ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் யாழ் திருநெல்வேலி பகுதியில் கலாசாலை வீதி பாரதிபுரம் மைதானத்தில் இளைஞர்களின் அட்டகாசம் எல்லை மீறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த மைதானத்தில் இரவு நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர்கள் கூச்சலிடுவதாகவும், பியர் பேன்ற மது பாவனையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவிததுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கவனமெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர் http://onlineuthayan.com/news/16089
-
- 1 reply
- 254 views
-
-
வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிப்பு கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது. வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில், 9 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி வழக்கில், அரச சட்டத்தரணி பொலிஸ் மரண விசாரணைகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவு…
-
- 0 replies
- 341 views
-
-
இலவச கருத்தரங்கு -சுப்பிரமணியம் பாஸ்கரன் சட்டத்தரணி வே.தேவசேனாதிபதியின் அனுசரணையுடனும் வடமாகாண கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடனும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வடக்கு மாகாணத்துக்குட்பட்ட 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் சித்தி வீதத்தை அதிகரிக்கும் முகமாக, துறை சார்ந்த பாடங்களுக்கான இலவச கருத்தரங்கு, பாடக்குறிப்புக்கள், கடந்த கால வினாவிடைத் தொகுப்பு புத்தகங்கள் என்பன வழங்கப்படவுள்ளதாக துணுக்காய் வலயக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சக்திதரன் தெரிவித்தார். தினமும் காலை 8 மணி முதல் ம…
-
- 0 replies
- 367 views
-
-
முழங்காவில் உணவகத்துக்கு சீல் -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் சுகாதாரச் சீர்கேடாக இயங்கிவந்த உணவகம் ஒன்று, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (09) மாலை சீல் வைத்து மூடப்பட்டது. பூநகரிப் பிரதேச பொதுச்சுகாதார அதிகாரி, கடந்த வாரம் சோதனை மேற்கொண்டபோது இந்த உணவகம் சுகாதாரச் சீர்கேடாக இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பூநகரிப் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரி குறித்த உணவகத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார். - See more at: http://www.tamilmirror.lk/179120/-ம-ழங-க-வ-ல-உணவகத-த…
-
- 0 replies
- 272 views
-
-
தென்னையும் வீட்டையும் காப்பாற்றிய ஆசிரியர் கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல், தென்னைமரத்தின் இடைநடுவில் வலை போன்ற அமைப்பு ஒன்றைச் செய்து, தேங்காய் அதில் விழுமாறு வட்டவடிவில் அமைத்துள்ளார். இதன் மூலம் வீட்டின் கூரையின் மீது தேங்காய…
-
- 0 replies
- 275 views
-
-
கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதகுரு தெரிவிப்பு:- கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது என பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர் தெரிவித்தார் இன்றைய தினம் செவ்வாய் கிழமை 09.08.2016 கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த மதகுரு லெச் சொனான் சகிதம் வருகைதந்த பாலியகொட கங்காராம பௌத்த விகாரையின் மதகுரு விமலகனா தேரர் அங்குள்ள நூறு குடும்பங்களுக்கு பாலியகொட கங்காராம விகாரையின் நிதி உதவியில் உணவுப் பொருட்கள், மற்றும் ஆடைகள் அடங்கிய சிறிய பொதியினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் நிகழ்வின் இறுதியில் கனகாம்பிகைக் கோவிலின் அருகில் ஆலயத்தின…
-
- 1 reply
- 420 views
-
-
புத்தளம், காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாய்லாந்து விருப்பம் புத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின் முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி சிவா மஹாசந்தன உள்ளிட்ட முன்னணி அதிகாரிகள் சிலர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனை தெரிவித்தனர். இலங்கை இன்று அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி வேகம் இதன்போது இத்தூதுக் குழுவினரால் பாராட்டப்பட்டதுடன், இலங்கை இன்று முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாடு என்றும் எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல …
-
- 0 replies
- 163 views
-
-
லசந்த கொலை சந்தேக நபரான சார்ஜன்ட் மேஜர் தன்னை தாக்கினரா? : அடையாளம் காட்ட அமெரிக்காவிலிருந்து வருகிறார் உபாலி தென்னகோன் தம்மை தாக்கியோரில், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்தவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் பிரேமாநந்த உடலாகமவும் இருந்தாரா என்பதை அடையாளம் காட்ட தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மற்றும் அவர் மனைவி ஜயகொடி ஆரச்சிகே தம்மிகா மல்காந்தி தென்னகோன் ஆகிய இருவரும் இலங்கை வரவுள்ளனர். இந்த விவகாரம் குறித்த வழக்கின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி கம்பஹா நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவ்விருவரும் அன்றைய…
-
- 0 replies
- 202 views
-
-
