ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
கர்நாடகாவில் தமிழருக்கெதிரான வன்முறையை நிறுத்தக்கோரி யாழில் உண்ணாவிரதம் இந்தியாவில் கன்னட மாநிலத்தில் தமிழக தமிழர்களுகெதிராக நடந்து வரும் வன்முறைகளை நிறுத்துமாறுகோரி இருவர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாவற்குழி பிரதேசத்தை சேர்ந்த விநாயமூர்த்தி சகாதேவன் , பிரேம் ஆகிய இருவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த உண்ணாவிரதம் குறித்து விநாயகமூர்த்தி சகாதேவன் குறிப்பிடுகையில் நாங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். எமது இயக்கத்தில் 2200 க்கும் அதிகமான அங்கத்தவர்கள் உள்ளனர். அதில் தாம் இருவர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார் …
-
- 6 replies
- 533 views
-
-
ஜனாதிபதியின் விஜயத்தை வீடியோ எடுத்தவர் கைது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் படை தலைமையக மைதானத்திற்கு சென்றவேளை ஜனாதிபதி மற்றும் அவர் பயணித்த ஹெலிகொப்டரை ஒருவர் வீடியோ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அந்த நபர் பொலி ஸாரி னால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் தலவாக்கலையை சேர்ந்தவர் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளவத்தை பிரதேச ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் அவர் தனது சகோதரியின் மகளுக்கு காட்டுவதற்காகவே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும…
-
- 1 reply
- 302 views
-
-
வட மாகாணசபையின் அம்பியுலன்ஸ் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை -க. அகரன் வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ், 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இதனைச் சர்வதேசதரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது த…
-
- 0 replies
- 340 views
-
-
மல்லாவி பொலிஸார் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார்; காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்;டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது. இந்நிலையில், காணி உரிமையாளர்; தனது காணியை தருமாறு கடந்த ஏழு வருடங்களாக பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு…
-
- 0 replies
- 318 views
-
-
காணாமல்போனோர் குறித்த உபகுழுக் கூட்டம் புதன்கிழமை இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தின் 27ஆவது அறையில் உபகுழுக் கூட்டம் ஒன்று நடை பெறவுள்ளது. அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதி ரான சர்வதேச இயக்கம் என்ற அமைப்பு நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதி களும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இலங்கையிலிருந்து ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். …
-
- 0 replies
- 221 views
-
-
மஹிந்தானந்த அளுத்கமகே கைதும் பின்னணியும் முழு விபரம் இதோ..! எவ்வாறு கிடைத்தது அல்லது சம்பாதிக்கப்பட்டது என்பதை சரியாக தெளிவுபடுத்த முடியாத, குறுகிய காலத்துக்குள் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தார் எனும் குற்றச் சாட்டின் கீழ் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு–7, கறுவாத்தோட்டம், கிங்ஸி வீதியில் இலக்கம் 70 -–3/1 எனும் இலக்கத்தில் அமைந்துள்ள அதிசொகுசு வீடொன்றை 2 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பிலேயே நேற்று முன் தினம் அதாவது வியாழக்கிழமை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாற…
-
- 0 replies
- 351 views
-
-
தீயணைப்பு வாகனம் இல்லாத கிளிநொச்சியும் மக்களின் பேரவலங்களும் - கண்திறக்குமா மாகாண சபை? கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் நிர்க்கதியான நிலையில் பல்வேறு உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர்:- நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன. புடவை, அழகுசாதனம் காலணிகன் கடைகளில் 60 க்கு மேற்பட்ட கடைகளும், அனைத்து பழக்கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ படிப்படியாக அனைத்து கடைகளுக்கம் பரவி கொளுந்துவிட்டு தங்கள் கண் முன்னே எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்த உடை உரிமையாளர்கள் செய்வதறியாது கதறி அழுத காட்ச…
-
- 0 replies
- 199 views
-
-
கிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் : அச்சத்தில் மக்கள் தியாகதீபம் திலீபனின் 29ஆவது நினைவுதினம் எனும் தலைப்பினைத் தாங்கிய சுவரொட்டிகள் கிளிநொச்சியின் சில இடங்களில் நேற்றிரவு ஒட்டப்பட்டுள்ளது. ஜனநாயகப் போராளிகள் கட்சி என குறித்த சுவரொட்டியில் பெயர் குறிப்பிடப்பட்டு ஓட்டப்பட்டுள்ளது குறித்த சுவரொட்டிகள் கிளிநொச்சிக் கடைகளுக்கு அருகாமையிலும் கடைக் கதவுகளிலும் ஓட்டப்பட்டமையால் அச்சத்தில் கடை உரிமையாளர்கள் குறித்த சுவரொட்டிகளை அகற்றி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் குறித்த சுவரொட்டியில் 'திலீபன் அண்ணாவே நீ மூட்டிய தியாக தீபம் அணையவில்லையடா. மக்கள் புரட்சி வெடிக்குதடா. …
-
- 0 replies
- 326 views
-
-
