Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணியை இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு வழங்கவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். கதிர்காமம் - நாகதீபம் பகுதிக்கு அருகிலுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமேவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி கதிர்காம நகரிலுள்ள ஆலய வளாகத்திற்கு நேற்று பிற்பகல் வந்த மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இது போன்ற நடவடிக்கைகளை பஸ்நாயக நிலமே உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது கோரியுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் இது குறித்து பஸ்நாயக்க நிலமே, டீ.பி.குமாரவிடம் அத தெரண வினவியது. இதற்கு பதிலளித்த அவர் குறித்த குற்றச்சாட்டை முற்றாக மறுத…

    • 3 replies
    • 612 views
  2. வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கிராமத்தில் தமிழர் ஒருவரின் காணியை அடாத்தாக பிடித்துள்ள பௌத்த பிக்கு ஒருவர் அங்கு பாரிய விகாரையொன்றை அமைத்து வருகின்றார். தனது தந்தையின் பெயரிலுள்ள குறித்த காணியை மீட்டுத் தருமாறு காணிக்கு உரித்து டையவரான 60 வயதுடைய மணிவண்ணதாஸ் திருஞர்னசம்பந்தர் கோரிக்கை விடு த்திருந்தார். அவரது கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஆதரவு வெளியிட்டிருந்ததுடன் பௌத்த பிக்குவின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர். …

    • 3 replies
    • 489 views
  3. இலங்கையின் வங்களிலும், நிதி நிறுவனங்களிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடி செய்யப்பட்ட பெரும் தொகையான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அசையா சொத்துக்களும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. விசாரணைகளில் கண்டறியப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமை பாராட்ட எவரும் இல்லையெனவும் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிலர் நபர்கள் மோசடி செய்த பணம் மற்றும் சொத்துக்களில் தற்போது உரிமையாளர்கள் இல்லாத பணம் மற்றும் சொத்துகளாக மாறியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெ…

  4. வெள்ளவத்தையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீட்கப்பட்ட குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135040/language/ta-IN/article.aspx

  5. கிளிநொச்சி நகரத்தின் மையப் பகுதியான டிப்போ சந்தியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் ஒரு ஓய்வுப் பூங்கா அமைக்கும் நடவடிக்கை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது இந்த ஓய்வுப் பூக்காவை அமைக்க பணிக்கப்பட்டிருந்தது. குறித்த காணி நகர சபைக்குச் சொந்தமான காணி என்றும் அதில் அரச நிறுவனங்களே இடம்பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டபோதும் கோத்தபாயவின் உத்தரவு காரணமாக அக் காணி விடுவிக்கப்படவில்லை. குறித்த காணியின் முன்பாக பாரிய போர் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவதாகவே ஓய்வு பூங்காவை அமைக்கும் யோசனையை கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ளார். சிறுவர்களு…

  6. நுவரெலியா மாவட்டத்தில் டயகம பிரதேசத்தை சேர்ந்த நடராஜா இமாசுதன் என்ற இளைஞரொருவர் புத்தாக்க ஆணைக்குழுவினால் ஜனாதிபதி விருதை பெற்றுக்கொள்வதற்கு தெரிவாகியுள்ளார். Gsm controller என்ற இந்த சாதனத்தினூடாக கைத்தொலை பேசிக்கு ஒலிசமிக்ஞை செய்யக்கூடிய சிறந்த உபகரணத்தை கண்டுபிடித்தமைக்காகவே இந்த விருது வழங்கப்படவிருக்கின்றது. இவர் கண்டுபிடித்த இந்த சாதனத்தை கொண்டு உயிர் உடைமைகளுக்கு பாதுகாப்பினை வழங்க முடியுமென இமாசுதன் தெரிவிக்கின்றார். இதைப்போன்ற சாதனம் இன்னும் உருவாகவில்லை எனவும், இக்கருவியை முழுமையாக நிறைவு செய்வதற்கு பல தடைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இவர் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, தற்போது திறந்த பல்கலைக…

  7. இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி மக்களின் காணி விடுவிப்பு குறித்து காலத்திற்கு காலம் பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் வழங்குகின்றனர். எனினும், காணி விடுவிப்பு தொடர்பில் அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று வரையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாட்டின், ஆட்சிப் பீடத்தை அலங்கரித்த ஆட்சியாளர்களினால், அகதி வாழ்வுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இன்றும் அவர்களின் வாழ்வு தொடர் கதையாகவே உள்ளது. பரவிபாஞ்சன் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் சொர்க்காபுரி, அவர்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளின் கேந்திர நிலையம். பசுமை நிறைந்த நிலப்பரப்பாக காட்சியளித்த பரவிப்பாஞ்சன் பகுதி, தலைநகர் கொழும்புக்கு இணையாக செயற்…

