ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
தமிழீழத்திற்கான புதிய அரசியலமைப்பு வரப் போகின்றது.! வடக்கு, - கிழக்கை இணைத்து தனி தமிழீழத்திற்கான கனவை நனவாக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிரிவினைவாதிகளின் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டை காட்டிக் கொடுக்கும் அரசியலமைப்பையும் சக்திகளையும் தோல்வியடைய செய்வதற்கு நாட்டு மக்கள் பேதங்களை மறந்து போராட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு பாராளுமன்றத்தின் குழு அறை நான…
-
- 0 replies
- 394 views
-
-
தந்தையின் தீர்ப்பு இன்று ; ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றிற்கு சற்றுமுன்னர் வருகைத்துந்துள்ளார். ஹிருணிகாவின் தந்தை பாரதலக்ஷ்மன் பிரேமச்சறந்திரவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால் இவர் நீதிமன்றுக்கு சமுகமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11111 இறுதித் தீர்ப்பு இன்று ; துமிந்த சில்வா நீதிமன்றத்திற்கு வருகை ; பலத்த பாதுகாப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின்…
-
- 0 replies
- 726 views
-
-
ஐ.நாவுடன் மஹிந்த அரசு உடன்படிக்கை செய்தததை நிரூபித்தால் எம்.பி.பதவியை துறப்பேன்-கெஹலிய சவால் மஹிந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏதாவது உடன்படிக்கைகள் செய்திருப்பதனை நிரூபித்தால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல சவால் விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த நீதிமன்றம் அமைத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாட…
-
- 0 replies
- 262 views
-
-
பிரபாகரனை விரும்பும் வடபகுதி மக்கள் ஆளுனர் குரே தெரிவிப்பு வடக்கில் தற்போது மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வடக்கில் சாதி பேதம் அதிகரித்துள்ளதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது இருக்க வேண்டும் என வடபகுதி மக்கள் தம்மிடம் தெரிவிப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது சாதி பேதம் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தமையால் மக்கள் மீண்டும் அவ்வாறான சாதி பேதமற்ற சூழலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 437 views
-
-
யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸாரின் செயற்பாடு போதுமானதல்ல-யாழ். கட்டளைத்தளபதி தெரிவிப்பு யாழில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸாரின் நடவடிக்கை போதாமல் உள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறினார். பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பாதுகாப்புத் தரப்பினரின் எவ்வித புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகளில் 275 பேர், வடக்கில் உள்ளனர் என்று இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள், தாமாக முன்வந்து சரணடையாத போதி…
-
- 0 replies
- 232 views
-
-
யாழில் கதலி 300 ரூபாய் - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக் காலப்பகுதியில் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. கதலிக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில், சந்தைக்கு குறைந்தளவு கதலி வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளது. விலையேற்றத்தால் பல கடைகளிலும் கதலி வாழைப்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதேவேளை, விலையேற்றத்தால் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலு…
-
- 5 replies
- 755 views
-
-
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களில் 80 வீதமானவை வடக்கிலிருந்தே வந்துள்ளன எனவும், ஆகையால் வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் ஐநா செயலர் பான்கிமூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்தபோது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மா…
-
- 4 replies
- 703 views
-
-
வருகிறார் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் மே மாதமளவில் இலங்கைக்கு வரவுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை வரும் அவர், இந்திய உதவியில் ஹட்டன் நகரில் நிர்மாணிக்கப்படும், வைத்தியசாலையொன்றை திறந்து வைக்கவுள்ளதோடு, கொழும்பில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிலும், கலந்து கொள்வார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். http://onlineuthayan.com/news/17291
-
- 1 reply
- 444 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த ஒழுக்கமுடையவர்-ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் விபரிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்தி ருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு ள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்கு…
-
- 15 replies
- 2.2k views
-
-
தேசியபிரச்சினையாகியுள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் கரிசனை எடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு அதனால் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இந்…
-
- 0 replies
- 325 views
-
-
சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு இருவருக்கு விடுதலை யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐவரில் இருவர், இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு ள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரின் வழக்குகள் இன்றைய தினம் கொழும்…
-
- 0 replies
- 403 views
-
-
மலேசியாவில் இலங்கை உயர்ஸ் தானிகர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்ற வாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இது போன்ற சம்பவங்களால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே பலன் கிடைக்கும். வடக்கில் இனவாதிகள் வாய் திறக்கும் போது, தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு அது சாதகத்தை கொடுக்கும், தெற்கில் உள்ள இனவாதிகளின் செயல்கள் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இரு தரப்பினரும் பரஸ்பரம் இணக்கத்துடன்இருக்கின்றனர். இந்த நிலைமை நாட்டுக்கு வெளியிலும் பரவியுள்ளது என்பது மலேஷிய சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நட…
-
- 1 reply
- 415 views
-
-
மஹிந்தவுடன் உரையாடிய சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் நேற்று பாராளுமன்ற சபா மண்டபத்தில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடியதை காணமுடிந்தது. மலேஷியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் அங்கு மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக மலேசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான தினேஷ் குணவர்த்தன 23 இன் கீழ் 2 இல் விசேட கேள்வியொன்றை பிரதமரிடம் எழுப்பி உரையாற்றினார். அதன் பின்னர் ஆளுந்தரப்பிற்கும் எதிர்த்த…
-
- 3 replies
- 499 views
-
-
