ளது. இந்நிகழ்விற்காக யாழ்ப்பாண மத்திய கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி, செங்குந்தா இந்துக்கல்லூரி, கொழும்புத்துறை இந்துக்கல்லூரி, ஞானப்பிரகாச மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர் படையணிகளும் அவர்களின் அணிவகுப்பு இசை …
-
- 0 replies
- 318 views
-
-
வடமாகாண சபையில் அஞ்சலி -எம்.றொசாந்த் காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண சபையின் மாதாந்த அமர்வும் இடம்பெற்றது. இதன்போது, வடமாகாண சபையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக கறுப்புக்கொடியும் கட்டப்பட்டது. அவருக்காக இரண்டு நிமிடங்கள் மௌன…
-
- 1 reply
- 348 views
-
-
வாள்வெட்டு குழு சந்தேக நபர்கள் கைது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களை யாழ் பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் இருந்து நான்கு சந்தேகநபர்கள் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். http://onlineuthayan.com/news/18593
-
- 0 replies
- 548 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் பிரிவினைவாத உணர்வுகளை பிரச்சாரம் செய்வதன் மூலம் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் ஈழப்பிரச்சாரத்தைஎதிர்கொள்வதற்கு அரசாங்;கத்திடம் அரசியல்உறுதிப்பாடு இல்லை,சிறிசேன- விக்கிரமசிங்க அரசாங்கம் விக்னேஸ்வரனால் உருவாகியுள்ள சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ளவே http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136711/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 314 views
-
-
யாழில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்கள் எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்.வைத்திய சாலை வீதியில் உள்ள வீடொன்றிலையே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது , குறித்த வீட்டினர் உறக்கத்தில் இருந்த வேளை இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்து , வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் வீட்டின் யன்னல் மற்றும் கதவுகள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். அதனால்…
-
- 11 replies
- 835 views
-
-
சி.வி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் யார்? : தெளிவுப்படுத்துகின்றது எதிரணி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் இனவாத செயற்பாடுகளுக்கு பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்கள் உள்ளனர் என கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்காக வீதியில் இறங்கி போராடிய போதும் தேசிய அரசாங்கம் குறித்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் எழுக தமிழ் பேரணிக்கு எந்த விதமான சட்டத்தையும் பிரயோகிக்காமல் மௌனம் காப்பதன் மர்மம் என்ன எனவும் கேள்வியெழுப்பியது. முதலமைச்சர் என்ற வகையில் வட மாகாணத்தில் எந்த விதமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் செய்யாமல் அந்த குற்றச்சா…
-
- 2 replies
- 293 views
-
-
கலையால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் ; விங்ஸ் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 280 மில்லியன் ரூபா உதவி பல்லினசார் கலைகளின் ஊடான நல்லிணக்கத்தை மையப்படுத்திய தேசிய திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 280 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இலங்கையில் அனைத்தின நல்லிணக்கத்தினையே ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான திட்டப்பணிப்பாளர் மாரிமுத்து திருநாவுக்கரசு தெரிவித்தார். கிளிநொச்சி , அம்பாறை மற்றும் கொழும்பில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த பல்லினசார் கலை விழாவிற்கு “நம்பிக்கையின் சிறகசைப்பு” ( விங்ஸ் ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந…
-
- 0 replies
- 169 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 196 மாணவர்கள் சித்தி (எஸ்.என்.நிபோஜன்) கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் இருந்து 2128 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 196 மாணவர்கள் வெட்டுப்புள்ளி 150 க்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். அதேவேளை 238 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் – 32, கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 34, புனித திரேசா பெண்கள் கல்லூரி – 11, கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம் – 11, தர்மபுரம் இல1 அ.த.க. பாடசாலை – 10, அம்பா…
-
- 0 replies
- 238 views
-
-
730 ரூபாய் எமக்கு வேண்டாம் : 1000 ரூபாவும் 6 நாள் வேலையும் வேண்டும் : இல்லையேல் சந்தா நிறுத்தப்படும் தோட்ட தொழிலாளர்களுக்கு முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது போல் 730 ரூபாய் எமக்கு வேண்டாம் பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபாவும் 6 நாள் வேலையும் எமக்கு வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை கிருஸ்லஸ்பாம் தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை கொட்டகலை கிருஸ்லஸ்பாம் மொர்ஷல் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேவேளை குறித்த தோட்ட தொழிலாளர்கள் தமக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் தற்பொழுது வழங்கி வரும் தொழிற்சங்க சந்தாவை நிறுத்தி விடப்போவதாகவும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 309 views
-
-
கல்வியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா கிழக்கு மாகாணம்? - முதலமைச்சர் சந்தேகம் 2016 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு மாத்திரம் 1588 பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவி வருவதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த கிழ…
-
- 0 replies
- 213 views
-
-
அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், டெலோ ஆகிய கட்சிகள், அடுத்த பிரதி அவைத்தலைவர் பதவிக்கு தங்கள் கட்சியின் உறுப்பினரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரை நியமிக்கக்…
-
- 0 replies
- 252 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையத்திட்டம் கைவிடப்பட்டபோதிலும் அதற்காக அபகரிக்கப்பட்ட மக்களின் 500 ஏக்கர் காணியும் திருப்பி வழங்கப்படமாட்டாது என மின்வலு அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களுக்கு மாற்றுக்காணிகளே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சம்பூர் மக்களின் காணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர், சம்பூர் அனல்மின் நிலையத்திட்டம் கைவிடப்பட்டபோதிலும், அங்கு அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னமும் கைவிடப்படவில்லை. சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்தமைக்கு மின்சார சபையோ, அரசாங்கமோ காரணமில்லை. நாட்ட…
-
- 1 reply
- 256 views
-
-
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய போராட்டமானது, நியாயமானது என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாகவும், நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன், அந்த மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாது, சம்பளக் கோரிக்கைக்கு கௌரவமான வகையில் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கிகரித்துக் கொள்வதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “நாட்டின் பல்வேறு பிர…
-
- 0 replies
- 203 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, நேற்றுப் புதன்கிழமை கூட்டப்பட்ட பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான அருள்சாமி, தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்றது …
-
- 0 replies
- 363 views
-
-
2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என அவர் கூறியுள்ளார். சமகால பிரதமர் ரணில…
-
- 1 reply
- 365 views
-
-
தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்று, விக்னேஸ்வரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரும்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தாம் கோரியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், அடிப்படைகள் இல்லாமல் இத்தகைய குற்ற…
-
- 0 replies
- 210 views
-
-
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சட்டவிரோதமான முறையில் தனது சகாக்களுக்கு பிரபு பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பினை பெற்றுக் கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படக்கூடிய எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் அற்ற, தேசிய சுதந்திர முன்னணியின் நான்கு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேருக்கும் ஆயுதம் தாங்கிய பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலச…
-
- 0 replies
- 207 views
-
-
தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் போது ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிருக்கு பயந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி தமிழகம் உள்பட இந்தியாவிற்குட்பட்ட பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் 114 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சத்திற்கு மேலான அகதிகள் தங்கியுள்ளனர். இலங்கையில் தற்…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் மொத்தக் கடன் சுமை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் மொத்தக் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இதில் 8 பில்லியன் டொலர் கடன் சீனாவிற்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் 75 வீதமான பகுதி கடன் செலுத்துகைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இது நாட்டின் மொத்த வருமானத்தில் 95.4 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமர்ஜின் மார்கட்ஸ் ஒப் ஏசியா என்னும் நூலை எழுதிய டெட் செபர்டினால் ப…
-
- 3 replies
- 492 views
-