உருப்படியான ஒரு தீர்வைப் பெற அதிஉச்சமுயற்சியை எடுத்துவருகிறது கூட்டமைப்பு-சுமந்திரன் உருப்படியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அதியுச்ச பட்சமுயற்சியை கூட்டமைப்பு எடுத்துவருகிறது.தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியி ன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவலகத்தில் நேற்றைய தினம…
-
- 0 replies
- 286 views
-
-
ஐ.நா பொறிமுறையில் இணைந்து செயற்பட விரும்புவதாக இலங்கை அறிவிப்பு சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார். ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 33 ஆவது அமர்வின் மூன்றாம் நாள் அமர்வு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சில இனவாத சக்திகள், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ள அவர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன், அரசாங்கமானது உண்மை, நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்…
-
- 0 replies
- 340 views
-
-
யாழ்.சிறைச்சாலையில் தாராளமாக புழங்கும் போதைப்பொருட்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபர்கள் தெரிவித்தனர் இது பற்றி அவர்கள் தெரிவிக்கையில்- யாழ் சிறைச்சாலையில் சிறைவாசம் மேற்கொள்ளும் கைதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்கள் தடையின்றி சிறைச்சாலையிலும் போதைப்பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் யாழ் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புக்கள் , வீடியோ கமராக்கள் உள்ளபோதும் கைதிகளுக்கிடையே போதைப்பொருள் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடிபெற்று வருகின்றன. சிறைச்சாலைக்கு அண்மித்த பகுதிகளிலிருந்து இனந்தெரியாத நபர்கள் மூ…
-
- 1 reply
- 328 views
-
-
'ஐயா உங்களை காணும் போது எனக்கு சந்தோசமாக உள்ளது' ஐயா உங்களை காணும் போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. இந்த நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று உங்கள் சேவையை செய்து வருகின்றீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்,கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் அமைச்சர் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று சேவை செய்வதை முதன் முதலில் உங்களின் ஊடாக காணுகின்றேன். உங்கள் சேவையை கை விடாது தொடர்ந்து முன்னெடுங்கள். உங்களுக்கு இந்த நாடு பூராகவும் ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்றார்.. http://www.virakesari.lk/article/11407
-
- 0 replies
- 499 views
-
-
வெளிநாட்டு ஆசையால் பணத்தை இழந்த அல்லைப்பிட்டி, குருநகர் மக்கள் கனடா சுவிஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய பிரசாத் என்பவருக்கு இலட்சக்கணக்கான பணங்களை வழங்கி 70 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.இது பற்றி மேலும் தெரியவருவதாவது பிரசாத் என்னும் பெயர் கொண்ட நபர் ஒருவர் குருநகர் , அல்லைப்பிட்டி மக்களை தமது சகாக்களைக் கொண்டு சந்திப்புக்களை நடத்தி வந்துள்ளார் கனடா , சுவிஸ் தேசங்களுக்கு அழைத்துக்கொண்டு போவதாகவும் அதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் தரும்படியும் கேட்டுள்ளார் தலா ஒரு இலட்சம் வீதம் சுமார் 70 பேர் இவருடைய பேச்சை நம்பி பணத்தினைக் கொடுத்துள்ளனர் வரு…
-
- 1 reply
- 516 views
-
-
கிளிநொச்சியில் கிணறு வெட்டும் போது ஆர்.பி.ஜி. ஷெல்கள் மீட்பு (காணொளி இணைப்பு) (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுப் பிற்பகல் ஆறு முப்பது மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் பணி இடம்பெற்றது. இதன் போது அந்தக் குழியிலிருந்து ஒன்பது ஆர்.பி.ஜி. ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தக்காரரினால் இன்றையதினம் காலை …
-
- 0 replies
- 836 views
-
-
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை முன்னாள் போராளிக்ள 105பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், விஷ ஊசி ஏற்றப்பட்டுத்தான் இறந்தார்கள் என்பது தொடர்பாக இ…
-
- 31 replies
- 2.9k views
-
-
யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறார்- அமைச்சர் மனோவும் தெரிவிப்பு யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பு இருக்கப்போவது இல்லையென அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், யுத்தக்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது எனக் குறிப்பிட்டுள்ளார். “புகையிரத சேவைகள் விஸ்தரிப்பின் ஊடாக அரச மொழிக் கொள்கையும் உடன் பயணிக்க வேண்டும். அனைத்து புகையிரத நிலையங்களிலும் மும்மொழிகளும் அறிந்த பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதுவே எனது…
-
- 0 replies
- 341 views
-
-
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வடமாகாண மருத்துவமன்றம் உதவும்- வைத்தியர் அச்சுதன் வடக்கு மாகாணத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண வைத்திய மன்றம் தன்னாலான உதவிகளை வழங்கும் என வடமாகாண மருத்துவர் மன்ற தலைவர் ப.அச்சுதன் தெரிவித்தார். கடந்த புதன் கிழமை மாலை 7 மணியளவில வடமாகாண மருத்துவர் மன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் பல மருத்துவ தேவைகள் ஏற்பட்டன. அதனைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எங்களுக்கென தனியான நலன்புரி அமைப்பு ஒன்று தேவைப்பட்டது. அதன் மூலம் எமது மக்களுக்கும் பாதிக்கப்பட்ட …
