ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
கை விலங்குடன் நாமல் : கட்டி தழுவிய யோசித நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட நாமல் ராஜபக்ஷவை பார்வையிட சென்ற யோசித ராஜபக்ஷ கட்டியனைத்து சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார். இந்திய நிறுவனமான கிரிஷ் குழுமம் றக்பி விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக போட்டித் தொடர் ஒன்றினை நடத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கியதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதியினை தவறாக தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தினார் என்ற மோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று கைது செ…
-
- 1 reply
- 348 views
-
-
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலைய அமைவிடம் தொடர்பில் ஏற்பட்டு வந்த இழுபறிக்கு ஒரு முடிவை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாகாணத்துக்கென முன்மொழியப்பட்டு வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய வலயம் எவ்விடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சில காலமாக சரச்சைக்குரியதாகவிருந்ததை சகலருமறிவீர்கள். பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.இன்னும் சிலர் தாண்டிக்குளத்தில் விவசாய பண்ணையில் அமைய வ…
-
- 3 replies
- 416 views
-
-
அவதானம்..! ரயிலில் மோதுண்டு 6 மாதங்களில் 244 பேர் உயிரிழப்பு : இயர்போனால் அதிக உயிரிழப்பு (ப.பன்னீர்செல்வம்) காதுகளில் " இயர்போன் " மாட்டிக் கொண்டு புகையிரதப் பாதையில் பயணித்தவர்களே பெருமளவில் கடந்த காலங்களில ரயில்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் இது வரையில் ரயில்களில் மோதுண்டு 244 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புகையிரதப் பாதுகாப்பு பிரிவினர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த வாரத்தில் மாத்திரம் 13 ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். பெருமளவில் காதுகளில் இயர்போன் மாட்டிக் கொண்டு புகையிரத பாதையில் நடந்து செல்வோரே பெருமளவில் உயிரிழந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 128 views
-
-
நாமல், முஸம்மில் ஒரே சிறை பிரிவில் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நேற்றுத் திங்கட்கிழமை (11) முற்பகல் கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அதே ஈ பிரிவில், தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பிரிவில் சுமார் 20 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனைவருக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 மில்லியன் ரூபாயினை தவறாகப் பயன்படுத்தினார் மற…
-
- 0 replies
- 222 views
-
-
திருமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீளவும் புத்தர் சிலை அமைக்கமுயற்சி! திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் நேற்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலாவெளி வீதியில், தனியார் காணியில் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த இரண்டு சோதனைச் சாவடிகளை இராணுவத்தினர் அண்மையில் அகற்றியிருந்தனர். இந்த இரண்டு சோதனைச்சாவடிகளிலும், புத்தர் சிலைகள் வைத்து படையினரால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கிருந்து படையினர் விலகிய போது, புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். …
-
- 0 replies
- 486 views
-
-
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவரின் மீன்பிடிக்கு அனுமதி : எதிர்த்து போராட்டம். வடபகுதி மீனவர்களின் அனுமதியின்றி இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக வடமாகாண கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை வடமாகாண சபையை முற்றுகையிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பாக வடபகுதி மீனவர்களின் ஆ…
-
- 0 replies
- 146 views
-
-
ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல் : பாதுகாப்பு அமைச்சு இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் இலங்கை பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும் என இலங்கை பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டு…
-
- 0 replies
- 171 views
-
-
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாக தெரிகின்றது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு பார்வையிட வந்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இப்படியே அடுத்தடுத்து கைதுகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல். …
-
- 0 replies
- 292 views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் 250 இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய இலங்கை அனுமதிக்கலாம் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 3000 இழுவைப்படகுகள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறுவதை காட்டிலும் 250 படகுகளுக்கு அனுமதி வழங்குவது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. தென்னிலங்கை சிங்கள மீனவர்களும் கிழக்கு மீனவர்களும் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். எனவே இலங்கையில் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்படவில்லை என்ற அடிப்படையில் தமிழக இழுவைப்படகுகளுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றும் இந்திய செ…
-
- 1 reply
- 318 views
-
-
சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரையே கடந்த 05 ஆம் திகதி யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆட்டோ சாரதியான குறித்த குடும்பஸ்தரை இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை. ஆஜர்படுத்தாத காரணத்தினால், குறித்த குடும்பஸ்தர் எங்கு என தெரியாது என மனைவி மற்றும் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் கடந்த வெ…
-
- 1 reply
- 199 views
-
-
