Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை நபரொருவர் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணப் பண்ணை பாலத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதில் நல்லூர் அரசடியைச் சேர்ந்த சிவபாலன் அபி­ன் (வயது 24) என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த இனந்தெரியாத ஒருவர் அவரது கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த பிரஸ்தாப இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ்ஸில் முறையிட்டதனை தொடர்ந்து பொ…

  2. பிரச்சினைகளைத் தீர்க்க ஐ.நா செயலரிடம் காலஅவகாசம் கேட்ட ஜனாதிபதி நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா நேற்று, குருநாகலில் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி தனதுரையில் மேலும் , எதிர்வரும் வருடத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமான கைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். …

  3. ஜனாதிபதியை சந்தித்த மறுதினமே கோத்தாவிற்கு எதிராக குற்றச்சாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்ற மறுநாள் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாநாட்டிற்கு முன்னதாக ஜனாதிபதி கட்சியை சேர்ந்த பலரின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கோட்டாபயவுடனான சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு முக்கிய பொறுப்புக்களை கோரியுள்ளார். ராஜபக்ச கு…

  4. இலஞ்சம் வாங்குவதில் முன்னிலையில் கல்வித்துறை இலஞ்சம் வாங்குவதில் பொலிஸாரை விட கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொலிஸ்துறை மீதே இலஞ்சம் தொடர்பில் அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும் அது தற்போது குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு அதிகம் இடம்பெறும் நிறுவனங்களில்இதனை ஒழிப்பதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் இவ்வாறு இலஞ்சம் பெறுவதில் கல்வித்துறை முன்னிலை வகிப்பதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. …

  5. தாக்குதல் எதிரொலி மலேசியாவிலுள்ள உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்படுகிறார் மலேசியாவில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சாஹிப் அன்ஸார் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டார். இதற்கு அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்தோடு அங்கு நிலவும் பதற்ற நிலையை கருத்திற்கொண்டு அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடு…

  6. நீலக்கடலானது குருநாகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கைச் சேர்ந்த சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், அணிதிரண்டு பங்கேற்றனர். ஆகையால், அந்த மைதானம் மட்டுமன்றி குருநாகல் நகரமே நீலக்கடலாகக் காட்சியளித்தது. கூட்டம், பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய மும்மத ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது. கிறிஸ்தவ ஆசீர்வாதம் வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக…

  7.  'வழிபட யாருமில்லாத இடங்களில் விகாரைகள் எதற்கு?' -நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் 'தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்படும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் ஆக்கிரமிப்பின் அடையாளங்கள். சிறுபான்மை தேசிய இனங்களின் உணர்வுகளை மதித்து, நாட்டில் சமாதான முன்னெடுப்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்' எனத் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திகுமார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் நல்லாட்சிக்கான இந்த அரசை பதவ…

  8. 'குடாநாட்டு மக்களை காட்டுமிராண்டிகளாக காட்டுவதற்கு முயற்சி' -நடராசா கிருஸ்ணகுமார் 'வடக்கு மக்களை காட்டுமிராண்டிகள் போல் நாகரிமற்ற சமூகம் போல் வெளியில் காட்டுவதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற 'யாழ். பிராந்திய பிள்ளைகள்' விழாவில் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கான பரிசில்களை வழங்கி உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று, „யாழ்ப்பாணக் குடாநாட்டிலே எங்குப் பார்த்தாலும் கஞ்சா வியாபாரம், போதைவஸ்து வியாபாரம் அல்லது மதுவிலே கூடுதல்…

  9. ''பான் கீ மூனும் ஏமாற்றிவிட்டார்'' அநாதைகளாகி விட்டோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் (ஆர்.ராம், எம்.நியூட்டன்) எமது கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறி எம்மை சமாதானப்படுத்துவார் என எதிர்பார்த் திருந்த போதும் அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை. பான் கீ மூனும் எம்மை ஏமாற்றிவிட்டார். இதனால் நாம் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைவதோடு எமது பிரச்சி னைகளுக்கு ஐ.நா. தீர்வளிக்கும் என வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போ யுள்ளது என பாதிக்கப்பட்ட தமிழ் மக் கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள் ளனர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் …

  10. கடந்த 1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்ட 158 பேருக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட்டு, அது குறித்த உண்மைகள் அவர்களது உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். 26 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து மீண்டும் தனது கருத்துக்களை பதிவுசெய்யும் போதே பின்வருமாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் இன்று காணாமல் போனோர்கள் பற்றி அரசாங்கம் மிகவும் சிறப்பான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றை திறந்தது என்பது மிக முக்கியமான அம்சமாகும். அவற்றின் செயற்பாடுகள் என்பது எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? என்பதை நாம் விமர்சித்துக்கொண்டே போகலாம். எ…

  11. வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரேயுடன் நடந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்றவற்றில் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயமாகி விடும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். …

  12. எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல-மாவை எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஆளும்கட்சி ஜனாதிபதியோ, பிரதமரோ, அல்லது கையெ ழுத்திட்டு காணியை விடுவிக்கும் அதிகாரம் கொண்டவரோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போன்று தமது நிலத்தை முழுமையாக விடுக்கக் கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், இது குறித்து மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப…

  13. முதுகெலும்புள்ள அரசியல் தலைவர் பண்டாரநாயக்கா-ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான S.W.R.D.பண்டாரநாயக்க, எப்படியான நெருக்கடி கள் ஏற்பட்டாலும் முதுகெலும்புள்ள அரசியல் தலைவராக செயற்பட்டவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் மாளிகா மைத்தானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார் என சிலர் கூறுகின்றனர். இதற்கு நான் இணங்க மாட்டேன். சிங்கள மகா சபையை சேர்ந்த சிலருடன் இணைந்தே அவ…