-
- 0 replies
- 300 views
-
-
எதிர்காலத்தில் தமிழினம் ஒன்றுபடுவது தமிழ் மொழியாலேயே! கிழக்கில், வடக்கு முதல்வர் தெரிவிப்பு தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை தமிழ் மொழியே என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள் தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசார உப குழுவின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு மற்றும் மலையக தமிழ் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து சிறப்பிக்கும் மிகப்பிரமாண்டமான முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்றைய தி…
-
- 1 reply
- 512 views
-
-
புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம் முன்னாள் மேலதிக சொலிஸ்டர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சிதம்பரம்பிள்ளை துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற துரைராஜா, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியான அவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தைப் பெற்றார். …
-
- 3 replies
- 771 views
-
-
புதியரக முச்சக்கரவண்டிகள் விற்பனையில் கொழும்பு - வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று நேற்றைய தினம் புதியரக முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்ட முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. புது விதமான முறையிலும் பயணத்துக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கபட்ட இந்த வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். http://onlineuthayan.com/news/17672
-
- 0 replies
- 381 views
-
-
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் தலைநகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஜப்பானிய மக்கள் உயிரிழந்து உடல் அங்கவீனப்பட்டு இன்றுவரை அந்த அனுபவிப்புக்களை முற்றாகத் துறக்க முடியவில்லை என்ற நிலையில் இருந்தபோதும் அவர்கள் மனம் சோரவில்லை. இழப்புக்களை ஏற்படுத்தியவர்களுக்கு நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற திடசங்கற்பம் பூண்டனர். அதற்காக அவர்கள் கடுமையாகப் பாடுபட்டனர். அவர்களின் கடின உழைப்பும் நாட்டுப் பற்றும் உலகம் முழுவதும் போற்றுமளவில் தம்மை வளர்த்துக் கொண்டனர். இன்று இழப்பிற்கும் துன்பத்திற்கும் ஆளாகியிருக்கக்கூடிய உலக நாடுகள் தமது எழுச்சிக்கான உத்வேக மருந்தாக ஜப்பானை நினைக்குமளவிற்கு நிலைமையை மாற்றியவர்கள் ஜப்பானிய மக்கள். இரண்டாம் …
-
- 2 replies
- 629 views
-
-
சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்-நீதிபதி இளஞ்செழியன் சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். .நேற்றையதினம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது பசு மாடு நீதி கேட்டு வந்தபோது மனுநீதி கண்ட சோழன் நீதி வழங்கினான். இப்படியான மண்ணிலே நீதி தேடி மாணவச் செல்வங்கள் நீதிபதிகளை நோக்கி ஓடிய காட்சிகள் யாழ் மண்ணில் நடைபெற…
-
- 0 replies
- 358 views
-
-
துணுக்காயில் குளங்கள் புனரமைப்பு முலலைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள ஆறு குளங்களின் புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை மத்திய விவசாய அமைச்சு வழங்கியுள்ளதாக இந்த அமைப்பின் பிராந்திய அலுவலர் சி.பிரபாகரன் தெரிவித்தார். புதுக்குளம் 6.17 மில்லியன் ரூபா செலவிலும், கோட்டைகட்டிய குளம் 5மில்லியன் ரூபா செலவிலும் பட்டன்கட்டிக் குளம் 2.67 மில்லியன் ரூபா செலவிலும், அனிஞ்சயன் குளம் 4.37மில்லியன் ரூபா செலவிலும், மணல்குளம் 1.5மில்லியன் ரூபா செலவிலும் உடும்பன்குளம் 4.96 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைக்கப்படுகின்றன. http://onlineuthayan.com/news/17667
-
- 0 replies
- 361 views
-
-
பரிசளிப்பு விழாவில் தலைமை நீததியரசர் பங்கேற்பு யாழ் இந்துகல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர் வெறும் 19 ம் திகதி நடை நடைபெறவிருப்பதாக கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது. குறித்தப் விழாவானது கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தலைமை நீதியரசர் க.சிறிபவன் கலந்து சிற்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/17668
-
- 0 replies
- 235 views
-
-
இந்திய நன்கொடை நிதித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம் 1.7 பில்லியன் ரூபாய் கிரயத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது. இக்கலாசார மண்டபமானது யாழ்.பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் நீர் நிலையை அண்மித்ததாக அமைவதுடன் இந்தியாவின் பீ.என்.சீ நிறுவனத்தினரால் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் அரின்டம் பக்க்ஷி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி ஆகியோர் முன்னிலையில் கொழும்பில் நேற்று வியா ழக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.valampurii.lk/…
-
- 0 replies
- 359 views
-