இலங்கை: சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து விவசாயிகள் எச்சரிக்கை வவுனியா நகர குடிநீர் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு பதிலாக உடனடியாக மாற்றுக்காணிகள் வழங்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதன்கிழமையன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வவுனியா மன்னார் வீதியில் பேரணியாக அரச செயலகத்திற்குச் சென்று, வவுனியா அரசாங்க அதிபரிடம் இது தொடர்பில் மனுவொன்றைக் கையளித்திருக்கின்றனர். வவுனியா நகருக்கு அப்பால் பேராறு என்ற ஆற்றை மறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த குடிநீர்த்திட்டம் நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையினரால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. …
-
- 0 replies
- 426 views
-
-
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான ஒரு சம்பவம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின்போது, அவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கான காரணம், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அவர் தடையாக இருப்பதே எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸ மதங்களுக்கு இடையே பல குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய முயற்சித்தார். அப்போது அவர் செய்த வினைகளுக்கா…
-
- 4 replies
- 454 views
-
-
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி வரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. 1999ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் திகதியே, இலங்கை அரச படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று நடந்தேறியது. கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழ…
-
- 0 replies
- 446 views
-
-
மலேசியாவில் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சம்பந்தன் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்கு தலை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தாக்குதல் நடத்தியவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடிய போது, மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன 23/2ஆம் பிரிவின் கீழ் சிறப்பு கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது…
-
- 6 replies
- 922 views
-
-
கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், பிரதேசசபை செயலாளர்களுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் கொழும்பில் இருந்து வருகைதந்திருந்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் விளக்கங்களை வழங்கி…
-
- 0 replies
- 388 views
-
-
எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் உண்ணாவிரதமாக மாற்றம்: கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கடந்த மாதம் பல நாட்களாக தொடர் போரா…
-
- 0 replies
- 289 views
-
-
யாழ் மாவட்டத்தின் பாரிய பிரச்சினையாகக் காணப்படும் கழிவகற்றல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் நூலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் தவராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், பரஞ்சோதி, ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் கழிவகற்றல் தொடர்பான “சுகாதார நில நிரப்பித் திட்டம் ” ஒன்று முன் வைக்கப்பட்டது. இத் திட்டம் தொடர்பில் திட்டப் பதிப்பாளர் தெரிவிக்கையில் சுகாதாரமான மிக முக்கியமானதுமான கொரிய அரசாங்…
-
- 0 replies
- 537 views
-
-
நீதியரசர் க. வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் – வடமாகாணம் எனது இல NP/ CM/Res/0601/2016 திகதி : 06. 09. 2016 என். வேதநாயகன் அவர்கட்கு அரச அதிபர் யாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் அன்புள்ள அரச அதிபருக்கு, இராணுவத்தினால் கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு கவர்ச்சிகரமான இழப்பீடுகள். நீங்கள், உள்ளக இடப்பெயர்வாளர் ஒருவருக்கு அனுப்பியிருந்த கடிதத்தைக் கண்டேன். உண்மையைச் சொல்லப் போனால் மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கா போக்கடி போக்காக இவ்வாறான மூன்று வகை உள்ளக இடப்பெயர்வாளர்களைப் பற்றி, அதாவது நிலங்களை சொந்தமாக கொண்டிருப்பவர்களும் உடனடியாக தங்கள் நிலங்களுக்கு செல்லக் கூடியவர்கள,; ஒரு வகையினர். இன்னொரு வகையினர் நிலங்களை சொந்தமாக கொண்டிருந்தாலும் அங்கு போவதற்கு சிறிது காலம…
-
- 0 replies
- 624 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களின் அச்சுறுத்தல் காணொளி மன்றில் சமர்ப்பிப்பு - எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவியின் கொலைச் சந்தேகநபர்கள், தம்கைக் கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்த காணொளியை, ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியாலிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) சமர்ப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர் ஒருவர் தம்மைக் கைதுசெய்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கொலை செய்வேன் என நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அது தொடர்பில் செய்தி …
-
- 0 replies
- 341 views
-
-
மலேசியாவின் இலங்கை தூதரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் - ரணில் தகவல் தென்னிந்தியாவில் செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவில் இலங்கை தூதர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்ரமசிங்க, இந்தத் தாக்குதல் தொடர்பாக மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்தார். இந்த விசாரணைகளின் படி நாம் தமிழர் எனும் தென்னிந்திய கட்சியின் மலேசிய கிளையின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மலேசிய போலிசார் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியர்களே சம்பந்தப்பட்டுள்ளதாக தெர…
-
- 2 replies
- 710 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தலுக்கு கப்டன் தஸநாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் : வெளிநாடுசெல்ல அனுமதியளிக்க முடியாது கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டு காணாமல்போன ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல்போதலுக்கு கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கப்டன் டி.கே.பி. தஸநாயக்கவும் பொறுப்புக் கூற வேண்டும் என இது வரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதால் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க முடியாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அமெரிக்காவில் தான் தொடர்ந்து வந்த பாட நெறியை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக ஒன்றரை வருடங்களுக்கு வெளி…
-
- 0 replies
- 288 views
-
-
தயா மாஸ்டர் மீதான வழக்கு ஒத்திவைப்பு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயா மாஸ்ரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அனுப்பிவைக்கப்படமையினால் வழக்கை வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஒத்திவைத்துள்ளார். இறுதி கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து மக்களை வெளியேற விடாமல் மனித கேடயங்களாக பயன்படுத்தியத…
-
- 1 reply
- 466 views
-