கிளிநொச்சியில் சட்டவிரோத கருகலைப்பு குற்றச்சாட்டில் தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல். கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிசை நிலையம் இன்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிசை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியுடன் 25 வயது இளைஞன் ஒருவா் பாலியல்உறவு கொண்டுள்ளார் இதன் மூலம் குறித்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளார் இதனையடுத்து சிறுமியின் தந்தை சிறு…
-
- 1 reply
- 228 views
-
-
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் 35 பேர் நாளை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பவுள்ள 35 பேரில் 11 ஆண்களும் 24 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர். குறித்த அனைவரும் இலங்கையை வந்தடைவதற்கான இலவச விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, நாடு திரும்பும் அகதிகளுக்கு மீ…
-
- 0 replies
- 255 views
-
-
ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன் ஊடாக எனது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என இவர்கள் நினைத்தால் அது வெறும் கானல் நீராகவே இருக்கும் என்றும் மஹிந்த தனது முகப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு…
-
- 1 reply
- 273 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தையின் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட சில நிதி மோசடிகள் சம்பந்தமாக இன்று கைது செய்யப்பட்டார். நாமலின் கைது மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் சிங்கள் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை பொறுமை காக்காது தற்புகழ்ச்சி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடனேயே சிறைச்சாலைக்கு சென்றார். பல வருடங்களாக தந்தையின் அரச அதிகாரத்தை பயன்படுத்தி நாமல் ராஜபக்ச மோசடிகள், ஊழல்கள், பொறுக்கி தனங்களில் ஈடுபட்டு சல்லாப வாழ்…
-
- 0 replies
- 569 views
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச இன்று மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.tamilwin.com/politics/01/110622
-
- 0 replies
- 333 views
-
-
இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான- நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் அவர், தமது ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில், போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கு நம்பகமான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தருஸ்மன் குழுவினால் முன்னர் முன்வைக்க…
-
- 0 replies
- 381 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில தினங்களில் தென்கொரியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது. பொது எதிரணி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள சூழலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தென்கொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாய்லாந்து, உகண்டா, மற…
-
- 0 replies
- 197 views
-
-
வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாகாணம் என்ற வகையில் வடக்கை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161284&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 183 views
-
-
பொறியியல் துறையில் விஞ்ஞானியாக வருவது இளம் விஞ்ஞானி அபிஷேக்கின் இலட்சியம் என அபிஷேக்கின் தந்தையான சதீஸ் குமார் சிவராமு எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். மேலும்,தமது மகனின் திறமையினை அடையாளம் கண்டு பலர் பாரட்டுகளை தெரிவித்தவன்னம் உள்ளனர் என்வும் குறிப்பிட்டார். மலையகத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி அபிஷேக் தேவர் சதீஸ்குமார் பூண்டுலோயாவை பிறப்பிடமாக கொண்டவர். பூண்டுலோய தமிழ் மகா வித்தியலாயத்தில் 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இவர் நடைப்பெற்ற புலமைப்பரீட்சையில் திறமையாக சித்தியடைந்தவர். இதேவேளை, அபிஷேக் சிறிய மின் உபகரணங்களைப்பயன்படுத்தி லொறியும்,பொக்கோ போன்ற இயந்திரங்களை கைப்பணி பொருட்களை வைத்து செய்துள்ளார். …
-
- 1 reply
- 596 views
-
-
போராளிகளின் மரணத்திற்கு காரணமாகும் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? – அருஷ் sri 3 days ago கட்டுரை 28 Views விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல் தலைவர் தமிழினி மற்றும் இனந்தெரியாத நோயினால் இறந்த தமிழரசன் ரோகினி ஆகியோர…
-
- 0 replies
- 440 views
-
-
VAT, NBTக்கு இடைக்காலத் தடையுத்தரவு வற் ( பெறுமதி சேர் வரி) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அதிகரிப்புக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/176744/VAT-NBTக-க-இட-க-க-லத-தட-ய-த-தரவ-#sthash.25JtuqpW.dpuf
-
- 1 reply
- 222 views
-
-
கதிர்காமத்தில் ஜனாதிபதி கதிர்காம புண்ணிய பூமிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார். இதன்போது கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்து நலன் விசாரித்தார். - See more at: http://www.tamilmirror.lk/176754/கத-ர-க-மத-த-ல-ஜன-த-பத-#sthash.rTictKIN.dpuf
-
- 0 replies
- 142 views
-
-
புத்தளத்தில் -முஹம்மது முஸப்பிர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேராவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தளம் கிவுல ஸ்ரீ லோகானந்த பௌத்த விகாரை, கடையாமோட்டை ஜூம்ஆ பள்ளிவாயல், முக்குத் தொடுவாவ கத்தோலிக்க ஆலயம் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பொது கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டா…
-
- 0 replies
- 313 views
-
-
'வீரவசனங்களுக்கு இடமில்லை' பொருளாதார வர்த்தக மையம் வவுனியா மாவட்டத்துக்கு அரசாங்கம் வழங்குகின்ற விடயத்தில் தனிப்பட்ட அரசியலுக்கோ கட்சி பேதத்துக்கோ பிரதேசவாதத்துக்கோ கௌரவப் பிரச்சினைகளுக்கோ அல்லது வீரவசனங்களுக்கோ இடமில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இந்த வர்த்தக மையம் விடயத்தின் பின்னணியை புரிந்து கொள்வது அவசியமாகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்ற பொழுது எமது பிரதேச மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அபிவிரு…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த வகையில் யுத்தக்குற்ற சம்பவங்கள் குறித்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 400 views
-