Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு பூரண நீதியரசர் குழு? தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையை எதிர்த்து மூன்று நபர்களினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்கு பூரண நீதியரசர் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இந்த மனுவை விசாரணை செய்வதற்கு மூன்று பேரையும் விட கூடுதலான நீதியரசர்களை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் இரண்டாம் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபரின் சார்பில் ஆஜரான பிரதிசொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்க்பபட்டுள்ளது. அர…

  2. சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – GTF: 05 ஜூலை 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 29ம் திகதி அல் ஹூசெய்ன் இலங்கை தொடர்பிலான வாய் மொழி மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இடைக்கால நிதிப் பொறிமுறைமையை நிறுவுவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அல் ஹூசெய்ன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இதனை வரவேற்பதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட அரசாங்கத்தின…

  3. வெளிவிவகார அமைச்சர் அரசியல் சாசனத்தினை மீறிச் செயற்படுவதாக குற்றச்சாட்டு: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டு வருவதாக தி க்ளோபல் ஸ்ரீலங்கா போரம் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் நலனுக்கு விரோதமான முறையில் மங்கள சமரவீர சில சர்வதேச தரப்புக்களுடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. …

  4. யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரும், தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுமே அதிகளவான மதுபானங்களை அருந்துகின்றார்கள். அதைவிடுத்து மதுபாவனையில் யாழ்.மாவட்டம் முதலாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிந்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வி.சிவயோகன் சுட்டிக்காட்டியுள்ளார். கண்பொல்லை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி கற்கும் 28 மாணவர்களுக்கு பண உதவி வழங்கலும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் கரவெட்டி சிறிசாரதா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினர். அவர் அங்கு…

    • 2 replies
    • 447 views
  5. வரலாற்றிலேயே அதி உச்சத்தில் இலங்கை- அமெரிக்க உறவு! [Tuesday 2016-07-05 07:00] இலங்கை- அமெரிக்கா இடையிலான உறவு வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு உயர்ந்துள்ளதாக, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், இலங்கையும் தமக்கிடையே பொதுவான கொள்கைகளை பகிர்ந்துகொள்ளும் பங்காளிகளாக செயற்படுகின்றன. இலங்கையின் வாக்காளர்களால் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்திற்கு அமைய தற்போதைய அரசாங்கம் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில், தேசிய நல்லிணக்கம், அரசியல் அமைப்பு சீர்திருத்தம், அனைத்து இலங்கையர்களுக்கும் சம உ…

  6. நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் - இந்திரஜித் குமாரசுவாமி நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாரிய பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் ஸ்;திரப்படுத்துவதே மத்திய வங்கியின் முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் ஆளுனராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தாம் மத்திய வங்கியில் இணைந்து கொண்ட 1970களில், மத்திய வங்கி தொடர்பில் பாரிய வரவேற்பு காணப்பட்டது என அவர் குறிப்பிட்டு;ள்ளார். மத்தி…

  7. தமிழன் என்ற போர்வையில் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கொண்டுவருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சுமத்தியுள்ளார். டி.எம்.சுவாமிநாதன் அமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழ் மக்களுக்காக 8 ஆயிரம் மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறு குறித்த தொகை செலவளிக்கப்பட்டிருந்தால் இலங்கை தற்போது சிங்கப்பூர் போன்று மாறியிருக்கும் என தெரிவித்தார். இதுமட்டுமன்றி 4 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத்தது போன்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். இவ்வாறு பொய் சொல்வதற்காக காலம்…

    • 3 replies
    • 389 views
  8. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் மைக்கல் நியூட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சுமத்தியுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், …

  9. யாழ். இந்துகல்லூரியின் தமிழ் விழா இன்றைய தினம் இந்துக்கல்லூரி தமிழ் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். இந்துக் கல்லூரியின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.விசாகணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை மொழிப்பரீட்சைகளில் தேசிய ரீதியல் இவ்வருடம் சாதனை நிகழ்த்திய மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை சமூகத்தினால் பிரதம விருந்தினரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாடசாலை அதிபர் தாயநந்தராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர் கலந்து கொண்டிருந்தனர். …

    • 0 replies
    • 496 views
  10. இராணுவத்தை வெளியேற்று: யாழில் கையெழுத்து போராட்டம் யுத்த இழப்பீடுகளை வழங்குதல், இராணுவத்தை வெளியேற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சியினர் யாழில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டனர். யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்றனர். பெரும் திரளான மக்கள் இதில் தமது கையெழுத்துக்…

  11. யாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு ரி.விரூஷன் யாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ் வெடிபொருட்களை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்ட வல்லை வீதியிலுள்ள நெசவு தொழிற்சாலையொன்றிற்கு பின்புறமாகவுள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே இன்றைய தினம் மீட்டுள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று குறித்த பகுதியில் உள்ள குறித்த தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்துள்ளார். இதன்போது அவரது காணியில் இருந்த கிணற்றுக்குள் வெட…