முதலமைச்சரை விரட்ட எனக்கு எதிராக பிரேரணை -எம்.றொசாந்த் 'வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை விரட்ட வேண்டும் என்பதற்காக எனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு பிரேரணையை சபையில் சில உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்' என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போது, அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் முதலமைச்சரால் குழுவொன்று அமைக்கப்படும் விடயம் விவாதிக்கப்படும் போது, அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டுக்குச் சென்ற சில உறுப்பினர்கள். முதலமைச்சருக்கு பாட…
-
- 1 reply
- 330 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் வேல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டக் கிராமமான நாவிதன்வெளியிலுள்ள சிறுவர் கழகத்தினர் இரண்டு நாள் பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகியுள்ளனர். வேல்ட் விஷன் நிறுவன வலி.மேற்கு திட்ட வளவாளர் வி.வென்சஸ், நாவிதன்வெளி திட்ட வளவாளர் ஆர்.சதீஸ் ஆகியோர் தலைமையில் அழைத்துவரப்பட்ட இந்தச் சிறுவர் கழகத்தினர் இன்று பொன்னாலை பாபுஜி முன்பள்ளிக்கு நட்புமுறைப் பயணத்தை மேற்கொண்டனர். இந்த முன்பள்ளியில் இவர்கள் சிரமதானப் பணி ஒன்றையும் முன்னெடுத்தனர். இதைவிட, அராலியில் உள்ள சிறுவர் கழகங்களுடன் சிறுவர் உறவுப் பரிமாற்ற நிகழ்வுகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் இன்று மதியம் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி நாவிதன்வெளி சிறுவர் …
-
- 0 replies
- 269 views
-
-
சுழிபுரத்தில் உள்ள கடையொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்ட குழுவில் தனது மகனும் இடம்பெற்றிருந்ததை அறிந்த தந்தை ஒருவர், குறித்த மகனான சிறுவனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததுடன் அவனைத் திருத்தி தருமாறும் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டார். குறித்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த திருட்டுக் குழுவில் இருந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் அந்த சிறுவர்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறுவனின் பெற்றோரையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பொன்னாலையில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பொன்னாலையில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தனது மகனான, பாடசாலை செல்லும்…
-
- 0 replies
- 226 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர், எனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்யும்; வகையில் செயற்பட்டு வருகின்றார் என வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். உறுப்பினர் பரஞ்சோதியின் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் உடனடியாகவே மறுத்திருந்தார். வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து எட்டாவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் பரஞ்சோதியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு உள்@ராட்சி சபைகளுக்கும் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களை பொறுப்பாக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார். இதன் மீதான விவாதத்தின் போது உள் @ராட்சி சபைகளுக்கான ஆலோசனை…
-
- 0 replies
- 266 views
-
-
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவில் இலங்கை அரச படைகள் புத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இலங்கை அரச படைகள் இரணைமடுவை பல்வேறு வகையிலும் ஆக்கிரமித்து வருகின்றது. அத்துடன் அதற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் தன் போர் இலக்குககளில் ஒன்றாக இரணைமடுவை வைத்திருந்தது. இரணைமடுக்குளத்தையும் அதன் அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்தையும் அண்டிய பிரதேசமே சிங்கள, இராணுவ, பௌத்த மயமாக்கப்படுகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட, பல்வேறு நோக்கம் சார்ந்த நில அழிப்பு சார்ந்த நடவடிக்கையாகும்…
-
- 0 replies
- 247 views
-
-
குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்து…
-
- 11 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்கு தம்பி, என்றும், மாநில அதிகாரம் என்பது இலங்கைக்கு தரக் கூடாது, தரவும் மாட்டார்கள் என்று இந்தவார மக்கள் பிரதிநிதி நிகழ்ச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார். புதிய அரசியலமைப்பில் சமஸ்டி முறையே சிறந்தது எனவும், சமஸ்டி என்றால் பிரிவினை என்று சிங்களவர் நினைப்பது தவறு என்றும் மேலும் பல விடயங்கள் பற்றியும் வீ.ஆனந்த சங்கரி கூறியுனார். Go to Videos Anantha Sangari http://www.tamilwin.com/interviews/01/113614
-
- 2 replies
- 500 views
-
-
ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சையாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பஸ் சுன்னாகம் பஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பொலிஸார் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது உடைக்குள்…
-
- 16 replies
- 1.3k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விட மோசமானவர் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 'எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்சவினால் உருவாகவில்லை. 35 ஆண்டுகள் நான் அவரின் ஆசீர்வாத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை. ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி நான் அங்கு சேவையாற்றினேன். அவர் தவறிழைக்கும் போது அவருக்கு எதிராக பேச எனக்கு முதுகெலும்பு இருந்தது. பிரபாரகன் என்பவர் பயங்கரவாத தலைவர். அவருடைய அரசியல் கொள்கையின்படி நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தார். எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தின் குடும்பத்தை தாக்கும…