  8. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடுவில் இடம்பெற்று வரும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலனியில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் மற்றும் உறவுகளை இழந்தவர்கள் இந்த விடயத்தினை கூறியுள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தக்குற்றம் குறித்து தற்போதைய அரசு முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை மீதும் துளியளவும் நம்பிக்கை இல்லை. அத்துடன், வடமாகாணத்துக்குரிய முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மிகவும் நேர்மையாகவே நடந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட எந்த ஆயுதத்தையும் அவ…

  9. வட மாகாணசபையும், வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடாவை நேற்று சந்தித்த பின்னர், தனது யாழ்.விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் பொறிமுறைகளும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செ…

  10. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் அந்த கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் உட்பட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு கட்சித் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று தீர்மானித்தார். இது குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ இன்று கட்சி முகம் கொடுத்துள்ள நிலை குறித்து தான் கவலைபடுவதாகத் தெரிவித்தார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்…

  11. கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் துரித நடவக்கையை மேற்கொண்டுள்ளார். கல்லுண்டாய் வெளியில் பல காலமாகக் கொட்டப்பட்டுவரும் திண்மக் கழிவுகள் தீப்பற்றி கொண்டதால் ஏற்பட்டிருக்கும் பாரிய புகைமண்டலம் சுற்றுச் சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது என கல்லுண்டாயையும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இக் கழிவுப் புகையிலிருந்து வெளிவரும் இரசாயனத் தாக்கத்தைப் பொறுக்காத இப் பிரதேச வாசிகளின் விருந்தாளிகளாக வந்து தங்கிய வெளிநாட்டு உறவுகள், இந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர். இதைப் போன்று அன்றாடம் தமது வாழ்வியல…

  12. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதிக்குப் பதிலாக நட்டஈட்டினை பெற்றுக்கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மகனைப் பறிகொடுத்த வவுனி யாவைச் சேர்ந்த தந்தையொருவர் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணியின் வவுனியா மாவட்ட அமர்வில் முன்னிலையாகிய போரினால் பாதிக்கப்பட்ட மாணிக்கம் ஜெகன் என்ற தந்தையே இந்த எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டிருக்கின்றார். பிரதமரினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான பொறுப்பு க்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி யின் மாவட்ட மட்டத்தில் அமர்வுகளை நடாத்தி வருகின்றது. இதற்கமைய குறித்த செயலணியின் வவுனியா மாவட்ட குழுவின் வவுனி…

  13. வைத்தியசாலைக்குச் சென்ற கணவரை, திரும்பி வரும்போது போரதீவு எனும் இடத்தில் நின்ற விசேட அதிரடிப்படையினர், புத்தகமொன்றைக் கொடுத்து, இதைத் தமது முகாமில் கொடுத்துவிடுமாறு அனுப்பி வைத்து விட்டு, முகாமுக்குள் வைத்து அவரைப் பிடித்துள்ளார்கள். எனது கணவர் பற்றிய தகவலை அறிவதற்காக இன்றுவரை தவியாய்த் தவிர்க்கின்றேன்' என த.பவானி தெரிவித்தார். நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் இறுதி அமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எனது கணவர் காணாமல் போன தினமான 2008.12.20 அன்றிலிருந்து பல அரச அமைப்புகளிடமும் அரசசார்பற்ற அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால், இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை.…

  14. வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக் கடற்கரைப்பகுதியிலிருந்து 25 கிலோ கேரளா கஞ்சா, இன்று மீட்கப்பட்டதாக மருதங்கேணிப் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மேற்படி கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தில் கடற்படையினரின் உதவியுடன் பளைப் பொலிஸார் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். கேரளாவிலிருந்து கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதியை, நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த…

  15. காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு எந்தவொரு இராணுவ வீரரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. காணாமல் போனோர் தொடர்பில் இராணுவத்தினர் பதில் சொல்ல வேண்டி வரும் என எவராவது நினைப்பார்களாயின் அது இராணுவத்தை அகௌரவப்டுத்தும் எண்ணக்கருவாகும். ஏனெனில் இராணுவத்தினர் சட்டப்பிரகாரமே செயற்பட்ட னர். சட்டத்திற்கு முரணாகச் செயற்பட்ட தில்லை என அமைச்சர் பீல்ட்மாஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் இராணுவத்தினருக்கு எதிராக அமையப்போவதாகக் குறிப்பிடுபவர்கள், இராணுவத்தினரின் நலனை அக்கறையா கக் கொண்டு அந்தக் கருத்தை வெளியிடவில்லை. மாறாக தங்கள் அரசியல் இருப்புக்காகவே அவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றனர். கடந்த ஆட்சியில் இராண…