  12. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் நடவடிக்கைகள் ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிமட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காலனித்துவ ஆட்சியாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய முயற்சித்தனர். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை தோற்கடிக்கச் செய்தார். எனினும் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் என சொல்லிக் கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றனர். நாட்டில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் முன்னெடுக்கும் போராட்டமானது தனியொரு ந…

  13. எரிபொருள் நிலையத்தை பயன்படுத்தும் இராணுவம் -எம்.றொசாந்த் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தொடர்ந்தும், தங்கள் வசம் வைத்து இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். வலிகாமம் வடக்கில் 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காணியில், 201.3 ஏக்கர் காணிகள் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதியன்று, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன…

  14. அமைச்சர்களை சிறையில் அடைத்தார் ஜனாதிபதி மாத்தறையில் புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (04) திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது கலால் சட்டத்தை மீறுபவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான அறையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேளிக்கையாக சிறைவைத்தமை நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரையும் ஈர்த்தது. http://www.virakesari.lk/article/8513

  15. விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா தொடர்பிலான அறிக்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை கடுமையாக எச்சரித்திருந்தார். இந்த சம்பவம் குறித்த அனைத்து விசாரணைகளும் பூர்த்தியாகியுள்ளன. விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆறு ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் பத்து அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சாதகமான நிலைமை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. ஊட…

  16. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்காவுடன் தாம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு முன்பிருந்த தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதற்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று சகல பிரஜைகளுக்கு நியாயம் மற்றும் சமத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாது, பிளவுபடாத ஐக்கியமான இல…

  17. மத்தல விமானநிலையத்தை மீள இயக்குவதற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விளம்பரம் அரசாங்க நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நீண்டகால முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாக கோரப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தில் முதலீட்டை மேற்கொள்ளும் நிறுவனங்கள், உள்ளுர் மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு சேவைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் முடிவடைகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=160798&category=TamilNews&language=tamil

  18. சாதாரண மக்கள் அயலவர்களிடம் வாங்கும் கடன்களுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை உரிய முறையில் முன்னெடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை கடும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதற்கு உரிய தீர்வினை காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதற்கு மாறாக தன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே குறியாக உள்ளனர். எனவே என்மீத போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டு மக்களின் சுமையை குறைத்து உரிய முறையில் அபிவிருத்தி பணிகளை…

  19. கொக்கிளாயில் சிங்களவர் பாரம்பரியமாக வாழவில்லை என்பதை 1965ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து கொக்கிளாயில் தமிழர்களின் கரை வலைப்பாடுகளே உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் சிங்களவர்களே அடாத்தாக கரை வலைப்பாடுகள் அமைத்து தொழில் செய்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தமிழர்களின் கரை வலைப்பாடுகளில் சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று நடைப…

    • 0 replies
    • 216 views
  20.  'எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவில்லை' “எங்கள் கட்சி ஒரு குடும்பம். இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்றவுமில்லை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை. ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட்சிக்குள் இருக்கவும் முடியாது. உள்ளே வரவும் முடியாது' என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நடத்திய 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்ச்சி தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  21. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக செயலாளரான தயா மாஸ்டரின் வழக்குதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகள் கிடைக்காமையினால் இந்த வழக்கானது டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.t…

    • 0 replies
    • 370 views
  22.  'நல்லாட்சியில் நாம் பொறுப்பேற்றது திருட்டு பூமியையே' பாலித ஆரியவன்ச, யொஹான் பெரேரா, பிரசாத் ருக்மல் 'எங்களுடைய முதலாவது ஆண்டில், எங்களுடைய செயலாற்றுகை குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறுப்பேற்கவில்லை. மாறாக, திருட்டும் ஊழலும் நிறைந்திருந்த பூமியையே பொறுப்பேற்றோம்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றில் பதுளையில் வைத்து உரையாற்றிய போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட …

  23. ஐ.நா தீர்மானம் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை – சம்பந்தன்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குpறத்து இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எ…

  24. ஐரோப்பாவை ஆட்டங்காண வைத்திருக்கும் ஐஎஸ். தீவிரவாத அமைப்பு, தமது அடுத்த இலக்காக ஆசிய நாடுகள் என அறிவித்து இரு நாட்களுக்கு முன்னர் பங்களாதேசில் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தாக்குதல் நடாத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவையும் அந்த அமைப்பு சேர்த்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்பாக தாம் விழிப்புடன் இருப்பதாகவும், இதற்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், கட்டுநாயக்கா விமானநிலையத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு பா…

  25. யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் முன்னாள் போராளியான இளைஞர் ஒருவர் காதல் முறிவினால் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயநாத் (27) என்ற இளைஞரே தற்கொலை செய்துகொண்டார். குறித்த சம்பவம் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் ஒரு முன்னாள் போராளியாவார். இவர் கடந்த 8 வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். போரின்போது தனது ஒரு கண்ணின் பார்வையையும் இழந்துள்ளார். இவரின் கண்பார்வையைச் சுட்டிக்காட்டிய பெண்ணின் தந்தையார் இவர் ஒரு முன்னாள் போராளி என்ற காரணத்தினாலும் இவர்களது காதலுக்கு மறுப்புத் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணுக்…

    • 0 replies
    • 287 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.