-
- 2 replies
- 466 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள்தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மேலும் ஒரு முன்னாள் போராளி திடீரெனகாச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் உயிரிழந்துள்ளார். பூநகரியை சேர்ந்த நடராஜா கலியுகராஜா (54வயது) என்பவரே 7 ம் திகதி காலை இவ்வாறுஉயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்கடந்த மாதம் 24ம் திகதி இவருக்கு காச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரைபூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். பின்னர்அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட…
-
- 1 reply
- 532 views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை :கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கருத்தை ஏற்காத வத்திக்கான் புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்தை வத்திக்கான் திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பௌத்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் இந்த செய்தியை கடந்த மாதம் 4ஆம் திகதி பிரசுரித்துள்ள வத்திக்கான் ஊடகங்கள், இலங்கையின் கத்தோலிக்க மத குர…
-
- 2 replies
- 312 views
-
-
வடக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வையோ அல்லது பிராந்திய அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலையே வலியுறுத்தவில்லை என அரசாங்கத்தின் அரசியல் சாசன சபையின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இதுகுறித்து அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்குத் தலைவர்கள் தற்போதைய மாகாண சபை கட்டமைப்பை வலுப்படுத்துமாறே வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கண்டி அருப்பொல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, புத…
-
- 5 replies
- 559 views
-
-
விரதத்தால் வடமாகாண சபை ஒத்திவைப்பு -எம்.றொசாந்த் உறுப்பினர்களில் சிலர் ஆடிச் செவ்வாய் விரதம் இருந்தமையால், அவர்களுக்காக வடமாகாண சபையை தொடர்ந்து நடத்தாமல் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஒத்திவைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே, இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வடமாகாண அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்று அமைப்பது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட பிரேரணை, வடமாகாண சபையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அந்தக் குழுவை அமைப்பதற்கு சில உறுப்பினர…
-
- 1 reply
- 388 views
-
-
கல்லடிப் பாலத்தில் ஆபத்து ; மக்கள் அவதானம் (காணொளி இணைப்பு) (சசி) மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் சிறிய உடைவொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பயணிக்கும் மக்கள் அவதானமாக செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கல்லடிப் பாலம் அல்லது லேடி மெனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தின் ஒரு சிறிய பகுதி உடைந்து விழுந்துள்ளது. இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறைமாவட்டத்திற்கு செல்ல இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலங்களில் ஒன்றாக வ…
-
- 6 replies
- 708 views
-
-
இறுதிக்கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக, நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணியிடம் எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்பவர் சாட்சியம் அளித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அமர்விலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். சிங்கள பௌத்த பிக்குமாரின் அத்துமீறலை தவிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். யுத்தத்தின்போது இறந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 318 views
-
-
கொழும்பிலுள்ள தீவிரவாத விசாரணைப்பிரிவுத் தலைமையகமான 4ஆம் மாடிக்கு விசாரணைக்குச் சென்று வந்த பின்னர் வெயிலில் நிற்கவும், கடினமான வேலைகள் செய்யவும் முடிவதில்லை என முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், கொழும்பு 4ஆம் மாடியில் எங்களை விசாரணை செய்யும் போது, எங்களுக்கு வலி ஸ்பிறே ஒன்று அடித்து விசாரணை செய்தனர். சீனா தயாரிப்பான அந்த ஸ்பிறே அடித்தால், வலிகள் தெரியாது. அதன்பிறகு எங்களை சித்திரவதை செய்வார்கள். சித்திரவதை செய்யும் நேரத்தில் அதனை உணர்ந்து கொள்ள முடியாது. ஆனால், சில மணி நேரங்கள் கழிய வலி தொடங்கினால், அதனைத் தாங்க முடியாது. இவ்வாறு செய்த சித்திரவதைகளால் இன்று கடினமான வேலை செய்ய முடிவதில்லை. வெயிலில் அதிக நேரம் நின…
-
- 0 replies
- 357 views
-
-
புதிய திருப்பத்துடன் கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதுடன் இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகள் விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மிகவும் முக்கியமாக இந்த விஜயத்தின்போது கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. குறிப்பாக கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் தொடர்பில் தற்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் திருத்தப்பட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. அதாவது மூன்று தரப்புக்களின் பங்களிப்புடன் முத்தரப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கமும் குறித்த…
-
- 0 replies
- 445 views
-