  14. தமிழில் தேசிய கீதம் பாடுவது அரசியலமைப்பிற்கு உட்பட்டதா?ஆராயவுள்ளது உச்சநீதிமன்றம் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கான நடைமுறைகள் உள்ளனவா என ஆரா யப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றபோது உச்சநீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென்றும், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது அரசியலமைப்பை மீறும் செயலென்றும் தெரிவித…

  15. போட்டிபோடும் பேருந்துகளால் அச்சத்தில் தீவக பயணிகள் ஊர்காவற்துறை தனியார் பேருந்து மற்றும் குறிகாட்டுவான் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு வேகமாக ஓடுவதால் பேருந்து களில் பயணிப்பது அச்சமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.. இது பற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் தனியார் பேருந்து சேவை மற்றும் யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்காக ஏற்படும் பேட்டி காரணமாக ஊர்காவற்துறை வீதியினூடாக வேகமாக செல்வதனால் பேருந்தில் பயணிப்பது அச்சம் அடைய வைக்கிறது. வேகமாக செல்வதால் பயணிகளை குறித்த இடத்தில் இறக்…

  16. தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பரவிபாஞ்சான் மக்களுக்கு வாக்குறுதிகள் வந்து குவிகின்றன. தங்களது காணிகள் விடுவிக்கப்படும் வரை இரவு பகலாக தொடா்ந்து கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் பரவிப்பாஞ்சான் மக்களை இன்று ஞாயிற்று கிழமை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் காணி விவகாரம் தொடா்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீா்வு பெற்று தரப்படும் என வாக்குறிதி அளித்துள்ளாா் ஜந்தாவது நாளும் இரவு பகலாக தொடர்கின்ற பரவிபாஞ்சான் மக்களின் கவனயீா்ப்பு போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு இன்று காலை பத்து மணியளவில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் அங்குள்ள மக்களுடன் உரையாடியதனை அடுத்து ஊடகங்…

    • 4 replies
    • 558 views
  17. கோதபாய ராஜபக்ஸ ஜனாதிபதியை சந்தித்தார்? முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிலிந்த மொரகொட இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோதபாய இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு விசாரணைகள் நிறுத்தப்பட்டால் ராஜபக்ஸ குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பூரண ஒத்துழைப்பு வ…

  18. தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவே ஆயர் இராயப்பு போராடினார் ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர்பார்த்தார். தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்ட கை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் நேற்று (1) வியாழக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரைய…

    • 12 replies
    • 688 views
  19. மலேசியாவில் தொடரும் மகிந்தவிற்கெதிரான ஆர்ப்பாட்டம் மலேஷியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புத்ர வேல்ட் ரிரேட் சென்டர் முன்னால் கூடிய, சுமார் 50 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிந்துல் கோவிலுக்குள் மஹிந்த சென்றிருக்கலாம் என்ற வதந்தியினால், உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து, வௌியே வந்த தலைமை பௌத்த பிக்குவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைத் தாக்கியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பின்னர் அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள…

  20. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களம் மாகாணத்தில் முதல் தடவையாக 'பரா ஒலிம்பிக் ஈஸ்ட் - 2016' என்ற பெயரில் விளையாட்டுப் போட்டியினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடத்த தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை தெரிவு செய்வதற்காக மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா என்று மூன்று வலயங்களாக பிரித்து போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் வாகரை, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை கோறளைப்பற்று, கிரான், செங்கலடி ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்…

  21. “இராணுவத்தை குறைக்குமாறும் காணிகளை விடுவிக்குமாறும் பான் கீ மூன் கோரினார்” வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்குமாறும் பொது மக்களின் காணிகளை விரைவாக மீளளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்னிடம் கோரிக்கை விடுத்தார். அதேநேரம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்குமாறும் பான் கீ மூன் கோரினார் என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அரசாங்கத்தின் மாற்றங்களுக்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் பான் கீ மூன் கோரினார். மேலும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்களை அவர் பாராட்டியமையும் விஷேட அம்சமாகும் என்றும் வடக்கு ஆளுநர் குறிப்பிட்டார். ஐக்கிய நாட…

  22. திருமலை கலப்புக்கடலில் ஆயுதங்கள் மீட்பு திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியிலுள்ள கலப்புக் கடலில் ஆயுதங்கள் மீட்க ப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை பொலிஸாரின் உதவியுடன் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடல் பகுதியில் உள்ள இடமொன்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மீனவர்களின் வலையில் தொடர்ந்தும் ஆயுதங்கள் சிக்குவதினால் நேற்று கடற்பகுதியில் தேடுதல் நடாத்திய போது ரி-56 துப்ப…

  23. திருகோணமலை - குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடிமலைப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேறுமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கரடிமலைப்பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸார் நிலை கொண்டிருந்தனர். அப்போதைய காலப்பகுதியில் நடந்த யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் கரடிமலை முகாமை தாக்கி அழித்திருந்தனர். இதனையடுத்து கடற்படையினர் கரடிமலைப்பகுதியில் நிலைக்கொண்டிருந்தனர். தற்காலத்தில் படிப்படியாக பொதுமக்கள் மீளக்குடியேறி வரும் நிலையிலும் அந்த முகாம் கடற்படையினர் வசமே உள்ளது. இதனால் அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை செய்ய பாரிய சிரமங்களை எதிர் கொள்வதாக ம…

  24. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வழிபாட்டிற்காக செல்லவிருந்த மலேசிய விகாரை ஒன்றின் தேரர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரியவந்துள்ளது. மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில் மஹிந்த நாளைய தினம் செல்வதற்கு திட்டமிட்டமிட்டிருந்த விகாரை ஒன்றின் தேரர் மீது இன்றைய தினம் சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். இச்சுற்றுப்பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் மஹிந்தவுடன் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.