  16. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…

  17.  பொன்னாலைக் காட்டுப் பகுதியில் புதன்கிழமை (17) ஏற்பட்ட தீயால் காட்டிலுள்ள பெருமளவான பற்றைகளும் செடிகளும் எரிந்து நாசமாகின. காடு தீப்பற்றி எரிந்ததை அறிந்த கடற்படையினர் உடனடியாக விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொன்னாலை மேற்கில் பெருமளவான பிரதேசம் சிறிய காடுகளால் சூழப்பட்டிருக்கின்றது. இந்தக் காட்டில் உள்ள பனைகள், மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு விசமிகள் அடிக்கடி தீவைப்பதால் பெருமளவான பற்றைகளும் வடலிகளும் பனை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை மதியம் இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்தக் காட்டுக்கு தீமூட்டியுள்ளனர். சம்பில்துறையில் உள்ள கடற்படை முகாமில் இருந்து 50க்கும் அதிகமான கடற்படையினர் விரைந்…

  18. -மேனகா மூக்காண்டி 'வடமாகாணத்தில், சந்திக்குச் சந்தி, புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அச்சிலைகளை வணங்குவதற்கு, அங்கு ஆட்களில்லை. மற்றுமொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ளுமாறு, பௌத்த தர்மம் போதிக்கவில்லை. அதனால், அந்தத் தர்மத்துக்கு கௌரவம் ஏற்படும் வகையில், பௌத்தர்கள் நடந்துகொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம், முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் விகாரையொன்று அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெர…

  19. வலி. வடக்கில் அடுத்த வாரம் மேலும் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 600 ஏக்கர் வரையிலான நிலம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்படவுள்ள பகுதிகளை யாழ். மாவட்டச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தனர். வலி.வடக்குக் காணி விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது அடுத்த ஆண்டு நடுப் பகுதிக்குள் காணி விடுவிப்பதற்கான கால அட்டவணை தயாரி க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர், விரைவில் 700 ஏக்கர் காணி வரை விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தா…

  20. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் இருந்து பல்கலைக்கழக யுவதி ஒருவர் வாகனத்தில் சென்றவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அது தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் வானில் பயணம் செய்த மூவர் கைது செய்யப்பட்…

  21. வடக்கின் சில அரசியல்வாதிகள் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெல்கொடவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றி அவர்களுக்கு புற்று நோய் போன்ற நோய்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக வடக்கின் சில அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு தீர்…

  22. கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்களின் விடுவிக்கப்படாது இருக்கின்ற 13 ஏக்கர் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இன்று 18-08-2016 கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் பரவிபாஞ்சான் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பரவிபாஞ்சான் காணி விடயம் தொடர்பில் கடந்த இரண்டு மாதங்கள் முன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தேன் அதற்கமைவாக நான்கு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. இன்னும் 13 ஏக்கர் காணிகள் விடுவிக்க வேண்டும் அது தொடர்பிலும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனவே விரைவில் அவற்றை மீளப்பெற்றுத் தருவேன். ஆனால் என்னால் உறுதியாக கால வரையறை க…

  23. சம்பந்தருக்கு எதிராகவும் கோசமிட்ட மக்கள் சிறிதரனிடம் மகஜரை கையளித்தனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- தேசிய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளுக்கான நிரந்தர அலுவலகம் கிளிநொச்சியில் அல்லது முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும் என, கோரி கிளிநொச்சியில் உள்ள காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் இன்று வியாழக்கிழமை காலை பத்து முப்பது மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பாதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் ஆரம்பித்த கவனயீர்ப்பு நடைபவனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

  24. விடுதலைப் புலிகளின் 200 தலைவர்கள் போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியான யாஸ்மீன் சூகா இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அருட்தந்தை பிரான்ஸிஸ் தமக்கு தகவல்களை வழங்கியதாக சூகா அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் 200 பேர் காணாமல்போயுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை உண்மைக்கு புறம்பானது என இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலிகளின் 200 தலைவர்கள் காணாமல் போயிருந்தால் யார் போர் செய்தார்கள் என சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கேள்வி எழுப்பியுள்ளார். …

  25. ஒழுக்கத்தை சிதைப்பவர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இடமில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கத்தை சிதைப்பவர்கள் கட்சியில் இருப்பதற்கே தகுதியற்றவர்களாகின்றார்கள். கட்சியின் தலைமையகம் என்பது தேவாலயம் போன்றது. குறித்த தேவாலயத்திற்கு முன்பு ஊ சத்தம் எழுப்புபவர்களை எமது கட்சியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்குள் தீவிரவாதிகளை அனுமதிக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163751&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.